Blog

  • Deepavaliku mattum thirakkappadum adisaya koil

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரத்தில் உள்ள ஹாசனாம்பா கோயில் ஆண்டுக்கு ஒரு முறை தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த கோயிலின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்….

    ஹாசனாம்பா கோயிலில் பல வீநோத நம்பிக்கைகள் உள்ளது….

    மாமியார்-மருமகள் கல்….

    ஒரு குட்டி கதை…. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹாசனாம்பா கோயிலுக்கு நாள் தவறாமல் வந்து வழிபட்டு கொண்டிருந்திருக்கிறாள் ஒரு பெண். ஒருநாள் அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் ''வீட்டில் வேலை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்'' என்று சொல்லி அப்பெண்ணை அடித்திருக்கிறாள். அப்போது அப்பெண் வலியால் சத்தமிடவே அம்மன் அவள் முன்பு பிரசன்னமாகி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்லப்படுகிறது. அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோயிலில் காணப்படுகிறது. இந்த கல் ஆண்டுதோறும் அரிசி அளவு அம்மன் விக்ரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இது நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

    திருடர்கள் கோயில்…

    ஹாசனாம்பா கோயிலில் ஒருமுறை அம்மன் ஆபரணங்களை திருடிச்செல்ல நான்கு திருடர்கள் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாக போகுமாறு சபித்ததாக சொல்லப்படுகிறது. அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோயிலாக 'திருடர்கள் கோயில்' என்ற பெயரில் ஹாசனாம்பா கோயில் வளாகத்தினுள்ளேயே அமைந்திருகிறது.

    அணையா தீபம் …

    ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்துகொண்டிருக்குமாம்.

    கோயிலுக்குள் குழந்தை மாட்டிக்கொண்டால்…

    கோயில் மூடப்படும் நாளில் தவறுதலாக குழந்தை ஏதும் உள்ளே மாட்டிக்கொண்டால் மீண்டும் கோயில் திறக்கப்படும் நாள் வரை அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தில்லாமல் நலமுடன் இருக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

    வாடா மலர்கள்….

    ஹாசனாம்பா கோயில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்குமென்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோயில் திறக்கப்படும் நாளில் கோயிலுக்கு வருகிறார்கள்.

  • Sri Dhanvanthri peruman sirappu

    மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாகவும் தேசிய ஆயுர்வேத தினமாகவும்  கொண்டாடப்படுகிறது.  சிலர் ஐப்பசி ஹஸ்த நட்சத்திரத்தையும், சிலர் ஐப்பசி சுவாதி நட்சத்திரத்தையும் தன்வந்திரி ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றனர்.

    ஸ்ரீ தன்வந்திரி பெருமாளே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறார் என்ற அரிய தத்துவத்தை இந்த வைத்திய அவதாரம் சுட்டிக்காட்டுகிறது.

    காக்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாள், மஹா விஷ்ணுவின் அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்; முன்னிரு கரங்களில் ஒரு கரத்தில் அமிர்த கலசத்தையும், ஒரு கையில் சீந்தலைக் கொடியுடனும் காட்சி அளிக்கிறார். அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம். இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவேதான் தன்வந்திரி விக்ரஹத்தில் அட்டை பூச்சியும் இடம்பெற்றுள்ளது.

     

  • Deepaval Yama Deepam

    ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று பிரதோச வேளையில் வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (குறைந்தது ஐந்து) நல்லெண்ணெய் தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்கள் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர்.

    தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு. யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும் மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள்.

    அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும்.

    யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.

    சாஸ்திரப்படியான யம தீபம் ஏற்றும் முறை:

    உங்கள் வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும். விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.

  • November 09 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  சிந்தனை
    ரிஷபம்         –    நன்மை
    மிதுனம்     –   லாபம்
    கடகம்         –  எதிர்ப்பு
    சிம்மம்         –   உழைப்பு  
    கன்னி         –    மேன்மை
    துலாம்         –     சுகம்
    விருச்சிகம்     – ஆசை
    தனுசு         –     விரைவு
    மகரம்         –    பெருமை   
    கும்பம்         –     எதிர்ப்பு
    மீனம்         –      நற்சொல்  
    சந்திராஷ்டமம்    –    அவிட்டம், சதயம்

  • November 09 2023 Sarva egadasi

    நவம்பர் 09 – சர்வ ஏகாதசி
    சோபகிருது வருடம் – ஐப்பசி 23
    09-நவ-2023 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : துவாதசி
    திதி நேரம் : ஏகாதசி கா 11.17
    நட்சத்திரம் : உத்திரம் இ 11.5
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அவிட்டம்,சதயம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • Kumarakottam velli ther bavvani

    காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற வெள்ளி திருத்தேர் பவணி உற்சவம். பக்தர்களின் அரோகரா முழக்கங்கள் முழங்க வெள்ளி திருத்தேரில் வள்ளி, தெய்வயாணையோடு எழுந்தருளி காட்சியளித்த சுப்பிரமணிய சுவாமி.

    கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் கந்தபுராணம் அறங்கேறிய குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் வெள்ளி திருத்தேர் உற்சவமானது நடைபெறும். அந்த வகையில் செவ்வாய்க்கிழமையையொட்டி மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முருகன் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    மேலும் உற்சவமூர்த்தி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வள்ளி தேவானையுடன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன் பிறகு சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமானை‌  ஏராளமானோர் வெள்ளித் தேரினை  வடம் பிடித்து இழுத்து கோவில் உட்பிரகாரத்தில் சுற்றி வந்தனர்

    மேலும்  அப்போது அங்கு திரண்டிருந்த  நூற்றுக்கணக்கான பக்தர்களும் வெள்ளித்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமானை பயபக்தியுடன்  சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

  • November 06 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  பெருமை
    ரிஷபம்         –    வெற்றி
    மிதுனம்     –   முயற்சி
    கடகம்         –  லாபம்
    சிம்மம்         –   மேன்மை
    கன்னி         –    ஆதரவு
    துலாம்         –     சிந்தனை
    விருச்சிகம்     – உயர்வு
    தனுசு         –     உதவி
    மகரம்         –    வருத்தம்  
    கும்பம்         –     பயணம்
    மீனம்         –      நற்செயல்
    சந்திராஷ்டமம்    –    திருவோணம், அவிட்டம்

  • November 08 2023 Indrayanaal

    நவம்பர் 8 – ஐப்பசி 22
    சோபகிருது வருடம் – ஐப்பசி 22
    08-நவ-2023 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : தசமி கா 9.19
    நட்சத்திரம் : பூரம் இ 8.43
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவோணம்,அவிட்டம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Palani murugan aandi kola dharisanam

    வாழ்க்கையில் தீராத கஷ்டம், தடைகள், குடும்பத்தில் சண்டை, வருமானம் இல்லாமை, போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகளை மட்டுமே எதிர் கொண்டு வாழும் சூழ்நிலை இருந்தால்  நிச்சயம் இதற்கு கர்ம வினைகள் தான் காரணம் ஆகும். முருகப்பெருமானை பழனி மலைக்கு சென்று தரிசனம் செய்தால் நம்முடைய கர்மவினைகள் கட்டாயம் குறையும்.

    வாழ்வில் தடை போட்டி பொறமை   கஷ்டம் போன்ற பல பிரச்சனைகள் விலக ஆண்டி கோலத்தில் இருக்கும் பழனியாண்டவர் முருகனை தரிசனம் செய்வதால் நன்மைகள் பல உண்டாகும். பழனி  முருகப்பெருமானை  ஆண்டி கோலத்தில் இருக்கும் போது தரிசனம் செய்தால் நம்மை ஆண்டியாக ஆக்கி விடுவார் என்றும், ராஜ அலங்காரத்தில் இருக்கும் போதும் மட்டுமே தரிசனம் செய்தால்  ராஜ வாழ்க்கை கிடைக்கும் என்றும் பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.

    ஆனால் பழனி முருகனை தண்டாயுதபாணி கோலத்தில் அதாவது ஆண்டி அலங்காரத்தில் தரிசிப்பது தான் சிறந்தது. முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக. பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள்.

    திங்கள் கிழமையில் காலை நேரத்தில் மலையேறி முருகப்பெருமானை ஆண்டி கோலத்தில் தரிசித்தால், உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகி  படிப்படியான முன்னேற்றம் மாற்றம் ஏற்படும்.

    உங்களுடைய ஜாதகத்தில் பாதிப்பு தரக்கூடிய நிலையில் எந்த கிரகங்கள்  இருந்தாலும்  அந்த கிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு தாக்கம் குறைய  வேண்டுமென்றால், அதற்கான ஒரே தீர்வு பழனி முருகனை ஆண்டி கோலத்தில் திங்கட்கிழமை காலை வேளையில் தரிசனம் வழிபாடு செய்து,பூஜை தானம் தர்மம் அன்னதானம் போன்றவற்றை செய்தால் உங்களது வாழ்வில் நல்ல முன்னேற்றம் நன்மைகள் பல கிடைக்கும்.

  • Varahai amman vazhipadu

    பல காலமாக வாராஹி அம்மன் வழிபாடு வழக்கத்தில் உள்ளது. நல்லெண்ணெய் தீபமேற்றி, பஞ்சமி திதியன்று பிரம்ம முகூர்த்த வேளையில் வாராஹி வழிபாட்டினை துவங்கலாம். தினமும் வாராஹியை வழிபட முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும், பஞ்சமி திதி நாளிலும் வழிபட்டால் முழு பலனும் கிடைக்கும்.

    வாராஹி அம்மனை யாரெல்லாம் வழிபட வேண்டும் ?

    சைவம், பிராமணியம், வைணவம், சக்தி வழிபாடு ஆகிய நான்கு வழிபாட்டு முறைகளை பின்பற்றுபவர்களும் வழிபடும் தெய்வமாக விளங்கக் கூடியவள் வாராஹி. வாழ்க்கையில் அனைத்தும் முடிந்து விட்டது, கடனாக கொடுத்த பணம் இனி திரும்ப வரவே வராது என்ற நிலையில் இருந்தால் கூட வாராஹியை வழிபட்டால் அந்த நிலைமை மாறும் என்பது பலரும் சொல்லும் அனுபவ உண்மை.

    வாராஹி வழிபாடு :

    சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வாராஹி அம்மன், தெய்வீக குணமும், விலங்கின் ஆற்றலும் கொண்டவளாக விளங்குகிறாள். தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவளாக இருக்கும் வாராஹி, மூர்க்க குணம் உடையவளாக உள்ளதால் இவளை உக்ர தெய்வமாக வழிபடுகிறார்கள்.

    இவளை வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சிலர் சொல்வதுண்டு. சப்த கன்னியர்களான பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரில் பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவள் வாராஹி.

    எதிரிகள், தீயசக்திகள், கடன்கள் போன்ற துயரங்கள் ஆகியவற்றை அடித்து விரட்டக் கூடிய தெய்வமாக வாராஹி விளங்குகிறாள். வாராஹி வழிபாட்டினை பலரும் மேற்கொண்டாலும் இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது.