Tag: Andal

  • andal avadaritha aadi pooram

    வைணவத்  திருக்கோவில்களிலும் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. ஏனென்றால் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம். ஆடி மாதத்தில் துளசி தோட்டத்தில் ஆண்டாள் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளை வடமாநிலங்களில் கோதாதேவி என்று அழைப்பர். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை அம்மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவர்.  

    இந்த நாளில் இக்கோயிலுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது. எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். 

    தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம். அந்த அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்.

  • Andal kodhai peyar karanam

    கோதை…. கோ என்றால் நல்வார்த்தை என்று பொருள். தா என்றால் தருபவள். கோ என்ற சொல்லுக்கு ஞானம் என்ற பொருளும் இருப்பதால், தனது பாசுரங்களாலே உயர்ந்த ஞானத்தை நமக்கு அருள்வதால் கோதை என்றும் சொல்லலாம்.

    கோ என்றால் மங்களம் என்றும் பொருளுண்டு. எனவே மங்களங்களை அருள்பவள் கோதை.

    “திக் தக்ஷிணாபி பரிபக்த்ரிம புண்யலப்யாத்
    ஸர்வோத்தரா பவதி தேவி தவ அவதாராத் 
    யத்ரைவ ரங்கபதினா பஹுமான பூர்வம்
    நித்ராளுணாபி நியதம் நிஹிதா: கடாக்ஷா: ”

    அரங்கன் தென்திசை நோக்கிப் பள்ளி கொள்வது இலங்கையிலுள்ள விபீஷணனுக்கு அருள்புரிவதற்காக மட்டுமில்லை, ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரும் அதே தென்திசையில் இருப்பதால், அந்தத் தென்திசைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூரை நோக்கி அரங்கன் சயனித்திருப்பதாக இந்த ஸ்லோகத்தில் தேசிகன் தெரிவிக்கிறார். 

    “வேயர்புகழ் வில்லிபுத்தூர் ஆடிப் பூரம்
    மேன்மேலும் மிக விளங்க விட்டுசித்தன்
    தூய திருமகளாய் வந்து அரங்கனாற்குத்
    துழாய்மாலை முடிசூடிக் கொடுத்த மாதே!
    நேயமுடன் திருப்பாவை பாட்டு ஆறைந்தும்
    நீயுரைத்த தையொரு திங்கள் பாமாலை
    ஆயபுகழ் நூறுடன் நாற்பத்து மூன்றும்
    அன்புடனே அடியேனுக்கு அருள்செய் நீயே!”

    என்று தேசிகன் பாடியபடி, பெரியாழ்வாரின் திருமகளாய் அவதரித்த ஆண்டாள், அரங்கனையே மணந்து கொண்டபடியால், பெரியாழ்வாருக்கு அரங்கனின் மாமனார் என்னும் ஸ்தானம் கிட்டியது. இப்படிப் பெரியாழ்வாரின் பெருமையை உலகுக்கு உணர்த்துதல் ஆண்டாளின் அவதார நோக்கமாகும்.
     

  • Andal Soodi Kalaindha malai

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கருட சேவைக்காக கொண்டு வரப்பட்ட  ஆண்டாள் சூடி கொடுத்த மாலைக்கு சிறப்பு பூஜை.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 30 தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தொறும் காலை இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா  வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரம்மோற்சவத்தின் மூக்கிய வாகன சேவையான கருட சேவை நாளை இரவு 7 மணிக்கு  நடைபெறவுள்ளது. இதையொட்டி விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிகொடுத்த கிளியுடன் கூடிய மாலை இன்று திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டது.  

    தலைமையில் அர்ச்சகர் ரமேஷ், சுதர்சன் ஆண்டாள் மாலை கொண்டு வந்தனர். ஆண்டாள் மாலைக்கு ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் மடத்தில் வைத்து  ஜீயர்கள்,  கூடுதல் செயால் அலுவலர் தர்மா ரெட்டி முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் நான்கு மாடவீதியில் யானைகள் அணிவகுத்து முன் செல்ல நாதஸ்வரங்கள் முழங்க நான்கு மாடவீதியில் ஆண்டாள் மாலை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஏழுமலையான் கோயிலில் வழங்கப்பட்டது.

    ஆண்டாள் சூடி கொடுத்த மாலை நாளை காலை மூலவருக்கும், மோகினி அலங்காரத்தில் வரும் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படவுள்ளது.