ஆகஸ்ட் 10 – சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை
விகாரி வருடம் – ஆடி 25
10-ஆக-2019 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : திதித்துவயம்
திதி நேரம் : தசமி ம 2.17
நட்சத்திரம் : கேட்டை இ 3.12
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Tag: 10
-
August 10 Indraya Naal Eppadi?
-
July 10 Indraya Naal Eppadi
ஜூலை 10 – ஸ்ரீவீரராகவப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்
விகாரி வருடம் – ஆனி 25
10-ஜூலை-2019 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : நவமி
திதி நேரம் : அஷ்டமி கா 7.42
நட்சத்திரம் : சித்திரை இ 8.28
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி,ரேவதி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
June 10 Indraya Nalla Neram
ஜூன் 10 – இன்றைய நல்ல நேரம்
விகாரி வருடம் – வைகாசி 27
10-ஜூன்-2019 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி இ 12.09
நட்சத்திரம் : பூரம் மா 4.15
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
May 10 – subamugurthanaal
மே 10 – சுபமுகூர்த்த நாள்
விகாரி வருடம் – சித்திரை 27
வீரபாண்டி மாரியம்மன் தேர்
10-மே-2019 வெள்ளி
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : சஷ்டி
திதி நேரம் : சஷ்டி இ 9.32
நட்சத்திரம் : புனர்பூசம் ம 2.19
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : பூராடம்,உத்திராடம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
sri-rangam-kovilil-unjal-thirunal
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஸ்ரீரெங்கநாச்சியார் ஊஞ்சல் திருநாள் 10 ம் தேதி தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.
ஊஞ்சல் திருநாளையொட்டி ஸ்ரீரெங்க நாச்சியார், 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேருகிறார். இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் ஆரம்பமாகி 8 மணிக்கு நிறைவு பெறும். 8.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 16-ந்தேதி மட்டும் வழக்கம் போல் மாலை 5.30 மணிக்கு புறப்பாடாகி இரவு 9.30 மணிக்கு படிப்பு கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.
ஊஞ்சல் திருநாள் நடைபெறும் நாட்களில் தாயார் சன்னதி வளாகத்தினுள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் தாயார் எழுந்தருளி தீபாராதனை பூஜை நடக்கிறது. தினமும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது.
-
sagala-dhosham-neenga
துளசி கல்யாணம் செய்தால் திருமணம் நடைபெறும்.
ஓர் ஏழைப் பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் நடைபெறும்.
சென்னை – திருவேற்காட்டில் கருமாரியம்மனை தரிசிக்கும் பெண்களுக்கு திருமண பாக்கியம் கூடி வருகிறது.
வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை கடலை எண்ணை நீங்கலாக பிற பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி மஞ்சள் பொடி அபிஷேகமும், பால் அபிஷேகமும் செய்தால் திருமணம் நடைபெறும்.
நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் அடிப்பிரதட்சணம் செய்யுங்கள். ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு தானம் செய்யுங்கள்.
கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களும் நீங்கி திருமணம் கூடி வருகிறது.
முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வந்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் நிச்சயமாகும்.
வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றினால் திருமணம் கை கூடும்.
புன்னை மரத்தை சுற்றி வணங்கி வந்தால் திருமணம் நடைபெறும்.
ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட்டால் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்.
-
adhisaya-amman
‘ஏழைகளின் ஊட்டி’ என்று பிரபலமாக அழைக்கப்படும் நகரம்தான் ஹாசன் நகரம் இந்நகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. அங்கே அமைந்திருக்கும் ஹாசனாம்பா கோயில் வருடத்திற்கு 10நாட்கள் மட்டு மே திறக்கப்படுகிறது. மேலும் இக்கோயில் சிறப்புகளையும் தகவல்க ளையும் கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது. ஆம் ஹாசனாம்பா கோயில் இருப்பதால்தான் இந்நகரமும் ஹாசன் நகரம் என் றே பெயர் பெற்றிருக்கிறது.
இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்காக திறந்து விடப்படுகிறது. அக்டோபர் 25-ஆம் தேதியி லிருந்து, நவம்பர் 4-ஆம் தேதிவரை பக்தர்கள் ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம். எனினும்கோயில் 24ஆம்தேதியே திறக்கப்பட்டா லும் 24 மற்றும் 5-ஆம் தேதிகளில் சடங்குகள் நடை பெறுவதால் அந்த நாட்களில் பொதுமக்களுக்கு கோயிலில் நுழைய அனுமதி இல்லை.
மாமியார்-மருமகள் கல்! :
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹாசனாம்பா கோயிலுக்கு நாள் தவறாம ல்வந்து வழிபட்டு கொண்டிருந்திருக்கிறாள் ஒருபெண். ஒருநாள்அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் ”வீட்டில் வேலை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்” என்று சொல்லி அப்பெண்ணை அடித்திருக்கிறாள். அப்போது அப்பெண் வலியால் சத்தமிடவே அம்மன் அவள்முன்பு பிரசன்னமாகி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்ல ப்படுகிறது.அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோயி லில் காணப்படுகிறது. இந்த கல் ஆண்டுதோறும் அரிசி அளவு அம்மன் விக்ரகத்தை நோக்கி நகர் ந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இது நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகி றது. ஆண்டின் 10நாட்கள் மட்டுமே திறந்திருக்கு ம் அதிசய கோயில்!
திருடர்கள் கோயில் :
ஹாசனாம்பா கோயிலில் ஒருமுறை அம்மன் ஆபரணங்களை திருடிச் செல்ல நான்கு திருடர்கள் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாகபோகுமாறு சபித்ததாக சொல்லப்படு கிறது. அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோயிலாக ‘ திருடர்கள் கோயில்’ என்ற பெயரில் ஹாசனாம்பா கோயில் வளாகத்தினுள்ளேயே அமைந்திருக்கிறது.
அணையா தீபம் :
ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாழக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்து கொண் டிருக்குமாம்.
கோயிலுக்குள் குழந்தை மாட்டிக்கொண்டால்…:
கோயில் மூடப்படும் நாளில் தவறுதலாக குழந்தை ஏதும்உள்ளே மாட்டிக்கொண்டால் மீண்டும் கோயில் திறக்கப்படும் நாள் வரை அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தில்லாமல் நலமுடன் இருக்கும் என்று நம்பப் படுகிறது.
வாடா மலர்கள் :
ஹாசனாம்பா கோயில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்கு மென்றும் பக்தர்கள் நம்புகி றார்கள். அதுமட்டு மல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப் பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோயில் திறக்கப்படும் நாளில் கோயிலுக்கு வருகிறா ர்கள்.
வரலாறும், புராணமும்! ஹாசனாம்பா கோயில் 12-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்ட ப்பட்டது. இக்கோயில் பாம்பு புத்து வடிவத்தில் கட்டப்பட்டிருப்பதோடு, கர்நாடககட்டிடக் கலை யின் சிறந்த உதாரணமாகவும் திகழ்கிற து. இது கட்டப்பட்ட பிறகே ஹாசன் நகரம் அப் பெயரை பெற்றதாக சொல்ல ப்படுகிறது.
அதாவது அதற்கு முன்பு சிம்ஹாசனபுரி என்று அழைக்கப்பட்டுவந்த ஹாசன்நகரம் ஹாசனாம்பாவின் (சப்த கன்னியர் கள்) வருகைக்குபிறகு ஹாசன் என்று அழைக்கப்படலாயிற்று. ஆண்டின் 10நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்! புராணக் கூற்றின்படி சப்த(ஏழு) கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திரா ணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் காசியிலி ருந்து ஹாசன் நகரத்துக்கு வந்துள்ளனர். அதன்பின்னர் 3கன்னியர் புத்து வடிவிலும், கெஞ்சம்மா என்ற பெயரில் கோட்டையாக ஒருவரும், தேவகரே என்ற குளத்தினடியில் 3 கிணறுகளாக 3 கன்னியர்க ளும் கோயில் மற்றும் அதைச் சுற்றிலும் தங்கி ஹாசன் நகர மக்களுக்கு அருள் பாலித்து வருவதாக நம்பப்படுகிறது.
ஹாசனாம்பா கோயில் திறப்பு!
ஹாசனாம்பாகோயில் ஒவ்வொருஆண்டும் தளவார் குடும்பத்தினர்கோயில் நுழைவாயி லில் கட்டப்பட்டிருக்கும் வாழை மரத்தை வெட்டிய பிறகு திறந்து விடப்படுகிறது. ஆண் டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசயகோயில்! அதோடு ஹாசன் மாவட்ட கருவூலத்திலிருந்து எடுத்து வரப்படும் ஆபர ணங்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். அதன் பிறகு அம்மன் நகைகள் 10 நாட்களின் முடிவில் மீண்டும் கருவூலத் துக்கே எடுத்துச் செல்ல ப்படுகின்றன.
-
thirupathy-mudi-kanikkai
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.10 கோடியே 48 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பலர் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.பக்தர்களின் காணிக்கை தலைமுடி, வாகனங்கள் மூலம் திருப்பதிக்குக் கொண்டு சென்று, அங்கு சுத்தம் செய்து, நீளம் மற்றும் நிறத்தின் அடிப்படையில் தரம் பிரித்து, ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று இ.டெண்டர் மூலமாக ஏலம் விடப்படுகிறது.
அதன்படி பக்தர்களின் காணிக்கை தலைமுடி ஏலம் விடப்பட்டது. மொத்தம் 76 ஆயிரத்து 700 கிலோ எடையிலான தலைமுடி ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 8 ஆயிரத்து 200 கிலோ எடையிலான தலைமுடி விற்பனையானது. அதன் மூலம் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.10 கோடியே 48 லட்சம் வருமானம் கிடைத்ததாக திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.
-
10
விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 10-ந் தேதி திறக்கப்படுகிறது. 18-ந் தேதி வரை 9 நாட்கள் பூஜைகள் நடைபெறுகிறது. 10 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.
11-ந் தேதி முதல் வழக்கமான பூஜை மற்றும் வழிபாடுகளுடன் நெய் அபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும்.
15-ந் தேதி விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து கனி காணுதல் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் வழங்குகிறார்கள்.
சித்திரை மாத பூஜைகளுக்கு பின் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 18-ந் தேதி இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு அடைக்கப்படும்.
விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 9 நாட்கள் பூஜைகள் நடைபெறும். எனவே ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் பம்பைக்கு இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. -
tips-for-removing-wedding-barrier
- துளசி கல்யாணம் செய்தால் விரைவில் திருமணமாகும்.
- ஓர் ஏழைப் பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சக்திக்கு ஏற்ப புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.
- சென்னை – திருவேற்காட்டில் தேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது.
பல்வேறு புராணச் சிறப்புகள் மிக்கது. இந்த ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மனை தரிசிக்கும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கூடி வருகிறது. - வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை கடலை எண்ணை நீங்கலாக பிற பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி மஞ்சள் பொடி அபிஷேகமும், பால் அபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தால் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமையும்.
- காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமைமற்றும்பஞ்சமி நாட்களில் அடிப்பிரதட்சணம் செய்யுங்கள். ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு தானம் செய்யுங்கள். சகல திருமண தோஷமும் தீரும்.
- தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களால் திருமணம் தடைப்படுகிறது. கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் இந்த 6 வகை தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் ஆகிவிடும்.
- திருமணம் செவ்வாய் தோஷத்தால் தடைபடு மாயின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
- வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சித்து வழிபட திருமணம் கை கூடும்.
- புன்னை மரத்தை சுற்றி வணங்கி வந்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.
- ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட வேண்டும். துர்க்கையை மனம் உருக வேண்டினால் நிச்சயம் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்.
