Tag: பகவான்

  • Vaigasi visaga viradha murai

    வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

    முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ', ‘ஓம் முருகா' என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.

    இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.

  • Pavangal pookum narashimmar

    பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டு விரதம் மேற்கொண்டால் பாவம் ஒழிந்து புண்ணியம் கிடைக்கும்.

    விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் ஊரில் உள்ள கோவில் தான் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில். இந்த கோவிலில் மூலவராக லட்சுமி நரசிம்மரும், அம்மனாக கனகவல்லியும் உள்ளனர். இந்தியாவிலேயே இந்த கோவிலில் தான் நரசிம்மர் சுவாமியை லட்சுமியும், லட்சுமியை நரசிம்மரும் ஆலிங்கனமும் செய்தபடி காட்சியளிக்கின்றனர்.

    திருமணத்தடை காரியத்தடை உள்ளவர்கள் இங்கு பரிக்கல் கோவிலுக்கு வந்து தரிசித்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதே போல், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், வேலை இருந்தும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டால் பதவி உயர்வு உடனடியாக கிடைக்கும்.

    விரதம் இருந்து பரிக்கல் கோவிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி வைத்தும், பக்த ஆஞ்சநேயருக்கு முன்பு நெல் கொட்டி அதில் எழுதி வைத்து வழிபட்டால், பக்தர்களின் நியாயமான குறைகள் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும், பக்தர்கள் தங்கள் வாழ்வில், பிறவியில் வந்த பாவங்கள் அழிந்து புண்ணியம் கிடைக்க வழிவகுக்கும்.

  • Kulamkaakum vaigasi visagam

    சித்ரா பௌர்ணமிக்கு அடுத்து வரும் பௌர்ணமி விசாக நட்சத்திரத்தில் வருவதால்தான் அந்த மாதத்திற்கு வைகாசி என்ற பெயர் வந்தது. விசாகம், ஞான நட்சத்திரம் என்பர். முருகப் பெருமானுக்குரிய விழாக்களாக தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொன்னாலும் இவையாவும் சிவனோடும் சம்பந்தப்பட்டவை.

    முருகனது தனிப்பட்ட விழாக்களில் விசாகமும் ஐப்பசி சஷ்டியுமே மிக முக்கியமானவை. சூரபத்மன் போன்ற அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். உடனே அவர்களை காத்தருள சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். இந்தத் தீப்பொறிகள் வாயு, அக்னி முதலிய தேவர்கள் மூலம் கங்கையில் கொண்டு விடப்பட்டன.

    கங்கையோ அவற்றை சரவணப் பொய்கையில் சேர்த்தது. அங்கு வந்து சேர்ந்ததும் அவை வைகாசி விசாகத்தன்று ஆறு குழந்தைகளாக மாறின. விஷ்ணு பகவான் கார்த்திகைப் பெண்கள் மூலமாக அக்குழந்தைகளுக்கு பாலூட்டி விட்டார். இவ்வாறு ஆறுமுகம் கொண்ட முருகன் தோன்றி தேவர்களைக் காத்தருளினார்.

    எனவே, இந்நாளில் முருகனை வழிபடுவதால் நம் பகைகள் யாவும் தொலைந்து விடும் என்பர். இந்நாளில் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளிலும் மற்ற முருகன் தலங்களிலும் விசேஷமான பூஜைகளும் கோலாகலமான விழாவும் நடைபெறுகின்றன. இந்நாளில் தானமும், தர்மமும் செய்தால் நல்லது. தயிர்சோறு, மோர், பானகம் போன்ற குளிர்பான தானம், குலம் காக்கும் என்று சொல்வார்கள்.

  • May 22 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – தாமதம்
    ரிஷபம்         – சுபம்
    மிதுனம்     – குழப்பம்  
    கடகம்         –  ஓய்வு  
    சிம்மம்         –   பக்தி  
    கன்னி         –    பேராசை
    துலாம்         –     நிம்மதி
    விருச்சிகம்     –  வெற்றி
    தனுசு         –     நலம்
    மகரம்         –    ஆர்வம்
    கும்பம்         –      நன்மை
    மீனம்         –      பொறுமை
    சந்திராஷ்டமம்    –        உத்திரட்டாதி

  • May 22 vaigasi visagam

    மே 22 – வைகாசி விசாகம்…
    குரோதி வருடம் – வைகாசி – 09
    மே 22, 2024
    செவ்வாய்
    வைகாசி விசாகம்
    நரசிம்ம ஜெயந்தி
    பழநி,
    திருமோகூர்,
    நாட்டரசன் கோட்டையில் தேர்
    நல்ல நேரம் : 9.30 – 11.30
    எமகண்டம் : 7.30 – 9.00
    குளிகை : 10.30 – 12.00
    ராகு : 12.00 – 1.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் :  சதுர்த்தசி இ 7.13
    நட்சத்திரம் :  சுவாதி கா 8.17
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • May 21 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – செலவு
    ரிஷபம்         – ஆதாயம்
    மிதுனம்     – வரவு  
    கடகம்         –  தடங்கல்
    சிம்மம்         –   நன்மை
    கன்னி         –    சுகம்
    துலாம்         –     பெருமை
    விருச்சிகம்     –  நலம்
    தனுசு         –     கீர்த்தி
    மகரம்         –    உழைப்பு
    கும்பம்         –      உதவி
    மீனம்         –      அலைச்சல்    
    சந்திராஷ்டமம்    –        பூரட்டாதி

  • May 21 2024 Indrayanaal

    மே 21 – நயினார் கோவில் தேர்…
    குரோதி வருடம் – வைகாசி – 08
    மே 21, 2024
    செவ்வாய்
    நயினார் கோவில்,
    திருவாடானை,
    திருப்புத்தூரில் தேர்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    எமகண்டம் : 9.00 – 10.30
    குளிகை : 2.00 – 1.30
    ராகு : 3.00 – 4.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் :  திரையோதசி மா 6.08
    நட்சத்திரம் :  சித்திரை கா 6.23
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : பூரட்டாதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • Kasi viswanatha temple pradosha vizha

    வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ நாளில் நந்தி பகவானுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி ஸமேத காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ விழா வெகு விமர்சையாக பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது..

    முன்னதாக கோவிலில் இருக்கும் நந்தி பகவானுக்கு அரிசி மாவு கதம்பொடி ,மஞ்சள், தயிர், இளநீர் தேன், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் ஆகிய வாசனை திரவியகளோடு சிறப்பான முறையில் பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புஷ்ப மலர்களாலும் அருகம்புல் அலங்காரம் செய்து மஹா தீபாரதனையை காண்பித்தனர்

    தொடர்ந்து நடைபெற்ற பிரதோஷ விழாவில் வாலாஜாப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்..

  • May 19 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – நிறைவு
    ரிஷபம்         – ஆர்வம்
    மிதுனம்     – முயற்சி
    கடகம்         –  பரிவு
    சிம்மம்         –   ஓய்வு     
    கன்னி         –    வெற்றி
    துலாம்         –     நன்மை
    விருச்சிகம்     –  சிந்தனை
    தனுசு         –     செலவு
    மகரம்         –    அமைதி   
    கும்பம்         –      வரவு
    மீனம்         –      சாதனை  
    சந்திராஷ்டமம்    –        அவிட்டம்

     

  • May 19 2024 Subamuhurthanaal

    மே 19 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்…
    குரோதி வருடம் – வைகாசி – 06
    மே 19, 2024
    ஞாயிறு
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    குளிகை : 3.00 – 4.30
    ராகு : 4.30 – 6.00
    திதி : ஏகாதசி
    திதி நேரம் :  ஏகாதசி ம 2.53
    நட்சத்திரம் :  உத்திரம் அ.கா 1.39
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : அவிட்டம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்