Blog

  • தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன் கோயில்: நெய் அபிஷேகத்தை நீங்களே சுவாமிக்கு செய்து அருள் பெறலாம்!

    தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன் கோயில்: நெய் அபிஷேகத்தை நீங்களே சுவாமிக்கு செய்து அருள் பெறலாம்!
     

    ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்கிறார்கள். அதைப் போலவே, ஐயப்பனுக்கு அறுபடை வீடுகளான சபரிமலை, எருமேலி, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, பந்தளம் ஆகிய இடங்களும் உண்டு.

    இவற்றைத் தவிர, நாடு முழுக்க ஐயப்ப சுவாமிக்கு ஏராளமான கோயில்கள் உள்ளன. அவற்றில் பல சபரிமலை போன்ற கடுமையான விரத விதிகளுடன் அமைந்துள்ளன. சிலவோ, பக்தர்களின் வசதிக்கேற்ப எளிய விதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட அற்புதமான ஒரு தலம்தான் செங்கோட்டை அருகேயுள்ள சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன் கோயில்.

    தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டைப் பகுதியில், ஆயக்குடி – சுரண்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சாம்பவர் வடகரை கிராமம். இங்குதான் இந்த அற்புதமான ஐயப்பன் ஆலயம் உள்ளது.

    சபரிமலை போலவே இங்கும் பதினெட்டுப் படிகள் உள்ளன. அவற்றைக் கடந்து மேலே சென்றால் சந்நிதானத்தில் கருணை மூர்த்தியாக ஐயப்ப சுவாமி எழுந்தருளியிருக்கிறார். அவரது திருமுகம் பாலகனின் அப்பாவித்தனமும் அன்பும் கலந்து பக்தர்களை ஈர்க்கிறது. பக்தர்கள் இவரைத் தங்கள் குடும்ப உறுப்பினராகவோ, வீட்டுக் குழந்தையாகவோ உணர்ந்து வழிபடுகிறார்கள்.

    பொதுவாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் ஒரு மண்டல காலம் கடும் விரதமிருந்து, இருமுடி சுமந்து பயணிப்பார்கள். அப்போதுதான் பதினெட்டாம் படி ஏறி சுவாமியைத் தரிசிக்க முடியும். அந்தத் தரிசனத்தில் கிடைக்கும் ஆனந்த உணர்வு அலாதியானது.

    அதே ஆனந்தத்தை அளிக்கும் இடம்தான் இந்த சுதந்திர ஐயப்பன் கோயில். சபரிமலைக்குச் செல்ல இயலாத பக்தர்கள் இங்கு வந்து அருள் பெறுகிறார்கள். இங்கு சுவாமியைத் தொட்டே வணங்கலாம் என்பது பெரிய விசேஷம்.

    இருமுடி சபரிமலைக்கே உரியது என்பதை உணர்த்துவதுபோல, இங்கு இருமுடி இல்லாமல் ஆண்-பெண் பேதமின்றி அனைவரும் பதினெட்டுப் படிகளை ஏறி சுவாமியை வழிபடலாம். இது வேறு எந்த ஐயப்ப கோயிலிலும் இல்லாத அற்புதமான சிறப்பு.

    ஆகம விதிகளின்படி இப்படிப்பட்ட நடைமுறை இல்லை. ஆனால் இந்தக் கோயில் அமைக்கும் போது பிரச்னம் பார்த்தபோது, சுவாமி ஐயப்பனே இவ்வாறு அமைக்க வேண்டும் என்று கூறியதாக ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    குளத்துப்புழையில் பாலகனாகவும், அச்சன்கோவிலில் அரசனாகவும், ஆரியங்காவில் தெய்வமாகவும், சபரிமலையில் யோகியாகவும் விளங்கும் ஐயப்பன், இங்கு குடும்ப நலனைக் காக்கும் பாதுகாவலனாக சங்கல்பித்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

    சபரிமலையில் வனத்தில் பிரம்மச்சாரியாக யோகத்தில் இருக்கும் சுவாமி, இங்கு நாட்டில் தன் பக்தர்களான குழந்தைகளுடன் வாழ்பவர் போல அருள்பாலிக்கிறார். அதனால் குடும்ப நல்வாழ்வை அருளும் காப்போனாக இங்கு திகழ்கிறார்.

    மிக முக்கியமான சிறப்பு: பக்தர்கள் தங்கள் தாய்-தந்தை, மனைவி-குழந்தைகளுடன் குடும்பமாக பதினெட்டாம் படி ஏறி வர வேண்டும். கருவறைக்குள் சென்று தாங்களே சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம், மாலை சாற்றலாம், நைவேத்தியம் வைக்கலாம், கற்பூர ஆரத்தி காட்டலாம். இது இக்கோயிலின் தனித்துவமான அம்சம்.

    இருப்பினும் சில அடிப்படை விதிகளைப் பின்பற்ற வேண்டும்: மண்டல விரதத்தை முழுமையாகக் கடைப்பிடித்திருக்க வேண்டும்; மாதா, பிதா, குரு, தெய்வங்களை மதித்து வணங்க வேண்டும்; கணவன்-மனைவி உறவில் தூய்மையும் உண்மையான அன்பும் இருக்க வேண்டும். இவைதான் பதினெட்டாம் படி ஏறுவதற்கான தகுதிகள்.

    குறிப்பாக, தவறு செய்து வருந்தி, மீண்டும் செய்யமாட்டேன் என்று உறுதி எடுத்த பக்தர்கள் தங்கள் கையாலேயே சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யலாம். வயதான அம்மாக்கள் இவரைத் தங்கள் மகனாக நினைத்து எண்ணெய் தேய்த்து அபிஷேகம் செய்து அலங்காரம் செய்கிறார்கள். இளைஞர்கள் தந்தையாகவும், குழந்தைகள் தோழனாகவும் ஐயப்பனை உணர்கிறார்கள்.

    ஐயப்ப விரதம் இருக்கும் போது குடும்பமே ஒன்றாக விரதம் இருக்கும். அப்படி குடும்பமாக இங்கு வந்து சுவாமியைத் தரிசித்தால் கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. இந்த அற்புத அனுபவத்தை சுதந்திர ஐயப்பன் கோயில் நமக்கு அளிக்கிறது.

    சபரிமலையிலிருந்து திரும்பிய பிறகு சில பக்தர்கள் ஒரு மண்டல விரதம் இருந்து குடும்பத்துடன் இங்கு வந்து வழிபடுகிறார்கள். வாய்ப்பு உள்ள அனைவரும் ஒரு முறையாவது இந்தத் தலத்துக்குச் சென்று ஐயப்பனின் அன்பு தரிசனத்தைப் பெற்று ஆனந்தம் அடையுங்கள்!

  • மார்ச் 3 அன்று திருப்பதி செல்பவரா நீங்கள்? 10 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது முழு விவரம்!

    சந்திர கிரகணம் 2026: மார்ச் 3ஆம் தேதி திருப்பதி கோயில் சுமார் 10 மணி நேரம் மூடல்

    திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தற்போது மார்கழி விழாவுடன் வைகுண்ட ஏகாதசி கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    புத்தாண்டு தொடக்கத்திலிருந்தே தினசரி 80,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஜனவரி 1 முதல் 4ஆம் தேதி வரை தினமும் 65,000 முதல் 88,000 வரை பக்தர்கள் வந்துள்ளனர்.

    வரிசை அறைகள் நிரம்பி வழிகின்றன; கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ஜனவரி 8ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி முடிவடைந்த பிறகு கூட்டம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மார்ச் மாதத்தில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று கூறப்படும் நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பக்தர்கள் முன்கூட்டியே தங்கள் யாத்திரையைத் திட்டமிட உதவும் வகையில் இது வெளியிடப்பட்டுள்ளது.

    2026ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3ஆம் தேதி நிகழ்கிறது. இதனால் அன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூடப்பட்டிருக்கும். கிரகணம் பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.47 மணி வரை நீடிக்கும் – சுமார் மூன்றரை மணி நேரம்.

    கிரகண காலத்தில் கோயில்களை மூடுவது வழக்கம். வைகானச ஆகம விதிப்படி, கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரம் முன்பே நடை சாத்தப்படும். எனவே காலை 9 மணியிலிருந்து மூடல் அமலுக்கு வருகிறது. கிரகணம் முடிந்த பிறகு ஆலய சுத்திகரிப்பு (சுத்தி) மற்றும் தோஷ நிவாரண சடங்குகள் நடைபெற்று, இரவு 8.30 மணிக்கு மேல் மீண்டும் தரிசனம் தொடங்கும்.

    இந்நாளில் அஷ்டதல பாத பத்மாராதனை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மார்ச் மாதம் திருப்பதி செல்லத் திட்டமிடும் பக்தர்கள் இதை மனதில் கொண்டு ஏற்பாடு செய்யுமாறு TTD கேட்டுக்கொண்டுள்ளது.

  • துலாம்: ஜனவரி மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!

    துலாம்

    கிரகநிலை:

     

     தைரிய வீரிய  ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், செவ்வாய் –  பஞ்சம ஸ்தானத்தில் சனி, ராஹூ –  அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன் –  பாக்கிய ஸ்தானத்தில்  குரு (வ)  –  லாப  ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரக மாற்றங்கள்:
    11-01-2026 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    14-01-2026  அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    14-01-2026 அன்று சூர்ய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    15-01-2026  அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    29-01-2026  அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:
    ஆழமான சிந்தனையுடன் சிக்கல்களைத் தீர்க்கும் துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் திடீர் கோபம் உண்டாகும். விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும். ஆனால் பகைகளில் வெற்றி உண்டாகும்.

    எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரலாம்.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மன நிறைவு காண்பீர்கள். 

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்கு பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.

    குடும்பத்தில் வீண் பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது ஆறுதலை தரும்.

    பெண்கள் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும்.

    கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

    அரசியல்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி, எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.

     

    மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பதவிகள் சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

    மாணவர்கள் சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரியமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றிபெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.

     

    பரிகாரம்: சுமங்கலி பூஜை செய்து சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்ய குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.

     

    சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29

     

    அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22

  • ரிஷபம்: ஜனவரி மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!

     

    ரிஷபம்

    கிரகநிலை:
     

    ராசியில்  சந்திரன் –  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  குரு ()  –  சுக  ஸ்தானத்தில் கேது –  அஷ்டம  ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், செவ்வாய் –  தொழில்  ஸ்தானத்தில் சனி, ராஹூ –  என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரக மாற்றங்கள்:

    11-01-2026 அன்று புதன்  பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-01-2026  அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-01-2026  அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

    சமயத்திற்கு தகுந்தார்போல் கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் பண வரத்து திருப்தி தரும். ஆனால் உங்களுக்கு நன்மை செய்கிறேன் என்று கூறிக் கொண்டு உங்களை சுற்றி வருபவர்களால் செலவு உண்டாகும். கவனம் தேவை. திடீர் கோபம் ஏற்பட்டு அதனால் அடுத்தவர்களிடம்  சண்டை உண்டாக நேரலாம். எனவே மிகவும் நிதானமாக இருப்பது நல்லதுவீண் பேச்சை குறைப்பது நன்மை தரும்அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

    தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது  அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்ப்பது நல்லது.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

    குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும். வாழ்க்கை துணை ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

    பெண்கள் வீண்பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை தரும். மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது.

    கலைத்துறையினருக்கு எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான்  தப்பித்துக் கொள்ள வேண்டி வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

    அரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள்மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும்.

    மாணவர்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

     

    பரிகாரம்: பவுர்ணமியில் மகாலட்சுமியை பூஜை செய்து வழிபட பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும்.

     

    சந்திராஷ்டம தினங்கள்: 16, 17, 18

     

    அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

  • மீனம்: ஜனவரி மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!

    மீனம்

    கிரகநிலை:

     

    தைரிய வீரிய  ஸ்தானத்தில் சந்திரன் –  சுக  ஸ்தானத்தில்  குரு ()  –  ரண ருண ரோக  ஸ்தானத்தில் கேது –  தொழில்  ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், செவ்வாய் –  அயன சயன போக  ஸ்தானத்தில் சனி, ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரக மாற்றங்கள்:

    11-01-2026 அன்று புதன்  பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-01-2026  அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-01-2026  அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

    ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்க்கும் குணமுடைய மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் செலவுகள் கூடும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து  அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும்.

    தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

    குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

    பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும்.

    கலைத்துறையினர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்யுங்கள். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. உபதொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும்.

    அரசியல்துறையினருக்கு மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். உங்கள் வசம் உள்ள ஆவணங்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.

    மாணவர்கள் கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

     

    பரிகாரம்: குல தெய்வத்தை பூஜை செய்து வணங்க எல்லா காரியமும் வெற்றியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

     

    சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, 13

     

    அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6

  • கும்பம்: ஜனவரி மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!

    கும்பம்

    கிரகநிலை:

     

    ராசியில்  சனி, ராஹூ  – சுக  ஸ்தானத்தில் சந்திரன் –  பஞ்சம ஸ்தானத்தில்  குரு () –  களத்திர  ஸ்தானத்தில் கேது –  லாப  ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரக மாற்றங்கள்:

    11-01-2026 அன்று புதன்  பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026 அன்று சூர்ய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-01-2026  அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-01-2026  அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

     

    பலன்:

    படபடப்புடன் காரியங்களை செய்யப்போகும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் அடுத்தவர்களுக்கு உதவப்போய் அதனால் அவதிப்பட நேரலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களை கையாளும்போதும் கவனம் தேவை. செலவு அதிகரிக்கும். மனதில் இருந்த உற்சாகம் குறையும்.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.

    குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன்மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை.

    பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம்.

    கலைத்துறையினர் சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். எங்கு இருந்தாலும் ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

    அரசியல்துறையினருக்கு உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும்செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மனதில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.

    மாணவர்கள் கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.
     

    பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சனேயரை வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
     

    சந்திராஷ்டம தினங்கள்: 9, 10
     

    அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30, 31

  • மகரம்: ஜனவரி மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!

     

    மகரம்

    கிரகநிலை:
     

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சனி, ராஹூ –  பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் –  ரண ருண ரோக  ஸ்தானத்தில்  குரு () –  அஷ்டம  ஸ்தானத்தில் கேது –  அயன சயன போக  ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
     

    கிரக மாற்றங்கள்:

    11-01-2026 அன்று புதன்  பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று சூர்ய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    15-01-2026  அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    29-01-2026  அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
     

    பலன்:

    தீர்க்கமான முடிவுகளை எடுத்து மிரள வைக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.

    தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலை விரிவு படுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். அதனால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப்பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

    குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். தாய், தந்தையரின் உடல் நிலையில் கவனம் தேவை.

    பெண்கள் எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும்.

    கலைத்துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.

    அரசியல்துறையினருக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும்.

    மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.
     

    பரிகாரம்: சனிக்கிழமைகளில் விநாயக பெருமாளை தீபம் ஏற்றி வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். எதிலும் நன்மை உண்டாகும்.
     

    சந்திராஷ்டம தினங்கள்: 7, 8
     

    அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29

  • தனுசு: ஜனவரி மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!

    தனுசு

    கிரகநிலை:

     

    ராசியில்  சூர்யன், புதன், சுக்ரன், செவ்வாய் –  தைரிய வீரிய  ஸ்தானத்தில் சனி, ராஹூ –  ரண ருண ரோக  ஸ்தானத்தில் சந்திரன் –  களத்திர  ஸ்தானத்தில்  குரு ()  –  பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரக மாற்றங்கள்:

    11-01-2026 அன்று புதன்  பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று சூர்ய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-01-2026  அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-01-2026  அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

    என் வழி தனி வழி என்று செயல்படும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக செயல்படுவது நல்லது.

    தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம்.

    உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

    குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். வழக்கு விவகாரங்களில்  ஈடுபடாமல்  தவிர்ப்பது நல்லது.

    பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். பணவரத்து தாமதப்படலாம்.

    கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. எனவே அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

    அரசியல்துறையினருக்கு நீங்கள் அவசரப்படாமல்  நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்

    மாணவர்கள் பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.

     

    பரிகாரம்: திருவாசகம் படித்து வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும்.

     

    சந்திராஷ்டம தினங்கள்: 5, 6

     

    அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

  • விருச்சிகம்: ஜனவரி மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!

    விருச்சிகம்

    கிரகநிலை:

     

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், செவ்வாய் –  சுக  ஸ்தானத்தில் சனி, ராஹூ –  களத்திர  ஸ்தானத்தில் சந்திரன் –  அஷ்டம  ஸ்தானத்தில்  குரு ()  –  தொழில்  ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரக மாற்றங்கள்:

    11-01-2026 அன்று புதன்  பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று சூர்ய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-01-2026  அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-01-2026  அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

    சீரான வாழ்க்கை முறைகளை வாழவிரும்பும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் பலவகையான யோகம் உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும்.

    தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.

    குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவதும் நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

    பெண்கள் துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மன நிலை இருக்கும்.

    கலைத்துறையினருக்கு பண வரத்து அதிகப்படும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அனைவருடனுடம் அனுசரித்து செல்வது நல்லது.

    அரசியல்துறையினருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம்.

    மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.

     

    பரிகாரம்: செவ்வாய் கிழமை விரதம் இருந்து நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும்.

     

    சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31

     

    அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24, 25

  • கன்னி: ஜனவரி மாதம் இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!

    கன்னி

    கிரகநிலை:

    சுக  ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், செவ்வாய் –  ரண ருண ரோக  ஸ்தானத்தில் சனி, ராஹூ –  பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் –  தொழில்  ஸ்தானத்தில்  குரு ()  –  அயன சயன போக  ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரக மாற்றங்கள்:

    11-01-2026 அன்று புதன்  பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026 அன்று சூர்ய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-01-2026  அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-01-2026  அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

     

    அதிக அறிவுத்திறனுடன் செயல்படும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் காரிய வெற்றி உண்டாகும். பண வரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவியும் கிடைக்கும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவபூர்வமான அறிவுதிறன் அதிகரிக்கும்.

    தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

    குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.

    பெண்கள் சாதூர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

    கலைத்துறையினருக்கு எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.

    அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

    மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

     

    பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து வர எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும்.

     

    சந்திராஷ்டம தினங்கள்: 26, 27

    அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20