ஜூன் 16 – இன்றைய நாள் எப்படி?
சார்வரி வருடம் – ஆனி 2
16-ஜூன்-2020 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : ஏகாதசி
திதி நேரம் : தசமி கா 7.00
நட்சத்திரம் : அசுவினி முழுவதும் 0.00
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அஸ்தம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
Tag: 16
-
June 16 Indraya Naal
-
Kizhpavur Narasimahar
மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம். இதர அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை. நரசிம்மம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் எவ்வித சிரமமும், பயமும், தயக்கமும் இன்றி சுலபமாக தரிசனம் செய்வதற்காக, கீழப்பாவூரில் நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளார். இந்த ஆலயத்தில் அருள்புரியும் நரசிம்ம மூர்த்தியானவர், 16 கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் விதமாக திரிபங்கி நிலையில் அபூர்வ வடிவத்தோடு சிறப்புடன் காட்சியளிக்கிறார். சூரியனும், சந்திரனும் வெண் சாமரங்கள் வீச, வெண் கொற்றக் குடையுடன் தியானித்தபடி இவர் வீற்றிருக்கிறார்.
ரிஷிகளுக்குக் காட்சி கொடுத்த இடத்திலேயே நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டிருப்பது வேறெங்கும் காணஇயலாத சிறப்பாகும். ரிஷிகள் தவம்புரிந்த-நரசிம்மர் காட்சியளித்த புனித க்ஷேத்திரம்தான் கீழப்பாவூர்.
நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டு விட்டதன் எதிரொலியாக தினமும் சாயரட்சை வேளையில் சிங்க கர்ஜனை ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது. இதனால் நரசிம்மர் ஆவேசமாக இருப்பதாகக் கருதிய பக்தர்கள் அவரது சந்நிதி முன்பு தெப்பக்குளம் ஏற்படுத்தியும், முறையாக பால், இளநீர் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கியதும் சிங்க கர்ஜனை நின்றுவிட்டதாம்.
சுமார் 300 ஆண்டுகளுக்குமுன்புவரை இந்த சிங்க கர்ஜனையை இப்பகுதி வாழ் மக்கள் கேட்டு வந்துள்ளனர். இந்த தகவல் செவிவழிச் செய்தியாக இன்றும் உலாவி வருகிறது.
இந்த க்ஷேத்திரத்தில் மேற்குத்திக்கில் நரசிம்மர் சந்நிதி முன்பாகவே அவரது சினத்தைத் தணித்த தீர்த்தக்குளம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. கங்கா-நர்மதா ஸ்ரீநரசிம்மப் புஷ்கரணி என அழைக்கப்படும் இந்த தீர்த்தத்தின்மீது நரசிம்மரின் அருள்பார்வை உள்ளது. இந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டால் வேண்டாத கோபம், கவலை, பதற்றம் நீங்கி மனஅமைதி ஏற்படும்.
ஒரு ஆலயத்திலுள்ள சுவாமிக்கு எந்தளவு ஸான்னித்யம் (சக்தி) உண்டோ அதே அளவு ஸான்னித்யம் அங்குள்ள தீர்த்தத்துக்கும் உண்டு என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. எனவே இங்கு சுவாதி, திருவோணம், பிரதோஷம், வளர்பிறை சதுர்த்தசி, செவ்வாய், சனி ஆகிய நாட்களில் ‘தீர்த்த வல வழிபாடு’ நடக்கிறது.
இத்தலம் தென்காசி-திருநெல்வேலி நெடுஞ்சாலையிலுள்ள பாவூர் சத்திரத்திலிருந்து 2 கி.மீ. அருகில் உள்ளது.
-
mAY 16 Rasipalan
மே 16.. ராசி பலன்கள்
இன்றைய ராசி பலன்
மேஷம் – வரவு
ரிஷபம் – உறுதி
மிதுனம் – லாபம்
கடகம் – பிரயாணம்
சிம்மம் – வெற்றி
கன்னி – சுகம்
துலாம் – அன்பு
விருச்சிகம் – பிரீதி
தனுசு – இன்பம்
மகரம் – தனம்
கும்பம் – நலம்
மீனம் – உயர்வு
சந்திராஷ்டமம் – பூசம், ஆயில்யம் -
May 16 Nalla neram
மே 16 – இன்றைய நல்ல நேரம்
விகாரி வருடம் – வைகாசி 03
16 –மே – 2020 சனி,
திருப்பாதிரிபுலியூர், திருவதிகை அப்பர் முக்தி உற்சவம், திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருமஞ்சன சேவை
நல்ல நேரம் : 7.30 – 8.30
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் ; 1.30 – 3.00
திதி : அதிதி
திதி நேரம் : நவமி ப 01.32
நட்சத்திரம் : சதயம் இ 02.01
யோகம் : அமிர்த – மரண யோகம்
சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
April 29 Intraiya nalla neram
ஏப்ரல் 29 – இன்றைய நல்ல நேரம்
விகாரி வருடம் – சித்திரை 16
29 –ஏப்ரல்-2020 , புதன், ஷஷ்டி விரதம், சுபமுகூர்த்தம்,
மதுரை ஸ்ரீ வீரராகவபெருமாள் ரதோற்சவம், திருக்கடவூர் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம்
நல்ல நேரம் : 9.00 – 10.00
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் 7.30 – 9.00
திதி : ஸப்தமி
திதி நேரம் : ஷஷ்டி ப 11.39
நட்சத்திரம் : புனர்பூசம் இ 10.24
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூராடம், மூலம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
Nalla neram
ஏப்ரல் 16 – இன்றைய நல்ல நேரம்
விகாரி வருடம் – சித்திரை 03
16 -ஏப்ரல்-2020 , வியாழன், திருவோண விரதம்
சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் புஷ்பபல்லக்கில் பவனி, சுவாமி ஸ்ரீமுருகபெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
நல்ல நேரம் : 10.30 -11.30
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : நவமி
திதி நேரம் : : நவமி ப 10.32
நட்சத்திரம் : திருவோணம் இ 2.50
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
Intraiya rasipalankal
ஏப்ரல் 16.. ராசி பலன்கள்
இன்றைய ராசி பலன்
மேஷம் – ஜெயம்
ரிஷபம் – ஆக்கம்
மிதுனம் – லாபம்
கடகம் – பகை
சிம்மம் – மறதி
கன்னி – பக்தி
துலாம் – வெற்றி
விருச்சிகம் – உதவி
தனுசு – ஓய்வு
மகரம் – ஊக்கம்
கும்பம் – பயம்
மீனம் – மகிழ்ச்சி
சந்திராஷ்டமம் – புணர்பூசம் -
Murugan 16
1. ஞானசக்திதரர் கோலம் : இந்த கோலத்தில் இருக்கும் முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.
2.கந்தசாமி கோலம் : கந்தசாமி கோலத்தில் இருக்கும் முருக பெருமானை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை இருக்கும் ஆண்டவர் கந்தசாமி திருவடிவ கோலத்தில் இருக்கிறார்.
3. ஆறுமுக தேவசேனாபதி கோலம் : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.
4. சுப்பிரமணியர் கோலம் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.
5. கஜவாகனர் கோலம் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.
6.சரவணபவர் கோலம் : தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.
7. கார்த்திகேயர் கோலம் : இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.

8. குமாரசாமி கோலம் : இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.
9. சண்முகர் கோலம் : இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.
10. தாரகாரி கோலம் : ஹதாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.
11. சேனானி கோலம் : இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.
12. பிரம்மசாஸ்தா கோலம் : இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.
13. வள்ளிகல்யாணசுந்தரர் கோலம் : இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.
14. பாலசுவாமி கோலம் : இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.
15. சிரவுபஞ்சபேதனர் கோலம் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.
16. சிகிவாகனர் கோலம் : மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்
-
March 29 – Intraiya Nalla Neram
மார்ச் 29 – இன்றைய நல்ல நேரம்
விகாரி வருடம் – பங்குனி 16
29 -மார்ச்-2020 , ஞாயிறு
காஞ்சி ஸ்ரீ ஏகாம்புரேஸ்வரர் சூரிய, சந்திர பிரபையில் பவனி
நல்ல நேரம் : 7.30 – 8.30
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : பஞ்சமி
திதி நேரம் : பஞ்சமி ப 11.16
நட்சத்திரம் : கார்த்திகை இ 01.02
யோகம் : சித்த – அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
March 16 – Intraiya Nalla Neram
மார்ச் 16 – இன்றைய நல்ல நேரம்
விகாரி வருடம் – பங்குனி 3
16-மார்ச்-2020 திங்கள்
உப்பிலியப்பன் கோவில், ஸ்ரீனிவாச பெருமாள் காலை திருபல்லக்கு, இரவு ஸ்வாமி வெள்ளி ஹனுமார் வாகனம்
நல்ல நேரம் : 6.30 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : அஷ்டமி
திதி நேரம் : ஸப்தமி ப 9.51
நட்சத்திரம் : கேட்டை இ 5.07
யோகம் : சித்த – அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை, பரணி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்