Tag: Kalazhagar Koil

  • Kalazhagar koil masi fest

    தென் திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் மதுரையை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் மார்ச் 8 ஆம் தேதி மாசி திருவிழா தொடங்குகிறது. 

    மார்ச் 8 – மாலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் கஜேந்திர மோட்சத்துடன் திருவிழா தொடங்குகிறது.

    மார்ச் 9 – தெப்ப உற்சவம் 
    அன்று காலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பாடாகிறார். மேலும் அன்று மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு வழி நெடுகிலும் நின்ற சேவை சாதித்து தொடர்ந்து பொய்கைக் கரைப்பட்டி தெப்பம் போய் சேருகிறார்.

    அங்கு பகல் 12 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் தெப்பத்தின் கிழக்கு புறம் உள்ள மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். தொடர்ந்து அன்று மாலையில் சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேருவார். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. 

  • Kalazhagar Koil Car fest

    மதுரை அருகே பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    மதுரை அருகே, அழகர்கோவிலில் அழகுற அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில், வருடந்தோறும் ஆடிப்  பெருந்திருவிழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த வகையில் கடந்த 7-ஆம் தேதி ஆடிப் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி – பூதேவியருடன், சிம்மம், அன்னம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடி பிரமோற்சவ திருவிழாவான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. காலை 5.15 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருதேருக்கு சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தயார்களுடன் எழுந்தருளினார். 

    தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்ட திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, "கோவிந்தா கோவிந்தா" என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, "கோவிந்தா" கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.