Tag: 008

  • Namakkal Anjaneyar palabishegam

    ஆடி மாதம் முதல் ஞாயிற்று கிழமையை யொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம். ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம்.

    மாதந்தோறும் தமிழ் மாத முதல் ஞாயிற்று கிழமை நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம்.

    இன்று ஆடி மாதம்  முதல் ஞாயிற்று கிழமையை யொட்டி ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.  வழக்கத்திற்கு மாறாக ஆஞ்சநேயர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

  • Namakkal anjaneyar vadamalai

    நாமக்கல்லில் பிரசித்தி பெற்றது ஸ்ரீ ஆஞ்சநேயர் சாமி . ஒரே கல்லால் 18 அடி உயரத்தில் ஆன ஸ்ரீநாமக்கல் ஆஞ்சநேயர் சாமி கைகூப்பி வணங்கியபடி காட்சி அளிக்கிறார். ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் வரும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தி விழாவாக வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

    அதன் படி தமிழகம் முழுவதும் இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையையொட்டி நாமக்கல் ஆஞ்நேயருக்கு 1,00,008 வடைமாலை சாட்டப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இனைதொடர்ந்து அலங்ககரிப்பட்டிருந்த ஆஞ்சநேயர் இன்று அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு , சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். அப்போது கலெக்டர் ஸ்ரேயாசிங், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பொன்னுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    தொடர்ந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்

  • Namakkal Anjaneyrr vadai malai

    மார்கழி திங்கள் அமாவாசையன்று அனுமன் அவதரித்தார். இந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஜெயந்தி விழாவான இன்று நாமக்கல் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு  அதிகாலை 5 மணிக்கு 1,00,008 வடை மாலை சாத்தப்பட்டது. 

    காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர்க்கு பின்னர் மஞ்சள்,சந்தனம்,பன்னீர்,தயிர்,பால்,தேன்,திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டவுள்ளது..இதனையடுத்து பிற்பகல் 1 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடக மாநில பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேய சுவாமியை தரிசித்து வருகின்றனர்.  அனுமன் ஜெயந்தியையொட்டி   அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
     

  • Anjaneyar jayanthi vadai

    மார்கழி திங்கள் அமாவாசை யன்று அனுமன் அவதரித்தார். அந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி வரும் 25 ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி. நாமக்கல் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அன்றைய தினம் 1,00,008 வடை மாலை சாத்தப்பட உள்ளது. அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 

    ஆஞ்சநேயருக்கு காலை 11 மணிக்கு பால் மற்றும் பல் வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடை பெற உள்ளது. மதியம் 1 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

     ஆஞ்சநேயர் க்கு  மாலையாக சாத்தப்பட்ட 1,00,008 வடைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட உள்ளது.   ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த 28 பேர் வடையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    2250 கிலோ உளுந்த மாவு, 600 கிலோ நல்லெண்ணெய்,  36 கிலோ மிளகு, 36 கிலோ சீரகம், 135 கிலோ உப்பு ஆகியவற்றை கொண்டு வடை தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் செவ்வாய் கிழமை  வடை தயாரிக்கும் பணிகள் நிறைவடையும்.

  • Namakkal Anjaneyar alangaram

    1,00,008 வெற்றிலை  அலங்காரத்தில் நாமக்கல் விஷ்வரூப ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    நாமக்கல் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தி விழா மட்டுமின்றி தமிழ்மாதம் முதல் ஞாயிற்று கிழமை யில் பால் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். கடந்த சில ஆண்டுகளாக அனுமன் ஜெயந்தி அன்று மட்டும் 1,00,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று முதன் முதலாக 1,00,008 வெற்றிலை  அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர் நீண்ட வரிசியில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  

    ராமணின் வெற்றி செய்தியை இலங்கையில் அசோக வனத்தில் ராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாதேவி யிடம் முதன் முதலில் சொன்னவர் ஆஞ்சநேயர்.  அந்த வெற்றி செய்தியை கூறிய ஆஞ்சநேயர் க்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என என்னினால் சீதா தேவி. 

    பரிசு கொடுக்கதன்னிடம் எதுவும் இல்லாததால் அருகில் இருந்த வெற்றிலை கொடியில் இருந்த இலைகளை பறித்து மாலையாக தொடுத்து இதை போட்டுக் கொள்  என அனுமனிடம் கொடுத்தார் சீதா தேவி. இது புராண கால வரலாறு ஆகும். இதன் காரணமாகத் தான் ஆஞ்சநேயர் க்கு வெற்றிலை மாலை அணிவித்து  பெண்கள் வழிபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 1-00-008

    ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சார்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரேஉள்ளது இந்த கோயில். இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்க ளுக்கு அருள்பாலித்து வருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர். ஆனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சிலைக்கு 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை சார்த்தப்படுகிறது. மேலும் காலை முதல் பல்வேறு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. அபிஷேகங்கள் முடிந்தது ஆஞ்சநேயருக்கு சார்த்தப்பட்ட வடை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.