Tag: அக்.30-ம்

  • palani-rope-car

    பழனி முருகன் கோயிலில் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் ரோப்கார் மீண்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவற்றின் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதில் ரோப்கார் மூலம் 3 நிமிடங்களில் மலைக்கோவிலுக்கு சென்றுவிடலாம் என்பதால் பகதர்களின் முதல் தேர்வாக ரோப்கார் சேவை உள்ளது.

    இத்தனை சிறப்பு வாய்ந்த ரோப்காரில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தினசரி, மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி தினசரி மதிய உணவு இடைவேளையின் போது ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு முறை நாள் முழுவதும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

    இதேபோல் வருடாந்திர பராமரிப்பு பணியின் போது சுமார் 40 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தப்படும். அந்த வகையில், கடந்த மாதம் 12-ந்தேதி ரோப்காரில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் தொடங்கியது. ரோப்கார் நிலையத்தின் மேல், கீழ் தளங்களில் உள்ள உபகரணங்கள் கழற்றப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை ரோப்கார் மேல்தளம், கீழ்தளத்தில் உள்ள சக்கரங்களுடன் கம்பிவடம் பொருத்தப்பட்டு பெட்டிகளை இணைக்கும் பணி நடந்தது. பின்னர் மாலையில் ரோப்காரில் முதற்கட்ட சோதனை ஓட்டம் நடந்தது.

    இந்நிலையில், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து ஆகஸ்ட் 30 முதல் முதல் ரோப்கார் இயக்கப்பட உள்ளதாகக் கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

  • thiruchendur-aavani-thiruvizha-kodiyetram

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். திருச்செந்தூரை கடல் அலைகள் வருடுவதால் திருச்சீரலைவாய் என்றும், முருகப்பெருமான் சூரபதுமனை வென்ற தலம் ஆதலால், ஜயந்திபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. அலைகள் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை ஓதியபடி அழகன் திருவடிகளை பணிந்து செல்கிறது. இந்த கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு உந்து சக்தியாக பஞ்சலிங்கங்களும் வெங்கடேச பெருமாளும் உள்ளனர்.

    இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா வரும் ஆகஸ்டு 30ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 10ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி 29ஆம் தேதி மாலையில் யானை மீது கொடிப்பட்டம் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு 30ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டு, கொடிமரத்துக்கு அபிஷேகம் மற்றும் விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது. 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா நாள்களில் தினமும் சுவாமி – அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர்.

    செப்டம்பர் 3ஆம் தேதி, இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. 5ஆம் தேதி காலை 5.30 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் உருகுசட்ட சேவையும், 9 மணிக்கு சண்முக விலாசத்தில் இருந்து சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தியிலும் எழுந்தருளி வீதியுலா வருதலும் நடைபெறுகிறது. செப்டம்பர் 6ஆம் தேதி காலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் வெள்ளிச் சப்பரத்திலும், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தியிலும் எழுந்தருளி வீதியுலா வருதலும் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 8ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. செப்டம்பர் 10ஆம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இத்திருவிழாவில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளைப் பெற எண்ணற்ற பக்தர்கள் திருச்செந்தூர் வருகின்றனர்.

  • thiruchenduril-varum-30-thedhi-ayya-vaigundar-bavani

    திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ந் திருவிழாவான நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, 6.30 மணிக்கு பால் அன்னதர்மம், 9 மணிக்கு அன்னதர்மம், 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, 1 மணிக்கு அன்னதர்மம், 3 மணிக்கு திருஏடு வாசிப்பு, 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, மாலை 6 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி, 8 மணிக்கு அன்னதர்மம் இனிமம் வழங்குதல் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11-ந் திருவிழா வருகிற 30-ந் தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் அய்யா வைகுண்டர் திருத்தேரில் எழுந்தருளி அணைவருக்கும் காட்சியளிக்கிறார். இந் நிகழ்ச்சியில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை செயலாளர் மற்றும் ஊர் மக்கள் அணைவரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

  • kallazhagar

    அழகர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும். இதையொட்டி அழகர்கோவிலில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் திருவிழா தொடங்குகிறது.

    மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் பெருமாள் கோவிலுக்குள் புறப்பாடு நடைபெறுகிறது. நாளை மறுநாளும் இதே நிகழ்ச்சி நடைபெற்று, 28-ந்தேதி மாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் கள்ளழகர் தங்க பல்லக்கில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் விடைபெற்று மதுரைக்கு புறப்படுகிறார்.

    தொடர்ந்து பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி உள்பட பல மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளி பின்னர் 29-ந்தேதி அதிகாலை சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக செல்லும் கள்ளழகர், பின்னர் காலை 6 மணிக்கு மேல் மூன்றுமாவடியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அப்போது பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது.
    அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து அழகரை வணங்கி வரவேற்கிறார்கள். தொடர்ந்து வழிநெடுக உள்ள மண்டபங்களில் பெருமாள் எழுந்தருளி, அன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் திருமஞ்சனமாகிறார். அப்போது சூடி கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை பெருமாளுக்கு சாத்தி பக்தர்களுக்கு சேவை சாதித்தல் நடைபெறுகிறது.

    30-ந்தேதி காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் தங்ககுதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். அப்போது லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். அன்று இரவு வண்டியூர் பெருமாள் கோவிலில் சாமி எழுந்தருளுகிறார்.
    மே 1-ந்தேதி காலை சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாபம் விமோசனம் தந்தருளும் பெருமாள், அன்று மாலை அனுமார் கோவில் சென்றடைகிறார்.

    அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 11 மணி முதல் ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    2-ந்தேதி அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்துடன் பெருமாள் எழுந்தருள்கிறார். 3-ந்தேதி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் அதிகாலை பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் அழகர் காட்சி தருகிறார். தொடர்ந்து தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் முன்பு வையாழியானவுடன் திருமாலிருஞ்சோலை நோக்கி வழிநடையாக செல்கிறார்.

    4-ந்தேதி அதிகாலை அப்பன் திருப்பதி மண்டபங்களில் காட்சி தரும் பெருமாள், அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கள்ளழகர் தனது இருப்பிடமான அழகர்மலைக்கு வந்து கோவிலில் இருப்பிடம் சேருகிறார். 5-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த வருடம் சுமார் 435 மண்டபங்களில் அழகர் எழுந்தருள்கிறார்.

    திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு செல்லும் போது பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 29 உண்டியல் பெட்டிகள் பெருமாளுடன் செல்கிறது. இதற்காக அவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

  • 30

    முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. பங்குனி திருவிழா அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு வள்ளி அம்பாள் தபசுக்கு எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மேல கோவில் பந்தல் மண்டப முகப்பிற்கு செல்கிறார். அங்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி- அம்பாள் திருவீதி உலா சென்று, கோவிலை சேர்கிறார்கள். இரவு 10 மணிக்கு கோவிலில் 108 மகாதேவர்கள் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான நாலுமூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

  • 30

    பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் உலக பிரசித்திபெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு மாசி மாத பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தப் பொங்கல் வழிபாட்டில் தமிழகம் மற்றும் கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவலன் மரணத்தை தொடர்ந்து நீதி கேட்டு மதுரையை எரித்து கோவத்துடன் கொடுங்கலூர் சென்று வானுலகம் அடையுமுன் கண்ணகி வந்த இடம் தான் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஆற்றுக்கால் என்னும் பகுதி. இங்கு கேரளா மக்கள் பகவதி அம்மன் என்ற பெயரில் கண்ணகிக்கு கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். ‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படும் இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவையொட்டி பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த பொங்கல் திருவிழாவில் கலந்துகொள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வருகின்றனர். இங்கு 10 கிலோமீட்டர் சுற்றளவில் பொங்கல் வைக்கப்படும். பல லட்சம் பெண்கள் குவிந்து வழிபாடு செய்யும் இந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் வழிபாட்டில் கடந்த 1997 ஆம் ஆண்டு பதினைந்து லட்சம் பெண்கள் மற்றும் 2009-ஆம் ஆண்டு 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டு வெளிப்பட்டது உலக சாதனையை ஏற்படுத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. காலை 10.15 மணிக்கு கோயில் தந்திரி குழிக்காடு வாசுதேவன் பாட்டதிரிப்பாடு ஆலய ஸ்ரீகோயிலில் இருந்து தீபம் எடுத்து வந்து, முதலில் பண்டார அடுப்பில் பற்ற வைத்து, பொங்கல் வழிபாட்டை துவங்கி வைத்தார். அதன் பின் அனைத்து அடுப்புகளிலும் நெருப்பு பற்ற வைக்கப்பட்டது . திருவனத்தபுரம் நகரப்பகுதி முழுவதுமாக லட்சகணக்கான பெண்கள் பொங்கல் வழிபாடு நடத்தியதால் நகர் பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணபட்டது. மதியம் 2.15 நிவேத்திய பூஜையுடன் பொங்கல் வழிபாடு நிறைவடைந்தது.

  • 30

    வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா ஜனவரி 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இறைவன் ஒளி வடிவானவர் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். மேலும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார். இதை தொடர்ந்து மாதந்தோறும் பூசநட்சத்திரத்தன்று சத்திய ஞானசபையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூசநட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா ஜனவரி 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு அகவல்பாராயணமும், 7.30 மணிக்கு தருமச்சாலை, மருதூர் இல்லம், கருங்குழி இல்லம், மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும், காலை 10 மணிக்கு ஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. பின்னர் 31-ந் தேதி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து காலை 11 மணிக்கு தருமச்சாலை மேடையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, கூடுதல் ஆணையர்கள் திருமகள், கவிதா ஆகியோர் முன்னிலையில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. பின்னர் 2-ந் தேதி மேட்டுக்குப்பத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையத்தை சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர்.

  • oru-alayam-30-aiyiram-silaigal

     

    நாகங்களோடு தொடர்புடைய பல ஆலயங்கள், ஊர்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவிலும் பல இருக்கின்றன. தமிழகத்தில் நாகத்தீவு, நாகப்பட்டினம், நாகர்கோவில், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட ஊர்கள், நாகங்களின் பெயர்களை பரப்புரை செய்வதாக அமைந்துள்ளன. ஒரு சில இங்கே இரண்டு நாகர் ஆலயங்களைப் பற்றி பார்க்கலாம்.

    கேரள மாநிலத்தில் அதிக அளவில் நாக வழிபாடு இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு பதினைந்தாயிரம் சர்ப்பக்காவுகள், அதாவது நாகக் கோவில்கள் இருந்திருக்கின்றன என்ற தகவல் அதை மெய்ப்பிக்கும் வகையில் இருக்கிறது. அதிலும் மன்னார்சாலை, வெட்டுக்காடு, பாம்பன்மேக்கோடு போன்ற இடங்கள் இந்திய அளவில் பிரபலமான நாகர் ஆலயங்கள் ஆகும்.

    இதில் மன்னார்சாலை கேரள மாநிலத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சர்ப்பக்காவு நாகராஜா ஆலயம், பக்தர்களிடையே நாடு முழுவதும் பெயர் பெற்ற தலமாகும். இந்த ஆலயத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாக தேவதைகளின் சிலைகளை, பாதையின் இருபுறமும் மற்றும் மரத்தடிகளிலும் காணலாம். இந்தக் கோவில் அதிக சிலைகள் கொண்ட கோவில்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளது.

     கேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஹரிப்பாடு பேருந்து நிலையத்தில் இருந்து, சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்தக் கோவில். கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 115 கிலோமீட்டர் தூரத்திலும், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 125 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.

     8 ஆயிரம் ஆண்டு பழைய சிலை

     சக்தி தேவியின் அவயங்கள் விழுந்த இடங்களில் எல்லாம் சக்தி பீடங்கள் உருவானதாக புராணங்கள் நமக்குச் சொல்கின்றன. அந்த வகையில் சக்திதேவியின் இடுப்பெலும்பு விழுந்ததாக குறிப்பிடப்படும் இடம், இலங்கையின் யாழ்ப்பாணம். அங்கு அமைந்துள்ள நாகபூசனி அம்மன் கோவில் பிரசித்தி பெற்று திகழ்கிறது.

    இந்த ஆலயத்தில் உள்ள சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்து தலை நாகர் சிலை சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. நாகபூசனி அம்மன் கோவில் பழமையானதாக இருந்தாலும், தற்போது புணரமைக்கப்பட்டு பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகை தரும் இடமாக மாற்றப்பட்டிருக்கிறது. பொதுவாக அனைத்து தோஷங்களையும் நீக்கும் நாகபூசனி அம்மன், நாகதோஷங்களை நீக்குவதில் பிரசித்திப் பெற்றவள் என்கிறார்கள், இங்கு தவறாது வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்கள்.

    திருமணம் ஆகாதவர்கள், திருமணம் தள்ளிப்போகிறவர்கள், கடன் பிரச்சினை இருப்பவர்கள் என அனைவரும் வந்து வழிபடும் தலமாக உள்ளது இந்தக் கோவில்.

  • 30-vagai-mugurtham

     

    பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

    1.ருத்ர முஹுர்த்தம் – 06.00 am – 06.48 am

    2.ஆஹி முஹுர்த்தம் 06.48am – 07.36am

    3.மித்ர முஹுர்த்தம் – 07.36am – 08.24am

    4.பித்ரு முஹுர்த்தம் – 08.24am – 09.12am

    5.வசு முஹுர்த்தம் – 09.12am – 10.00am

    6.வராஹ முஹுர்த்தம் -10.00am – 10.48am

    7.விச்வேதேவாமுஹுர்த்தம் -10.48am – 11.36am

    8.விதி முஹுர்த்தம் – 11.36am – 12.24pm

    9.சுதாமுகீ முஹுர்த்தம் – 12.24pm – 01.12pm

    10.புருஹூத முஹுர்த்தம் -01.12pm – 02.00pm

    11.வாஹிநீ முஹுர்த்தம் – 02.00pm – 02.48pm

    12.நக்தனகரா முஹுர்த்தம் – 02.48pm – 03.36pm

    13.வருண முஹுர்த்தம் – 03.36pm – 04.24pm

    14.அர்யமன் முஹுர்த்தம் – 04.24pm – 05.12pm

    15.பக முஹுர்த்தம் – 05.12pm – 06.00pm

    16.கிரீச முஹுர்த்தம் – 06.00pm – 06.48pm

    17.அஜபாத முஹுர்த்தம் – 06.48pm – 07.36pm

    18.அஹிர்புத்ன்ய முஹுர்த்தம் – 07.36pm – 08.24pm

    19.புஷ்ய முஹுர்த்தம் -08.24pm – 09.12pm

    20.அச்விநீ முஹுர்த்தம் – 09.12pm – 10.00pm

    21.யம முஹுர்த்தம் – 10.00pm – 10.48pm

    22.அக்னி முஹுர்த்தம் – 10.48pm – 11.36pm

    23.விதாத்ரு முஹுர்த்தம் – 11.36pm – 12.24am

    24.கண்ட முஹுர்த்தம் – 12.24am – 01.12am

    25.அதிதி முஹுர்த்தம் – 01.12am – 02.00am  

    26.ஜீவ/அம்ருத முஹுர்த்தம் – 02.00am – 02.48am

    27.விஷ்ணு முஹுர்த்தம் – 02.48am – 03.36am

    28.த்யுமத்கத்யுதி முஹுர்த்தம் – 03.36am – 04.24am

    29.பிரம்ம முஹுர்த்தம் – 04.24am – 05.12am

    30.சமுத்ரம் முஹுர்த்தம் – 05.12am – 06.00am

  • 30

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான மாமல்லபுரம் 63-ஆவது திவ்யதேசமாக விளங்குகிறது. இங்குள்ள தலசயனப் பெருமாள் கோயிலில் வழிபடுவதன் மூலம்நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    தலசயனப்பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் திருஅவதார உற்சவம் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
    நவம்பர் மாதம் 8-ம் தேதி வரை நடைபெறும் இத்திருவிழாவில், தினமும் காலை மாலை ஆகிய இருவேளைகளும் உற்சவம், திருமஞ்சனம், திருவீதி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முக்கியமாக நவம்பர் 8-ம் தேதி பூதத்தாழ்வார் திருமஞ்சனம், மங்களாசாசனம் திருக்கைத்தல சேவையும், மண்டப அலங்கார திருமஞ்சனமும் நடைபெறுகின்றன.