Tag: coconut

  • coconut breaking

    கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட செல்கையில், தேங்காய், பழம், பூ கொண்டு போவது வழக்கம். அவ்வாறு, சுவாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும்போது, தேங்காயை குடுமியுடன் பயன்படுத்த வேண்டுமா?… அல்லது அவற்றை அகற்றிவிட வேண்டுமா? என்பது பற்றிய சந்தேகம் பலரிடமும் இருக்கும். 

    ஆனால், யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது?, யாரும் தவறாக நினைத்து கொள்வார்களோ என்று பலரும் இது குறித்து தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. எல்லோரும், செய்கிறார்கள். நாமும் செய்வோம் என்றுதான் பலரும் செய்கின்றனர். இந்நிலையில், அதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.

    பண்டைய காலத்தில் அரசர்கள், வணிகர்கள் மற்றும் மறை ஓதுபவர்கள் ஆகியோர் பரம்பரை, பரம்பரையாகக் குடுமி வைத்துக் கொண்டிருந்தனர். குடுமி என்பது உடலின் ஒரு அங்கமாகவே பார்க்கப்பட்டது. அதுபோல, தேங்காயின் ஓர் உறுப்பாகத் திகழ்வது அதன் குடுமி. அதை அகற்றிவிட்டால், தேங்காய் பின்னம் (ஊனம்) அடைந்து விடும்.

    பொதுவாக, இறைவனுக்குப் படைக்கப்படும் பொருள் எதுவாக இருந்தாலும், அது பின்னம் அற்றதாக இருக்க வேண்டும். எனவேதான், தேங்காய் உடைக்கும்போது குடுமியுடன் இருக்க வேண்டும்.

    உடைப்பதற்கு முன் தேங்காயில் உயிரோட்டம் உண்டு. உடைத்ததன் காரணமாக, அது பிரிந்த பிறகு, குடுமியை அகற்ற வேண்டும். மேலும், உடைத்த பிறகு இறைவனுக்கு படைக்கும் பிரசாதமாக கருதப்படுவதால், அவை குடுமி அகற்றி, சுத்தமாக படைக்கப்பட வேண்டும்.

    அதேபோல், கும்பாபிசேகம், ஹோமங்கள் நடத்தும் போது, கும்பம் வைத்து, அதில் இறைவனை குடியிருத்துவர். குடம், இறைவனின் திருமேனி. குடத்தின் மேல் வைக்கப்படும் தேங்காய், இறைவனின் சிரம்; தேங்காயில் இறைவனின் முகத்தை சந்தனத்தால் உருவாக்குவர். அதற்கு தேங்காய், சிகையுடன் அதாவது குடுமியுடன் திகழ வேண்டும். எனவே, குடுமியுடன் கூடிய தேங்காயைக் கும்பத்தில் வைப்பது வழக்கம்.

  • Koyilil coconut udaipadhu

    கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.

    தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

    உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.

    இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.

    ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது. இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

  • Temple Coconut

    கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.

    தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

    உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.

    இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.

    ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

    இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

  • Coconut Sivan

    மகா சிவராத்திரியை முன்னிட்டு சித்தூர் மாவட்டம் நகரியில் 100 அடி உயர தேங்காய் சிவன். 

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி சமீபத்தில் உள்ள கீழப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒரு லட்சம் தேங்காய்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தபட்டுள்ள 100 அடி உயர தேங்காய் சிவன் சிலை பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    கீழப்பாடு கிராமத்தில் உள்ள  திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அதே கிராமத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் ஒரு லட்சம் தேங்காய்களை பயன்படுத்தி 100 அடி உயர சிவன் சிலையை பக்தர்களின் மனம் கவரும் வகையில் அமைத்துள்ளார்.

    சுமார் ஒரு மாத காலம் உழைத்து கணேஷ்  ஏற்படுத்திய தேங்காய் சிவன் சிலையை பக்தர்கள் பார்த்து ரசித்து தரிசித்து செல்கின்றனர்.

  • Sidharukaai Udayungal

    நம் துன்பங்கள் சிதற சிதறுகாய நடையுங்கள். விநாயக பெருமானுக்கு சிதறுகாய் உடைத்தால் நம் தீவினைகளும் சிதறுகாய் போல சிதறும் என்பது ஐதீகம்.  காசியப முனிவரின் மகனாக விநாயகர் மகோற்கடர் என்ற பெயரில் அவதரித்தார். ஒரு நாள் யாகத்திற்கு சென்ற போது அசுரன் ஒருவன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான்.

    விநாயகர் யாகத்திற்கு கொண்டு சென்ற கலசங்களின் மீதிருந்த தேங்காய்களை அசுரன் மீது வீசி அவனை பொடிப்பொடியாக்கினார்.

    தனக்கு வந்த தடையைத் தேங்காய் வீசி எறிதன் மூலம் தகர்த்ததால், நமக்கு வரும் தீவினைகளும் சிதற சிதறுகாய் உடைத்து விநாயகரை வழிபடும் முறை உருவானது.