Tag: பகவான்

  • June 16 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – தடங்கல்
    ரிஷபம்         – சுகம்
    மிதுனம்     – பிரீதி
    கடகம்         –  ஆதரவு
    சிம்மம்         –   களிப்பு
    கன்னி         –    தனம்
    துலாம்         –     வரவு
    விருச்சிகம்     –  தாமதம்
    தனுசு         –     நட்பு
    மகரம்         –    செலவு
    கும்பம்         –      சிக்கல்
    மீனம்         –      இன்பம்
    சந்திராஷ்டமம்    –         அவிட்டம், சதயம்

  • June 16 2024 Subamuhurthanaal

    ஜூன் 16 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்…
    குரோதி வருடம் – ஆனி 02
    ஜூன் 16, 2024
    ஞாயிறு
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    குளிகை : 3.00 – 4.30
    ராகு : 4.30 – 6.00
    திதி : சூன்ய
    திதி நேரம் :  நவமி அ.கா 2.41
    நட்சத்திரம் :  அஸ்தம் கா 11.29
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : அவிட்டம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • June 15 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – ஊக்கம்
    ரிஷபம்         – அமைதி
    மிதுனம்     – ஈகை
    கடகம்         –  ஓய்வு
    சிம்மம்         –   மறதி
    கன்னி         –    திடம்
    துலாம்         –     பகை
    விருச்சிகம்     –  சஞ்சலம்
    தனுசு         –     தடை  
    மகரம்         –    வரவு
    கும்பம்         –      ஜெயம்
    மீனம்         –      ஆசை
    சந்திராஷ்டமம்    –         அவிட்டம்

  • June 14 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – நிறைவு
    ரிஷபம்         – ஓய்வு  
    மிதுனம்     – அனுகூலம்
    கடகம்         –  அலைச்சல்
    சிம்மம்         –   வரவு
    கன்னி         –    வெற்றி
    துலாம்         –     நன்மை  
    விருச்சிகம்     –  பகை
    தனுசு         –     ஜெயம்
    மகரம்         –    மறதி
    கும்பம்         –      தோல்வி
    மீனம்         –      அசதி
    சந்திராஷ்டமம்    –         திருவோணம்

  • chindamani nathar swamy koil kodiyetram

    வாசுதேவநல்லூர்  பிரசித்தி பெற்ற சிந்தாமணிநாதசுவாமி திருக்கோயில் ஆனி பெரும் திருவிழா கொடியேற்றுடன் துவங்கியது.தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிரசித்தி பெற்ற சிந்தாமணிநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனி பெரும் திருவிழாவானது பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதற்கான இந்த ஆண்டு ஆனிப்பெரும் திருவிழாவானது இன்று அதிகாலை திருக்கோவில் நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கொடி மரபட்டானது நான்கு ரதவீதிகளிலும் சுற்றி கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டதை தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அதன் பின்னர் கொடிமரத்தற்கு சந்தனம், பால், தயிர் ,பன்னீர், இளநீர், உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தப்பட்டது. தொடர்ந்து மகா தீப ஆராதனையும் காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான ஒன்பதாம் நாள் அன்று திருத்தேரோட்டம் வெகு விமர்ச்சையாக நடைபெறும் வழக்கம்.

  • Mayuranathar Temple aani thiruvizha kodiyetram

    விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பெத்தவநல்லூரில் பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு ஸ்ரீ மாயூரநாத ஸ்வாமி ஸ்ரீ அஞ்சல் நாயகி அம்மன் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து கோவிலின் முன்புறம் அமைந்துள்ள கொடிமரத்திற்கு மஞ்சள், அரிசிமாவு, வாசனை திரவியங்கள், பால், சந்தனம், தேன், கும்ப நீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து மங்கள வார்த்தைகள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடிமரத்தில் நெற் கதிர்கள் வைக்கப்பட்டு மஞ்சள் காப்பு கட்டப்பட்டு கொடி மரத்திற்கு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றன. 10 நாட்கள் நடைபெறும் ஆனி பெரும் திருவிழாவின் போது தினந்தோறும் சுவாமி,அம்பாள் வீதி உலா நடைபெறும்.

    முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இன்றைய கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

  • June 13 2024 Indrayanaal

    ஜூன் 13 – இன்றைய நல்ல நேரம்…
    குரோதி வருடம் – வைகாசி – 30
    ஜூன் 13, 2024
    வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 11.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    குளிகை : 9.00 – 10.30
    ராகு : 1.30 – 3.00
    திதி : சப்தமி
    திதி நேரம் :  சப்தமி இ 10.44
    நட்சத்திரம் :  மகம் அ.கா 3.51
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : உத்திராடம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • June 13 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – பாராட்டு
    ரிஷபம்         – போட்டி
    மிதுனம்     – நற்சொல்
    கடகம்         –  பேராசை
    சிம்மம்         –   பெருமை
    கன்னி         –    நற்செயல்
    துலாம்         –     இன்பம்
    விருச்சிகம்     –  பரிசு
    தனுசு         –     பரிவு
    மகரம்         –    துன்பம்
    கும்பம்         –      குழப்பம்
    மீனம்         –      செலவு
    சந்திராஷ்டமம்    –         உத்திராடம்

  • Meenakshi sundareswarar temple kumbabishegam

    பட்டாபிராம் அருகே  சோராஞ்சேரியில்  பாண்டியர்களால் கட்டப்பட்ட 500 ஆண்டு பழமை வாய்ந்த  அருள்மிகு மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர்  திருக்கோவில் பல ஆண்டுகளுக்கு பின்   நன்னீராட்டு பெருவிழா  வெகு விமரிசையாக நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம்  சோராஞ்சேரி பகுதியில் பாண்டியார்களால்    அருள்மிகு மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர்  கோவில் கட்டப்பட்டுள்ளது.இந்த கோவிலானது மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள அதே சொருபதுடன்  காட்சியளிப்பது மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் கோவிலின் சிறப்பு.இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேக விழா தடைப்பட்டு இருந்தது.

    இந்த வருடம் 20 ஆண்டுகளுக்கு பின்னர் சோரஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் தலைமையில் கும்பாபிஷேக விழாவானது  வெகு விமரிசையாக நடைபெற்றது.கடந்த மூன்று தினங்களுக்கு முன் கணபதி ஓமத்துட்ன் துவங்கியது. இதனை இன்று ஆலயத்தின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் வேதவிற்பனர்கள் மந்திரங்கள் முழங்க பூர்ணாதி நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவில் மூலவர் கோபுரம், ராஜ கோபுரத்தில் பக்தர்களின் நம்சிவாயா எனும் மந்திரம் முழங்க  கலங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு நன்னிராட்டு விழா இனிதே நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • Shree kalyana sundareswarar kumbabishegam

    புதுச்சேரி ஸ்ரீ பேட்டை வாழி மாரியம்மன் மற்றும் ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுச்சேரி வில்லியனூர் அடுத்த வாழப்பட்டாம் பாளையம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ பேட்டை வாழி மாரியம்மன் மற்றும் ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ திருக்கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    முன்னதாக கடந்த திங்கள்கிழமை அன்று ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம்,  முதல் கால யாக பூஜை ஹோமம் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, தீப ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து இன்று காலை நான்காவது கால யாக பூஜை, ரக்ஷாபந்தனம், நாடி சந்தானம், மகாபூர்ணாஹுதி, கலச புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வாக ஸ்ரீ பேட்டை வாழி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவினை கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் மற்றும் வாழப்பட்டாம்பாளையம் கிராமவாசிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.