Blog

  • Mesham Sakthi Online – Oct Monthly Prediction – 2023

    மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

    கிரகநிலை:

    ராசியில் குரு(வ), ராகு – பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன்- களத்திர ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.

    கிரக மாற்றங்கள்:

    04-10-2023 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    08-10-2023 அன்று ராகு பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    08-10-2023 அன்று கேது பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-10-2023 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    17-10-2023 அன்று சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றும் மேஷராசியினரே நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பவர். இந்த மாதம் பல நன்மைகள் உண்டாகும். உங்கள் பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். பாக்கிய ஸ்தானத்தில் உலவும் சூரியன் மூலம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். பகைகள் விலகும்.

    தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராது. போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு உயரும்.

    குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும்.

    பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும்.

    கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.

    அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.

    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

    அஸ்வினி:

    இந்த மாதம்  பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள்.

    பரணி:

    இந்த மாதம்  நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம்.  பணவரத்து திருப்திகரமாக  இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம்  அதிகரிக்கும்.  யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும்.

    கார்த்திகை 1ம் பாதம்:

    இந்த மாதம்  உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்திதரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும்.  உதவிகளை செய்து மன திருப்தி அடைவீர்கள்.  கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

    பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் நவக்கிரகத்திற்கு தீபம் ஏற்றி வணங்கி வர சொத்து பிரச்சனை தீரும். குடும்ப குழப்பம் தீரும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வியாழன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 18, 19

    அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11, 12

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • September 30 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  ஆதரவு
    ரிஷபம் –    சிக்கல்
    மிதுனம் –   சிரமம்
    கடகம் – அசதி
    சிம்மம் –    லாபம்
    கன்னி –    செலவு
    துலாம் –     சுகம்  
    விருச்சிகம் – கவலை
    தனுசு –     வெற்றி
    மகரம் –    நன்மை
    கும்பம் –     பயம்
    மீனம் –      வருத்தம்
    சந்திராஷ்டமம்    – மகம், பூரம்

  • September 30 2023 Indrayanaal

    செப்டம்பர் 30 – மகாளயபட்சம் ஆரம்பம்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 13
    30-செப்-2023 சனி
    மகாளயபட்சம் ஆரம்பம்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : திதித்துவயம்
    திதி நேரம் : பிரதமை ம 2.34
    நட்சத்திரம் : ரேவதி ந.இ 12.17
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மகம்,பூரம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Kaliamman koil kanthara nadanam

    விருதுநகர் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தெய்யம் நடனம் நடைபெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பொதுவாக புரட்டாசி மாதங்களில் காளியம்மன் திருவிழா நடைபெறும் நிலையில், விருதுநகர் வாடியான் தெருவில் உள்ள  காளியம்மன் கோவில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்தாண்டு திருவிழா முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மாலையில் தொடங்கி இந்த ஊர்வலத்தில் பத்துக்கும் மேற்பட்ட மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் வலம் வர ஒவ்வொரு வாகனத்தின் பின்புறமும் சுவாமி நடனம், புலியாட்டம், கோலாட்டம் என கலை நிகழ்ச்சிகள் வீதிகளில் அரங்கேற்றம் செய்யப்பட்டன.

    அதில் அதிகம் கவனம் பெற்றது காந்தாரா என்று அறியப்படும் கேரளா கர்நாடகா பகுதிகளின் பாரம்பரிய நடனமான தெய்யம் நடனம் தான். இதற்காக கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்கள் அம்மன், கிருஷ்ணன், ஈசன் என விதவிதமான வேடங்களில் வந்து தெய்யம் நடனமாடி வந்தது மக்களின் கவனத்தை ஈர்த்தது.

  • thirupathy ezhumalayan garuda vaganam

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் வந்த மலையப்ப சுவாமி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி கோயிலில் உள்ள வாகன மண்டபத்தில் இருந்து  எழுந்தருளினார். பின்னர்  ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டு பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துக்கு மத்தியில் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார்.  108 வைணவ தலங்களில் கருடவாகனத்தில் சுவாமி எழுந்தருள்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    அவ்வாறு ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். கடந்த 22 ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவத்தில் ஐந்தாம் நாள் கருட சேவை காண முடியாத பக்தர்கள் புரட்டாசி மாத பவுர்ணமியான இன்று அதிக அளவில் பக்தர்கள் நான்கு மாட வீதியில் காத்திருந்து தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி  அருள்பாலித்தார்.

    கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நான்கு மாட வீதியில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

  • Alangudi Natarajar abishegam

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் உலக நன்மைக்காக நடைபெற்ற நடராஜர் அபிஷேக விழாவில் மழையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கலந்து கொண்டனர். இரண்டாவது குருஸ்தலம் என அழைக்கப்படும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவிலில் உள்ளது

    இவ்வாலயத்தில் நடராஜமூா்த்திக்கு, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி மாதங்களில் மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதாவது ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் நடைபெறும். இதில் ஆனித்திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம் ஆகிய இரு அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    அந்த வகையில் புரட்டாசி மாத பௌர்ணமி அபிஷேகத்தை முன்னிட்டு நடராஜமூா்த்திக்கு விபூதி, பால், தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீா், பன்னீா், சந்தனம் புஷ்பம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தனர்.

     

  • September 29 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  மகிழ்ச்சி
    ரிஷபம் –    எதிர்ப்பு  
    மிதுனம் –   வெற்றி
    கடகம் – தடங்கல்
    சிம்மம் –    நட்பு
    கன்னி –    ஏமாற்றம்   
    துலாம் –     லாபம்  
    விருச்சிகம் – ஊக்கம்  
    தனுசு –     சுகம்
    மகரம் –    அசதி
    கும்பம் –     புகழ்
    மீனம் –      ஆக்கம்
    சந்திராஷ்டமம்    – ஆயில்யம், மகம்

  • September 29 Pournami

    செப்டம்பர்  29 – பவுர்ணமி
    சோபகிருது வருடம் – புரட்டாசி 12
    பவுர்ணமி
    29-செப்-2023 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் : பவுர்ணமி மா 4.34
    நட்சத்திரம் : உத்திரட்டாதி ந.இ 1.27
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Thiruvannamalai pradhosham

    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே பெரிய நந்திக்கு புரட்டாசி மாத பிரதோஷம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பொளர்ணமி மற்றும் அமாவாசை வரும் இரண்டு தினங்களுக்கு முன்பு மகா நந்திக்கு பிரேதோஷம் நடைபெறுவது வழக்கம்.

    புரட்டாசி மாத பிரதோஷ தினமான இன்று அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும்  பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து பெரிய நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.

    பிரதோஷ தினத்தின் பொழுது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.  புரட்டாசி மாத பிரதேஷத்தினை ஏராளமான பக்தர்கள் நேரில் கண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

  • Thirupathy chakrathazhavar theerthavari

    அனந்த பத்மநாப விரதத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் நடந்த சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி.

    சுக்லபட்ச சதுர்தசியில் நிகழும் விரதங்களில் மிக முக்கிய சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுவது அனந்த சதுர்தசி விரதமாகும். பாத்ரபத புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்தசி திதியில் வரும் இதை அனந்த பத்மநாப சுவாமி விரதம் எனவும்   அழைக்கப்படுகிறது.  அளவிட முடியாத செல்வச் செழிப்புக்களை அளிக்கக் கூடியது இவ்விரதம். ஸ்ரீமந் நாராயணன் ஆதிசேஷன் மீது, அனந்த பத்மநாபனாக சயனித்தவாறு இந்நாளில் தோன்றியதாக ஐதீகம்.

    அனைத்து உயிரினங்களின் மீதும் அளவிலாக் கருணையுடன், அவற்றின் வளமான வாழ்வில் பற்று கொண்டவராக கூப்பிட்ட குரலுக்கு அந்த நொடியிலேயே காத்தருள ஓடி வருபவராகத் துயிலுற்ற நிலையிலும், விழிப்புற்றவராகச் சயனித்திருக்கிறார் மகா விஷ்ணு.  எனவே மகா விஷ்ணு அவதாரமாக கலியுகத்தில் சீனிவாச பெருமாளாக பக்தர்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றும் தெய்வமாக விளங்கி வருகிறார் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள சீனிவாச பெருமாள். இதையொட்டி திருமலையில் அனந்த பத்மநாப ஸ்வாமி விரதத்தையொட்டி சக்கரத்தாழ்வாருக்கு  தீர்த்தவாரி இன்று நடைபெற்றது.

    ஏழமலையான் கோயிலில் இருந்து சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக நான்கு மாட வீதியில் வலம் வந்து தெப்பகுளத்தில் பால், தயிர், தேன் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு  சக்கரத்தாழ்வாருக்கு  தீர்த்தவாரி  நடைபெற்றது. இதில் தேவஸ்தான துணை செயல் அதிகாரி ஹரிந்திரநாத், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

    அனந்த பத்மநாப சுவாமி விரதம் 108 வைணவ திவ்ய தேசங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள், வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி, அனந்த பத்மநாப சுவாமி விரத தினங்களில் மட்டுமே சக்கரத்தாழ்வாருக்கு தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.