Tag: 100

  • Dhanvanthri 100 chandi yagam

    இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் “யக்ஞஸ்ரீ கயிலைஞான குரு” டாக்டர் ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் தனது பெற்றோரின் வாக்கினை ஏற்று நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரகமந்திரத்தை குறிக்கோளாக கொண்டு உலக மக்கள் நலன் கருதி ஸ்ரீதன்வந்திரி ஆரோக்யபீடத்தை அமைத்து 87 பரிவார மூர்த்திகளுடன் மூலவர் தன்வந்திரி பகவானை பிரதிஷ்டை செய்து உள்ளார்.

    இங்கு உள்ள மூலவர் மற்றும் உற்சவர் தன்வந்திரி இந்தியாவின் பல இடங்களில் 665 நாட்கள் சுமார் இரண்டு லட்சம் கிலோ மீட்டர் கரிக்கோல பயணம் செய்து 500க்கும் மேற்பட்ட புண்ணிய க்ஷேத்திரம் சென்று 2000க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள பல்வேறு ஆலயங்கள், மடங்கள் சென்று பல மடாதிபதிகளின் வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு பல்வேறு புனித தீர்த்தங்களில் நீராடி 67க்கும் மேற்பட்ட திவ்ய தேசப்பெருமாளின் அபிமானத்தை பெற்று தேசத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்கள் மூலம் 147 தன்வந்திரி ஹோமம் செய்து சுமார் 46 லட்சம் பக்தர்கள் கைப்பட எழுதிய 54 கோடி தன்வந்திரி லிகித ஜப மஹாமந்திரங்களை பெற்று அவற்றை கர்ப்ப கிரஹத்தின் கீழ்மந்திர மேயந்திரமாக வைத்து மூலவர் தன்வந்திரி பகவானை பிரதிஷ்டையாகி உள்ளார் என்பது இந்த ஷேத்திரத்தின் சிறப்பாகும்.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெறும் தொடர் ஹோமத்திலும் ஆராதனைகளிலும் பங்கேற்பதன் மூலம் உடலின் எதிர்ப்புத்திறன் உயர்ந்து ஆயுள் ஆரோக்கியம் மேம்படும், தீராத நோய்களை தீரும், கர்மவினை விலகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும், சகல ஐஸ்வர்யங்களும் பெறலாம் மற்றும் பலநன்மைகளை பெறலாம் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

    அதன்படி ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடித்தில், 100 சண்டி யாகம் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் இந்த யாகம் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை, மாலை என்று இருவேலையும் நடைபெறும் இந்த சண்டி யாகத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று ஸ்ரீதன்வந்திரி பீடம் கேட்டுக்கொண்டுள்ளது. 
     

  • Thiruvotriyu perumal alangaram

    சென்னை திருவொற்றியூரில் 400 ஆண்டுகள் பழமையான காலடிப்பேட்டை கல்யாண வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் நான்காம் வாரத்தை முன்னிட்டு விசேஷமாக 100 கிலோ எடையில் 13 வகைகளான உலர் பழங்களை கொண்டு அலங்கார மாலை மற்றும் ஆடைகள் அணிவிக்கப்பட்டன.

     வரலாற்று சிறப்புமிக்க சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் விசேஷ பூக்களைக் கொண்டு விதவிதமான மாலைகள் அணிவிப்பது வழக்கம்

     இந்நிலையில் இந்த ஆண்டு புரட்டாசி மாதம் நான்காம் வாரத்தை முன்னிட்டு பாதாம் ,முந்திரி, பிஸ்தா ,திராட்சை, அக்ரூட் ,கிவி பழம், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ஆப்பிரிக்காட்  உள்ளிட்ட 13 வகையான உலர் பழங்களை கொண்டு மூலவர் கல்யாண வரதராஜப்பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கு ஆடைகள் வடிவமைக்க பட்டன இதனைத்தொடர்ந்து உற்சவர் பவள வண்ண பெருமாள் மற்றும் தாயார் ஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவி ,தாயாருக்கு உலர் பழங்களான கிரீடங்கள் மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டன.

     வெண்கொற்றக் குடையின் கீழ் காட்சி தரும் பெருமாள் இன்று  சிறப்பு பழங்களான கொடைகளால்  அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். புரட்டாசி மாதத்தில் கடைசி வாரமான நான்காவது சனிக்கிழமையில் பெருமாளுக்கு 100 கிலோ எடையிலான சிறப்புவாய்ந்த விதவிதமான பழங்களை கொண்டு அலங்காரம் செய்திருப்பது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது. 

  • sridi-sai-baba-100-year-celeb

    ஷீரடி சாய்பாபாவின் 100வது ஆண்டு நினைவு நாள் கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளது. 1918ம் ஆண்டில் இதே நாளில் தான் சாய்பாபா தனது ஸ்தூல உடலை விட்டு மறைந்தார்.

    மகாராஷ்டிராவில் ஓடும் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் ஷீரடி. 18ம் நூற்றாண்டு தொடக்கத்தில் அங்குள்ள பழமையான மசூதிக்கு பின்னே சிறுவன் ஒருவன் தியானம் செய்தான்.

    அவனது முகத்தில் ஒளிர்ந்த தேஜஸை பார்த்த கிராமத்து தலைவர் மனைவி தினமும் அந்த சிறுவனுக்கு உணவு கொண்டு வந்து கொடுக்கத் தொடங்கினார். அப்போது அதே பகுதியில் வசித்து வந்த கோயில் பூசாரி ஒருவர் சிறுவனை சாய் என்று அழைத்தார்.

    அந்த கிராமமே சிறுவன் சாயை தெய்வீக அருளுடன் பார்த்து வந்த சூழ்நிலையில், திடீரென அவன் ஷீரடியிலிருந்து காணாமல் போனான். ஊரே அவனை தேடிய நிலையில், மீண்டும் சாய் ஷீரடிக்கு விஜயமானான். அப்போது அவனக்கு வயது பதினாறு.

    மீண்டும் ஷீரடி வந்த சிறுவன் சாயை ஊர்மக்கள் கடவுளைப் போன்று வழிபட துவங்கினார்கள். சாய் என்பதுடன் பாபாவை இணைந்து சீரடி மக்கள் அவனை சாய்பாபா என்று அழைத்தனர். சாய்பாபாவை பற்றி தகவல்கள் ஊர்முழுக்க பரவியது. பல பகுதிகளிலிருந்து அவரை தேடி மக்கள் ஷீரடிக்கு வர தொடங்கினர்.

    மக்களின் துயரங்களுக்கு விடியலாகவும், அவர்களது இன்னல்களுக்கு மருந்தாகவும் சாய்பாபா பல அற்புதங்களை செய்தார். கடவுள் கிருஷ்ணனை வணங்கியபடி, மசூதியில் தங்கி வந்த அவர் மீது இந்து, இஸ்லாம் மக்கள் வேறுபாடு காட்டமல் அன்பு பாராட்டினர்.

    சாய்பாபாவுக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் அவருக்கு வக்கீல் பட் என்பவர் அறிமுகமானார். அப்போது அவரிடம் தான் ஜீவசமாதி அடையை வீடு கட்டி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படியே அவர் கட்டிக்கொடுத்தார்.

    மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் அன்பு பாராட்டிய சாய்பாபா, 1918ம் ஆண்டு அக்டோபர் 15ம் நாளில் ஜீவசாமாதி அடைந்தார். அன்று முதல் மக்கள் அவரை கடவுளாக வழிபடத்தொடங்கினர்.

    நம்பிக்கை வைக்கும் அன்பர்களுக்கு பாபா எப்போதும் துணை நிற்பதாக அவரது பக்தர்கள் கருதுகின்றனர். ஜீவசமாதி அடையும் சாய்பாபா துவாரகாமாயீயில் தீ மூட்டிவிட்டுச்சென்றார். அந்த நெருப்பு இன்றும் அணையாமல் உள்ளது.

    அதில் வரும் சாம்பலை பக்தர்கள் விபூதி பிரசாதமாக ஈடுக்கொண்டனர். நாட்டில் உள்ள பல்வேறு சாய்பாபா கோயில்களில் விபூதி தான் முக்கிய பிரசாதமாக விளங்குகிறது. இந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு பிறகு, ஷீரடிக்கு தான் அதிகம் பேர் வருவதாக முக்கிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து மறைந்த தெய்வங்களான பல மாகன்கள் இருந்த போதிலும், மதம், மொழி, இனம் போன்ற அடையாளங்களை கடந்து வலியவர்களுக்கு அற்புதம் செய்யும் தெய்வமாக போற்றப்படுகிறார் ஷீரடி சாய்பாபா

    சீரடி சாய்பாபா மறைந்த தினம் விஜயதசமி நாளாகும். இந்தாண்டு விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை சீரடியில் உள்ள சாய்பாபா கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் 17 முதல் 19ம் தேதி வரை பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி அக்டோபர் 17ம் தேதி சாய்பாபாவின் பக்தி பாடல்கள் பாடுவது உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 18ம் தேதி சாய்பாபாவின் உருவம் தாங்கிய அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது. தொடர்ந்து 19ம் தேதி இந்த நிகழ்வுகள் கொண்டாட்டத்துடன் நிறைவு பெறுகிறது.

  • 100

    கடலூர் மாவட்டம். பெரியகுப்பம். மற்றும் கிள்ளையில் மாசிமக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற மாசிமக திருவிழாவில் பூண்டி யாங்குப்பம், நீராழி, கம்பிளிமேடு, ஆலபாக்கம், அகரம், வழதளம்பட்டு, தோப்புகொள்ளை, கீழ் பூவாணி குப்பம், பெரிய காட்டுசாகை, உள்பட 100-க்கு மேற்பட்ட சாமிகள் டிராக்டடர் மூலம் பெரியகுப்பம் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் ஏராளமான பொதுமக்கள் பெரியகுப்பம் கடலில் புனித நீராடினார்கள். அதேபோல கிள்ளையில், மாசிமக திருவிழா சிறப்பாக நடந்நது. கிள்ளை, தைக்கால், சிங்காரகுப்பம், மாணம் பாடி, பொன்னந்திட்டு, கீழச் சாவடி உள்பட இருபதுக்கும் மேற்பட்ட சாமிகள் டிராக்டடரில் ஊர்வலமாக வந்து முழக்குதுறை கடலில் தீர்தவாரி நடந்தது. மாசிமக திருவிழாவில் – ஏராளமான பக்தர்கள் முழக்குதுறை கடலில் புனித நீராடினார்கள்.