Tag: Chadurthi

  • January 25 2023 Chadurthi

    ஜனவரி 25 – சதுர்த்தி
    சுபகிருது வருடம் – தை 11
    25-ஜன-2023 புதன்  
    கரிநாள்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00     
    திதி : சதுர்த்தி     
    திதி நேரம் : சதுர்த்தி மா 6.47
    நட்சத்திரம் : பூரட்டாதி ந.இ 2.13
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • vinayakar arul tharum sangadahara chadurthi

    முன்பு ஒரு காலத்தில் பிரம்மன், சிவபெருமானை தரிசிக்க திருக்கயிலாயத்திற்கு சென்றார். அப்போது நாரதர் அங்கே ஒரு கனியுடன் வந்திருந்தார். அந்த தெய்வீகக் கனியை முருகனுக்கு கொடுக்கும் படி பிரம்மதேவன் சிவபெருமானிடம் கூறினார்.

    சிவனும் அந்தப் பழத்தை முருகனிடம் வழங்கினார். இதைப்பார்த்த மூத்த பிள்ளையான விநாயகருக்கு எரிச்சல் வந்தது. அவர் பிரம்மதேவனை கோபத்துடன் பார்த்தார். விநாயகரின் கோப பார்வை பிரம்மனை அஞ்சி நடுங்கச் செய்தது. தன் தவறை உணர்ந்த பிரம்மன், விநாயகரை நோக்கி, முழு முதற்பெருமானே, என் பிழையை பொருத்தருள வேண்டும் என்று சொல்லி இரு கரம் குவித்து, தலை தாழ்த்தி உடம்பை குறுக்கிக் கொண்டு பணிந்து நின்றார்.

    இக்காட்சியை அங்கு இருந்த சந்திரன் பார்த்தான். முனிவர்கள், ரிஷிகள் பெரியோர்கள் கூடியுள்ள இடத்தில் பிரம்மனை பார்த்து, இகழ்ச்சியுடன் சிரித்த சந்திரனின் மீது விநாயகர் கோபப்பார்வை திரும்பியது. அவர் சந்திரனை பார்த்து, ‘பெரியோர்கள் கூடியுள்ள சபையில், அடக்கமின்றி சிரித்த சந்திரனே! உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகக்கடவது. உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும்’ என்று சபித்தார். அப்போதே வானத்தில் சந்திரன் இல்லாமல் போனது. பவுர்ணமி பூஜை, அமாவாசை திதி எதுவும் நடைபெறவில்லை.

    நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த இந்திரனும், தேவர்களும், சந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டினர். கருணைக்கடவுளான விநாயகர் மனம் மகிழ்ந்து ‘வருடத்தில் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள்’ என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை குறைத்து விட்டார். மேலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன். அவர்கள் புண்ணிய பேறுகளை அடைவர் என்றும் திருவருள் புரிந்தார்.

    இதைக்கேட்ட சந்திரன் தன் தவறை உணர்ந்து விநாயகரை குறித்து கடும் தவம் இருந்தான். அவனது தவத்துக்கு மனம் மகிழ்ந்த விநாயகர் அவனுக்கு அருள்புரிந்து வளரும் வரத்தை கொடுத்தார். அவ்வாறு சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினமாகும். ஆகவே சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்ததானது. வளர்பிறை சதுர்த்தி திதியை பார்த்தால் தீங்கு விளையும். பகவான் கிருஷ்ணர், செவ்வாய், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளை பெற்றனர். முற்பிறவியில் நாம் செய்த வினையின் பயனால், நமக்கு இப்பிறவியில் சங்கடங்கள் வரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால், அவர் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளையும் தருவார்.

  • September 13 2022 sangadahara chadurthi

    செப்டம்பர் 13 – சங்கடஹர சதுர்த்தி
    சுபகிருது வருடம் – ஆவணி 28
     சங்கடஹர சதுர்த்தி
    13-செப்-2022 செவ்வாய்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                         
    திதி    :    சதுர்த்தி         
    திதி நேரம்    :    திரிதியை    ம    1.40
    நட்சத்திரம்    :    ரேவதி    கா    10.08
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

     

  • July 16 2022 sangadahara chadurthi

    ஜூலை 16 – சங்கடஹர சதுர்த்தி
    சுபகிருது வருடம் – ஆனி 32
     சங்கடஹர சதுர்த்தி 
    16-ஜூலை-2022 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    மா    6.10
    நட்சத்திரம்    :    அவிட்டம்    இ    8.08
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    புனர்பூசம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • July 03 2022 Chadurthi viradham

    ஜூலை 3 – சதுர்த்தி விரதம் 
    சுபகிருது வருடம் – ஆனி 19
    03-ஜூலை-2022 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    ம    3.09
    நட்சத்திரம்    :    மகம்    முழுவதும்    0.00
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • December 22 sangadahara chadurthi

    டிசம்பர் 22 – சங்கடஹர சதுர்த்தி
    பிலவ வருடம் – மார்கழி 7
    22-டிச-2021 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    ம    3.31
    நட்சத்திரம்    :    பூசம்    இ    11.44
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மூலம்,பூராடம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Vinayakar Chadurthi Vazhipadu

    ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகவும் துன்பங்கள், துயரங்கள், சங்கடங்களை நீக்கி சகல சௌபாக்கியத்தையும் தரக்கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம். 

    திதி வரிசையில் நான்காவது வரும் திதி சதுர்த்தி திதியாகும்.  இதில் தேய்பிறையில் வரும் 4வது திதியை சங்கட ஹர சதுர்த்தி திதி என்கிறோம். இந்த சதுர்த்தி விரதம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வேண்டி, இருக்கும் விரதம். 

    சங்கடஹர சதுர்த்தி என்பது சந்திரன் உதயமாகும் போது விநாயகரை வழிபட்டு சந்திரனுக்கு பூஜை செய்வதாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி நாளில் காலையிலிருந்து விரதம் மேற்கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். இரவு சந்திரனுக்கு பூஜை முடிந்தபின் அந்த பிரசாதத்தை மட்டும் சாப்பிட்டு தனிமையில் படுத்து உறங்க வேண்டும். 

    அதிகாலையில் குளித்து, வாசலில் மாவிலைத் தோரணத்தைக் கட்டி, வீட்டை மற்றும் பூஜை அறையைச் சுத்தம் செய்ய வேண்டும். இந்த நாள் அன்று காலையில் இருந்து விரதம் மேற்கொள்வது சிறப்பு. பூஜை அறையில் ஒரு சிறிய கோலம் போட்டு, அதன் மேல் தலை வாழை இலையை வைத்து, இலையில் பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும்.

    அந்த இலையில் களிமண்ணாலான விநாயகரை வைத்து, அவரைப் பலவகை புஷ்பங்கள் மற்றும் அறுகம்புல் மாலையினால் அலங்கரிக்க வேண்டும். அதன் பிறகு, அவருக்குப் பழங்களைப் படைத்து, அதனுடன் அவர் விரும்பும் மோதகம், எள்ளுருண்டை, கொழுக்கட்டை, நெய்வேத்தியம், பாயாசம் போன்ற பலகாரங்களைச் செய்து படைக்க வேண்டும்.

    விநாயகரின் பாடல்களைப் பாடி வணங்கி, உங்களது விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இறுதியாக, களிமண்ணால் செய்யப் பட்ட இந்த விநாயகரை ஏதாவது நீர்நிலையில் கொண்டுபோய் கரைப்பது வழக்கம்.
     

  • Pillayarpatti chadurthi kodiyetram

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்கிறது. ஆனால், கொரோனா ஊரடங்கு தடை காரணமாக, சதுர்த்தி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெறும்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பக்தர்களின்றி கட்டுப்பாடுகளுடன் நடந்தது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

     
    அதன்படி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்திற்கு அருகில் உற்சவ விநாயகரும், சண்டிகேஸ்வரரும் எழுந்தருள சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. வருகிற 10-ந் தேதி வரை நடக்கும் சதுர்த்தி திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் உற்சவர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பிரகாரத்தை வலம் வருவார்.

    இந்த நிகழ்வுகளில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள். சதுர்த்தி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • June14 chadurthi naal rasi palan

    ஜூன் 14…. சதுர்த்தி நாள் ராசி பலன்….. 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     சாந்தம்
    ரிஷபம் –     வெற்றி 
    மிதுனம் –     விருத்தி
    கடகம் –      லாபம் 
    சிம்மம் –      உயர்வு 
    கன்னி –      முயற்சி
    துலாம் –      யோகம் 
    விருச்சிகம் –       பிரிவு
    தனுசு –       பிரீதி
    மகரம் –      நன்மை  
    கும்பம் –     நட்பு
    மீனம் –       தடங்கல்
    சந்திராஷ்டமம்    – பூராடம், உத்திராடம்

  • april 16 chadurthi viradham

    ஏப்ரல் 16 – சதுர்த்தி விரதம்
    பிலவ வருடம் – சித்திரை 3
    16-ஏப்-2021 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    மா    4.21
    நட்சத்திரம்    :    ரோகிணி    இ    9.50
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சுவாதி,விசாகம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்