Tag: ezhumalayan

  • thirupathy ezhumalayan free dharshan

    ஏழுமலையானை தரிசனம் செய்ய இம்மாதம் 16ஆம் தேதி முதல் திருப்பதி உள்ள கவுண்டர்களில் மேலும் 10,000 பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு இதுவரை ஆன்லைன் மூலம் மட்டுமே 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

    இந்த நிலையில் கட்டுப்பாடுகளில் கொண்டுவரப்பட்டுள்ள தளர்வுகள் மற்றும் கொரோனா பரவலில் ஏற்பட்டுள்ள மந்தநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இம்மாதம் 16ஆம் தேதி முதல் திருப்பதி உள்ள கவுண்டர்களில் மேலும் 10,000 பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    இதுபற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி, அறங்காவலர் குழுவின் ஒப்புதல் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் திருப்பதியில் கட்டப்பட்ட வரும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாய் மற்றும் ஒன்றரை கோடி ரூபாய் என்ற அளவில் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு உதய அஸ்தமன சேவை டிக்கெட் ஒன்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    உதய அஸ்தமன சேவை டிக்கெட் மூலம் வருடத்தில் ஒரு நாள் அவற்றை பெரும் பக்தர்கள் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் அனைத்து சேவைகளையும் தரிசிக்க முடியும். நன்கொடையை ஆன்லைன் மூலம் செலுத்தி உதயாஸ்தமன சேவை டிக்கெட்டுகளை பக்தர்கள் பெறுவதற்கு தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் நிறைவடைந்து இம்மாதம் 16ஆம் தேதி முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

    ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் பக்தர்கள் கலந்து கொள்வது பற்றி இம் மாதம் நடைபெறவிருக்கும் அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
     

  • Thirupathy ezhumalayan slogam

    அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா. மேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும். வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.

    சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட, ஏழுமலையான் ஸ்லோகம்….

    ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,
    வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே … !!!

    பொதுப் பொருள்:
    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம். ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் " சரணம் " சரணம்..
     

  • thirupathy ezhumalayan dharshan certificate

    திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்காக வரும் பக்தர்கள் இனி 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சர்டிபிகேட் அல்லது கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் கொண்டு வரவேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இம்மாதம் 25 ஆம் தேதி முதல் பக்தர்கள் இலவச தரிசனம் டோக்கன்களை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை ஏழுமலையானை இலவசமாக தரிசிக்கும் வகையில் இலவச தரிசனம் டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படும்.

    இதனால், இம்மாதம் 26ஆம் தேதி முதல் திருப்பதி உள்ள சீனிவாசம் கட்டிட வளாகத்தில் செயல்படும் இலவச தரிசன கவுண்டர் மூடப்படும். இனிமேல் ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அத்தாட்சி அல்லது மூன்று நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை உடன் கொண்டு வரவேண்டும். மேலும், இம்மாதம் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், மீண்டும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 8 ஆயிரம் பேருக்கு இலவச டோக்கன் வழங்கப்படும் நிலையில், அவற்றை வாங்குவதற்கு கடந்த இரண்டு நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். 
     

  • September 22 Thirupathy ezhumalayan

    செப்டம்பர் 22 – திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்
    பிலவ வருடம் – புரட்டாசி 6
    திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்
    22-செப்-2021 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    பிரதமை    கா    6.28
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    கா    6.31
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Ezhumalayan temple agarbathigal

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு அணிவிக்கப்படும் விதவிதமான மலர்கள் மூலம் நறுமணம் மிக்க அகர்பத்திகளை தயாரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக அகர்பத்திகளை தயாரிக்க கர்நாடக மாநிலம், பெங்களூரு தர்ஷன் இண்டர்நேஷனல் நிறுவனம் முன்வந்தது. குறைந்த விலையில் தரமான அகர்பத்திகளை தயார் செய்யவேண்டும் என தேவஸ்தானம் கோரிக்கை விடுத்தது. அதன்படி, கோசாலையில் இதற்கான தொழிற்சாலை அமைக்கப்பட்டது. ஏழுமலையானுக்கு சூட்டிய மலர் மாலைகள் உட்பட தேவஸ்தானத்தின் அனைத்து கோயில்களில் இருந்தும் சுவாமிகளுக்கு சூட்டப்பட்ட மலர் மாலைகளையும் தோட்டக்கலை துறையினர் தினமும் சேகரித்து, தொழிற்சாலைக்கு கொண்டு வந்து ஒப்படைக்கின்றனர்.

    இங்கு மலர்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இயந்திரம் மூலம் உலர வைத்து பொடியாக்கி சில வாசனை, ரசாயனங்கள் கலந்து அகர்பத்தி தயார் செய்யப்படுகிறது. ஏழுமலைகளை குறிக்கும் விதமாக 7 விதமான நறுமணத்துடன் அகர்பத்திகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனையை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தொடங்கி வைத்தார். இந்த அகர்பத்திகள் ரூ.45, ரூ.85 விலையில் இது விற்கப்பட உள்ளது. முதற்கட்டமாக திருமலையில் உள்ள லட்டு கவுன்டர் அறைகளை காலி செய்த பிறகு டெபாசிட் ரூபாய் வழங்கும் டெபாசிட் ரிபண்ட் கவுண்டரில் அகர்பத்திகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

    விரைவில் சென்னை, சேலம், வேலூர், கன்னியாகுமரி, பெங்களூரு உள்ளிட்ட நாடு முழுவதும் இருக்கும் தேவஸ்தான தகவல் மையங்களில் இந்த அகர்பத்திகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

     

  • Ayothya Ezhumalayan Koil

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் ஏழுமலையான் கோவில் முக்கிய நகரங்களில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கிய நிலையில் அயோத்தியில் ஏழுமலையான் கோவில் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    இதற்காக  கோயில் கட்டுமானத்திற்காக 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்திரப்பிரதேச மாநில அரசை  உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்க முடிவு செய்துள்ளனர். 2021 ஆண்டுக்கான புத்தாண்டு காலண்டர்,  டைரிகள் விலையை உயர்த்த தேவஸ்தான சப் கமிட்டி பரிந்துரை செய்தது. ஆனால் கொரோனா ஊரடங்கால் பொது கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் விலை உயர்வை ஏற்க  அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி மறுத்துள்ளார். 

    இதனால் பழைய விலைக்கே காலண்டர், டைரிகளை விற்பனை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினார். திருமலையில் உள்ள ஏசி அறைகளின் வாடகையை ரூ 1000 விலைக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில்  ரூ .1,500 ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

  • Thirupathy ezhumalayan jewels

    திருப்பதி ஏழுமலையான் கோவில் நகைகள் விரைவில் டிஜிட்டல் வடிவில் முப்பரிமாணத்துடன் பக்தர்கள் பார்வைக்கு கொண்டு வர பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. 

    உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல மாமன்னர்கள், பேரரசர்கள் தங்கள் வெற்றிக்கு கிடைத்த காணிக்கையாக ஏழுமலையானை தரிசனம் செய்து பல வைர, வைடூரிய, மாணிக்கங்கள், பொருத்தப்பட்ட விலை மதிப்புமிக்க நகைகளை ஆபரணங்களை வழங்கியுள்ளனர். அவ்வாறு கிருஷ்ணதேவராயர் மைசூர் மகாராஜா உள்பட பல மாமன்னர்கள் முதல் ஆங்கிலேயர்கள்  ஆட்சியிலும் தற்பொழுதும் பக்தர்கள் ஆபரணங்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். 

    அவ்வாறு வழங்கப்பட்ட ஆபரணங்களில் 450 க்கும் மேற்பட்ட ஆபரணங்கள் சுவாமிக்கு தினந்தோறும், வாராந்திர, வருடாந்திர உற்சவங்களுக்கு அலங்கரிக்கப்பட்டு வருகிறது. விலை மதிப்பு மிக்க இந்த ஆபரணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கைகள் இருந்து வந்தது. இதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானமும் எடுத்து வந்தது. 

    ஆனால் சுவாமிக்கு அலங்கரிக்க கூடிய விலை மதிப்புமிக்க ஆபரணங்களை பக்தர்கள் பார்வைக்கு வைப்பது அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் ஆகம விதிகளுக்கு முரணானது என்று ஆகம ஆலோசகர்களும் தெரிவித்தனர். இதையடுத்து இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு சுவாமியின் நகைகளை முப்பரிமாண வடிவில் டிஜிட்டல் முறையில் வடிவமைத்து பக்தர்கள் பார்வைக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதற்காக டெக் மகேந்திரா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள தேவஸ்தானம் இதற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளது. 

    ஆறு மாதம் முதல் ஓரு ஆண்டுக்குள் திருமலையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா அருங்காட்சியகத்தில் ஏழுமலையானுக்கு அலங்கரிக்க கூடிய ஆபரணங்கள் முப்பரிமாண வடிவில் பக்தர்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலமாக ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எவ்வாறு உள்ளது, பாதுகாப்பாக உள்ளதா என்ற சந்தேகங்கள் இல்லாமல் முழு திருப்தி அடைய செய்யும் விதமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Garuda vaganathil thirupathy ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி ரங்கநாதர் மண்டபத்தில்  எழுந்தருளினார். பின்னர் ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது.  

    ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று கருட வாகனத்தில் எழுந்தருளி மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.கொரோனா  வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பௌர்ணமி கருட சேவை வீதி உலா ரத்து செய்யப்பட்டு ரங்கநாதர் மண்டபத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். 

    கருட வாகனத்தில் திருப்பதி ஏழுமலையான்….

    Posted by shakthionline.com on Monday, July 6, 2020

    முன்னதாக கோவிலில் மூலவர் கருவறையிலிருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி ரங்கநாதர் மண்டபத்திற்கு எழுந்தருளினார். இந்த உற்சவத்தில் துணை செயல்அலுவலர் ஹரிந்திரநாத்,  சிறப்பு அதிகாரி சேஷாத்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • Simma Vaganathi Thirupathy Ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று காலை யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

    விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாக மனிதர்களிடம் உள்ள விலங்களுக்குன்டான தீய எண்ணங்களை போக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி வீதஉலாவில் கேரள சண்டை மேளம், நாதஸ்வரம், மும்பை டிரம்ஸ் மேளம், மற்றும் பக்தர்களின் கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  

    முத்து எப்படி பரிசுத்தமானதோ அதை போன்று நம் மனதில் தீய எண்ணங்கள் இன்றி பரிசுத்தமாக இறைவனை அடைய வணங்கினால் முக்தி பெறலாம் என்பதை விளக்கும் வகையில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று இரவு முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி தயார்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.

  • Thanga Garuda vaganathi Thirupathy Ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியை ஒட்டி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மலையப்ப சுவாமி. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியையொட்டி இன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதி உலாவின் பொழுது நான்கு மாட வீதியின் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து மனம் உருகி கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் வழிபட்டனர். 

    வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் முப்பதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 8ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி உடன் நிறைவு பெற உள்ளது. இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையாக  ஐந்தாவது நாள் நான்காம் தேதி இரவு தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. 

    இதனை காண்பதற்காக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் பிரம்மோற்சவத்தின் கருட சேவையாக இன்று நடைபெற்ற பௌர்ணமி கருட சேவை நடத்தப்பட்டது. இதையொட்டி நான்கு மாடவீதிகளில் பிரம்மோற்சவத்தின் போது நடைபெறக்கூடிய கருட சேவையில் எவ்வாறு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்களோ அதுபோன்று இன்று நடைபெற்ற கருட சேவையின் போது பக்தர்கள் நான்கு மாடவீதியில் அனுமதிக்கப்பட்டனர். 

    போலீசார் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் குறித்தும் எந்தெந்த இடங்களில் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என்பதை அறிந்து அதற்கு ஏற்ப மாற்றங்கள் செய்வது குறித்து அதிகாரிகள் மாதிரி கருட சேவையாக இன்று நடத்தினர். இதில் சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி,  எஸ்பி அன்புராஜன், முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் ஜெட்டி, கூடுதல் முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் சிவகுமார் ரெட்டி, உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.