Tag: பகவான்

  • The Deity to Worship for a Job Suitable to Your Studies

    ருவர் நல்ல படிப்பு படித்து, நல்ல சம்பளமும் கிடைக்க வேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில் 10-ம் இடமான உத்தியோக ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் புதன், சனி, சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள் வலுவாக இருக்க வேண்டும். இந்த 4 கிரகங்களும் வலுவாக இருந்து, அவை உத்தியோக ஸ்தானத்துடன் தொடர்புகொண்டிருந்தால், படிக்கும்போதே நல்ல வேலையும் கிடைத்துவிடும்.

    சிலருக்குக் கிரக நிலைகள் காரணமாக படிப்புக்கேற்றபடி நல்ல வேலை அமையாமல் சிரமப்படுவார்கள். அவர்கள், மாணவ-மாணவிகளுக்குப் புத்தகம், பேனா வாங்கித்தருவது போன்ற சின்னச்சின்ன உதவிகள் செய்யலாம்.

    தங்கள் பிள்ளையின் மேற்படிப்பு சிறப்பாக அமைய ஆசைப்படும் பணவசதியுள்ள பெற்றோர், ஏழை மாணவர்களைத் தத்தெடுத்து படிக்க வைக்கலாம்.

    நல்ல மதிப்பெண் எடுத்தும், நல்ல காலேஜில் சீட் கிடைத்தும், பணப்பற்றாக்குறை காரணமாக மேற்படிப்பு படிக்கமுடியாமல் சிரமப்படும் நாத்தனாரின் மகனையோ, கொழுந்தனாரின் மகளையோ நம்மால் முடிந்த பண உதவி செய்து படிக்கவைக்கலாம்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவஹீந்திரபுரம் எனும் திருத்தலத்துக்குச் சென்று, அங்கே ஞானானந்த மயமாக கோயில் கொண்டிருக்கும் பரிமுகக்கடவுளாம் அருள்மிகு ஹயக்ரீவரை வணங்கி வழிபடுவதும் நல்ல பலன் தரும். கற்ற கல்வி காலம் முழுக்கக் கைகொடுக்கும்.
     

  • Thirumuruganpoondi: A Sacred Haven to Remove Naga Dosha

    திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூரில் இருந்து அவினாசி வழியாக கோவை செல்லும் வழியில், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டு வந்தார் என்பது நம்பிக்கை. முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் திருமுருகன்பூண்டி.  இந்தத் தலம், முருகப்பெருமான் விரும்பி வந்து சிவ வழிபாடு செய்த பெருமைக்கு உரியது. மங்களாம்பிகையுடன் மாதவனேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் இத்தலத்துக்கு, இன்னும் பல புராணப் பெருமைகள் உண்டு.

    இத்தலத்தில் முருகநாத சுவாமி சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. சுவாமி, அம்மன் சந்நதிகள் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கோயிலின் நடுவில் சண்முகதீர்த்தம். இடப்புறத்தில் ஞானதீர்த்தம். வலப்புறத்தில் பிரம்ம தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. முருகன் வழிபட்டதற்கு அடையாளமாக முருகன் சந்நதியின் கருவறையில் மேற்கு நோக்கியவாறு லிங்கம் உள்ளது. இங்குள்ள முருகனிடம் வேலும் மயிலும் இல்லை.

    அவற்றைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வந்து சிவனை முருகன் வழிபட்டதாக ஐதீகம்.முருகனால் வழிபடப்பட்டதால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முதன்மைக் கடவுளான சிவன் முருகநாதேசுவரர் எனப் பெயர்பெற்றார் என்ற மரபு வரலாறும் வழக்கத்தில் உள்ளது. அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் ஆகியோர் வழிபட்ட தலம். இதற்கு மாதவிவனம் என்றும் பெயர்.

    துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவிமரத்தை இங்கு கொண்டு வந்ததாகவும், அவ்வழியே சுந்தரர் செல்லும்போது, இறைவன் தன் பூதகணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.கோயில் நுழைவு வாயிலில் பதினாறுகால் மண்டபத்தில் விநாயகர் சந்நதி உள்ளது. இதைத் தாண்டி உள்ளே சென்றால் வலப்புறம் வேடுவர் உருவமும் சுந்தரர் உருவங்கள் இரண்டு (ஒன்று பறிகொடுத்து முகம் வாடிய நிலையிலும் மற்றொன்று மீண்டும் பெற்ற மகிழ்ச்சி நிலையிலும்) உள்ளன.

    கோயில் பிராகாரத்தில் பைரவர் சந்நதியும் நவக்கிரகங்களும் உள்ளன. இங்குள்ள சண்முகநாதர் சந்நதி சிறப்பானது. ேகாயிலின் ஸ்தலமரம் வில்வம். இத்தலம் பிரம்மகத்தி தோஷம் நீங்கிய தலம். சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்குவந்து நீராடி வழிபடுவதையும், பல நாட்கள் இங்கேயே தங்கியிருப்பதையும் இன்றும் காணலாம். இங்குள்ள பிரம்மதாண்டவ நடராஜர் சந்நதி விசேஷமானது. இக்கோயிலுக்குப் பக்கத்தில் சற்றுத் தொலைவில் மாலாதரன் எனும் வேட மன்னன் வழிபட்ட பைரவர் சந்நதி அமைந்துள்ளது. எங்கும் இல்லாத புதுமையாக இங்கு, கோயிலின் மண்டபத்தின் மேலே பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவனாரின் பிரம்மதாண்டவம் அரங்கேறிய தலமாகவும் இது கருதப்படுகிறது. வெகுநாட்களாக குழந்தை பாக்கியம் கிடைக்காது வருந்திய பாண்டிய மன்னன் ஒருவன், இங்கு வந்து வழிபட்டு குழந்தை வரம் பெற்றான். இதுகுறித்த சிற்பக் காட்சிகளை இங்கு தரிசிக்கலாம். இத்தலத்தைப் புதுப்பித்து வணங்கிய வேடன் ஒருவருக்கும் இங்கு சிலை உள்ளது. லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சூரிய-சந்திரர், பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களையும் இங்கு தரிசிக்கலாம்.

    கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ மாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. 
     

  • Sashti Fast for Lord Murugan: Blessings for the Birth of a Child

    மாவாசை நாளுக்கும், பவுர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஆறாவது நாள் சஷ்டி ஆகும். அமாவாசையை அடுத்து வரும் சஷ்டியை வளர்பிறை சஷ்டி என்பார்கள். பவுர்ணமியை அடுத்து வரும் சஷ்டி தேய்பிறை சஷ்டி என்று சொல்வார்கள். அந்த வகையில் நாளை தேய்பிறை சஷ்டி. 

    தேய்பிறை சஷ்டி நாளில் அதாவது நாளை அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டின் பூஜை அறையில் முருகன் படம் அல்லது சிறிய சிலையை எடுத்து, சுத்தம் செய்து, அலங்கரித்து வைத்துக் கொள்ளுங்கள். முருகன் படம் அல்லது சிலைக்கு முன்பு இரண்டு வாழைப்பழங்களை ஒரு சிறிய தட்டில் எடுத்து வையுங்கள்.

    அந்த வாழைப்பழத்தின் மத்தியில் சிறிதாக குழி போன்று ஏற்படுத்தி, அதில் சிறிதளவு நெய் விட்டு, திரிப் போட்டு தீபம் ஏற்றுங்கள். பஞ்சாமிர்தம் எப்படி முருகனுக்கு மிகவும் பிரியமான அபிஷேகப் பொருளோ அதே போல் வாழைப்பழ தீபமும் முருகப் பெருமானுக்கு மிகவும் பிரியமானதாகும். இந்த வாழைப்பழ தீபத்தை செவ்வாய்கிழமையிலும் கூட ஏற்றலாம்.

    கிட்டும். சஷ்டி நாளில் வீடுகளில் அதிகாலையில் நீராடி பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீப, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் வைக்கலாம். உணவை தவிர்த்து பூஜையறையில் கந்த சஷ்டி கவசம், முருகன் துதிப்பாடல்கள், சுகந்த குரு கவசம் படிக்கலாம். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், உடல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனதில் ஓம் முருகா என்ற மந்திரத்தை ஜெபித்தபடி பணியை தொடரலாம். புலால் உணவுகள் மற்றும் போதை வஸ்துக்களை தவிர்க்க வேண்டும். மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

    உடல்நிலை சரியில்லாதவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் உண்டு இந்த சஷ்டி விரதத்தை இருந்தாலும் சஷ்டி திதியில், அதுவும் தேய்பிறை சஷ்டி அன்று ஏற்றுவது மிகவும் சிறப்பானதாகும். இந்த விளக்கை ஏற்றி வைத்து, ஏதாவது ஒரு கோரிக்கையை முருகனிடம் முன் வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த விளக்கை நம்பிக்கையுடன் ஏற்றி வந்தால் வாழ்வில் பல மாற்றங்களையும், அதிசயங்களையும் முருகப் பெருமான் நடத்துவதை காணலாம்.

    இந்த திருநாளில் குழந்தை செல்வத்திற்காக ஏங்கி காத்திருக்கும் பெண்கள் விரதமிருந்து முருகப் பெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்திட மனம் மற்றும் உடல் குறைபாடுகள் நீங்கி குழந்தை வரம் கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சஷ்டி விரதத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள அந்நோய்கள் படிப்படியாக நீங்கி விடும். இத்துடன் நீடித்த செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும். 

    சஷ்டி நாளில் வீடுகளில் அதிகாலையில் நீராடி பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீப, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் வைக்கலாம். உணவை தவிர்த்து பூஜையறையில் கந்த சஷ்டி கவசம், முருகன் துதிப்பாடல்கள், சுகந்த குரு கவசம் படிக்கலாம். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், உடல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனதில் ஓம் முருகா என்ற மந்திரத்தை ஜெபித்தபடி பணியை தொடரலாம். புலால் உணவுகள் மற்றும் போதை வஸ்துக்களை தவிர்க்க வேண்டும். மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

    உடல்நிலை சரியில்லாதவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் உண்டு இந்த சஷ்டி விரதத்தை  அனுஷ்டிக்கலாம். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லைகள் முழுவதுமாக நீங்கவும் சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கலாம். முழு நாளும் உபவாசம் இருக்க இயலாதவர்கள் அன்றைய தினம் காலையில் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் முதல் உணவாக எடுத்துக் கொள்ளலாம். இந்த முறையில் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சஷ்டி விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருளால் மேலான செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும் என்பது ஐதிகம்.

  • Worship Lord Srisimma Dakshinamurthy to Overcome Educational Challenges

    த்திரமேரூரில் இருந்து கீழரோடு வழியே காஞ்சிபுரம் செல்லும் பாதையில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புலிவனம். இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு, பல்லவ மன்னனால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட அற்புதமான ஆலயம்.

    கல்லால மரத்தடியில், சிம்மத்தின் மீது திருப்பாதம் வைத்தபடி, மற்றொரு பாதத்தை முயலகன் மீது வைத்துக் கொண்டு, சிரசில் ருத்திராட்சம் துலங்கக் காட்சி தரும் ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வந்து பிரார்த்தித்தால், படிக்காத பிள்ளையும் படிக்கும்; தேறாத மாணவர்கள்கூட, அதிக மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெறுவார்கள் எனச் சிலாகிக்கின்றனர், பக்தர்கள்.

    சிம்ம ராசியில் பிறந்தவர்கள், தொடர்ந்து 18 வாரங்கள் இங்கு வந்து நெய்விளக்கேற்றி, ஸ்ரீசிம்ம தட்சிணா மூர்த்தியை வணங்கி வழிபட்டால், சிக்கல்கள் யாவும் தீரும்; ராஜ யோகம் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம்.

    சேர, சோழ, பாண்டியர்கள் மூவரும் வழிபட்ட தலம்;  எனவே இங்கு ஸ்ரீசோழீஸ்வரர், ஸ்ரீபாண்டியரேஸ்வரர், ஸ்ரீசேரலேஸ்வரர் எனும் திருநாமங்களில் லிங்கமூர்த்தங்களைத் தரிசிக்கலாம். தவிர, வியாக்ரபாதருக்கும் தனிச் சந்நிதி உள்ளது.

    ஆதிகுருவாம் ஸ்ரீசிம்ம தட்சணாமூர்த்தியையும், வியாக்ரபாத முனிவரையும் வணங்குங்கள்; கல்வி- கேள்வியில் வளம் பெறுவீர்கள்!
     

  • Fasting During the Month of Thai: Benefits!

    தை பொங்கல் திருநாள் முதலாக, தை அமாவாசை, ரத சப்தமி, தைப்பூசம், தை கிருத்திகை ஆகியன நாமறிந்த சிறப்பான நாட்கள். தை மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய வேறு சில வழிபாடுகளும் உண்டு.

    சாவித்ரி கௌரி விரதம்

    தை மாதம் இரண்டாம் நாள் அனுஷ்டிக்க வேண்டிய  விரதம் இது. சிவனார் தனக்கருளிய இந்த விரதத்தை, தருமருக்கு போதித்தாராம் மார்க்கண்டேயர்.
    விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வர வேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும். பிறகு மௌன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் பூஜித்து, 9-வது நாளன்று மாலையில் பூஜையை முடிக்க வேண்டும். இந்த முறைப்படி ஒன்பது ஆண்டுகள் பூஜை செய்ய வேண்டும். ஒன்பதாம் ஆண்டு பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோடி முறங்களில்…

    ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு- ஒன்பது மஞ்சள் கிழங்குகள் – ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும். அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும்.

    நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம்.

    பைரவ வழிபாடு

    தை மாதத்தில் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை வடை மாலை சாற்றி வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்.

    வீரபத்திர வழிபாடு

    மங்கலவாரம் எனப்படும் செவ்வாய்க்கிழமை தோறும் ஒரு வருட காலம் வீரபத்திரரை வழிபட, வல்வினைகள் நீங்கும். வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், தை மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளிலாவது இந்த விரதம் இருப்பது சிறப்பு. இதனால், நீங்காத தடைகள் நீங்கும். பயமும் தீவினைகளும் நம்மைவிட்டு விலகும். கிரக பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் அற்புத வழிபாடு இது.

  • A Wish-Fulfilling Darshan in the Thai Month!

    தை மாதத்தை மகர மாதம் என்பார்கள். சூரியதேவனின்  வடதிசை  பயணம் தொடங்கும் உத்தராயனப் புண்ணியக் காலத்தின் ஆரம்பம் தை மாதம். ஆத்மகாரகனான சூரியனை வழிபட உகந்த மாதமும்கூட. ஆகவே, அந்த மாதத்தின் முதல் நாள் ஆதவனைப் போற்றும் பொங்கல் திருநாளாகத் திகழ்கிறது. 

    காலச் சக்கரத்தில் மகர ராசிக்குள் சூரியக்கடவுள் பிரவேசிக்கும் இந்தப் புண்ணிய மாதத்தில், சூரியனை வழிபடுவதாலும், சூரியன் வழிபட்ட – வழிபட்டு வரும் திருக்கோயில்களை தரிசிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்; நம்முடைய நல்ல விருப்பங்கள் யாவும் நிறைவேறும் என்கின்றன ஞானநூல்கள்.

    சூரிய திருத்தலங்களோடு, தை மாத தரிசனத்துக்குரிய பிரத்யேகமான வேறு சில கோயில்களும் உண்டு. அத்தகைய சில அற்புத க்ஷேத்திரங்கள்  இங்கே…

    சூரியக் கோட்டம்

    சூரியனுக்குத் தனியாக ஆலயம் அமைக்கும் வழக்கம் தற்போது இல்லை. ஆனால் சிலப்பதிகாரத்தில் சூரியன், சந்திரனுக்குத் தனித் தனியே கோயில்கள் இருந்ததுபற்றிய குறிப்புகள் உண்டு. பூம்புகாரில் இருந்த சூரியனின் ஆலயத்தை `உச்சிக்கிழான் கோட்டம்’ என அழகுத் தமிழில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

    சூரிய பகவான் சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றத் தலங் கள் தமிழகத்தில் இருவகையான உள்ளன. முதலாவது வகை – சூரியன், தேவ வடிவில் எழுந்தருளி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்கள். அவை: மங்கலக்குடி, பருதிநியமம், திருநாகேஸ்வரம்.

    இரண்டாவது வகை – ஆண்டில் குறுப்பிட்ட சில நாள்களில், சூரிய பகவான் தன் ஒளிக்கிரணங்களால் இறைத் திருமேனியைத் தழுவி வழிபடும் ஆலயங்கள் ஆகும். இவ்வகை ஆலயங்கள் பலவுண்டு.

    திருமங்கலக்குடி

    சூரியன் வழிபட்ட ஆலயங்களில் குறிப்பிடத்தக்கது மங்கலக்குடி அருள்மிகு பிராணவரதேஸ்வரர் ஆலயம். மங்கலனாகிய சூரியபகவான் வழிபட்டதால் இந்த ஊர் மங்கலக்குடி என்றானது.

    இங்கு சூரியனும் மற்றுமுள்ள எட்டு கிரகங்களும் வழிபட்டு அருள் பெற்றதாக அப்பர் பெருமானின் தேவாரப் பாடல் குறிப்பிடுகிறது. காலவ ரிஷியின் கிரக தோஷங்களை நவகிரகங்கள் தாமே முன்னின்று தீர்த்ததால், அவர்கள் காலதேவனின் சாபத்தைப் பெற்றனராம். அதனால், பிணிக்கு ஆளான நவகிரகங்கள் மங்கலக்குடிக்கு வந்து ஈசனை வழிபட்டு நிவர்த்தி பெற்றன.

    சூரியனால் வழிபடப்பெற்ற மங்கலக்குடி ஈசன், பிராண வரதேஸ்வரர் என்றும் அம்பிகை மங்கல நாயகி என்றும் வணங்கப்படுகின்றனர். மங்கலக்குடி அருகேதான் சூரியனார் கோயில் அமைந்துள்ளது. மங்கலக்குடிக்கு வந்து தரிசித்து வழிபட்ட பிறகே, சூரியனார் கோயிலுக்குச் சென்று வணங்க வேண்டும் என்பது நியதியாகும்.

    ஆதித்ய அபயப் பிரதாம்பிகை

    ஒருமுறை, தமது கடமையில் இருந்து தவறிய சூரியபகவான் மீது ஈசன் கோபம் கொண்டார். ஈசனின் கோபத்திலிருந்து தப்பிக்க சூரியன் அம்பிகையைச் சரண் அடைந்தார். சூரியனைப் பாதுகாத்து அபயம் அளித்த அம்பிகை, திருநீடூர் எனும் திருத்தலத்தில் ஆதித்ய அபயப் பிரதாம்பிகை என்ற பெயரில் அருள்பாலிக்கிறாள்.

    மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது திருநீடூர். தேவாரப்பதிகம் பெற்ற இந்த ஆலயத்தில் ஈசன் சோமநாதேஸ்வரராக அருள்கிறார். இங்கு வந்து வழிபட்டால் சூரியனின் நல்லாசி பெறலாம்; அவரின் திருவருளால் சகல தோஷங்களும் நீங்கும் என்கிறார்கள்.

    திருக்கழுக்குன்றம்

    ஒருமுறை பன்னிரு ஆதித்யர்களுக்கும் இடையே, தங்களில் யார் உலகில் பணி செய்வது என்று போட்டிப்போட்டுக் கொண்டனராம். பிரம்ம தேவன் அவர்களை சித்திரை தொடங்கி மாதத்துக்கு ஒருவராகப் பணிசெய்யும்படி பணித்தாராம். அப்படி, அவர்கள் பணிசெய்யும் காலத்தில் மந்தேகர் முதலான அசுரர்களால் தடங்கல்கள் ஏற்பட்டன.

    அவர்கள் மீண்டும் பிரம்மனைச் சரணடைந்தனர். அவரது அறிவுரைப்படி, பூலோகத்தில் உருத்திரக்கோடியாகிய திருக்கழுக்குன்றம் தலத்தை அடைந்து சிவனாரை வழிபட்டு, தடைகள் நீங்கப் பெற்றனர். இதன் காரணமாக பாஸ்கரபுரி, தினகரபுரி, ஆதித்யபுரி ஆகிய சிறப்புப் பெயர்களோடு திகழ்கிறது திருக்கழுக்குன்றம். சூரியனுக்கு உகந்த தைமாதத்தில், பன்னிரு ஆதித்யரும் வழிபட திருக்கழுக்குன்றம் ஈசனை  நாமும் வழிபட்டு வரம்பெற்று வருவோம்.

  • Gates of Heaven Open: Vaikuntha Ekadashi Celebrated at Perumal Temples

    வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று திருப்பதி ஏழுமலை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவல்லிக்கேணி பெருமாள் கோவில் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடைபெற்றது.

    வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் கோவில்களில் இன்று நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 30 -ந் தேதி தொடங்கியது.

    தொடர்ந்து நடந்த பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார்.

    தொடர்ந்து காலை 5.15 மணி அளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை அலங்காரத்துடன் நம்பெருமாள் காட்சி அளித்தார். பக்தர்கள் ரங்கா… ரங்கா… என பரவசத்துடன் முழங்க, பரமபதவாசல் திறக்கப்பட்டது. 

    பரமபத வாசலை கடந்த நம்பெருமாளை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 
     

  • Tirumala Vainkunta Ekadasi: Vaikunta Dwara Darshan Opening

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் வெளிப்புறம் முழுவதும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தசரா குழுவினரால் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல டன் எடையுள்ள பல வகையான மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு வியக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வி.ஐ.பி. பிரேக் தரிசனம் முடிந்த பிறகு சாதாரண  
    பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 

    வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நேற்று இரவு 12.5 மணியளவில் கோவில் திறக்கப்பட்டு பாசுரங்கள் வாசிக்கப்பட்டன. பின்னர் அச்சகர்கள் 12.25 மணி அளவில் பூஜைகள் செய்து ஆர்த்தி எடுத்தனர்.தோமாலையுடன் கருவறை கதவு திறக்கப்பட்டு மூலவருக்கு அர்ச்சனைகள் நடந்தது. வழக்கமான பூஜைகள் நடந்தன. இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

  • The Significance of Vaikunta Ekadashi!

    'வைகுண்ட வாசனுக்கு வருடம் முழுவதுமே கொண்டாட்டம்' என்பார்கள். அதிலும் சிறப்பாக மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியும் சொர்க்கவாசல் திறப்பும் வைணவர்களுக்கு கதி மோட்சம் அளிக்கும் உன்னதமான விழாவாகும்.

    ஸ்ரீரங்கநாதர் கோயிலில் நடைபெறும் விழாக்களுள் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி. பொதுவாக வைகுண்ட ஏகாதசி திருவிழா பகற்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி அதிகாலை பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.

    வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் திருக்கைத்தல சேவையும் அடுத்தடுத்த நாள்களில் திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் தீர்த்தவாரியும் நடைபெறும். விழாவின் இறுதி நாளில் நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெறும். இந்த நிகழ்ச்சிகளைக் காண்பதற்காகவும் ரங்கநாதரை தரிசிக்கவும் திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.

    வைகுண்ட ஏகாதசி அன்று மூலவர், தசாவதாரம் சித்திரிக்கப்பட்ட முத்தங்கி அணிந்து காட்சி தருவார். ஸ்ரீமன் நாராயணனின் 108 திவ்ய தேசங்களில் திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் ஆகிய திவ்ய தேசங்களை நாம் இந்த நிலவுலகில் தரிசிக்க முடியாது. ஆனால், திருவரங்கம் திருத்தலத்தில் அருளும் ரங்கநாத பெருமாளை வைகுண்ட ஏகாதசி நாளில் தரிசிப்பதன் மூலம் அந்த இரண்டு திவ்ய தேசங்களை தரிசித்த புண்ணியம் நமக்குக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருந்து, தன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பதவியை அளிப்பதாக பெருமாள் மக்களுக்கு வாக்குறுதியை அளிக்கின்றார். ஏகாதசி விரதத்தைத் தொடர்ந்து அனுஷ்டிப்பவர்களின் சந்ததிக்கு, இம்மையிலும் மறுமையிலும் மனமகிழ்ச்சி, சுகம், ஆரோக்கியம், செல்வம், புகழ் ஆகியவற்றை வாரி வழங்குகிறார் என்பது ஐதிகம்.

  • The Splendors of Surya Puja

     

    திகாலை நேரத்துக்கு உரிய பெண் தேவதை, உஷஸ் என்று ரிக் வேதம் குறிப்பிடுகிறது. உஷஸ் தோன்றிய பிறகே சூரியன் உதயமாகிறான். அந்த சூரியனை நோக்கி செய்யப்படும் பூஜையின் மகிமை இங்கே.. 

    சூரிய சந்திர பூஜை!

    தஞ்சை மாவட்டம், திருவையாற்றிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள திங்களூர் சந்திர பகவானுக்கு உரிய தலம். இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று காலை 6 மணிக்கு சூரிய ஒளி, சிவலிங்கத்தின் மீது படுவதால் அன்று சூரிய பூஜையும், மறு நாள் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி சிவலிங்கத்தின் மீது படுவதால் சந்திர பூஜையும் நடை பெறுகின்றன.

    பாவங்களைப் பொசுக்கும் உஷத் காலம்!

    அதிகாலை நேரத்துக்கு உரிய பெண் தேவதை, உஷஸ் என்று ரிக் வேதம் குறிப்பிடுகிறது. உஷஸ் தோன்றிய பிறகே சூரியன் உதயமாகிறான். அதனால் அதிகாலையை உஷத் காலம் என்கிறார்கள். இந்த நேரத்தில் உஷஸின் செழிப்பான கிரணங்கள் பூமியை நோக்கிப் பாய்வதால் நீர்நிலைகளில் உள்ள நீர் வெதுவெதுப்பாக இருக்கும்.எனவே, உஷத் காலத்தில் நீராடினால் உடல்நலம் சீராகும், பாவங்கள் பொசுங்கும் என்பது ஐதீகம்.