Blog

  • அக்டோபர் 01 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பகை
    ரிஷபம்         – வரவு
    மிதுனம்     – பயம்
    கடகம்         –  நன்மை
    சிம்மம்         –   ஆதாயம்
    கன்னி         –    சிந்தனை
    துலாம்         –     தாமதம்
    விருச்சிகம்     –  சுகம்
    தனுசு         –    லாபம்
    மகரம்         –   அச்சம்
    கும்பம்         –     ஆர்வம்
    மீனம்         –    வாழ்வு
    சந்திராஷ்டமம்    –        உத்திராடம், திருவோணம்

  • செப்டம்பர் 30 – பிரதோஷ நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பரிசு
    ரிஷபம்         – தனம்
    மிதுனம்     – தேர்ச்சி
    கடகம்         –  செலவு
    சிம்மம்         –   ஓய்வு  
    கன்னி         –    சினம்
    துலாம்         –     நன்மை
    விருச்சிகம்     –  மறதி
    தனுசு         –    ஆதரவு
    மகரம்         –   பக்தி
    கும்பம்         –     சலனம்
    மீனம்         –    உயர்வு  
    சந்திராஷ்டமம்    –        உத்திராடம்

     

  • செப்டம்பர் 30 – பிரதோஷம்

    செப்டம்பர் 30 – பிரதோஷம்
    குரோதி வருடம் – புரட்டாசி 14
    செப்டம்பர் 30 – 2024
    திங்கள்
    பிரதோஷம்
    நல்ல நேரம் : கா 6.00 – 7.30
    எமகண்டம் : கா 10.30 – 12.00
    குளிகை : ம 1.30 – 3.00
    ராகு : கா 7.30 – 9.00
    திதி : திரையோதசி
    திதி நேரம் :  திரையோதசி இ 8.45
    நட்சத்திரம் :  மகம் கா 9.01
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் :   திருவோணம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • 20 வகை பிரதோஷங்கள் அவற்றின் பலன்கள்….

    சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேஷம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது.

    குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் [புத்தியும்] நன்றாகும்..

    20 வகை பிரதோஷங்கள் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

    1.தினசரி பிரதோஷம் :
    தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

    2. பட்சப் பிரதோஷம் :
    அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.

    3. மாசப் பிரதோஷம் :
    பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.

    4. நட்சத்திரப் பிரதோஷம் :
    பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

    5. பூரண பிரதோஷம் :
    திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

    6. திவ்யப் பிரதோஷம் :
    பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

    7.தீபப் பிரதோஷம் :
    பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

    8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :
    வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

    9. மகா பிரதோஷம் :
    ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

    குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

    10. உத்தம மகா பிரதோஷம் :
    சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

    11. ஏகாட்சர பிரதோஷம் :
    வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

    12. அர்த்தநாரி பிரதோஷம் :
    வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

    13. திரிகரண பிரதோஷம் :
    வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

    14. பிரம்மப் பிரதோஷம் :
    ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

    15. அட்சரப் பிரதோஷம் :
    வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

    16. கந்தப் பிரதோஷம் :
    சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

    17. சட்ஜ பிரபா பிரதோஷம் :
    ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

    18. அஷ்ட திக் பிரதோஷம் :
    ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

    19. நவக்கிரகப் பிரதோஷம் :
    ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

    20. துத்தப் பிரதோஷம் :
    அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

  • செப்டம்பர் 29 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நலம்
    ரிஷபம்         – நன்மை
    மிதுனம்     – நற்செயல்
    கடகம்         –  தடங்கல்
    சிம்மம்         –   ஆர்வம்
    கன்னி         –    சாந்தம்
    துலாம்         –     செலவு
    விருச்சிகம்     –  குழப்பம்
    தனுசு         –    வெற்றி
    மகரம்         –   துன்பம்
    கும்பம்         –     விவேகம்   
    மீனம்         –    இரக்கம்
    சந்திராஷ்டமம்    –        பூராடம்

  • செப்டம்பர் 29 – இன்றைய நல்லநேரம்

    செப்டம்பர் 29 – இன்றைய நல்லநேரம்
    குரோதி வருடம் – புரட்டாசி 13
    செப்டம்பர் 29 – 2024
    ஞாயிறு
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : துவாதசி
    திதி நேரம் :  துவாதசி இ 7.15
    நட்சத்திரம் :  ஆயில்யம் கா 7.09
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் :   உத்திராடம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • செப்டம்பர் 28 – ஏகாதசி

    செப்டம்பர் 28 – ஏகாதசி
    குரோதி வருடம் – புரட்டாசி 12
    செப்டம்பர் 28 – 2024
    சனி
    ஏகாதசி
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 1.30 – 3.00
    குளிகை : கா 6.00 – 7.30
    ராகு : கா 9.00 – 10.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் :  ஏகாதசி மா 6.09
    நட்சத்திரம் :  பூசம் அ.கா 5.29
    யோகம் : மரண
    சந்திராஷ்டமம் :   பூராடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • செப்டம்பர் 28 – ஏகாதசி நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பக்தி
    ரிஷபம்         – பரிசு
    மிதுனம்     – பயம்  
    கடகம்         –  பகை
    சிம்மம்         –   பரிவு  
    கன்னி         –    பாராட்டு
    துலாம்         –     பிரீதி
    விருச்சிகம்     –  ஓய்வு
    தனுசு         –    வரவு
    மகரம்         –   தடங்கல்  
    கும்பம்         –     வெற்றி
    மீனம்         –    இன்சொல்   
    சந்திராஷ்டமம்    –        மூலம்

  • ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்… கடைப்பிடிப்பது எப்படி?

    அமாவாசை விரதம், பௌர்ணமி விரதம், சஷ்டி விரதம், சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என்று பல வகையான விரதங்கள் இருந்தாலும்,  ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு.

    ஏகாதசி விரதத்தின் மகிமையை முதலில் அறிந்துகொள்வோம்.

    திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

    எனவே, ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்பது மிகவும் உத்தமமானது. அன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கவேண்டும். இரவிலும் உறங்காமல் விழித்திருந்து, பகவான் மகா விஷ்ணுவின் திருநாமங்களை ஜபித்தபடி பகவானை வழிபடவேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்தால், இந்தப் பிறவியில் நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார். மறுமையில் வைகுண்ட வாசத்தையும் இறைவன் அருள்கிறார்.

    ஏகாதசி விரதம்:

    ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், மனித மனத்தின் மும்மலங்களான கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் நாம் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான  இனிய வாழ்க்கை அமையும். மனதை ஒருநிலைப்படுத்தி முழுநாளும் உபவாசமிருப்பது மிகவும் விசேஷமானது. 'ஏகாந்தத்தில் பேச்சின்றி ஏகாதசியில் வசி; ஏகாம்பர அருளமுதம் புசி' என்பது ஆன்றோர்களின் அருள்வாக்கு.

    ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் உரைக்கிறது. எனவே இந்த நாளில், விருந்து, கேளிக்கை போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. ஓராண்டில் மொத்தம் 25 ஏகாதசிகள் வரும்.

    விரதத்தை எப்படி அனுசரிப்பது?

    ஏகாதசி  திருநாளில்  அதிகாலையில் எழுந்து குளித்து,  தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது.  பார்த்தசாரதி பட்டாச்சார்யார்அவ்வப்போது தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம்.

    உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம்.  விரதத்தை அனுஷ்டிக்கும்போது குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை.  மழை மாதங்கள், குளிர்மிக்க மாதங்களில் ஏழு முறை துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். விரதமிருப்பதால்,  ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது.

    பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம், மற்றவர்கள் சொல்லக் கேட்கலாம்.

    மறுநாள் துவாதசியன்று  காலையில்  பூஜைகளை முடித்து விட்டு,  விருந்தினருக்கு அன்னம் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன்  உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டும். இரவு பழங்கள் அல்லது டிபன் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.

  • செப்டம்பர் 27 – வெள்ளி

    செப்டம்பர் 27 – வெள்ளி
    குரோதி வருடம் – புரட்டாசி 11
    செப்டம்பர் 27 – 2024
    வெள்ளி
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : 10.30 – 12.00
    திதி : தசமி
    திதி நேரம் :  தசமி மா 5.34
    நட்சத்திரம் :  புனர்பூசம் அ.கா 4.32
    யோகம் : மரண
    சந்திராஷ்டமம் :   மூலம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்