Tag: Car Festival

  • Thirupathy Car Festival

    திருப்பதி ஏழுமலையான்  பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது இதில் எட்டாம் நாளான இன்று காலை கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

    திருப்பதி ஏழுமலையான் கோவில் சாலகட்ல பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் தேரோட்டம் திருமலை மாட வீதிகளில் வெகு விமர்சியாக நடைபெற்றது.

    கடந்த 18ம் தேதி  திருப்பதி  ஏழுமலையான் கோயில் சாலகட்ல பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பிரமோற்சவத்தின்  முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்ட மலையப்ப சுவாமி தேர் மீது எழுந்தருளினார்.

    தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகள் தூப, தீப,நைவேத்தியம் ஆகியவற்றுக்குப் பின் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் வடம் பிடிக்க திருமலை நான்கு மாட வீதிகளில் ஏழுமலையானின் தேரோட்டம் வைபவமாக நடைபெற்றது.

    இதில் நான்கு மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தை கண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

  • March 25 Kanchi car festival

    மார்ச் 25 – காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் தேர்
    சார்வரி வருடம் – பங்குனி 12
    காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் தேர்
    25-மார்-2021 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    கா    6.39
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    இ    8.13
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூராடம்,உத்திராடம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Thiruvannamalai car festival

    திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாளான இன்று மகா தேரோட்டம் ஆனது நடைபெற்றது. .

    இதில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் தேர் என்னும் மகாரதம் தேரோட்டத்தை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7-வது நாளான இன்று மகா தேரோட்டம் எனப்படும் 5 தேர்கள் பவனி இன்று காலை தொடங்கியது. முதலில் விநாயகர் தேர் ஊர்வலம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுப்பிரமணியர் தேர் மாடவீதியில் பவனி வந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுந்தனர்.  மதியம் 2 மணி அளவில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் அருள்பாலிக்கும் பெரிய தேர் எனப்படும் மகா ரதம் ஊர்வலம் வந்தது.

    மகா ரதம் நிலையை அடைந்ததும் பராசக்தி அம்மன் புறப்பாடு நடைபெற்றது. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சென்றது அதன் தனிச்சிறப்பாகும். தேரோட்டத்தின் நிறைவாக சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடைபெற்றது. தேர் திருவிழாவை தரிசிக்க திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகரின் முக்கிய இடங்களில் சி.சி.டிவி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.
     

  • Thirupathy Car Festival

    திருப்பதி ஏழுமலையான்  கோயிலில் பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான நாளை காலை 7 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்  பாலீக்க உள்ள ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத மலையப்ப சுவாமி

    அலைபாயும் மனதை சிதரவிடாமல் கட்டுபடுத்தி சரிரம் என்னும் ரதத்தை நல் வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி் பூதேவி தயார்களுடன் பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை 7 மணி முதல் 9.30 மணி வரை  மகா ரதம் எனப்படும் தேரில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் முழுங்கியபடி வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

    ரத உற்சவத்தின் போது  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுவாமியின் ரதஉற்சவத்தில் பங்கேற்று தரிசனம் செய்தால் மறு ஜன்மம் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கலியுகத்தில் துஷ்ட சக்திகளை வதம் செய்வதற்காக பாயும் தங்க குதிரை மீது பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாள் மலையப்ப சுவாமி கல்கி அலங்காரத்தில் இன்று இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
     

  • Mariamman koil Car festival

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னகிருஷ்ணாபுரம் ஸ்ரீ மகாமாரியம்மன், ஸ்ரீ புதுபட்டி மாரியம்மன் திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 


    23 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். 

    மகாமாரியம்மன் கோவிலிருந்து இருந்து வழக்கம் போல அருமிகு பாலதண்டாயுதபாணி சுப்பிரமணியர் ஆலயம் அருகில் மாலை 7 மணியளவில் நிறுத்தப்பட்டது, பின்னர், மறுநாள் மாலை சுமார் 5 மணியளவில் பக்தர்கள் திரண்டு தேரை வடம்பிடித்து இழுத்து நடு வீதி, வடக்கு வீதி மூலமாக மாரியம்மன்கோவில் திடலில் நிலைநிறுத்தப்பட்டது. 

    இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்த விழாவின் முன்னதாக 50 திற்கும் மேற்பட்டோர் அழகு குத்தல், 20 திற்கும் மேற்பட்டோர் கரகம் எடுத்தல் , திருநங்கைகள் நடனம், தீவளையத்தில் தீ மிதித்து நடனம், உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் நடைபெற்றது.  
     

  • Pillayarpatti Car Festival

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தேரோட்டம்  வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் . இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள் திருவிழாவாக வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. 

    இந்த ஆண்டு கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது ஒவ்வொரு நாளும் ரிசபம், சிம்மம், கமலம், உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஒன்பதாவது திருநாளான இன்று மாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  தேர் வடம் பிடித்து இழுத்தனர். 

    சதுர்த்தி விரதம் இருக்கும் பெண்கள் மட்டுமே இருக்கு சண்டிகேஸ்வரர் சிறிய தேரை ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். 

    கோவிலைச் சுற்றி நான்கு வீதிகளில் வலம் வந்த திருத்தேர் மாலை 6.40 மணிக்கு நிலைக்கு வந்தது. மூலவர் சந்தனக் காப்பு அலங்காரம் வருடம் ஒரு முறை மட்டும் நடக்கும் என்பதால் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விழா ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகர டிரஸ்டிகள் செய்துள்ளனர். நாளை 10 வது திருநாளான விநாயகர் சதுர்த்தி கோவில் தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இரவு பஞ்சமூர்த்தி திருவீதி உலாவுடன் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெரும். 

  • Thiruchendur car festival

    திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

    முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாள்களில் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி மற்றும் அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், வள்ளியம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் இன்று காலை 6:00 மணிக்கு தொடங்கியது.

    இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முதலில் விஸ்வரூப தரிசனமும், பின்னர் உதயமார்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி – தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட திருதேரில் எழுந்தருளினார். 

    தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
     

  • Nellai Kailasanadhar car festival

    நெல்லை கைலாசபுரத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாத சுவாமி கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா தேரோட்டம் ஜூன் 10-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    கைலாசநாதர் கோயிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருந்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் கொடியேற்றப்பட்டதும், கொடிமரத்திற்கு பதினாறுவகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா நாள்களில் தினமும் சிறப்பு பூஜைகளும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. பூங்கோயில், சப்பரங்களில் மலர் அலங்காரத்துடன் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

    7-ம் திருநாளான இம் மாதம் 8-ம் தேதி இரவு 9 மணிக்கு செப்புச் சப்பரத்தில் சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜர் சிவப்பு சாத்தி திருவீதியுலா வர உள்ளார். 9-ம் தேதி காலை 7.30 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தி வீதியுலா வருகிறார். மாலையில் சந்திரசேகரர் பரிவேட்டையும், கங்காளநாதர் வீதியுலாவும் நடைபெற உள்ளன.

    விழாவின் சிகர நிகழ்வாக இம் மாதம் 10ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகளும், 7 மணிக்கு சுவாமி-அம்பளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. பின்னர், மலர் அலங்காரத்துடன் தேருக்கு சுவாமி-அம்பாள் எழுந்தருள்கின்றனர். காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. 11ஆம் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரியும், 10.30 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் திருவீதியுலாவும் நடைபெற உள்ளன.
     

  • Lakshmi Narasimhar Car Festival

    திண்டிவனத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கனகவல்லி நாயிகா சமேத அருள்மிகு ஸ்ரீ இலட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவில் பிரம்மமோற்வ பெருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம்,சூர்ணாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் கடந்த ஒருவாரமாக  தினம்தோறும்  நடைபெற்றுவந்தது.  

    இந்நிலையில் இன்று அதிகாலை  கனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீலட்சுமி நரசிம்மசுவாமிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு  திருத்தேரோட்டம் நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி அருளை பெற்றார்கள்.
     

  • Padmavathi thayar car festival

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வசந்த உற்சவத்தின்  இரண்டாவது நாளையொட்டி தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்த உற்சவதின் இரண்டாவது நாளான இன்று தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி  நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க சுவாமி வீதி உலா வந்து அருள் பாலித்தார். 

    கோடை காலத்தில் ஏற்படக்கூடிய வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வசந்த உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது .அவ்வாறு இன்று மதியம் பத்மாவதி தாயார் உற்சவருக்கு பால், மஞ்சள்,  குங்குமம், பால் ,தயிர், தேன், சந்தனம், இளநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது . 

    மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை அன்னமாச்சாரியார் திட்டத்தின் சார்பில் ஆன்மிக சங்கீர்த்தனைகள் நடைபெற்றது. இரவு ஏழு முப்பது மணிக்கு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.