Blog

  • October 05 2023 Vallar pirandha dhinam

    அக்டோபர் 5 – வள்ளலார் பிறந்த தினம்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 18
    05-அக்-2023 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : சப்தமி
    திதி நேரம் : சஷ்டி கா 10.6
    நட்சத்திரம் : மிருகசீரிசீ டம் ந.இ 12.22
    யோகம் : மரணயோகம்
    சந்திராஷ்டமம் : சுவாதி,விசாகம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • balamurugan sirappu abishegam

    விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி மாத கிருத்திகை பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பால முருகனுக்கு புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பாலமுருகனுக்கு எண்ணை காப்பு சாட்சி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார். மேலும், பாலமுருகனுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

    தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாத கிருத்திகை பூஜையை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

     

  • Mandhai amman koil thiruvizha

    மூன்று நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத மந்தை அம்மன் கோவில் திருவிழாவின் முதல் நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்து உற்சாக வழிபாடு.

    தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை தெய்வேந்திரபுரம் பகுதியில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு மந்தை அம்மன் கோவின் புரட்டாசி மாத 3 நாள் திருவிழாவிற்கின சாட்டுதல் கடந்த மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற நிலையில் கோவில் திருவிழாவின் முதல் நாளான இன்று கோவிலிலிரந்து மக்கள் திரளாக கீழே உள்ள தெவேந்திரபுரம் கிராமத்தில் இருந்து பெரியகுளம் பகுதியில் உள்ள வராக நதி ஆற்றங்கரைக்குச் சென்று அங்கு மலர்களால் மந்தை அம்மன் அலங்கரிக்கப்பட்ட திருவுருவச் சிலையை எடுத்து பெரியகுளம் நகரின் முக்கிய வீதிகளில் அரண்மனை தெரு புதிய பேருந்து நிலையம் வி ஆர் பி  தெரு உள்ளி தெருக்களின் வழியாக வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.    

    அலங்கரிக்கப்பட்ட மந்தை அம்மனின் வீதி உலாவின் போது 1000த்திற்கும்  மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து தங்கள் வீடுகளில் வைக்கப்பட்ட முளைப்பாரிகளை தலையில் சுமந்தவாறு பெரியகுளம் வடகரை  பகுதியில் வீதி உலாவாக இரவு முழுவதும் சுற்றி வந்து பின்பு மந்தை அம்மன் கோவிலில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை வைத்து பெண்கள் கொண்டு வந்த முளைப்பாரியையும்  வைத்து பெண்கள் வழிபட்டனர்.

    மந்தை அம்மன் கோவில் திருவிழாவில் நிகழ்ச்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு இரவில் சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

  • October 04 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  வெற்றி
    ரிஷபம் –    எதிர்ப்பு
    மிதுனம் –   சிந்தனை
    கடகம் – லாபம்
    சிம்மம் –    சுகம்
    கன்னி –    நன்மை
    துலாம் –     சோர்வு
    விருச்சிகம் – சலனம்  
    தனுசு –     வரவு
    மகரம் –    எதிர்ப்பு
    கும்பம் –     பாசம்   
    மீனம் –      அசதி  
    சந்திராஷ்டமம்    – சித்திரை, சுவாதி

  • October 04 2023 Indrayanaal

    அக்டோபர் 4 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 17
    04-அக்-2023 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : சஷ்டி
    திதி நேரம் : பஞ்சமி கா 10.1
    நட்சத்திரம் : ரோகிணி இ 11.22
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : சித்திரை,சுவாதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Sivashakthi vinayakar koil sangadahara chadurthi

    ராசிபுரம் அடுத்த பட்டணம் சிவசக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை வெகுவிமர்சியாக நடைபெற்றது: சங்கடஹர சதுர்த்தி விழா கோலாட்டம் கும்மி அடித்து பெண்கள் நடனம்.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் ஓம் சிவ சக்தி விநாயகர் கோவிலில்    சங்கடஹர சதுர்த்தி பூஜை சிறப்பாக நடைபெற்றது.  .

    முன்னதாக விநாயகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் யான பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் பன்னீர் உள்ளிட்ட பல வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.  இதில் பட்டணம் கிராமப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.   மேலும் முன்னதாக மகளிர் அணியினரின் கோலாட்டமும், கும்மியாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

    பல்வேறு பக்தி பாடல்களுக்கு சிறப்பாக பெண்கள் கோலாட்டம்  அடித்து சிறப்பாக நடனம் ஆடினர். தொடர்ந்து வேண்டுதல்கள் நிறைவேற பக்தர்கள் 108 தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

  • Karur Sangadahara chadurthi

    கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு புரட்டாசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு உற்சவர் கணபதிக்கும், மூலவர் கணபதிக்கும் என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கும், உற்சவர் கணபதிக்கும் ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து அதை தொடர்ந்து சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

  • October 03 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  மகிழ்ச்சி
    ரிஷபம் –    அசதி
    மிதுனம் –   அமைதி
    கடகம் – பரிசு
    சிம்மம் –    புகழ்
    கன்னி –    சோதனை
    துலாம் –     பிரீதி
    விருச்சிகம் – நலம்   
    தனுசு –     நன்மை
    மகரம் –    மேன்மை
    கும்பம் –     களிப்பு  
    மீனம் –      சோர்வு
    சந்திராஷ்டமம்    – அஸ்தம், சித்திரை

  • October 03 2023 Karthigai

    அக்டோபர் 3 – கார்த்திகை
    சோபகிருது வருடம் – புரட்டாசி 16
    கார்த்திகை
    03-அக்-2023 செவ்வாய்
    கரிநாள்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : பஞ்சமி
    திதி நேரம் : சதுர்த்தி கா 10.30
    நட்சத்திரம் : கார்த்திகை இ 10.57
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • arupadai veedu mahayagam

    சீர்காழி அருகே சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி அறுபடைவீடு மகாயாகம் நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் தனித்தனி சன்னதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடம் அமைந்துள்ளது. சித்தர் பீடத்தின் நிறுவனர் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின்   குருபூஜை விழாவை முன்னிட்டு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    தொடர்ந்து பீடத்தின் வளாகத்தில் உலக நன்மை வேண்டி முருக பெருமானின் ஆறுபடை வீடு மகா யாகம் நடைபெற்றது. முருக பெருமான் அம்பாளுடன் எழுந்தருள  அவர்களுக்கு முன்பாக பிரமாண்ட 6  யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு மகா யாகம் நடைபெற்றது.பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மகா யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.