Tag: Aadi

  • murugaperuman ugandha aadi kiruthigai

    முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் தைப்பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை போன்றவை மிகவும் முக்கியம் வாய்ந்த விழாக்களாக கருதப்படுகிறது.

    எல்லா மாதங்களிலும் கிருத்திகை வரும். ஆனால் ஆடிக்கிருத்திகை போன்ற சிறப்பு தை மாதக் கிருத்திகையில் கூட இருக்காது.  அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றில் ஆடி கிருத்திகை விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். அனைத்து முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை வீதிஉலா என விமரிசையாக நடைபெறும்.

    இது தேவர்களின் மாலை காலம். எனவே, இக்காலத்தில் உப்பில்லா உணவை எடுத்துக்கொண்டு கார்த்திகை விரதம் இருந்தால் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. பலரும், ஆடி மாதத்தில் இருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.

    நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

  • Aadi month ammanukku ugandha sirappugal

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

    ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருபப்து கூடுதல் பலன் களை தரும்.

    ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும். ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

    ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும். அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும். ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். பெரியபாளையம் கோவிலில் எந்த அம்மன் தலத்திலும் இல்லாத வகையில் 2 மாதங்கள் ஆடி திருவிழா நடைபெறும்.

    ஆடிப்பூரத் தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத் தன்று ஆண்டாளை நந்த வனத்துக்கு எழுந் தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

    ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும். வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

    ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

    ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

    பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

  • Aadi month amman sirappugal

  • July 19 2022 aadi sevai

    ஜூலை 19 – ஆடி செவ்வாய்
    சுபகிருது வருடம் – ஆடி 3
    19-ஜூலை-2022 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    சஷ்டி    ம    2.10
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    மா    6.33
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ஆயில்யம்,மகம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     
  • aadi amavasai sirappu enna

    அமாவாசை தினங்களில் நாம் நம் முன்னேர்களை வழிபடுகிறேம். அதைத் தான் நாம் பித்ரு வழிபாடு என்று அழைக்கிறோம். அதிலும் குறிப்பாக,
    தை அமாவாசை
    புரட்டாசி அமாவாசை
    ஆடி அமாவாசை 
    என தனித்துவம் இருக்கிறது.

    அப்படி என்ன சிறப்பு இருக்கிறது?

    சாதாரண அமாவாசை நாட்களில் நாம் நம் முன்னேர்களை வணங்கும் பொழுது அவர்கள் எங்கு இருக்கிருர்களோ அங்கேயே இருந்து நம்மை வாழ்த்துவார்கள். ஆனால்  இந்த மூன்று அமாவாசைகளில் தான் நம் முன்னேர்கள் நம் இல்லத்திற்கே வந்து நம்மை வாழ்த்தி மகிழ்வார்கள். 

    அதற்கான அனுமதி பித்ரு உலகத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்பேற்பட்ட சக்தி வாய்ந்த ஆடி அமாவாசையை நாம் நம் இல்லத்தில் இருந்தே வழிபடலாம். இந்த ஆண்டு நதிநீர் கரைகளான, குற்றாலம், பாபநாசம், சொரிமுத்து அய்யார் திருத்தலம், காவேரி, கங்கை, யமுனா, சரஸ்வதி, இராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபட சூழ்நிலை சரியாக இல்லை என்பதை நாம் அறிந்ததே. 

    அதனால் அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி.நம் வீட்டில் கால் படாத இடத்தை தேர்வு செய்து,  அவ்விடத்தை சுத்தப் படுத்தி நம் முன்னேர்களை மனதார நினைத்து அவர்களை கொண்டாடி வணங்கி காசி காசி என கூறிக் கொண்டு எள்ளும் தண்ணீரையும் இறைத்து வழிபட்டபின் சூரிய நமஸ்காரம் செய்து விட்டு, நம் முன்னோர்கள் படத்திற்கு மாலையிட்டு மலர்தூவி அகம் மகிழ்ந்து அகல்விளக்கு ஏற்றி சாம்பிராணி கற்பூரம் ஏற்றி, அவர்களுக்கு பிடித்த பதார்த்தங்களை படையலிட்டு  முடிந்தால் கோபூஜை செய்து காகத்திற்கு அன்னமிட்டு வாழை இலையில் விரதம் முடித்து நாம் உணவருந்தினால் நம் முன் னேர்கள் பரிபூரணமாக நமது வணக்கத்தையும் வாழ்த்தையும் ஏற்று ஆசீர்வாதம் செய்வார்கள்.
     
  • August 2 – Aadi karthigai naal rasi palan

    ஆகஸ்ட் 2 – ஆடி கார்த்திகை நாள் ராசிபலன்…. 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     வெற்றி
    ரிஷபம் –     நலம் 
    மிதுனம் –      அமைதி 
    கடகம் –      நட்பு
    சிம்மம் –      ஜெயம் 
    கன்னி –      யோகம்  
    துலாம் –      சாந்தம்   
    விருச்சிகம் –       வரவு
    தனுசு –       எதிர்ப்பு 
    மகரம் –      பயம் 
    கும்பம் –     பொறுமை   
    மீனம் –       நன்மை 
    சந்திராஷ்டமம்    –    சித்திரை, சுவாதி

  • August 2 Aadi Karthigai

    ஆகஸ்ட் 2 – ஆடி கார்த்திகை
    பிலவ வருடம் – ஆடி 17
     கார்த்திகை 
    திருத்தணி முருகன் தெப்பம்
    02-ஆக-2021 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    நவமி    ம    12.07
    நட்சத்திரம்    :    கார்த்திகை    ந.இ    12.40
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை,சுவாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     
  • July 30 Aadi Friday 2021

    ஜூலை 30 – ஆடி வெள்ளி
    பிலவ வருடம் – ஆடி  14
    30-ஜூலை-2021 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சஷ்டி    கா    7.07
    நட்சத்திரம்    :    ரேவதி    மா    5.32
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரம்,உத்திரம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     
  • July 20 aadi Tuesday

    ஜூலை 20 – ஆடி செவ்வாய்
    பிலவ வருடம் – ஆடி 4
    20-ஜூலை-2021 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    மா    5.22
    நட்சத்திரம்    :    அனுஷம்    இ    7.15
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அசுவினி,பரணி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     
  • Mangalam pongul aadi Tuesday

    வாரா வாரம் தான் செவ்வாய் கிழமையும் , வெள்ளிக்கிழமையும் வருகிறது. ஆனால் ஆடி மற்றும் தை மாதங்களில்  வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு?. ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வருவது ஏதோ நேற்று தோன்றிய வழக்கம் இல்லை. காலம் காலமாக நம் முன்னோர் ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனின் அருள் பெற விரதமிருந்து வருவது வழக்கத்தில் உள்ளது. இவ்வளவு ஏன் அன்னை பராசக்தியே சிவனை அடையும் நோக்கில் இம்மாதத்தில் தான் விரதம் இருந்து இறைவனின் இடப்பாகத்தை பெற்று அர்த்தநாரீஸ்வரியாகும் வரம் பெற்றார். "ஆடிச் செவ்வாய் தேடிக்குளி" என்ற பழமொழி ஒன்றே இவ் விரதத்தின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.

     ஆடி செவ்வாய்க் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்பது  பெண்களின் நம்பிக்கை.

     மேலும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆடி மாத செவ்வாயன்று பெண்கள் அவ்வையார் விரதம் இருப்பது வழக்கம். குறிப்பிட்ட நாளில் இரவு அனைவரும் தூங்கிய பின் விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூடி,  மூத்த சுமங்கலி பெண்கள்  வழிகாட்ட, இளம்தலைமுறைப்  பெண்கள் விரதத்தை தொடங்குவர்.

    பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்பட்ட  ஒருவித வடிவம் கொண்ட கொழுக்கட்டையை நைவேத்தியமாக  தயாரிப்பார்கள். மேலும் அன்றைய தினம் செய்யப்படும் நைவேத்தியங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள்.

    அவ்வையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி செய்யப்படும் பூஜையில் அவ்வையாரின் கதையை ஒருவர் சொல்ல அனைவரும் அதை பக்தியுடன் கேட்டு, இறுதியில்  நைவேத்தியமாக செய்த பிரசாதங்களை பெண்களே உண்பார்கள். இதில் ஆண்களை மட்டுமின்றி, ஆண் குழந்தைகளைக் கூட   அனுமதிக்க மாட்டார்கள்.  பூஜை முடிந்தபின் வழிபாடு நடந்த இடத்தை சுத்தம் செய்துவிடுவார்கள்.இந்த விரதத்தை கடைபிடிப்பதால் குடும்ப ஒன்றுமை நிலைக்கும் என்றும் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடி , குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும்  நம்பப்படுகிறது.

     இதை தவிர ஆடிச்செவ்வாயில்  துர்க்கை, முருகனுக்கும் பெண்கள்  விரதம் இருப்பதுண்டு. செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் மாலை 3 மணியில் இருந்து  4:30 மணிவரை உள்ள ராகு காலத்தில்  அம்பிகையை வழிபடுவது  விசேஷமாகும். 

     இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால்,விவாகமான பெண்கள் தம் கணவனின் குறையாத அன்பைப் பெற முடியும். மாங்கல்யம் நிலைத்து நிற்பதுடன்,  மணமாகாத பெண்கள்  நல்ல கணவன் கிடைக்கவும், விவாகத் தடைகள் நீங்கவும் வழி செய்யும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.