Tag: 2022

  • January 02 2022 Hanuman jayanthi

    ஜனவரி 2 அனுமன் ஜெயந்தி 
    பிலவ வருடம் – மார்கழி 18
     அமாவாசை 
    அனுமன் ஜெயந்தி
    02-ஜன-2022 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    ந.இ    12.43
    நட்சத்திரம்    :    மூலம்    மா    4.49
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை,ரோகிணி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • January 02 2022 rasipalan

    ஜனவரி 2 – இன்றைய ராசிபலன்….
    .இன்றைய ராசி பலன்
    மேஷம் –      நன்மை 
    ரிஷபம் –     இன்சொல் 
    மிதுனம் –     பரிசு 
    கடகம் –      சிக்கல் 
    சிம்மம் –      ஓய்வு  
    கன்னி –      செலவு 
    துலாம் –      நஷ்டம் 
    விருச்சிகம் – பயம்  
    தனுசு –       பகை 
    மகரம் –      நலம் 
    கும்பம் –     ஆதாயம் 
    மீனம் –       புகழ்
    சந்திராஷ்டமம்    –   கார்த்திகை, ரோகிணி

  • January 1 2022 Happy New Year

    ஜனவரி 1 – ஆங்கில புத்தாண்டு
    பிலவ வருடம் – மார்கழி 17
    ஆங்கில புத்தாண்டு
    01-ஜன-2022 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    ந.இ    3.02
    நட்சத்திரம்    :    கேட்டை    மா    6.26
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பரணி,கார்த்திகை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • January 1 2022 Newyear rasipalan

    ஜனவரி 1 – புத்தாண்டு தின ராசிபலன்….
    .இன்றைய ராசி பலன்
    மேஷம் –      நலம் 
    ரிஷபம் –     சுகம் 
    மிதுனம் –     ஆதரவு 
    கடகம் –      இன்பம் 
    சிம்மம் –      பாசம்  
    கன்னி –      மகிழ்ச்சி   
    துலாம் –      பக்தி  
    விருச்சிகம் – உயர்வு 
    தனுசு –       லாபம் 
    மகரம் –      நற்சொல்  
    கும்பம் –     பணிவு 
    மீனம் –       தனம் 
    சந்திராஷ்டமம்    –   பரணி, கார்த்திகை 

  • December 30 2022 Sarva Egadasi

    டிசம்பர் 30 – சர்வ ஏகாதசி 
    பிலவ வருடம் – மார்கழி 15
    30-டிச-2021 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    கா    9.52
    நட்சத்திரம்    :    விசாகம்    இ    9.40
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி,அசுவினி
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • 2022 new year dhanusu to meenam

    தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1 ம் பாதம்)

    கிரகநிலை:
    ராசியில் சூர்யன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

    கிரக மாற்றங்கள்:
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    14-04-2022 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்கள்:
    தனுசு ராசி அன்பர்களே, இந்த வருடம் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

    குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அதிக காரத்தை தவிர்ப்பது நன்மை தரும். கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கவும்.
    தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். மேலிடத்துடன் இணக்கத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். 

    பெண்களுக்கு எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

    மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின்  ஆதரவும் கிடைக்கும்.

    கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

    அரசியல்வாதிகளுக்கு முக்கியமானவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். சமூகத்தில் முக்கியஸ்தர் என்று பெயரெடுப்பீர்கள். கட்சிப் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். கட்சியில் முக்கிய பொறுப்புகளையும் ஏற்பீர்கள். நண்பர்களாலும் தொண்டர்களாலும் ஏற்றம் பெறுவீர்கள். 

    மூலம்:
    இந்த வருடம் பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம். மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். சாதகமான பலன் தரும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். . 

    பூராடம்:
    இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும்.

    உத்திராடம் 1ம் பாதம்:இந்த வருடம் கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆ

    ரோக்கியத்தில் கவனம் தேவை. வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எடுத்துக் கொண்ட வேலைகளில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம்.  எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும். கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். 
    பரிகாரம்:  சிவனை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வணங்க காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். 

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
    அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு – செவ்வாய் – சூரியன்
    எண்கள்: 1, 3, 5
    சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் சிவாய நம என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்.
    செல்ல வேண்டிய ஸ்தலம்: சித்தர்களின் கோவில்களுக்குச் சென்று வருவது நல்லது.
    மலர் பரிகாரம்: சாமந்திப் பூவை சித்தர்களுக்கு அர்பணித்து வணங்கி வருவது நல்லது.

     


    மகரம் உத்திராடம் 2,3,4 பாதங்கள் – திருவோணம் – அவிட்டம் 1,2 பாதங்கள்
     

    கிரகநிலை:
    ராசியில் புதன், சுக் (வ), சனி – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ – லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

    கிரக மாற்றங்கள்:
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    14-04-2022 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்கள்:
    மகர ராசி அன்பர்களே இந்த வருடம் எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். வாகன யோகத்தை தரும். பெரியோர்களின் உதவி கிடைக்கும்.  

    குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும்.  பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் நலனுக்காக  பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.     

    தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. தொழிலுக்கு தேவையான உப கரணங்கள் வாங்க முயற்சி எடுங்கள் அது பலிதமாகும்.
    உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது நாட்கள் தள்ளிப் போடுவது நல்லது.
    பெண்களுக்கு  மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தை அதிக கவனம் எடுத்துக் கொள்வது அவசியம். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும்.

    மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும். 

    கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.

    அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். அதேசமயம் புதிய பொறுப்புகளை கவனத்துடன் கையாளவும். தொண்டர்கள் ஆதரவாக இருப்பார்கள். யோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.  

    உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:
    இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும். எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியை தரும்.

    திருவோணம்:
    இந்த வருடம் இன்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து எடுத்து கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கெட்ட கனவுகள் தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். 

    அவிட்டம் 1,2 பாதங்கள்:
    இந்த வருடம் தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

    பரிகாரம்: விநாயகருக்கு சனிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
    அதிர்ஷ்ட ஹோரைகள்: சனி – சுக்ரன் – புதன்
    எண்கள்: 6, 7, 9
    சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் கம் கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்
    செல்ல வேண்டிய ஸ்தலம்: நவகிரகங்கள் இருக்கும் கோவில்களுக்குச் சென்று நவகிரகங்களை 9 முறை சுற்றி வரவேண்டும்.
    மலர் பரிகாரம்: மல்லிகை பூவை சிவனுக்கு அர்பணித்து வணங்கி வருவது நல்லது.

    கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)
     

    கிரகநிலை:
    ராசியில் குரு – சுக ஸ்தானத்தில் ராஹூ – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது – லாப ஸ்தானத்தில் சூர்யன் – அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

    கிரக மாற்றங்கள்:
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    14-04-2022 அன்று குரு பகவான் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்கள்:
    கும்ப ராசி அன்பர்களே  இந்த வருடம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். 
    குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம்.  கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை வண்டி – வாகனங்கள் – இயந்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் போது கவனம் தேவை. மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். நீங்கள் நிதானமானவர்கள் அதே வேளையில் பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். 

    தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்புகளில் ஆதரவு நீடிக்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம். பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். எதிர்பார்க்கும் பணி இட மாற்றம் – பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். 
    பெண்களுக்கு எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும்.

    மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை  அதிகரிக்கும். கவனமாக  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
    கலைத்துறையினருக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும்.

    அரசியல்வாதிகள் எதிரிகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பர். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வரும். கட்சியில் புதிய பணிகளைச் சாதுர்யமாகச் செய்து முடிப்பீர்கள். செல்வாக்கு உயரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொண்டர்களையும் அனுசரித்துச் செல்லவும். 

    அவிட்டம் 3, 4 பாதங்கள்:
    இந்த வருடம் தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள். மனதில் இருந்த கவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீண் கவலை ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும்.

    சதயம்:
    இந்த வருடம் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. இருந்த பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக  எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றிபெற தடைகளை தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது. வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள்.

    பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்:
    இந்த வருடம் பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.  வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். 

    பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர எதிர்ப்புகள் அகலும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
    அதிர்ஷ்ட ஹோரைகள்: சனி – புதன் – சுக்ரன்
    எண்கள்: 6, 7, 8
    சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீஆஞ்சநேயாய நமஹ” என்ற ம்ந்திரத்தை தினமும் 17 முறை சொல்லவும்.
    செல்ல வேண்டிய ஸ்தலம்: சிவன் கோவில்களுக்குச் சென்று வரவேண்டும்.
    மலர் பரிகாரம்: முல்லைப் பூவை சிவனுக்கு அர்பணித்து வணங்கி வருவது நல்லது.

    மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

    கிரகநிலை:
    தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது – தொழில் ஸ்தானத்தில் சூர்யன் – லாப ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி – அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

    கிரக மாற்றங்கள்:
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    14-04-2022 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    பலன்கள்:
    மீன ராசி அன்பர்களே இந்த வருடம் காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம். 
    குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே  இடைவெளி காணப்படும்.  பிள்ளைகள்  புத்திசாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.    
    தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். தொழிலாளர்கள் நல்ல ஆதரவு தருவார்கள். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த வியாபாரம் நல்ல சூடு பிடிக்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள். உடனிருப்பவர்களுடன் கவனமாக பழகவும்.

    பெண்களுக்கு எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும்.

    மாணவர்களுக்கு கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். 

    கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.

    அரசியல் துறையினருக்கு கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். மேலிடத்தை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொண்டர்களின் பாராட்டை பெறுவீர்கள்.

    பூரட்டாதி 4ம் பாதம்:
    இந்த வருடம் பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும்.  வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.

    உத்திரட்டாதி:
    இந்த வருடம் மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும் பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில்  ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக் கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். 

    ரேவதி:
    இந்த வருடம் மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில்  செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை.  முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. வளர்ச்சி பெற மிகவும்  கவனமாக  இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும் செலவை  குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனமகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.
    பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் நலம் சீராகும். பொருளாதார சூழ்நிலை நன்றாக இருக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
    அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு – சந்திரன் – செவ்வாய்
    எண்கள்: 1, 5, 7
    சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்ல வேண்டும்.
    செல்ல வேண்டிய ஸ்தலம்: சிவன் கோவில்களுக்குச் சென்று வரவேண்டும்.
    மலர் பரிகாரம்: நீர்நிலைகளில் இருக்கும் சிவன் அல்லது முருகன் கோவில்களுக்குச் சென்று வர வேண்டும்.

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

  • simmam to viruchigam 2022 rasipalan

    சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்)
     

    கிரகநிலை:
    சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி – களத்திர ஸ்தானத்தில் குரு – தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
    கிரக மாற்றங்கள்:

    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    14-04-2022 அன்று குரு பகவான் களத்திர  ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்கள்:
    சிம்ம ராசி அன்பர்களே, இந்த வருடம் எதிர்த்து  செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.  

    குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்ன சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின்  செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை அலர்ஜி சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு திருப்தி தரும். பெரியோர் உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. 

    தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். தொழிலாளர்கள் அவ்வப்போது பிரச்சினை எழுப்பலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.
    பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம். 

    மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்.
    கலைத்துறையினருக்கு முன்பு கிடைத்ததை விட அதிக பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும். லாபம் அதிகமாகும். வெளியூர் பயணங்கள் திருப்தி அளிக்கும்.

    அரசியல்துறையினருக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நன்மை தரும். வேலைப் பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவீர்கள். நண்பர்களிடம் ஒத்துழைப்பும் இருக்கும்.

    மகம்:
    இந்த வருடம் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை  குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்த பாசம் அதிகரிக்கும்.   நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை.

    பூரம்:
    இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம்.எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். 

    உத்திரம் 1ம் பாதம்:
    இந்த வருடம் கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது. மாணவர்கள் தனது முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.  சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. எடுத்த காரியங்களில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு  காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
    பரிகாரம்: சிவபுராணம் சொல்லி சிவனை வணங்கி வர குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்
    அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன் – குரு – செவ்வாய்
    எண்கள்: 1, 2, 9
    சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீருத்ராய நமஹ என்ற மந்திரத்தை தினமும் 36 முறை சொல்லவும்.
    செல்ல வேண்டிய ஸ்தலம்: சிவன் கோவில்களுக்குச் சென்று வரவும்.
    மலர் பரிகாரம்: வில்வத்தை சிவனுக்கு அர்பணித்து வணங்கி வரவும்.

    கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்:)
     

    கிரகநிலை:
    தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது – சுக ஸ்தானத்தில் சூர்யன் – பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

    கிரக மாற்றங்கள்:
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    14-04-2022 அன்று குரு பகவான் ரண ருண ரோக  ஸ்தானத்தில் இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்கள்:

    கன்னி ராசி அன்பர்களே, இந்த வருடம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும்.  பணவரத்து இருக்கும். நன்மைகள் உண்டாகும்.   

    குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே  அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி  செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு முன்னேற்றத்தை சந்திப்பீர்கள். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண் செலவு உடல் நல பாதிப்பு ஏற்படலாம். 

    தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். கேட்ட வங்கிக் கடன்கள் கை கூடும். சிறு தொழில் நிறுவனங்கள் நல்ல லாபத்தைக் காணலாம்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம். தொலைதூர செய்திகள் மனதிற்கு நிம்மதி அளிக்கும்.
    பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

    மாணவர்களுக்கு  பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.  

    கலைத்துறையினருக்கு ஏதாவது ஒரு வகையில் வாக்குவாதம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் போது ஆவணங்களை சரியாக பார்க்கவும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
    அரசியல் துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் திட்டமிட்டபடி நடக்கும். 

    உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:

    இந்த வருடம் தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். 

    அஸ்தம்:
    இந்த வருடம் எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். 

    சித்திரை 1, 2, பாதங்கள்:
    இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். 

    பரிகாரம்: ராஜராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
    அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன் – சனி – சுக்ரன்
    எண்கள்: 5, 7, 8
    சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்
    செல்ல வேண்டிய ஸ்தலம்: ரங்கநாதர் கோவில்களுக்குச் சென்று வரவும்.
    மலர் பரிகாரம்: வெண் தாமரையை பெருமாளுக்கு அர்பணித்து வரவும்.

    துலாம்: சித்திரை , 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் – சுக ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி – பஞ்சம ஸ்தானத்தில் குரு – அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

    கிரக மாற்றங்கள்:
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். 
    14-04-2022 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்கள்:
    துலா ராசி அன்பர்களே, இந்த வருடம் எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். எடுத்துக் கொண்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். 
    குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக  இருந்த குடும்பம் தொடர்பான  பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிøடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கவும். 
    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். வாடிக்கையாளர்கள் திருப்தி அடைவார்கள். புதிய  முதலீடுகள் செய்ய எண்ணம் மேலோங்கும். 

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் நல்ல லாபத்தை தரும். வீணாக யாரிடமும் பெச வேண்டாம்.

    பெண்களுக்கு வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சுபநிகழ்ச்சிகள் நன்றாக நடைபெறும்.

    மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள்.
    கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்களின் ஆதரவும், நட்பும் கிடைக்கும். மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடைபெறும்.

    அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். அனைவரையும் அனுசரித்து செல்வதன் மூலம் காரியங்கள் நடந்து முடியும். திறமையுடன் செயல்பட்டு மேலிடத்தால் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். 

    சித்திரை 3, 4 பாதங்கள்ள்:
    இந்த வருடம் வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். நீங்கள் எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள்.  பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். 

    சுவாதி:
    இந்த வருடம் மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும்.

    விசாகம் 1, 2, 3 பாதங்கள்:
    இந்த வருடம் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். எடுத்து கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.  ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். 

    பரிகாரம்: ஸ்ரீராமருக்கு பானகம் நிவேதனம் செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
    அதிர்ஷ்ட ஹோரைகள்: சுக்ரன் – சனி – புதன்
    எண்கள்: 4, 6, 8
    சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும்
    செல்ல வேண்டிய ஸ்தலம்: பெருமாள் தாயாருடன் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வரவும்.
    மலர் பரிகாரம்: மல்லிகையை பெருமாளுக்கு அர்பணித்து வரவும்.

    விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
     

    கிரகநிலை:

    ராசியில் செவ்வாய், கேது – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி – சுக ஸ்தானத்தில் குரு – களத்திர ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

    கிரக மாற்றங்கள்:
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    14-04-2022 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்கள்:
    விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வருடம் பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். 

    குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. மனோ தைரியம்  அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும்.  புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

    தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். தந்தை வழி தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். புது நிறுவனங்கள் தொடங்க ஆவல் அதிகரிக்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லவிதமாக நடந்து முடியும். 
    பெண்களுக்கு எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். 

    மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். 
    கலைத்துறையினர் வேலைகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது,

    அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

    விசாகம் 4ம் பாதம்:
    இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். கணவன், மனைவிக்கிடையே  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

    அனுஷம்:
    இந்த வருடம் மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும்.  கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.  வீண் அலைச்சல் ஏற்படலாம். அவசரப்படாமல்  நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம்.  உங்கள் எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாணவர்கள் கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

    கேட்டை:
    இந்த வருடம் புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். 

    பரிகாரம்: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வணங்க மன அமைதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும். 
    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
    அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய் – குரு – சந்திரன்
    எண்கள்: 4, 5, 7
    சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் கார்த்திகேயாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும்.
    செல்ல வேண்டிய ஸ்தலம்: முருகன் கோவில்களுக்குச் சென்று வரவும்.
    மலர் பரிகாரம்: செவ்வரளிப் பூவை முருகனுக்கு அர்பணித்து வரவும்.
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

  • 2022 New year Mesham to Kadagam varai

    மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)

    கிரகநிலை:
    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் – தொழில் ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி – லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.
    கிரக மாற்றங்கள்:

    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். 
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    14-04-2022 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    பலன்கள்:

    செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட மேஷ ராசி அன்பர்களே இந்த வருடம் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சேமிக்கும் பழக்கம் உங்களுக்கு உண்டாகும்.
    குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை வாகனங்களைப் பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை. தேவையற்ற வேகம் கூடாது. மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். 
    தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். வாடிக்கையாளர்களை திருப்தி அடையும்படி நடந்து கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி  பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. மேலிடம் உங்கள் மீது கரிசனப் பார்வை வைக்கும்.
    பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.

    மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண்  பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.

    கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.
    அரசியல் துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் திட்டமிட்டபடி நடக்கும்.

    அஸ்வினி:
    இந்த வருடம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது.  காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து  உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. 

    பரணி:
    இந்த வருடம் பொருள் வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர் களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள்  அனுகூலமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள்  கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். மாணவர்களுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. தேர்வு எழுதும் போது கேள்விகளை கவனமாக படித்து எழுதுவது நல்லது. 

    கார்த்திகை 1ம் பாதம்:
    இந்த வருடம் குடும்பத்தில் திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள்  கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

    பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் படித்து விநாயகரை வணங்க எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
    அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன் – செவ்வாய் – குரு
    எண்கள்: 1 – 3 – 6 – 9
    சொல்ல வேண்டிய மந்திரம்: ‘”ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் சொல்லவும்
    செல்ல வேண்டிய ஸ்தலம்: முருகன் கோவில்கள்
    மலர் பரிகாரம்: தினமும் செவ்வரளி மலரை முருகனுக்கு அர்ப்பணித்து வணங்கி வரவும். 

    ரிஷபம்: (கிருத்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிதம் 1, 2 பாதங்கள்)

    கிரகநிலை:
    ராசியில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் – பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி – தொழில் ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.
    கிரக மாற்றங்கள்:

    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    14-04-2022 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

    பலன்கள்:
    ரிஷப ராசி அன்பர்களே நீங்கள்  இந்த வருடம் எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதிய நபர்களின்  நட்பு உண்டாகும். வீடு வாகனம்  தொடர்பான விஷயங்களில்  கூடுதல் கவனம் தேவை. 

    குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உடல் ஆரோக்யத்தில் சிறு சிறு சங்கடங்கள் வரலாம். கவனமுடன் இருந்தால் பயம் இல்லை. சந்தோஷத்தை தருவதாக இருக்கும்.  கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும். 
    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். புதிய சிக்கல்கள் உருவாகலாம். கவனம் தேவை.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

    பெண்களுக்கு மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்வது நன்மை தரும். 
    மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

    கலைத்துறையினருக்கு வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். 
    அரசியல் துறையினருக்கு அரசு விவகாரங்களை கவனமாக கையாளவும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை ஆலோசித்து செய்யுங்கள். தீர்க்கமாக  முடிவெடுப்பதை தள்ளிப்போடுங்கள்.

    கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
    இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள்.  சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். உறவுகளில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.

    ரோகிணி:
    இந்த வருடம் வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம்  செய்பவர்கள்  கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலை பளு கூடும். குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம்.  பெண்கள் தனது உற்றார்ரிடம் உறவுகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது.  பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும்.  கடன் பிரச்சனை தீரும்.  

    மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:
    இந்த வருடம் தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.  நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.  கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும்  கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளிகுறையும். மாணவர்கள் பெரியவர்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும்.  

    பரிகாரம்:  குலதெய்வத்தை வணங்கி வர பணவரத்தில் இருந்த தடைநீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
    அதிர்ஷ்ட ஹோரைகள்: சுக்ரன் – செவ்வாய்
    எண்கள்: 2, 5, 9
    சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீம் மங்களாயை நமஹ என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்.
    செல்ல வேண்டிய ஸ்தலம்: அலமேலுமங்காபுரம் 
    மலர் பரிகாரம்: தினமும் தாமரை  மலரை மஹாலட்சுமிக்கு அர்பணித்து வணங்கி வரவும்.

     

    மிதுனம் (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)

    கிரகநிலை:
    ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது – களத்திர ஸ்தானத்தில் சூர்யன் – அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி – பாக்கிய ஸ்தானத்தில் குரு – அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
    கிரக மாற்றங்கள்:

    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    14-04-2022 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்கள்:
    மிதுன ராசி அன்பர்களே  இந்த வருடம் எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும்.  பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக  பாடுபட வேண்டி இருக்கும். 
    குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் இந்த வருடம் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும்.

    தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். தொழிலுக்காக கேட்ட இடத்தில் கடன் வசதிகள் கிடைக்கும். அதை வைத்து தொழில் சார்ந்த பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

    பெண்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். 
    அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. 

    மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்:
    இந்த வருடம் எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால்  காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம்  இருந்து கொண்டே இருக்கும்.  திடீர் பணதேவை ஏற்படலாம்.  தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய  தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள்  சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். மாணவர்கள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். 

    திருவாதிரை:
    இந்த வருடம் புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.  சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது  கவனம் தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு  நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். 

    புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
    இந்த வருடம் தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.  தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம்  அன்பாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும்.

    பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வர காரிய  அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
    அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன் – சுக்ரன் –  சனி
    எண்கள்: 3, 6, 7
    சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீகோவிந்தாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்
    செல்ல வேண்டிய ஸ்தலம்: பெருமாள் கோவில்களுக்குச் சென்று வரவும். 
    மலர் பரிகாரம்: துளசியை பெருமாளுக்கு அர்பணித்து வணங்கி வரவும்.

     

    கடகம் (புனர்பூசம் 4 – ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
     

    கிரகநிலை:
    பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் – களத்திர ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி – அஷ்டம ஸ்தானத்தில் குரு – லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
    கிரக மாற்றங்கள்:

    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    14-04-2022 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்கள்:
    கடக ராசி அன்பர்களே,  இந்த வருடம் சுபகாரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். 

    குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே  விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களாக பட்ட கஷ்டங்கள் மறைந்து ஆரோக்கியம் மேம்படும். 

    தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். புதிய தொழில் அபிவிருத்தி அடையும். தொழில் வருமானம் அதிகரிக்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். 

    பெண்களுக்கு பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.
    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.

    கலைத் துறையினருக்கு அதிக வாய்ப்புகள் வந்து குவியும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். உன்னத வாய்ப்புகளை கண்டு மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்.

    அரசியல்துறையினருக்கு வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். 

    புனர்பூசம் 4ம் பாதம்:
    இந்த வருடம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். வியாபாரம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோ தைரியம் கூடும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும்.  கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். பெண்கள் தனது எதிர்காலத்திற்காக  திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். மாணவர்களுக்காக மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். 

    பூசம்:
    இந்த வருடம் குடும்பத்தில் மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும். குழந்தைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும். மூலம் சாதகமான பலன் வரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில்  செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை.  முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

    ஆயில்யம்:
    இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சனைகள்  சரியாகும்.  குழந்தைகளின் மூலம் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும்.

    பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மஹாலக்ஷ்மியை மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்து வணங்க காரிய வெற்றி உண்டாகும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
    அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன் – சுக்ரன் – குரு
    எண்கள்: 3, 5, 6
    சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீஅம்பிகாயை நமஹ என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்
    செல்ல வேண்டிய ஸ்தலம்: அம்மன் கோவில்களுக்குச் சென்று வரவும்.
    மலர் பரிகாரம்: மல்லிகை பூவை அம்மனுக்கு அர்பணித்து வணங்கி வரவும்.

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

  • 2022 Hindu Festivals

     ஜனவரி இந்து பண்டிகைகள் 2022 :

    அனுமன் ஜெயந்தி  02-(ஞாயிறு)-(மார்கழி-18)

    கெர்போட்ட நிவர்த்தி 11-(செவ்வாய்)-(மார்கழி-27)

    வைகுண்ட ஏகாதசி,  போகிப் பண்டிகை 13-(வியாழன்)-(மார்கழி-29)

    தைப் பொங்கல் 14-(வெள்ளி)-(தை-1)

    மாட்டுப் பொங்கல்,திருவள்ளுவர் தினம் 15-(சனி)-(தை-2)

    உழவர் திருநாள், காணும் பொங்கல் 16-(ஞாயிறு)-(தை-3)

    தைப் பூசம் 18-(செவ்வாய்)-(தை-5)

    தியாக பிரம்ம ஆராதனை 22-(சனி)-(தை-09)

    தை அம்மாவாசை 31-(திங்கள்)-(தை-18)

    பிப்ரவரி 2022 இந்து பண்டிகைகள் :

    ரதஸப்தமி 08-(செவ்வாய்)-(தை-26)

    மாசி மகம் 17-(வியாழன்)-(மாசி-05)

    மார்ச் 2022 இந்து பண்டிகைகள் :

    மகா சிவராத்திரி 01-(செவ்வாய்)-(மாசி-17)

    காரடையான் நோன்பு 14-(திங்கள்)-(மாசி-30)

    காமதகனம் 16-(புதன்)-(பங்குனி-02)

    பங்குனி உத்திரம் 18-(வெள்ளி)-(பங்குனி-04)

    ஏப்ரல் 2022 இந்து பண்டிகைகள்

    தெலுங்கு வருடப்பிறப்பு 02- (செவ்வாய்)-(பங்குனி 19)

    ஸ்ரீ ராமநவமி 10-(ஞாயிறு)-(பங்குனி 27)

    தமிழ் வருடபிறப்பு 14 – (வியாழன்) சித்திரை-01)

    மே 2022 இந்து பண்டிகைகள் :

    அட்சய திருதியை 03-(செவ்வாய்)-(சித்திரை-20)

    அக்னி நச்சத்திர ஆரம்பம் 04-(செவ்வாய்)-(சித்திரை-21)

    அக்னி நச்சத்திர நிவர்த்தி 28-(சனி)-(வைகாசி-14)

    ஜூன் 2022 இந்து பண்டிகைகள் :

    வைகாசி விசாகம் 12-(ஞாயிறு)-(வைகாசி-29)

    ஜூலை 2022 இந்து பண்டிகைகள் :

    ஸ்ரீ மாணிக்கவாசகர் குரு பூஜை    03-(ஞாயிறு)-(ஆனி-19)

    ஆனி உத்திர தரிசனம் 06-(செவ்வாய்)-(ஆனி-22)

    ஆடி அமாவாசை 28-(செவ்வாய்)-(ஆனி-12)

    ஆகஸ்ட் 2022 இந்து பண்டிகைகள் :

    திருவாடிப்பூரம், நாக சதுர்த்தி 01-(திங்கள்)-(ஆடி-16)

    கருட பஞ்சமி 02-(செவ்வாய்)-(ஆடி-17)

    ஆடிப்பெருக்கு 03-(புதன்)-(ஆடி-18)

    வரலட்சுமி விரதம் 05-(வெள்ளி)-(ஆடி-20)

    ஆவணி அவிட்டம் 11-(வியாழன்)-(ஆடி-26)

    ஸ்ரீ காயத்திரி ஜபம் 12-(வெள்ளி)-(ஆடி-27)

    மகா சங்கடஹர சதுர்த்தி 15-(திங்கள்)-(ஆடி-30)

    கோகுலாஷ்டமி 19-(வெள்ளி)-(ஆவணி-03)

    ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி 20-(சனி)-(ஆவணி-04)

    ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி 31-(புதன்)-(ஆவணி-15)

    செப்டம்பர் 2022 இந்து பண்டிகைகள்

    ஓணம் பண்டிகை 08-(வியாழன்)-(ஆவணி-23)

    மகாளயபட்சம் ஆரம்பம் 11-(ஞாயிறு)-(ஆவணி-26)

    மஹாபரணி 14-(புதன்)-(ஆவணி-29)

    மகாளய அமாவாசை 25-(ஞாயிறு)-(புரட்டாசி-08)

    நவராத்திரி ஆரம்பம் 26-(திங்கள்)-(புரட்டாசி-09)

    அக்டோபர் 2022 இந்து பண்டிகைகள் :

    ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை 04-(செவ்வாய்)-(புரட்டாசி-17)

    ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை 05-(புதன்)-(புரட்டாசி-18)

    தீபாவளி பண்டிகை (கேதார கௌரி விரதம்) 24-(திங்கள்)-(ஐப்பசி-07)

    கந்தசஷ்டிஆரம்பம் 25-(செவ்வாய்)-(ஐப்பசி-08)

    கந்தசஷ்டி சூரசம்ஹாரம் 30-(ஞாயிறு)-(ஐப்பசி-13)

    டிசம்பர் 2022 இந்து பண்டிகைகள் :

    பரணி தீபம் 05-(திங்கள்)-(கார்த்திகை-19)

    திருக்கார்த்திகை தீபம் 06-(செவ்வாய்)-(கார்த்திகை-20)

    ஸ்ரீ பஞ்சராத்திர தீபம் 08-(வியாழன்)-(கார்த்திகை-22)

    அனுமன் ஜெயந்தி  23-(வெள்ளி)-(மார்கழி-08)

    கெர்போட்ட ஆரம்பம்  29-(வியாழன்)-(மார்கழி-14)2

  • 2022 Chandra Grahan

    கிரகணம் என்று கூறியதும் அனைவரும் அதை பற்றி தெரிந்துகொள்ள அதிக ஆர்வம் கொள்வார்கள். ஏனெனில் கிரகணம் மத ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2022ல் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும். இதில் இரண்டு சந்திர கிரகணங்கள்  மற்றும் இரண்டு சூரிய கிரகணங்கள் (Surya Grahan 2022) ஆகும். 2022 இல் சந்திர கிரகணம் எப்போது நிகழும் என்பதை பார்போம். 

    2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 
    2022ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த நாள் திங்கட்கிழமையில் வருகிறது. இந்த சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருக்கும். இது காலை 07:02 முதல் தொடங்கி மதியம் 12:20 வரை நீடிக்கும். இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் தெற்கு/மேற்கு ஐரோப்பா, தெற்கு/மேற்கு ஆசியா, தென் அமெரிக்கா, பசிபிக், ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, அண்டார்டிகா உள்ளிட்ட சில பகுதிகளில் காணலாம். இது தவிர, இந்த சந்திர கிரகணத்தின் சூதக் காலம், கிரகணத்திற்கு 9 மணி நேரத்திற்கு முன் துவங்கும்.

    2022 இரண்டாவது சந்திர கிரகணம் 
    2022 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் நவம்பர் 8 ஆம் தேதி செவ்வாய்கிழமை நிகழவுள்ளது. இந்திய நேரப்படி இந்த நாளில் பிற்பகல் 1.32 மணி முதல் இரவு 7.27 மணி வரை நிகழும். மேலும், இந்த சந்திர கிரகணத்தை இந்தியா, ஆஸ்திரேலியா, வடக்கு / கிழக்கு ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காணலாம். இந்த சந்திர கிரகணத்தின் சூதகம் 9 மணி நேரத்திற்கு முன்பு தொடங்கி கிரகணம் முடியும் வரை இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், கர்ப்பிணிகள் உட்பட அனைத்து மக்களும் சூதக் காலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.