Blog

  • Thanneeruku Adiyil irukkum Atthi Varadhar

    கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின்  கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறார் அத்தி வரத பெருமாள்.

    இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவ தில்லை அதனால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார்.  அத்தி வரத பெருமாளின் தாருமயமான திருமேனி  மரத்தினால்  செய்யப்பட்டது. மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து , பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார். எனவே அசரீரி மூலம் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம்.

    அத்தி வரதரை வெள்ளித் தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர். பழைய சீவர பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர்.

    ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவார்கள். வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 40 வருடங்களுக்கு ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார்.

    அத்தி வரதர் வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்…
    நின்ற கோலத்திலும், கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் சயனித்து விடுவார். பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, உற்சவ விழா வழிபாட்டோடு தரிசிக்கலாம். மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப் பட்டுவிடுவார்.

    இதற்கு முன்னர் 1939 ஆண்டு சேவை சாதித்தார், 1979 ஆண்டு சேவை சாதித்தார். அடுத்த வரும் 17.07.2019 அன்று அத்தி வரதர் சேவை சாதிக்க உள்ளார்.

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – செலவு
    ரிஷபம் – சுகம்  
    மிதுனம் – கவலை  
    கடனம் – வெற்றி
    சிம்மம் – நன்மை 
    கன்னி – பயம் 
    துலாம் –  பாசம் 
    விருச்சிகம் – சிக்கல்
    தனுசு – ஆதாயம் 
    மகரம் –   தோல்வி 
    கும்பம் – இன்பம் 
    மீனம் – லாபம் 
    சந்திராஷ்டமம்    – மகம் 

  • April 29 subamugurthanaal

    ஏப்ரல் 29   subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    விகாரி வருடம் – சித்திரை 16
    29-ஏப்-2019 திங்கள்  ஷாபான்23
    சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம்    :    6.00 – 7.30
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    இ    11.04
    நட்சத்திரம்    :    அவிட்டம்    கா    6.22
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மகம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Visha Jandhukalai Udaithu Vazhipadu

    தீ மிதித்தல், தலையில் தேங்காய் உடைத்தல், அலகு குத்தி இழுத்தல் போன்ற வழிபாடுகளின் வரிசையில், விஷ ஜந்துக்களின் உருவ பொம்மைகளை உடைத்து வழிபாடு நடத்தினால், வீடு மற்றும் தோட்டப்பகுதிகளில் விஷ ஜந்துக்கள் அண்டாது என்பது பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.

    ஈரோடு மாவட்டம் அலங்காரிபாளையத்தில் உள்ளது ஐயன் கோயிலில். 200 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் வரும் 5 ஞாயிற்றுக்கிழமைகளில் விஷஜந்துக்களின் பொம்மைகளை உடைத்து விநோத வழிபாடு நடைபெறுவது வழக்கம். 3 மற்றும் 4 வது வாரங்களில் பக்தர்கள் அதிக அளவில் இக்கோயிலுக்கு வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை 7 மணி முதலே பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினர். கோயில் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட கடைகளில் பாம்பு, தேள், பூரான், பல்லி, சிலந்தி, கிராந்தி உள்ளிட்ட பல்வேறு வகை விஷ ஜந்து உருவங்கள் மண்ணால் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. 

    பக்தர்கள் விஷ ஜந்து உருவங்களை வாங்கி ஐயன், கருப்பராயன், தன்னாசியப்பன் மற்றும் பாம்பாட்டி தெய்வங்களை வழிபட்டு கோயில் தெற்கு மதில் சுவர் ஓரத்தில் கற்பூரமேற்றி உருவங்களை வழிபட்ட பின்னர் அவற்றை உடைத்து நொறுக்கினர். இவ்வாறு வழிபட்டால்  வீடு மற்றும் தோட்டப்பகுதிகளில் விஷ ஜந்துக்கள் கண்களில் தென்படாது என்பது ஐதீகம். 
     

  • Thirumalai Varaga swamy

    திருமலையில் உள்ள வராக சுவாமி நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வடக்கு மாடவீதியில் உள்ள ஆதிவராக சுவாமி கோவிலில் நேற்று ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 23, 24, 25 ஆகிய மூன்று தினங்கள் தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    இன்று யாகம் பூர்ணாவுதியுடன்  நிறைவு பெற்றது. இதையடுத்து கும்பத்தில் உள்ள ஜீவ சக்தியை மீண்டும் மூலவருக்கு கொண்டு வரப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் வழிபட்டனர். 

    இதைதொடர்ந்து இரவு வராக சுவாமி நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி வலம் வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் செயல்  இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு, முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் உள்ளிட்ட அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – மகிழ்ச்சி 
    ரிஷபம் – தாமதம் 
    மிதுனம் – சுகம்  
    கடனம் – வரவு
    சிம்மம் – சிக்கல்
    கன்னி – முயற்சி
    துலாம் –  எதிர்ப்பு
    விருச்சிகம் – வெற்றி
    தனுசு – ஆதரவு
    மகரம் –   பயம்
    கும்பம் – நட்பு
    மீனம் – நடங்கல்
    சந்திராஷ்டமம்    – ஆயில்யம் 
     

  • April 28 Indraya Naal Eppadi

    ஏப்ரல் 28 – இன்றைய நாள் எப்படி 
    விகாரி வருடம் – சித்திரை 15
    28-ஏப்-2019 ஞாயிறு  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    நவமி    இ    8.03
    நட்சத்திரம்    :    அவிட்டம்    முழுவதும்    0.00
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    ஆயில்யம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Thirupathy Aadhi Varaga Swamy Koil Kumbabishegam

    திருப்பதி திருமலையில் உள்ள ஆதிவராக சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வடக்கு மாடவீதியில் உள்ள ஆதிவராக சுவாமி கோவிலில் இன்று ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 23ஆம் தேதி ருத்விக் வதனம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் பூஜை  நடைபெற்றது. 23 ஆம் தேதி யாகசாலையில் யாகங்கள் தொடங்கப்பட்டு  மூலவர் ஜீவ சக்தியை கும்பத்தில் கொண்டு வரப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 

    23, 24, 25 ஆகிய மூன்று தினங்கள் தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. 25ஆம் தேதி மூலிகை கலவையை கொண்டு தயார் செய்யப்பட்ட அஷ்டபந்தனம் நடைபெற்றது. 26 ஆம் தேதியான நேற்று மகா சாந்தி யாகம் மற்றும் சிறப்பு மகா சாந்தி அபிஷேகம் நடைபெற்றது. இன்று காலை 3 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு யாகம் பூர்ணாவுதியுடன்  நிறைவு பெற்றது. 

    இதையடுத்து கும்பத்தில் உள்ள ஜீவ சக்தியை மீண்டும் மூலவருக்கு கொண்டு வரப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் வழிபட்டனர். இதில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு, முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத், தலைமை அர்ச்சகர் வேணுகோபால், ஆகம ஆலோசகர் சுந்தரவரத பட்டாச்சாரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    இன்று இரவு வராக சுவாமி நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி வலம் வந்து  பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு வராக சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

    வராக சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் காலை 11 மணி முதல் 3.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது ரத்து செய்யப்பட்டது. மேலும் இன்று நடைபெறவிருந்த கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ,வசந்த உற்சவம் ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

  • Kari Krishna perumal Car fest

    பொன்னேரியில் உள்ள ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – கவலை
    ரிஷபம் – வெற்றி
    மிதுனம் – நன்மை 
    கடனம் – பயம் 
    சிம்மம் – சுகம் 
    கன்னி – சிக்கல்
    துலாம் –  ஆதரவு
    விருச்சிகம் – தோல்வி
    தனுசு – பணிவு
    மகரம் –   லாபம் 
    கும்பம் – செலவு
    மீனம் – பக்தி
    சந்திராஷ்டமம்    – திருவாதிரை, புனர்பூசம்