Tag: Girivalam

  • Thiruvannamalai Girivalam

    கிரிவலம் செல்வதற்கு அனைத்து நாள்களுமே உகந்த தினங்கள்தாம். அதிலும் பௌர்ணமி தினத்தில் மேற்கொள்ளப்படும் கிரிவலத்துக்கு மற்ற தினங்களை விடவும் அதி சிறப்பு உண்டு என்று ஞானிகளும், யோகிகளும் கூறியிருக்கிறார்கள். ஊழ்வினையை நீக்கும் திருவண்ணா மலையானை நினைத்தாலே பாவங்கள் தீரும். `வலம் வர வேண்டும்’ என்று நினைத்த மாத்திரத்தில் சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

    கிரிவலம் மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்…

    ஞாயிற்றுக்கிழமை – சிவலோக பதவி கிட்டும் .
    திங்கள்கிழமை – இந்திர பதவி கிடைக்கும்
    செவ்வாய்க்கிழமை – கடன், வறுமை நீங்கும் .
    புதன்கிழமை – கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்.
    வியாழக்கிழமை – ஞானம் கிடைக்கும்.
    வெள்ளிக்கிழமை – வைகுண்டப் பதவி கிடைக்கும்.
    சனிக்கிழமை – பிறவிப் பிணி அகலும்.
     

  • Thiruvannamalai Girivalam Sirappugal

    நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை, உமையவளுக்கு இடப்பாகத்தை அளித்து ஈசன் அம்மையப்பராக திகழும் தலமாகும். பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாமலையில் மலையே தெய்வமாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது. 

    அருணன் என்றால் சூரியன் – நெருப்பின் நிறமான சிவப்பை குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருளாகும். இம்மலையில் உயரம் 2,688 அடியாகும். அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறிவந்துள்ளது.

    எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது.

    மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. அதன் காரணமாக மலைவலம் வருவது சிறந்தது. குறிப்பாக பௌர்ணமி நாளன்று மலைவலம் வருவது மிகவும் சிறப்பான பலன்களைத்தரும். காரணம் பௌர்ணமி நாளில் விசேஷமாக எண்ணற்ற சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், மூலிகைக் காற்றுகளின் மணம் வீசுவதால் மனத்திற்கு அமைதியும், உடல் நலத்திற்கு நன்மையும் ஏற்படுவதால், லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமியன்று மலைவலம் வந்தும் அருள்மிகு அண்ணாமலையாரை தரிசித்தும் எல்லா நலன்களும் பெறுகிறார்கள். 

  • Girivalam sella ugandha neram

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம்.  அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

    இந்த நிலையில் திருவண்ணாமலையில் அக்டோபர் மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தநேரம் எப்போது என்று கோயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. 

    அதன்படி , நாளை மறுநாள் அக்டோபர் 13 (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.20 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 2.15 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்தது என்று கோயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

  • Girivalam Sella Ugandha Neram

    ஆவணி மாதத்தில் பௌர்ணமி 13.09.19  காலை 07. 35 am முதல் மறுநாள் 14.09 .19 (சனிக்கிழமை ) காலை 10.02am வரை வருகிறது . இந்த நல்ல நாளை நாம் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு பயன்படுத்தி நம் வாழ்வில் பதினாறு பேறுகளையும் பெற்று சிறப்புடன் வாழ்வோமாக.

    பௌர்ணமி நாளில் மகாலட்சுமி பூஜை செய்யவும், சத்யநாராயணா பூஜை செய்யவும் குருபூஜை செய்வதற்கும்மிகவும் நல்லது.  இந்த பவுர்ணமி திதியில் நமது வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் இறைவழிபாடு செய்வது, அன்னதான குழு பங்கேற்பது மற்றும் பசு மடங்களில், பழம், கீரை அளிப்பது நமது வாழ்வில் செல்வத்தைச் சேர்க்கும் வெற்றியை அளிக்கும். 

    அருகில் இருக்கும் திருக்கோவிலில் இரண்டு தீபங்கள் ஏற்றி இறைவழிபாடு செய்வது மென்மையை தரும். இந்த திருநாளை சிறப்பாக பயன்படுத்திஇறை அருளை பெறுவோமாக.

    வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க.
    ஜோதிடர் பிரேம்குமார் . M.G.online astrologer

  • Girivalam selvadhu eppadi

    கிரிவலம் என்றாலே நமக்கு மனதில் முதலில் வந்து நிற்பது திருவண்ணாமலை. 
    கிரி- மலை, வலம் – மெதுவாக மலையை சுற்றி வருவது

    30 ஆண்டுகளுக்கு முன்பாக,திருவண்ணாமலை சென்று கிரிவலம் செல்பவர்கள்  அனைவருமே ஆன்மீகவாதிகளாக இருப்பார்கள். ஆனால் தற்போது சாதாரண மக்களும் கிரிவலம் செல்ல தொடங்கியுள்ளனர். 

    பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வது நன்று. உலகில் 84 லட்சம் உயிரினங்கள் இருக்கிறதாக வேதங்கள் கூறுகிறது.. இவைகளுக்கு உயிர்ப்பு ஆற்றல் கிடைக்கக் கூடிய நாள் தான் பவர்ணமி. இந்த நாளில் கிரிவலம் செல்வது உகந்தது. 

    மலையில் இருக்ககூடிய தாவரங்கள்,மூலிகைகள்,உயிர் ஆற்றல் உள்ள ஜீவ சமாதிகள்,சித்தர்களின் அகர்ஷன சக்திகள் மூலமாக நம்முள் நல்ல மாற்றத்தை கொடுக்கும். 

    கிரிவலம் செல்லும் போது அமைதியாய், ஆனந்தமாய், பய  பக்தியுடன்  நடந்து வர வேண்டும். அவ்வாறு  நடக்கும் போது இறை சிந்தனையுடன் இறை நாமத்தை மனதில்  சொல்லிக்கொண்டே  நடக்க வேண்டும்.

    ஆண்கள்,மேலாடை இல்லாமல் கிரிவலம் செல்வது நல்லது. மேலும் பட்டு  அல்லது கதர் ஆடையை  அணிந்து கிரிவலம் வந்தால், நல்ல ஆற்றலை  பெற முடியும்..

    கூட வருபவர்களிடம் பேசிக் கொண்டு வருவது, சாப்பிட்டுக்கொண்டே கிரிவலம் வருவது தவறான ஒன்று. 

    கிரிவலம் செல்லும் போது, வேகவாக நடந்தோ அல்லது ஓடவோ கூடாது. அருணாச்சல புராணம் சொல்லுவது நல்லது.