Tag: Gayathri

  • Hanuman Gayathri Mandiram

    ஸ்ரீ ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்: அனுமன் நம் உடல் வலிமையோடு, மன வலிமையை அதிகரித்து, நம் இன்னல்களிலிருந்து நாமே வெளிவர நல்வழி காட்டுவார். அவருக்குரிய காயத்திரி மந்திரத்தை கூறி வர சகல நன்மைகள் உண்டாகும்.

    ராம பக்தனான அனுமனுக்கு வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன், கேசரி மைந்தன், ஆஞ்சநேயர், மாருதி, சுந்தரன், சொல்லின் செல்வன் என பல்வேறு பெயர்கள் உள்ளன. அவை அனைத்தும் அவரின் பெருமைகளை உணர்த்தும் விதமாக உள்ளது.

    வாலியிடமிருந்து சுக்கிரவனை காத்தவர். ராமனுக்காக கடலைக் கடந்து சீதா தேவியை தேடி கண்டுபிடித்தவர். சீதா தேவியை ராமனுடன் சேர்த்து வைப்பதில் மிக முக்கிய பங்கு வகித்தவர். ஸ்ரீ ராமா என்று சொன்னாலே ஓடோடி வந்து நமக்கு வேண்டிய உதவிகள் செய்பவர். பிரச்சினைகளைத் தீர்ப்பவர்.

    இப்படிப்பட்ட ராம பக்த அனுமனுக்கு உரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை நாம் உள்ளம் உருக கூறி வர நம் விருப்பங்கள் நிறைவேறுவதோடு, நம் இன்னல்கள் நீக்கி அருள்வார்.

    ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம்*

     *ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே*
    *வாயு புத்ராய தீமஹி*
    *தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்*
     

  • Srinivasa Gayathri Mandiram

    அஷ்ட லட்சுமிகளையும் தன்னகத்தே கொண்டிருப்பவர். பாலாஜி, வேங்கடாஜலபதி, கோவிந்தன், ஏழுமலையான். மனதார வேண்டுபவர் களுக்கு வேண்டியதைக் கொடுக்கும் அன்பும், அடியார்களின் துயரங்களைப் போக்கும் வல்லமையும் கொண்டவர். 

    இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமலை தெய்வமான ஸ்ரீனிவாசனின் சுப்ரபாதத்தை, முழுவதுமாக சொல்வது என்பது அனைவராலும் முடியாத காரியம். அதே வேளையில் ஸ்ரீனிவாசனின் காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால், அனைத்து விதமான பலன்களையும் பெறலாம். தினமும் செய்யும் இறைவழிபாட்டின் போது, ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லி வருவது சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரம்

    ‘ஓம் நிரஞ்ஜநாய வித்மஹே
    நிராபாஸாய தீமஹி
    தந்நோ ஸ்ரீநிவாஸஹ் ப்ரசோதயாத்’

    பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பகவானை அறிவோம். பந்தங்களில் இருந்து விடுபடச் செய்யும், அந்த பரம்பொருளின் மீது தியானம் செய்வோம். ஸ்ரீனிவாசனான அவன் நம்மை காத்து அருள்புரிவான் என்பது இதன் பொருளாகும்.

    இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி, இறைவனை வழிபடுவதால் விரும்பியது கிடைக்கும். ஆனந்தமான வாழ்வு அமையும். ஸ்ரீனிவாசனின் அருளை எளிதாகப் பெறலாம். பாவங்களைப் போக்கும். 16 வகையான பேறுகளைப் பெறுவீர்கள். மரண பயம் நீங்கும். முக்தி கிடைக்கும்.

  • Narambu kolarugalai neekum budhan gayathri

    பொன் என்பது நம் வாழ்வினில் தேடும் பொருட் செல்வத்தைக் குறிக்கும். புதன் என்பது அறிவுச் செல்வத்தைக் குறிக்கும். ஜோதிடவியலில் புத்திகாரகன் ஆக புதன் கிரகத்தினை குறிப்பிடுவார்கள். வித்யாகாரகன் என்றும் கல்விக்குரிய கோளாகவும் புதனையே குறிப்பிடுவார்கள். 

    சாதாரணமான கல்வியறிவு, படிப்பறிவு, ஆகியவற்றை மட்டும் புதன் தருவதில்லை. நுட்பமான அறிவு, சமயோஜித புத்தி, அபாரமான கணித ஞானம் ஆகிய அனைத்தையும் வழங்குவது புதன் மட்டுமே. அதேபோன்று விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கவும் புதனின் அருள் தேவை. 

    பொன் எனும் பொருட் செல்வத்தை எவ்வகையிலும் தேடிவிடலாம், ஆனால் புதன் எனும் அறிவுச் செல்வம் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது என்பதையே இந்தப் பழமொழி குறிக்கிறது. காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கு உகந்த நாள் புதன் என்பதாலும் எல்லோருக்கும் நன்மையைச் செய்யும் நாள் புதன் என்பதாலும் இந்த நாள் சௌமிய வாரம் என்றழைக்கப்படுகிறது.

    புதன் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் செய்து வர நரம்பு கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியும் அறிவும் மேம்படும்.

    நவகிரகங்களில் நரம்புகளில் ஆதிக்கம் செலுத்தும் புத பகவானை வழிபடுவதன் மூலம் நரம்பு சம்மந்தமான கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கிடைக்கும்.

    புதன் காயத்ரி மந்திரம்: 

    “ஓம் கஜத்வஜாய வித்மஹே 
    சுக ஹஸ்தாய தீமஹி 
    தந்நோ புத ப்ரசோதயாத்”

     

  • Anjaneyar Gayathri Mandiram

    ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம்.  `ராம ராம ராம' நாமம் சொல்வது விசேஷம். 

    `ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,  
    வாயுபுத்ராய தீமஹி, தந்தோ
    ஹனுமன் ப்ரசோதயாத்' 

    என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும். இதையும் சொல்லி வழிபடலாம். அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம். வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம். வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். 

    ஆன்ம பலம், மனபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும். 

  • Vetri Tharum Vinayakar Gayathri Mandiram

    விநாயகர் சகஸ்ரநாமம்:
     
    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
    ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

    விநாயகர் காயத்ரி மந்திரம்:
     
    வக்ரதுண்டாய ஹீம் 
    ஓம் நமோ ஹேரம்ப மதமோதித 
    மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா 
    ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.
     
     விநாயகர் ஸ்லோகங்கள்….

    1)  கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
     
    2) ஓம் தத்புருஷாய வித்மஹே 
    வக்ரதுண்டாய தீமஹி 
    தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
     
    3) ஐந்து கரத்தனை யானை முகத்தனை 
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 
    நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் 
    புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
     
    4) மூஷிக வாகன மோதக ஹஸ்த 
    சாமர கர்ண விளம்பித சூத்ர 
    வாமன ரூப மஹேஸ்வர புத்ர 
    விக்ன விநாயக பாத நமஸ்தே.
     
    5) அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த 
    தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல 
    குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் 
    கணபதியைக் கைதொழுதக் கால்.
     
    விநாயகர் மந்திரத்தை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும். பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.
     

  • Vishnu Gayathri mandiram

    ஆபத்துகளில் இருந்து விடுபட விஷ்ணு காயத்ரி மந்திரம்…. 

    விஷ்ணு காயத்ரி மந்திரம் :

    ஓம் நாராயணாய வித்மஹே

    வாசுதேவாய தீமஹி

    தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

    ஆபத்துகளில் இருந்து விடுபட தினமும் விஷ்ணு காயத்ரி மந்திரத்தை சொல்லி வர வேண்டும். ஆபத்துகள் மட்டும் அல்ல பாவங்களும் உங்களை விட்டு அகலும். அதுமட்டுமல்ல நல்ல குணமும், அழகும் கொண்ட சந்ததிகள் உருவாகுவார்கள். 
     

  • Saibaba Gayathri Mandiram

    மதங்களை கடந்து அணைவராலும் வணங்கப்படுபவர் சாய் பாபா. கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதப்படும் சாய் பாபாவை எவர் ஒருவர் வணங்கினாலும், சாய் பாபா ஓடோடி வந்து அவர்களின் துன்பத்தை துடைப்பார் என்பது நம்பிக்கை. அந்த வகையில் சாய் பாபாவை வணங்கும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் உச்சரிப்பது மேலும் சிறப்பானதாக அமையப்பெறும்

    ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்

    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே..

    சச்சிதானந்தாய தீமஹி..

    தன்னோ சாய் ப்ரசோதயாத்.

    இந்த மந்திரத்தை தினசரி 11 முறை அல்லது 33 முறை அல்லது 108 முறை செபிப்பது உகந்தது. தினசரி ஜெபிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம். இதை ஜெபிப்பவர்களுக்கு சாய் பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கப்பெற்று வளமுடன் வாழ்வர்.
     

  • Kalvi Selvam tharum gayathri mandiram

    ஸ்ரீ லட்சுமி காயத்ரி மந்திரம்

    ஓம் மஹாலட்சுமியை ச வித்மஹே: விஷ்ணு பத்ன்யை தீமஹி

    தந்நோ லட்சுமி: ப்ரயோதயாத்

     

     ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி மந்திரம்

    ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே: ப்ரம்ம பத்ன்யை தீமஹி

    தந்நோ வாணி ப்ரயோதயாத்.

     

     ஸ்ரீஹயக்ரீவர்-குதிரை முக விஷ்ணு காயத்ரி மந்திரம்
    (கல்வி வளர)

    ஓம் வாகீச்வராய வித்மஹே 

    ஹயக்ரீவாய தீமஹி

    தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்

     

    ஸ்ரீராமர் காயத்ரி மந்திரம்

    ஓம் தாசரதாய விதமஹே

    சீதா வல்லபாய தீமஹி

    தந்நோ ராமஹ ப்ரசோதயாத்

     

    ஸ்ரீசீதா காயத்ரி மந்திரம்

    ஓம் ஜனக நந்தின்யை ச வித்மஹே

    பூமிஜாயை ச தீமஹி

    தன்னோ சீதா ப்ரசோதயாத்
     

  • Gayathri mandiram

    மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என்று கிருஷ்ணா பரமாத்மா கூறியிருப்பதன் மூலம் நம்மால் காயத்ரி மந்திரத்தின் மகிமையை உணர்ந்துகொள்ள முடிகிறது . மந்திரங்களுக்கெல்லாம் தாயாக விளங்குவது காயத்ரி மந்திரம் . மகரிஷி விசுவாமித்திரரால் மக்களுக்கு சொல்லப்பட்டது தான் மகிமை வாய்ந்த இந்த காயத்ரி மந்திரம் .

    காயத்ரி மந்திரம்:
    ஓம் பூர் புவஸ்ஸூவ

    தத் சவிதுர்வரேண்யம்

    பர்கோ தேவஸ்ய தீமஹி

    தியோ யோ ந: ப்ரசோதயாத்|

     காயத்ரி மந்திரத்தின் விளக்கம்:

    பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

    24 அட்சரங்களைக் கொண்ட காயத்ரி மந்திரதை  தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும் என்றும் ஜபிப்பவர்களுக்கு அளவற்ற சக்தியையும்  , வைராக்கியத்தையும் தரும் என்பது நம்பிக்கை .

     சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்களால் போற்றப்படும் காயத்ரி மந்திரம் ,காலையில்  காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டிலும்  காயத்ரிக்குத் தான் முதல் இடம்.
     
    ஒரு முறை பிரம்மா புஷ்கரம் என்ற புண்ணிய சேக்திரத்தில் ஒரு யாகத்தை தொடங்கினார் . அந்த யாகத்தில் பங்கேற்க சரஸ்வதி வராததால் , பிரம்மா தனத்து சக்தியின் பயனால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்டித்தார்.காயத்ரி தேவியை நாமகளின் அம்சமாக கொண்டு நான்முகன் தனத்து யாகத்தை நிறைவு செய்தார்  என்கிறது புராணம் .  செந்தாமரையில் எழுந்தருளிய அன்னை ஐந்து திருமுகங்களும் பத்து கரங்களும் கொண்டு அழகே உருவாக திகழ்கிறாள் .
     

  • Chakrathazvar Gayathri mandiaram

    ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.

    சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்
    ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

    ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.

    ஓம் சுதர்ஸனாய வித்மஹே
    ஜ்வாலா சக்ராய தீமஹி
    தன்னோ: சக்ர ப்ரசோதயாத்