Tag: Kadagam

  • Rasi Palangal Kadagam

    ரத்த சொந்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கடக ராசி அன்பர்களே நீங்கள் மனோகாரகன் என்று  அழைக்கப்படும் சந்திரனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுபவ்ர் நீங்கள். உங்கள் கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள். துப்பறியும் குணம் உடையவர்கள் நீங்கள். குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். 

    இந்த ஆண்டு மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும்.  பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும்.  புதிய நபர்களின்  நட்பு உண்டாகும். வீடு வாகனம்  தொடர்பான விஷயங்களில்  கூடுதல் கவனம் தேவை.

    தொழில் வியாபாரத்தில்  இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு  அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள்  உங்கள் சொல்படி நடப்பது  மனதுக்கு  மகிழ்ச்சி தரும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

    பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

    விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்களும் கிடைக்கும். அதேநேரம் கால்நடைகளுக்கு சற்று கூடுதலாக செலவு செய்ய நேரிடும். மற்றபடி புழு, பூச்சிகளால் பயிர்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது. நீராதாரங்களையும் பெருக்கிக் கொள்வீர்கள். 

    அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். எனினும் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.  புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.கவனமாக பேசுவது அவசியம். உங்களின் எதார்த்தமான வார்த்தைகள் பூதாகரமான பிரச்சனைகளை உண்டாக்கலாம். பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம். 

    கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலமிது. வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். உங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும்.

    மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும். கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்

    புனர்பூசம் 4ம் பாதம்: 
    இந்த ஆண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். 

    பூசம்: 
    இந்த ஆண்டு பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.

    ஆயில்யம்:
    இந்த ஆண்டு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும்.  விருப்பங்கள்  கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். அரசியல்வாதிகள் சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கட்சித் தலைமையின் ஆதரவு கிட்டும். கட்சி மேல்மட்டத்தால் அலைக்கழிக்கப்படுவர். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும்.     

    பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று 16 முறை வலம் வரவும்.
    சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, திங்கள், புதன்

    அனுகூலமான திசைகள்: தெற்கு, வடமேற்கு

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
    சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீமங்களாம்பிகாய நம என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    போன் : +91 7845119542

  • April month predictions – Kadagam

    (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

    எப்போதும் ஒரே கருத்தை கொள்ளாமல் அவ்வப்போது எண்ணங்களையும் கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் குணமுடைய கடக ராசியினரே நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். இந்த மாதம் தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். 

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறுவார்கள். பிரச்சனைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

    பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் புத்திசாதுரியத்தை பயன்படுத்தி சமாளிப்பீர்கள்.
    கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

    அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.  மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

    புனர் பூசம் 4ம் பாதம்:
    இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். சுப காரியங்கள் நடக்கலாம். சகோதரர்கள் மூலம்  உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சந்தோஷமாக காணப்படுவார்கள். குழந்தைகள் மூலம் பெருமை கிடைக்கும். எந்த  வேலையையும்  எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும்.

    பூசம்:
    இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது.  காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து  உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

    ஆயில்யம்:
    இந்த மாதம் தொழில் வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம்.

    பரிகாரம்: சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்க பிரச்சனைகள் தீரும். பண கஷ்டம் தீரும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30
    அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
    Mobile : +91 7845119542

  • March month predictions – Kadagam

    கருமமே கண்ணாக இருக்கும் கடக ராசி அன்பர்களே நீங்கள் எல்லோராலேயும் நேசிக்க கூடியவராக  இருப்பீர்கள். கொஞ்சம் பதற்றத்தை குறைத்துக் கொள்வது நல்லது. இந்த மாதம் முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். ராசியிலிருக்கும் கிரக கூட்டணியால் வெளியூர்  பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பவர்கள்.

    சூரிய சஞ்சாரம் புதனுடன் சேர்ந்து இருப்பது மன தெளிவை உண்டாக்கும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்குவரத்து மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்து இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.

    குடும்பாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

    பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனதெளிவு உண்டாகும். பணவரத்து இருக்கும். 
    கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும். 

    அரசியலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். 

    மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். 

    பரிகாரம்: அபிராமி அந்தாதி சொல்லி அம்மனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். பஞ்சமுக விளக்கு ஏற்றுவது சிறந்தது. 

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 

    Mobile : +91 7845119542

  • Feb month predictions – Kadagam

    கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

    இந்த மாதம் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். . எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும்.   விருப்பங்கள்  கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

    அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும்.

    குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு – மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.

    பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மனதில்  ஏதாவது கவலை இருந்து வரும்.

    அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். தொகுதி மக்களிடம் நெருங்கி பழகுவது அவசியம்.

    கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.

    பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும். 
    சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • 2019 Rasi Palangal – Kadagam

    புனர்பூசம் 4 – ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
    சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே
    கிரகநிலை:
    குருபகவான் பஞ்சம பூர்வ ஸ்தானத்திலும் – ராகு ராசியிலும் – சனி பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் – கேது சப்தம ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    
    கிரகமாற்றம்:
    13.02.2019 அன்று ராகு பகவான் விரைய ஸ்தானத்திற்கும் – கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
    23.11.2019 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    இந்த ஆண்டு ராசியைப் பார்க்கும் குரு பகவான் செல்வச் செழிப்போடு செல்வாக்கையும் உங்களுக்கு அள்ளித் தருவார். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும். 
    குடும்பம்:
    உங்கள் பேச்சில் வசீகரமும் இனிமையும் வேதாந்த ரகசியங்களும் கலந்து இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும. தாயின் உடல்நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல் நலம் பெறும். பூர்வ புண்ணிய சொத்துக்கள் உங்களை வந்து சேரும். வெகுகாலம் தீராத பிரச்சனைகள் தரும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். உறவினர்கள் உங்களிடம் உதவிகளைப் பெற வருவார்கள். நடைமுறை செயல்பாடுகளை அறிந்து அதற்கேற்ப உதவலாம். திருமண வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு உறவினர் சார்நத வகையில் சில தடைகள் வந்து விலகும். வெளிநாடு சென்று திரும்பும் யோகம் அதிகம் உண்டு. உடல்நலமும் உள்ளநலமும்  ஆரோக்கியமாக இருக்கும். பிள்ளைகள் சார்ந்த வகையில் வீண் செலவுகளை செய்யும் நிலை உருவாகி பின்னர் நீங்கிவிடும். குடும்ப ஒற்றுமையில் குழப்பங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.
    பொருளாதாரம்:
    மிக சீராக இருக்கும். கடன் பிரச்சனை அனைத்தும் தீரும். பணப் பிரச்சனை தீர்வதற்கான வழிகள் ஏற்படும். நண்பர்கள் உறவினர்கள் மூலமாக தேக்க நிலை மாறும்.
    ஆரோக்கியம்:
    உடல் நலத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். 
    பெண்கள்:
    பெண்கள் கைதொழில் ஒன்றை கற்றுக்கொண்டு தொழில் மேன்மை பெறுவார்கள். குறிப்பாக ஆடை வடிவமைப்பு, உணவு பண்டங்களை தயாரிப்பு, அழகு சாதன பொருட்கள் விற்பவர்கள் நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும். குறித்த நேரத்தில் தடைகள் விலகி விடும்.  திருமணம் ஆன பெண்கள் கணவருடன் இருந்து வந்த மன பேதங்கள் விலகும். 
    உத்தியோகஸ்தர்கள்:
    உத்தியோகஸ்தர்கள் தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபமங்களச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். உங்களுக்கு தேவையான பொருளாதாரம் நிறைந்த வகையில் கிடைக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களால் வேதவாக்காக கருதப்படும். உங்களது நற்செயல்களால் புகழ் உண்டாகும். ஊழியர்களால் அதிகம் நேசிக்கப்படும் சூழ்நிலையும் உருவாகும். வீடு மனை வாகன வகைகளில் நல்ல லாப பலன்கள் நடந்து மனதை மகிழ்விக்கும். பிள்ளைகள் அதிகப்படியாக பணம் செலவழிக்கும் வாய்ப்புகளும் அதனால் தந்தை மகன் உறவு முறையில் சிறிது மனக்குறைவுகளும் உண்டாகி விலகும். எதிரிகளால் இருந்த இன்னல்கள் மாறி மனம் நிம்மதி பெறும். உடல் ஆரோக்கியமும் உயர்ந்திருக்கும். தந்தை வழியில் உள்ள சொத்துக்கள் ஆதாய பலன்களைத் தரும். பார்க்கும் உத்தியோகத்தில் முழு தன்னிறைவும் பாராட்டுகளும் கிடைக்கும்
    வியாபாரிகள்:
    தொழில் ஸ்தானத்தை குருபகவான் 7ம் பார்வை பார்க்கிறார். உணவுப் பொருட்கள், பர்னிச்சர் மற்றும் ஆடம்பரப் பொருட்களை உற்பத்தி செய்வோர் அதிக லாபங்கள் பெறுவார்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விற்பனையிலும் தகுந்த மேன்மை பெறுவார்கள். விருதுகள் பாராட்டுகள் பெறுவார்கள். ஏற்றுமதி தொழில் செய்வோருக்கு வெளிநாட்டிலிருந்து நிறைய ஆர்டர்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் சம்பந்தமான தொழில் செய்வோர் அபிவிருத்தி அடைவார்கள். எதிரிகளால் இருந்த மனக்கவலைகள் நீங்கி விடும். 
    அரசிய்லவாதிகள்:
    அரசியல்வாதிகள் தங்கள் செயல்களைச் சாதனைகளாக மாற்றிக்காட்டுவீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் புதிய செயல்களைச் செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல்களில் ஏற்படும் இடையூறுகள் தானாகவே விலகி விடும். உங்கள் கருத்துக்களை அடுத்தவர்களிடம் திணிக்க முயல வேண்டாம். எதிரிகளின் சூழ்ச்சியால் இருந்த அவப்பெயர் நீங்கும். அரசாங்கம் மூலமாக தொழில் செய்பவர்கள் அரசு சார்ந்த அதிகாரிகளிடம் தகுந்த அனுசரணையுடன் அடைந்து ஏற்றம் பெறுவார்கள். அரசியலில் புதிய பிரவேசம் நிகழ்த்த இருப்பவர்கள் சனிபகவானின் நல்லருளைப் பலமாகப் பெற்று மக்களிடம் நற்பெயர் பெறுவார்கள்
    கலைத்துறையினர்:
    கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திறமைகள் பளிச்சிடும். நல்ல வருமானம் கிடைக்கும். சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு விருதுகள் கிடைக்கும். உங்களின் சமயோஜித புத்தியால் தக்க தருணத்தில் சரியான முடிவெடுப்பீர்கள். போதும் என்கிற மனநிறைவைப் பெறுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். உடன் பணிபுரிபவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடந்தாலும் அவர்களால் பெரிய நன்மைகள் உண்டாகாது. அனாவசியப் பேச்சுகளைத் தவிர்க்கவும். சினிமா சார்ந்த டெக்னீசியன்கள் நிறைய வேலை வாய்ப்பு பெறுவார்கள். மரத்தில் சிறபங்களை வடிவமைக்கும் கலைஞர்கள் புதிய முயற்சிகளினால் வரவேற்பு பெறுவர். 
    மாணவர்கள்:
    மாணவர்கள் கட்டடக்கலை,  விவசாயம்,  மெக்கானிக்கல் துறை சார்ந்த மாணவர்கள் சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள். உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல் வலிமை பெற உயற்பயிற்சிகளையும், மன வலிமை பெற யோகா போன்றவைகளையும் மேற்கொள்வீர்கள். வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் போடுவீர்கள். விளையாட்டுகளில் வெற்றிகளைக் காண்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை படிப்படியாக உயரும். மேற்படிப்பிற்கு தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் உங்கள் கெயல்பாடுகள் இருக்கும். 
    புனர்பூசம் 4: 
    இந்த ஆண்டு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.
    பூசம்: 
    இந்த ஆண்டு ஆர்டர்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள். 
    ஆயில்யம்:
    இந்த ஆண்டு எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவை  உண்டாக்குவார். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.  புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள்  செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

    பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.
    மலர் பரிகாரம்: சனிக்கிழமை தோறும் முருகனுக்கு செவ்வரளிப் பூவால் மாலை கட்டி அர்ப்பணிக்கவும்.
    சொல்ல வேண்டிய மந்திரம் – “ஓம் ஷட் ஷண்முகாய நம:”.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
    அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு 
    அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை
    அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 

    – ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

    போன் – 7845119542