Tag: Kadagam

  • Kadagam December Monthly Prediction – Sakthi Online

    கடகம்:

    கிரகநிலை:

    சுக ஸ்தானத்தில் கேது – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் – சப்தம ஸ்தானத்தில் சனி – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு  – தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு – லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ்) என கிரகநிலை இருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    06-12-2022  அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    16-12-2022 அன்று சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    30-12-2022 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    கடின உழைப்பில் ஸ்திரமான வளர்ச்சியை பெறும் கடகராசியினரே இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும் வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.

    தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.

    குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.

    பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.

    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.

    புனர்பூசம் 4ம் பாதம்:

    இந்த மாதம் உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

    பூசம்:

    இந்த மாதம் அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.  நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

    ஆயில்யம்:

    இந்த மாதம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். சாதகமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.

    பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – புதன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28, 29

    அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Kadagam July Month Prediction – 2022

    கடகம்:

    கிரகநிலை:
    சுக ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் சனி (வ) – பாக்கிய ஸ்தானத்தில் குரு – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ –  லாப ஸ்தானத்தில் சுக்ரன் – அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றங்கள்:
    12-07-2022 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
    13-07-2022 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    17-07-2022 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
    29-07-2022 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:
    எந்த ஒரு செயலையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்து எதிரிகளை அசத்தும் கடகராசியினரே இந்த மாதம் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கை கண்டு பொறாமை உண்டாகலாம் கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.

    தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

    பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்குவன்மையால் நன்மை உண்டாகும்.

    மாணவர்கள் படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

    புனர் பூசம் 4:
    தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை தீரும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. சந்திரன் சஞ்சாரம் ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல் சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

    பூசம்:
    மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு, மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். 

    ஆயில்யம்:
    காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.

    பரிகாரம்: நாக தேவதைகள் இருக்கும் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். மல்லிகை மலரை அர்ச்சனைக்குக் கொடுக்கவும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 16, 17, 18
    அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Kadagam October month predictions

    (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
    கடக ராசியினரே இந்த மாதம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்து அதிகப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம்.

    தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். 

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

    பெண்களுக்கு திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

    கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க, பட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். 

    அரசியல்துறையினருக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

    மாணவர்களுக்கு மனதில் இருந்த வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.

    புனர்பூசம் – 4:
    இந்த மாதம் சொந்தங்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பரிகள் மற்றும் அருகிலிருப்பவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றம் உண்டாகும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப்பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். 

    பூசம்:
    இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள்.  மன நிம்மதி கிடைக்கும்.

    ஆயில்யம்:
    இந்த மாதம் உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. 

    பரிகாரம்: அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று 11 முறை வலம் வந்து வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சனை தீரும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: வியாழன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 26, 27, 
    அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Kadagam Feb month predictions

    கடக ராசியினரே இந்த மாதம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். .

    குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றி வழிபடுவீர்கள்.

    தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய தொழில் துவங்குவதற்கான ஏற்பாடுகள் நல்ல படியாக நடந்தேறும். புதிய ஆர்டர்களும் வந்து சேரும். 
    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை  எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

    அரசியல் துறையினருக்கு சாதகமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம்  வரலாம். 
    கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை  முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.

    பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை.

    மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.

    புனர்பூசம் 4 ஆம் பாதம்: 
    இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். உடன் பிறந்தவர்களிடம் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலர் இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள்.

    பூசம்:
    இந்த மாதம் குடும்பத்தில் உள்ளவர்களை திருப்தி படுத்த நீங்கள் மிகவும் உற்சாகமாக செயல் படுவீர்கள். தூரத்து உறவினர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும். உடல் நலத்திலும் அக்கறையுடன் செயல்படுங்கள்.
    ஆயில்யம்

    இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டு. வேலைப்பளுவால் உடல் அசதி ஏற்பட்டு மறையும். நேர்மையாக நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். 

    பரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தி பகவானுக்கு பாலாபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுங்கள்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 23, 24, 25
    அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17, 18
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Kadagam 2020 predictions

    புனர்பூசம் 4 – ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

    கற்பனை வளம் மிக்கவர்களாகிய கடக ராசி அன்பர்களே இந்த ஆண்டு காரியங்களைத் தைரியமாகச் செய்து முடிப்பீர்கள். மேலும் உங்கள் எண்ணங்களை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள். அவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்புகளை உயர்த்திக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் காரியமாற்றுவீர்கள். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்கிற பழமொழிக்கேற்ப அனைவரிடமும் பக்குவமாகப் பேசிப் பழகி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். மற்றபடி புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்கள் நிர்வாக ஆற்றல் அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு தானாகவே கிடைக்கும். சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள். சிலருக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்று வசிக்கும் யோகமும் உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் சூழும். அதேநேரம் எல்லாம் சரியாக நடந்து விடும் என்று நினைத்துக்கொண்டு அலட்சியமாக இருந்தால் தோல்வியைச் சந்திப்பீர்கள். 

    உத்தியோகஸ்தர்களுக்கு:
    உங்கள் அலுவலகப் போக்கில் உங்களுக்கு மிகத் திருப்திகரமான பலன்கள் ஏற்பட வாய்பில்லை என்றாலும் பெரும் சங்கடங்கள் எதுவும் ஏற்பட்டுவிடவும் வாய்ப்பில்லை என்ற அளவில் ஆறுதலடையாலம். உங்கள் பணிகளில் நீங்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருவது அவசியம். 

    வியாபாரிகளுக்கு:
    வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவு உங்களுக்கு இருந்து  வரும் வகையில் நீங்கள் செயல்படுவது முதல் தேவையாகும். கொள்முதல் செய்யும் போது தரமான பொருள்களை மட்டுமே கொள்முதல் செய்வது மிக அவசியம். அதே போல தேவைக்கேற்ப அவ்வப்போது வாங்கிக் கொள்வதே சிறப்பாகும். 

    கலைத்துறையினருக்கு:
    உங்கள் தொடர்ச்சியான முயற்சிகளால் மட்டுமே புதிய வாய்ப்புகளைப் பெற முடியும் என்ற நிலையுல்லதால்  நீங்கள் சோர்வுக்கு இடம் தராமலும், மற்றவர்களை நம்பாமலும்  நீங்களே நேரிடையாகப் பார்க்கவேண்டியவர்களை பார்த்து பேசுவது தான் உங்களுக்கு வெற்றி தரக்கூடும். ஓரளவு சோர்வடைந்தாலும் உங்கல் திறமைகளை வெளிப்படுத்தத் தவறினாலும் வாய்ப்புகள் கை நழுவிப் போய்விடக்கூடும். 

    மாணவர்களுக்கு:
    விளையாட்டு போன்ற துறைகளில் உங்களுக்கு ஆர்வம் இருக்குமாயினும் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். மின்னணுத்துறை கல்வியில் சிலர் வாய்ப்பு பெறக்கூடும். ஜாதகப்படு தசாபுத்தி பலன்கள் பலமாக அமையப் பெற்றவர்கள் மட்டுமே உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவது சாத்தியமாகும். 

    அரசியல்வாதிகளுக்கு:
    உங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளைத் திறம் பட நிறைவேற்றி  தலைமையின் பாராட்டுகளைப்பெறுவது இப்போதைய நிலையில் மிகக் கடினமான இருக்ககூடும்.  இருப்பின் மாற்றும் முகாம்களுக்குத் தாவும் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் உறுதியான விசுவாசத்துடன் இருந்து வருவதே எதிர்கால நன்மைகளுக்கு வழி வகுக்கும். 

    பெண்களுக்கு:
    இதுவரை பல காரணங்களால் தள்ளிப்போய் வந்த சிலரது திருமணம் நிறைவேற வாய்ப்புண்டு. மறைமுக சேமிப்புகளில் ஓரளவு பணம் சேரும் என்பதாலும் அது உங்கள் கணவரின் பணத்தட்டுபாட்டை நீக்கும் வகையில் அவருக்குத் தக்க சமயத்தில் பயன்படக்கூடிய வகையில் அவருக்கு அமையும். பூர்வீகச் சொத்து மூலம் சிலருக்கு தனவரவு ஏற்படக்கூடும். வேலைகளின்காரணமாக பிரிந்திருந்த தம்பதி சேர்ந்து வாழும்வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். 

    நட்சத்திரப் பலன்கள்
    புனர்பூசம் 4 ஆம் பாதம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த எல்லாப் பிரிவினருக்குமே ஏற்றமும் இறக்கமும் கூடிய நிலையே இருந்து வரும். எதிலும் எடுத்த எடுப்பிலேயே வெற்றியை எதிர்பார்க்க முடியாது எனபதால் தொழில் , வியாபாரம் போன்ற எதுவாயினும் பெரும் ஆதாயங்களை நீங்கள் எதிர்பார்ப்பதற்கில்லை. குடும்ப நிலையிலும் நிம்மதி குறைந்து காணப்படலாம். சுபநிகழ்ச்சி தொடர்பான முயற்சிகளில் தடங்கலுக்குப் பிறகு வெற்றி கைகூடும். பெரும்பாலும் கவலைகள் அதிகமாகவும் களிப்பு குறைவாகவும் காணப்படும் என்றாலும் மன்சோர்வுக்கு இடம் கொடுக்காமல் இறைவழிபாட்டின் மூலம் மன அமைதியும் நிம்மதியும்காணலாம். தெய்வபலம் துணை நிற்கும்.

    பூசம்:
    இந்த நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு நிதானமான மனப்போக்கு தேவை. சகோதர வழியில் சங்கடங்களைச் சந்திக்க நேரும். குடும்பத்தினரிடம் மனகசப்பு கொள்ளும் சூழ்நிலையில் மன அமைதி இழக்கும் நிலை ஏற்படுமாயினும் அது சிறிது காலத்தில் மாறிவிடும் நிலை  உள்ளாதால் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் நிதானமாக இருந்துவாருங்கள். பெரும் பாதிப்பு எதுவும் நேர்ந்து விடாது. இறைவழிபாட்டில் மனத்தைச் செலுத்தி பொறுமையுடன் செயல் பட்டு வருவதே இப்போதைக்கு நன்மை அளிக்கக்கூடியதாகும். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காமல் இருப்பது உத்தமம்.

    ஆயில்யம்
    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் மாறிமாறி வரக்கூடிய நிலைஉள்ளதால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்து வருவது நல்லது. என்றாலும் எந்த முயற்சியில் ஈடுபடும் போதும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து திட்டமிட்டு அதன் பிறகே செயல்படத் தொடங்குவது அவசியம். தொழில் வியாபாரத்தில் வேலையாள்களால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்ற நிலை உள்ளதால் அவர்களிடம் கனிவாகநடந்து கொள்வதன் மூலம் பிரச்சனைகள் குறையும். அரசு வழியில் சிலருக்கு சிக்கல்கள் ஏற்பட இடமுண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. 

    பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். 

    அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், சுக்கிரன், குரு

    +  சுப நிகழ்ச்சிகள் : – கொடுத்த வாக்கில் சுணக்கம்
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Kadagam December month predictions

    (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
    கடக ராசியினரே இந்த மாதம் கிரகநிலை சூழ்நிலையில் ஓரளவுக்கு நன்மை பெற போகிறீர்கள். பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள்  உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

    தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
    குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர்  புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். 

    பெண்களுக்கு  தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.

    கலைத்துறையினருக்கு நீங்கள் செய்யும் காரியங்களால்  பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். புத்திசாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றமான நிலை காணப்படும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். 

    அரசியல் துறையினருக்கு உங்கள் திறமையான  பேச்சால் வெற்றி பெறுவீர்கள். வாகன  யோகம் உண்டாகும். சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். மேலிடத்தில் உறவு பலப்படும். 
    மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும். பெற்றோர்கள் – ஆசிரியர்கள் உதவி கிடைக்கும். 

    பரிகாரம்:  துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 5, 31
     

  • Guru Peyarchi Palangal – Kadagam

    (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

    "Cancer is Sensitive" என்பதற்கேற்ப எதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடும் கடக இராசி வாசகர்களே! எளிதில் உணர்ச்சிவசப்படுபவ்ர் நீங்கள். உங்கள் கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள். துப்பறியும் குணம்(Detective Mind) உடையவர்கள் நீங்கள். குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். மனோகாரகனான சந்திரனை ராசிநாதனாகக் கொண்டவர்கள் நீங்கள். 

    கிரகநிலை:
    இதுவரை உங்களது பஞ்சம ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து உங்களது தொழில் – அயன சயன போக ஸ்தானம் – தன வாக்கு குடும்ப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு அயன சயன போக ஸ்தானத்திலும், கேது மற்றும் சனி ரண ருண ரோக ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். 

    உங்களுடைய ஆறாம் ராசியான தனுசு ராசிக்கு மாறியிருக்கும் குருவால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகலாம். தேவையற்ற  குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். எனவே  எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக  பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். காரிய தடைகள் வரலாம். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. 

    தொழில் வியாபாரம் தொடர்பான  பணிகளில் தாமதம் ஏற்படும்.  வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை.   தீ, ஆயுதம் இவற்றை கையாளும் போது கவமனாக இருப்பது நல்லது. வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும்.

    குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.  வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மனகவலை ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்கு வாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.  

    பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம். 

    விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் கொள்முதல் விற்பனை சீராக இருக்காது. இடைத்தரகர்கள் உங்களின் லாபத்தில் பங்கு போடக் காத்திருப்பார்கள். சிலர் போட்டிகளையும், வயல் வரப்புச் சண்டைகளையும் சந்திக்க நேரிடும். மற்றபடி சிலருக்குப் பழைய கடன்கள் வசூலாகும். குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்த வாய்ப்புகள் உருவாகும். 

    அரசியல்வாதிகள் உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும்

    கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மையான காலகட்டமாக இருக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியன சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை. முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

    மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம். சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். 

    புனர்பூசம் 4ம் பாதம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். தனலாபத்தை தருவார். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். 

    பூசம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.

    ஆயில்யம்:
    இந்த குரு பெயர்ச்சியால் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும்.  விருப்பங்கள்  கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். அரசியல்வாதிகள் சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கட்சித் தலைமையின் ஆதரவு கிட்டும். கட்சி மேல்மட்டத்தால் அலைக்கழிக்கப்படுவர். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும்.     

    பரிகாரம் : முடிந்தால் திங்களூர் சென்று தரிசனம் செய்து விட்டு வரவும்.
    சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி 108 முறையாவது "ராம' நாமத்தை ஜபிக்கவும். தமிழிலோ, வட மொழியிலோ ”சுந்தர காண்டம்” பாராயணம் செய்வது அதிக நன்மை தரும்.
    மலர் பரிகாரம்: “மல்லிகை மலரை” சிவனுக்கு பிரதோஷ வேளையில் சாத்திவர குழப்பங்கள் அகலும். 
    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
    அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • October month predictions – Kadagam

    (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
    உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவரும் திறமை உடைய கடக ராசியினரே இந்த காலகட்டத்தில் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். 

    தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் தைரிய வீர்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும். அரசாங்க ரீதியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். பணி சார்ந்த விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.

    குடும்பாதிபதி சூரியனின் சஞ்சாரத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு இருக்கும்.

    பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

    கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள்  கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். 

    அரசியல் துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. 

    மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.

    பரிகாரம்: துர்க்கைக்கு வேப்பிலை அர்ப்பணித்து பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 10, 11
    அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29
    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

     

  • 2019 September month predictions – Kadagam

    (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
    எதிலும் நேர்மையும், வளைந்து கொடுக்காத உறுதியான கொள்கையும் உடைய கடக ராசி அன்பர்களே இந்த மாதம் மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும்.  பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம்.

    எதிர்ப்புகள் விலகும். புதியநபர்களின்  நட்பு உண்டாகும். வீடு வாகனம்  தொடர்பான விஷயங்களில்  கூடுதல் கவனம் தேவை.

    தொழில் வியாபாரத்தில்  இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு  அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள்  உங்கள் சொல்படி நடப்பது  மனதுக்கு  மகிழ்ச்சி தரும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

    பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

    அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். எனினும் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். 

    கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலமிது. வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். உங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். 
    மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும். கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்

    பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும். 
    சந்திராஷ்டம தினங்கள்: 12, 13, 14
    அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23,

     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • August Month predictions- Kadagam

    (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
    கடக ராசியினரே இந்த மாதம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை  வெற்றிகரமாக செய்வீர்கள். ஆனால் தாமதமான பலனே கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. தைரியம் அதிகரிக்கும். 

    தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் ராசியில் இருக்கிறார். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரத்து வரும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    நீண்ட நாட்களாக தொழிலில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மை தரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

    குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன்  நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும்.   நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.

    பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும்.

    கலைத்துறையினருக்கு நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். பேச்சுத் திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும்.  
    அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் செல்ல நேரலாம். 

    மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

    பரிகாரம்: அம்மனுக்கு பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA