ஆகஸ்ட் 06 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசி பலன்
மேஷம் – செலவு
ரிஷபம் – ஆதாயம்
மிதுனம் – வரவு
கடகம் – தடங்கல்
சிம்மம் – நன்மை
கன்னி – சுகம்
துலாம் – பெருமை
விருச்சிகம் – நலம்
தனுசு – கீர்த்தி
மகரம் – உழைப்பு
கும்பம் – உதவி
மீனம் – அலைச்சல்
சந்திராஷ்டமம் – ரேவதி, அசுபதி
Tag: 2022
-
August 06 2022 Rasipalan
-
August 06 2022 Indrayanaal
ஆகஸ்ட் 6 – இன்றைய நல்லநேரம்
சுபகிருது வருடம் – ஆடி 21
06-ஆக-2022 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : நவமி
திதி நேரம் : நவமி இ 10.03
நட்சத்திரம் : விசாகம் ம 2.39
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : ரேவதி,அசுவினி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
August 05 2022 Rasipalan
ஆகஸ்ட் 05 – வரலட்சுமி விரதநாள் ராசிபலன்…
இன்றைய ராசி பலன்
மேஷம் – யோகம்
ரிஷபம் – பெருமை
மிதுனம் – மேன்மை
கடகம் – சோதனை
சிம்மம் – சிரமம்
கன்னி – தொல்லை
துலாம் – அமைதி
விருச்சிகம் – கவனம்
தனுசு – நிம்மதி
மகரம் – பக்தி
கும்பம் – வெற்றி
மீனம் – நன்மை
சந்திராஷ்டமம் – உத்திரட்டாதி, ரேவதி -
August 5 2022 Varalakshmi Viradham
ஆகஸ்ட் 5 – வரலட்சுமி விரதம்
சுபகிருது வருடம் – ஆடி 20
வரலட்சுமி விரதம்,
கருட ஜெயந்தி,
துாத்துக்குடி பனிமயமாதா திருவிழா
05-ஆக-2022 வெள்ளி
கரிநாள்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி இ 11.58
நட்சத்திரம் : சுவாதி ம 3.41
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி,ரேவதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
August 03 2022 rasipalan
ஆகஸ்ட் 03 – ஆடிப்பெருக்கு நாள் ராசிபலன்…
இன்றைய ராசி பலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – பக்தி
மிதுனம் – வெற்றி
கடகம் – சுகம்
சிம்மம் – பயம்
கன்னி – சிரமம்
துலாம் – பாராட்டு
விருச்சிகம் – குழப்பம்
தனுசு – பிரமை
மகரம் – அமைதி
கும்பம் – விவேகம்
மீனம் – அன்பு
சந்திராஷ்டமம் – சதயம், பூரட்டாதி -
August 03 2022 aadi perukku
ஆகஸ்ட் 3 – ஆடிப்பெருக்கு
சுபகிருது வருடம் – ஆடி 18
ஆடிப்பெருக்கு
03-ஆக-2022 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : சஷ்டி
திதி நேரம் : சஷ்டி ந.இ 2.46
நட்சத்திரம் : அஸ்தம் மா 4.38
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சதயம்,பூரட்டாதி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Meena Rasii Aug Monthly Prediction – 2022
கிரகநிலை:
ராசியில் குரு(வ) – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ – சுக ஸ்தானத்தில் சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சந்திரன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது.கிரகமாற்றங்கள்:
07-08-2022 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.பலன்:
ஏற்ற தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகும் குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே இந்த மாதம் கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம்.
குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும்.பெண்களுக்கு எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும்.
மாணவர்களுக்கு பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.
பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.உத்திரட்டாதி:
இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.ரேவதி:
இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் படித்து ஸ்ரீகணபதியை வணங்க எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 22, 23
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
-
Kumbha rasi Aug Monthly Prediction – 2022
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் – களத்திர ஸ்தானத்தில் புதன், சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்:07-08-2022 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.பலன்:
எத்தனை தோல்வி ஏற்பட்டாலும் வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறும் குணமுடைய கும்ப ராசி அன்பர்களே இந்த மாதம் மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். மாத மத்தியில் காரிய தடைகள் எதிலும் தாமதமான போக்கு காணப்படும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தை தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும்.தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.
பெண்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும்.அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள்.சதயம்:
இந்த மாதம் தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில்ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.பரிகாரம்: ராஜராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 2, 3, 29, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 20, 21பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
-
Maahara rasi Aug Monthly Prediction – 2022
கிரகநிலை:
ராசியில் சனி (வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) – சுக ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் சூர்யன் – அஷ்டம ஸ்தானத்தில் புதன், சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்:07-08-2022 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.பலன்:
மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகும் குணமுடைய மகர ராசி அன்பர்களே இந்த மாத தொடக்கத்தில் காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். சூரியன், சுக்கிரன் சஞ்சாரத்தால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.
பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.திருவோணம்:
இந்த மாதம் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.பரிகாரம்: சஷ்டிதோறும் முருகனை வணங்கி வர குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 1, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 17, 18, 19பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
-
Dhanusu rasi Aug Monthly Prediction – 2022
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) – சுக ஸ்தானத்தில் குரு(வ) – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ – களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் – பாக்கிய ஸ்தானத்தில் புதன், சந்திரன் – லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.கிரகமாற்றங்கள்:
07-08-2022 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் உயர்ந்த குணமுடைய தனுசு ராசி அன்பர்களே இந்த மாதம் எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.
குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது.பெண்களுக்கு எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள்.மூலம்:
இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.பூராடம்:
இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.பரிகாரம்: அம்மனுக்கு அரளி அர்ச்சனை செய்து சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 24, 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 15, 16பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA