Tag: ezhumalayan

  • Thirupathi Ezhumalayan Ariya Thagavalgal

    தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் திருப்பதி ஏழுமலையான சிலையில் காணமுடியாது. சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட தங்கம் போல பளபளப்பாக மின்னும்.

    இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

    திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

    பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

    ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

    உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

    பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

    ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

    ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

    பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

    மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

    அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

    மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை. 

    அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

    திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

    சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

    திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

    ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

  • Thirupathy Ezhumalayan Koil Pallava Urchavam….

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  பல்லவ உற்சவம் நடைபெற்றது. மைசூர் மகாராஜா பிறந்த உத்திராட நட்சத்திரத்தில்  ஒவ்வொரு ஆண்டும் பல்லவ உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி இன்று  மாலை சகஸ்கர தீப அலங்கார சேவை முடிந்த பிறகு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளினர். 

    அங்கு கர்நாடக மாநில அரசின் பிரதிநிதிகளும் , மைசூர் சமஸ்தான பிரதிநிதிகள் கர்நாடக சத்திரத்தில் சுவாமி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.இதில் தேவஸ்தான சிறப்பு அலுவலர் பாலா சேஷாத்ரி,  போக்கசம் பொறுப்பாளர் குருராஜராவ், பார் பட்டதர் ராமசந்திர உள்ளிட்ட அதிகாரிகள் பக்தர்கள் பங்கேற்றனர்.

    மைசூர் மகாராஜா நினைவாக கடந்த 300 ஆண்டுகளாக  பல்லவ உற்சவம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. முதலில் இந்த உற்சவத்தை தோட்ட உற்சவம் என அழைக்கப்பட்டு  வந்தது .வரலாற்று புராணத்தின் படி  ஏழுமலையானின் தீவிர பக்தரான மைசூர் மகாராஜா சுவாமியின் மீது கொண்ட பக்தியினால் பல நன்கொடைகளை வழங்கி உள்ளார். 

    இதில் மூலவருக்கும், சுவாமி தாயார் உற்சவருக்கும் பிளாட்டினம், தங்கம், வைரம் ,வைடூரியம், மரகத பச்சை போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை வழங்கியுள்ளார். மேலும் பிரம்மோற்சவத்தில்  சுவாமி வீதி உலாவிற்காக கருட, கஜ,  முத்துப்பந்தல், சர்வ பூபால, குதிரை, சூரிய பிரபை, சந்திரப் பிரபை போன்ற வாகனங்களை நன்கொடையாக வழங்கினார். 

    சாமியின் வாகன சேவையில் ஐந்தாவது நாள் காலை பல்லக்கு உற்சவத்திற்காக யானை தந்தத்தால் பல்லக்கு தயார் செய்து நன்கொடையாக வழங்கி தனது பக்தியை தெரியப்படுத்தினார். மேலும் தினந்தோறும் ஏழுமலையான் கோவிலில் காலை சுப்ரபாத சேவைக்கு முன்னதாக மைசூர் சமஸ்தானம் தரப்பில் நவநீத ஆரத்தி அகண்ட தீபத்திற்காக  தினந்தோறும் 5 கிலோ நெய் வழங்கும் சம்பிரதாயத்தை அவர் தொடங்கி வைத்தார் தற்பொழுதும் இந்த சம்பிரதாயம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரப்படுகிறது. 

    மைசூர் மகாராஜா நினைவாக ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் உத்திராட நட்சத்திரம் அன்று இரவு ஏழு முப்பது மணிக்கு சிறப்பு ஆஸ்தானம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வருடாத்தில் முக்கிய நாட்களான உகாதி , தீபாவளி , ஆனிவார ஆஸ்தானம் போன்ற நாட்களில் மைசூர் மகாராஜா பெயரில் சிறப்பு ஆரத்தி வழங்கப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி உறியடி உற்சவம் அன்றும் மலையப்ப ஸ்வாமி கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளி பின்னர் கோவிலை வந்தடைவது வழக்கம்.

  • Puspa Pallakil Thirupathy Ezhumalayan

     திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனி வார ஆஸ்தானத்தை யொட்டி 3 டன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


     

  • thrupathy ezhumalayan budget

    திருப்பதி திருமலை தேவஸ்தானம் 2019 – 2020 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டாக ரூ.3,116.25 கோடிக்கு தாக்கல் செய்து இருக்கிறது.  ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செயல்பட்டு வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் தேவஸ்தானம் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது. தற்போது 2019-2020ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

    பட்ஜெட் விபரம்…. ரூ.3116.25 கோடி வருமானம் 

     இந்த ஆண்டு உண்டியல் வருமானமாக ரூ.1,231 கோடி கிடைக்கும் என எதிர்பார்ப்பு 

    நிதி வைப்புகள் மூலம் கிடைக்கும் வட்டித்தொகை ரூ.845.86 கோடி

    விரைவு தரிசனம் மற்றும் பிரேக் தரிசன டிக்கெட் விற்பனை மூலம் ரூ.235 கோடி

    பிரசாத விற்பனை மூலம் ரூ.270 கோடி

    காணிக்கை தலைமுடி  விற்பனை மூலம் ரூ.100 கோடி

     விடுதி அறைகள், கல்யாண மண்டபங்கள் மூலம் ரூ.105 கோடி

    பங்கு வைப்புகள் மூலம் ரூ.67.54 கோடி வருமானம் 

    ஆர்ஜித சேவை டிக்கெட்கள் விற்பனை மூலம் ரூ.57 கோடி வருவாய்

    இதர முதலீடுகள் மூலம் ரூ.204.85 கோடி வருமானம் 

     வீதம் ஆண்டுக்கு மொத்தம் ரூ.3,116.25 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பட்ஜெட்டில் செலவு கணக்கு….

    பிற முதலீட்டுச் செலவினம் ரூ.78.85 கோடி

    ஊழியர்கள் சம்பளம் மற்றும் கூலி ரூ.625 கோடி 

    என்ஜினீயரிங் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு இரும்பு தளவாட பொருட்கள் கொள்முதலுக்கு ரூ.541 கோடி

    மானியம் மற்றும் பங்களிப்புத் தொகை ரூ.283 கோடி

    அசையா சொத்துக்களை பராமரிக்க ரூ.400 கோடி

     ஆதார செலவினம் ரூ.339.58 கோடி

    ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க ரூ.260 கோடி

    ஓய்வூதியம் வழங்க ரூ.75 கோடி 

    மின் கட்டணமாக ரூ.52 கோடி 

    அசையா சொத்துக்களை பழுது பார்க்க ரூ.135 கோடி 

    கடன், ஊழியர்களுக்கு முன்பணம் செலுத்துதல் ஆகியவற்றுக்கு ரூ.52.11 கோடி 

    விளம்பரம் ரூ.10 கோடி, பல்வேறு முதலீடு மற்றும் இதர செலவினத்துக்கு ரூ.264.21 கோடி ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.