Tag: Chadurthi

  • March 31 chadurthi naal rasipalan

    மார்ச் 31…… சங்கடஹர சதுர்த்தி நாள் ராசி பலன்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம் – ஜெயம்
    ரிஷபம் –  பாராட்டு
    மிதுனம் – கவனம்
    கடகம் –  நிம்மதி
    சிம்மம் –  அன்பு
    கன்னி –  தடங்கல் 
    துலாம் –  ஆதாயம் 
    விருச்சிகம் –    அமைதி
    தனுசு –   செலவு
    மகரம் –  பெருமை
    கும்பம் – பரிவு
    மீனம் –   உற்சாகம் 
    சந்திராஷ்டமம்    – உத்திரட்டாதி, ரேவதி

  • March 17 Chadurthi

    மார்ச் 17 – சதுர்த்தி
    சார்வரி வருடம் – பங்குனி 4
    17-மார்-2021 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    இ    10.58
    நட்சத்திரம்    :    அசுவினி    கா    7.16
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அஸ்தம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Vinayakar Chadurthi Special Pongal

    தேவையான பொருட்கள்:
    பச்சரிசி –  1 கப்
    பாசிப் பருப்பு  – 50 கிராம்
    முந்திரிப் பருப்பு – 30 கிராம்
    காய்ந்த திராட்சை  – 30 கிராம்
    சுக்கு பொடி –  சிறிதளவு
    ஏலக்காய் –  6
    சிறிய தேங்காய் –  1
    நெய் –  200 கிராம்
    கருப்பட்டி  – 600 கிராம்
    தண்ணீர் – தேவைக்கேற்ப

    செய்முறை:   

    முதலில் கருப்பட்டியை நன்றாக தூளாக்கிக் கொள்ள வேண்டும்.  பின்னர் குக்கரில் ஒரு கிண்ணம் அரிசிக்கு 3 மூன்று பங்கு தண்ணீர் விட்டு பச்சரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை போட்டு சாதமாக குழையவிடவேண்டும்.  

    தொடர்ந்து குக்கரில் பிரஷர் போனதும் குக்கரை திறந்து அதில் தூளாக்கி வைத்துள்ள கருப்பட்டியை போட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து ஒன்றாக திரண்டதும்,  வாணலியில் சிறிது நெய்யைவிட்டு  அதில் முந்திரிப் பருப்பு, திராட்சைப் பழம், துருவிய தேங்காயைப் போட்டு வறுக்க வேண்டும்.  

    தேங்காய் பொன்னிறமாக வதங்கிய பின் கலவையை குக்கரில் போட்டு ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, மீதமுள்ள நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும். சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார். 
     

  • Vinayakar chadurthi sirappugal

    ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நமக்கு எல்லா விதமான நன்மைகளும் விளையும் என்பது ஐதீகம். 

    கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை கணபதி என்று சொல்கின்றோம். எனவே, அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.

    எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். 'பிள்ளையார் சுழி' போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவேதான் 'மூல கணபதி' என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.

    அந்த ஆனைமுகனுக்கு உகந்த மாதம் தான் ஆவணி மாதம். அந்த திருநாள்ஆவணி மாதம் 6ம் தேதி சனிக்கிழமை (22.08.2020) அன்று வருகிறது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

    வீட்டிலும் சிலை வைத்து வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும்.
     

  • Chadurthi viradham iruppadhu eppadi

    வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் விரதம் சங்கடஹா சதுர்த்தி விரதம். பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி தினம். அன்றைய தினம் மாலையும் இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.

    அதேபோல சதுர்த்தி விரதம் கடைப்பிடித்த பிறகுதான், கிருத்திகை, ஏகாதசி, பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் பொதுவான நியதி.

    அடக்கமின்றி தன்னைப் பார்த்து சிரித்த சந்திரனை, ஒளியில்லாமல் போகும்படி சபித்தார் விநாயகர். கடும் தவத்துக்குப் பிறகு ஒரு சதுர்த்தி தினத்தில், சந்திரனின் சாபத்தை நீக்கினார் கணநாதர். எனவே, சந்திர பலம் பெற விரும்புவோர் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். 

    ஆவணி மாதத்தில் வருகிற விநாயக சதுர்த்தி தினத்தில்தான், சுக்லபட்ச சதுர்த்தி விரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து மாதம்தோறும் வருகிற சதுர்த்தி நாள்களில் விரதமிருந்து விநாயகரை வழிபடலாம். 11 சதுர்த்தி தினங்களில் விரதமிருந்து சதுர்த்தி  விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

    சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள ஆலயத்துக்குச் செல்ல வேண்டும்.  பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்து, தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும்.

    கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும், ஆழாக்குப் பச்சரிசியை ஊறவைத்து, அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, பசுவுக்குக் கொடுக்க வேண்டும். கணபதியோடு பசு வழிபாடு செய்வது கூடுதல் நன்மை தரும்.

    வீட்டிலேயே மோதகம், சித்திரான்னங்கள், பால், தேன், கொய்யா, வாழை, நாவல்,  கொழுக்கட்டை, சுண்டல் என்று தயாரித்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
     

  • Sangadahara chadurthi history

    முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.

    சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைத்தார் என்று ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது.

    ஸ்ரீகிருஷ்ணர் நான்காம் பிறையை கண்டதால் அவருக்கு அபவாதம் ஏற்பட்டது. எனவே அவர் இந்த விரதத்தை மேற்கொண்டு கணேசனை பூஜித்து அதிலிருந்து மீளப் பெற்றார் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.

    வனவாசத்தின் போது, கண்ணபிரான் இவ்விரதத்தைப் பற்றி பஞ்ச பாண்டவர்களிடம் எடுத்துரைத்ததாகவும், அதன்படி இதனை அனுஷ்டித்து யுதிஷ்டிரர் நாட்டை மீண்டும் அடைந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நாளில் தான், விநாயகப் பெருமானின் அருளைப் பெற்று, சந்திரன் சாப விமோசனம் அடைந்தான். எனவே இந்நாளில் சந்திரன் பிரதானமாகிறான்.

    தமயந்தி நளனை அடைந்தது இந்த விரதத்தின் மகிமையால் தான் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

    இந்த விரதத்தை முதன் முதலில் அங்காரகன் (செவ்வாய்) கடைபிடித்து நவகிரக பதவி அடைந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. எனவே தான் செவ்வாய்க்கிழமை வரும் விரதம் விசேஷமாக கருதப்படுகிறது.

    மேலும், இந்திரன், இராவணன் போன்றோர் இந்த விரதத்தின் மூலம் பலன் அடைந்திருக்கின்றனர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

  • Sangadahara chadurthi

    முன்பு ஒரு காலத்தில் பிரம்மன், சிவபெருமானை தரிசிக்க திருக்கயிலாயத்திற்கு சென்றார். அப்போது நாரதர் அங்கே ஒரு கனியுடன் வந்திருந்தார். அந்த தெய்வீகக் கனியை முருகனுக்கு கொடுக்கும் படி பிரம்மதேவன் சிவபெருமானிடம் கூறினார்.

    சிவனும் அந்தப் பழத்தை முருகனிடம் வழங்கினார். இதைப்பார்த்த மூத்த பிள்ளையான விநாயகருக்கு எரிச்சல் வந்தது. அவர் பிரம்மதேவனை கோபத்துடன் பார்த்தார். விநாயகரின் கோப பார்வை பிரம்மனை அஞ்சி நடுங்கச் செய்தது. தன் தவறை உணர்ந்த பிரம்மன், விநாயகரை நோக்கி, முழு முதற்பெருமானே, என் பிழையை பொருத்தருள வேண்டும் என்று சொல்லி இரு கரம் குவித்து, தலை தாழ்த்தி உடம்பை குறுக்கிக் கொண்டு பணிந்து நின்றார்.

    இக்காட்சியை அங்கு இருந்த சந்திரன் பார்த்தான். முனிவர்கள், ரிஷிகள் பெரியோர்கள் கூடியுள்ள இடத்தில் பிரம்மனை பார்த்து, இகழ்ச்சியுடன் சிரித்த சந்திரனின் மீது விநாயகர் கோபப்பார்வை திரும்பியது. அவர் சந்திரனை பார்த்து, ‘பெரியோர்கள் கூடியுள்ள சபையில், அடக்கமின்றி சிரித்த சந்திரனே! உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகக்கடவது. உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும்’ என்று சபித்தார். அப்போதே வானத்தில் சந்திரன் இல்லாமல் போனது. பவுர்ணமி பூஜை, அமாவாசை திதி எதுவும் நடைபெறவில்லை.

    நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த இந்திரனும், தேவர்களும், சந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டினர். கருணைக்கடவுளான விநாயகர் மனம் மகிழ்ந்து ‘வருடத்தில் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள்’ என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை குறைத்து விட்டார். மேலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன். அவர்கள் புண்ணிய பேறுகளை அடைவர் என்றும் திருவருள் புரிந்தார்.

    இதைக்கேட்ட சந்திரன் தன் தவறை உணர்ந்து விநாயகரை குறித்து கடும் தவம் இருந்தான். அவனது தவத்துக்கு மனம் மகிழ்ந்த விநாயகர் அவனுக்கு அருள்புரிந்து வளரும் வரத்தை கொடுத்தார். அவ்வாறு சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினமாகும். ஆகவே சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்ததானது. வளர்பிறை சதுர்த்தி திதியை பார்த்தால் தீங்கு விளையும். பகவான் கிருஷ்ணர், செவ்வாய், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளை பெற்றனர். முற்பிறவியில் நாம் செய்த வினையின் பயனால், நமக்கு இப்பிறவியில் சங்கடங்கள் வரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால், அவர் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளையும் தருவார்.
     

  • Sangada Hara chadurthi Viradha Palangal

    சங்கடஹர விரதத்தைக் கடைப்பிடிப்பதால் நோய்கள் குணமடைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்படும் துன்பங்கள் விலகி மகிழ்ச்சியான நிலையை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் எனப் பலவிதமான நன்மைகளை அடைய முடியும். 

    முக்கியமாக மனோகாரகன் எனும் சந்திரனின் அருளும் சேர்ந்து கிடைக்கும். சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் சந்திர பகவானின் தாக்கம் குறையும். நினைத்ததை நிறைவேற்றும் இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை மனமுருகி வழிபட்டு கணபதியின் அருளைப் பெற்றிடுங்கள்.

    குழந்தை இல்லாதவர்கள், நோய் உள்ளவர்கள், கல்யாண ஆகாதவர்கள், நல்ல வேலை கிடைக்க என அனைத்துவகை பிரார்த்தனைக்கும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். 

  • Sangadahara chadurthi viradham

    விநாயகப் பெருமானை வழிபட பல விரதங்கள் இருந்தாலும் மாதம் ஒரு முறை வரும் சங்கடஹர சதுர்த்தி விரதம் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடியதாகும்.  இந்த விரதம் இருந்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி அனைத்து காரியங்களும் வெற்றி பெறும்.

    சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். வருடம் முழுவதும் வரும் சங்கடஹர சதுர்த்தியை விட, மஹா சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமானது.

    விரதம் இருக்கும் முறை

    சங்கடஹர சதுர்த்தியன்று நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகப் பெருமானின் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அறுகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு. உடல் ஆரோக்கியம் இருப்பவர்கள் மட்டும் உபவாசம் இருக்கலாம். 

    ஆலயத்தை 11 முறை வலம் வருதல் வேண்டும். அனைத்துப் பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து சந்திரனைத் தரிசித்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். பிறகு இரவு உணவு எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு முழு விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் மாலையில் விநாயகப் பெருமானின் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். விநாயகர் துதி பாடல்கள், விநாயகர் அகவலைச் சொல்லி வழிபடலாம்.

  • September 17 Sangadahara chadurthi

    செப்டம்பர் 17 சங்கடஹர சதுர்த்தி
    விகாரி வருடம் – ஆவணி 31
     சங்கடஹர சதுர்த்தி 
    17-செப்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    ம    3.24
    நட்சத்திரம்    :    அசுவினி    முழுவதும்    0.00
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்