Tag: 2022

  • Midhuna rasikku 2022 rasipalan

    மிதுனம் (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)

    கிரகநிலை:
    ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது – களத்திர ஸ்தானத்தில் சூர்யன் – அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி – பாக்கிய ஸ்தானத்தில் குரு – அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

    கிரக மாற்றங்கள்:
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    14-04-2022 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்கள்:
    மிதுன ராசி அன்பர்களே  இந்த வருடம் எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும்.  பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக  பாடுபட வேண்டி இருக்கும். 

    குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் இந்த வருடம் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும்.

    தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். தொழிலுக்காக கேட்ட இடத்தில் கடன் வசதிகள் கிடைக்கும். அதை வைத்து தொழில் சார்ந்த பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

    பெண்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
    கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். 
    அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. 

    மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்:
    இந்த வருடம் எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால்  காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம்  இருந்து கொண்டே இருக்கும்.  திடீர் பணதேவை ஏற்படலாம்.  தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய  தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள்  சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். மாணவர்கள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். 

    திருவாதிரை:
    இந்த வருடம் புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.  சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது  கவனம் தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு  நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். 

    புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
    இந்த வருடம் தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.  தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம்  அன்பாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும்.

    பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வர காரிய  அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
    அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன் – சுக்ரன் –  சனி
    எண்கள்: 3, 6, 7
    சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீகோவிந்தாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்
    செல்ல வேண்டிய ஸ்தலம்: பெருமாள் கோவில்களுக்குச் சென்று வரவும். 
    மலர் பரிகாரம்: துளசியை பெருமாளுக்கு அர்பணித்து வணங்கி வரவும்.

     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
     

  • Mesham 2022 Rasipalan

    (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)

    கிரகநிலை:
    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் – தொழில் ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி – லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

    கிரக மாற்றங்கள்:

    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். 
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    14-04-2022 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    பலன்கள்:

    செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட மேஷ ராசி அன்பர்களே இந்த வருடம் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சேமிக்கும் பழக்கம் உங்களுக்கு உண்டாகும்.
    குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை வாகனங்களைப் பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை. தேவையற்ற வேகம் கூடாது. மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். 
    தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். வாடிக்கையாளர்களை திருப்தி அடையும்படி நடந்து கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி  பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. மேலிடம் உங்கள் மீது கரிசனப் பார்வை வைக்கும்.
    பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.

    மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண்  பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.

    கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.
    அரசியல் துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் திட்டமிட்டபடி நடக்கும்.

    அஸ்வினி:

    இந்த வருடம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது.  காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து  உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. 

    பரணி:

    இந்த வருடம் பொருள் வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர் களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள்  அனுகூலமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள்  கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். மாணவர்களுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. தேர்வு எழுதும் போது கேள்விகளை கவனமாக படித்து எழுதுவது நல்லது. 

    கார்த்திகை 1ம் பாதம்:

    இந்த வருடம் குடும்பத்தில் திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள்  கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

    பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் படித்து விநாயகரை வணங்க எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

    அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன் – செவ்வாய் – குரு
    எண்கள்: 1 – 3 – 6 – 9

    சொல்ல வேண்டிய மந்திரம்: ‘”ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் சொல்லவும்

    செல்ல வேண்டிய ஸ்தலம்: முருகன் கோவில்கள்

    மலர் பரிகாரம்: தினமும் செவ்வரளி மலரை முருகனுக்கு அர்ப்பணித்து வணங்கி வரவும். 

     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
     

  • Sukran adhikkam 2022 year

    நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீப்லவ வருஷம் – தக்ஷிணாயம் – ஹேமந்த ரிது – மார்கழி மாதம் 16ம் நாள் பின்னிரவு 17ம் நாள் முன்னிரவு அன்றைய தினம் தினசுத்தி அறிவது கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி – வெள்ளிக்கிழமை பின்னிரவு சனிக்கிழமை முன்னிரவு – கேட்டை நக்ஷத்ரம் – சித்தயோகம் – கன்னியா லக்னம் – வ்ருச்சிக சந்திரா லக்னம் – ரிஷப நவாம்சம் – கும்ப சந்திர நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2022ம் ஆண்டு பிறக்கிறது. 

    ராசிநிலை – பாதசார விபரம்:
    லக்னம் – ஹஸ்தம் 2ம் பாதம் – சந்திரன் சாரம்
    சூரியன் – பூராடம் 1ம் பாதம் – சுக்கிரன் சாரம்
    சந்திரன் – கேட்டை 2ம் பாதம் – புதன் சாரம்
    செவ்வாய் – கேட்டை 2ம் பாதம் – புதன் சாரம்
    புதன் –  உத்திராடம் 2ம் பாதம் – சூர்யன் சாரம்
    குரு – சதயம் 1ம் பாதம் – ராகு சாரம்
    சுக்கிரன்(வ) – உத்திராடம் 3ம் பாதம் – புதன் சாரம்
    சனி – திருவோணம் 1ம் பாதம் – சந்திரன் சாரம்
    ராகு – க்ருத்திகை 3ம் பாதம் – சூர்யன் சாரம்
    கேது – அனுஷம் 1ம் பாதம் – சனி சாரம்


    சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற எண்: 2022:
    இந்த வருடத்தின் கூட்டு எண்: 2 + 0 + 2 + 2 = 6. ஆறு என்பது சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற எண். மஹாவிஷ்ணுவிற்கும் மஹாலக்ஷ்மிக்கும் உகந்த எண் ஆறாகும். ஆண்டு பிறக்கும் நேரத்தில் லக்னாதிபதி புதன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மிகப் பெரிய கூட்டணியுடன் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி புதன் ஐந்தாமிடத்தில் சூர்யன் சாரம் பெற்றிருக்கிறார். 

    லக்ன தொழில் அதிபதி புதன் –  குடும்பாதிபதி பாக்கியாதிபதி சுக்கிரன் – பஞ்சம ரண ருணாதிபதி சனி ஆகியோர் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள்.  குருவின் சஞ்சாரத்தால் கன்னியர்களுக்கு தகுந்த மணமாகும். மாலை வாய்ப்புகளும் – மழலை பாக்யமும் – வேலைவாய்ப்புகளும் வியக்கும் விதத்தில் இருக்கும். பத்திரிகைத்துறை – எழுத்துதுறை – ஆசிரியர் துறை – கணிதம் – ரசாயணம் – ஆண்மீகம் – சோதிடம் – வழக்கறிஞர் துறை – புத்தகத்துறை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுக்ரன் தனது சஞ்சாரத்தை யோக ஸ்தானத்தில் இருப்பதால் கலைத்துறை செழிக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் கலைஞர்கள் கௌரவப்படுத்தப்படுவார். 

    வண்ணத்திரை சின்னத்திரை இரண்டுமே மக்களுக்கு பயனளிக்கும். உணவிற்கு எந்த விதமான பங்கமும் இராது. உணவு உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலை நிர்ணயமாகும். மக்களுக்கு பொருளாதார நிலை உயரும். பெட்ரோல் – டீசல் – கச்சா எண்ணை – சமையல் எண்ணை விலை அதிகமாக உயரும். புத்தாண்டு பிறக்கும் போது உள்ள புதனின் இருப்பால் இந்திய ரூபாயின் மதிப்பில் சலனம் இருக்கும். தங்கம் – வெள்ளி விலையும் உயரும். நிறைய சிவாலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். 

    அரசாங்கத்தில் சிறு சிறு ஊசல்கள் இருக்கும். மழை பொழிவு நன்றாக இருக்கும். சராசரி வெயில் அளவை இந்த வருடம் வெப்பம் அதிகரிக்கும். அண்டார்டிகா – அமெரிக்கா – ஐரோப்பிய நாடுகள் – சுமத்ரா தீவு – ஜப்பான் போன்ற இடங்களில் பூகம்பம் வர வாய்ப்புள்ளது. யாராலும் சரியான முறையில் வானிலையை கணித்து கூற முடியாத நிலை ஏற்படலாம். அணு ஆயுதத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தண்ணீர் தேவை அதிகமாகும். காடுகளை அழிப்பது அதிகமாகும். கடவுளுக்கு எதிராக பேசும் நபர்கள் அதிகமாவார்கள்.