Blog

  • 2017-11-27-13-10-32

    நீலிமலையின் உச்சியில் சபரிபீடம் உள்ளது. இந்த பீடம் உள்ள பகுதியில் தான் “சபரிமலை’ என்று பெயர் தோன்றக் காரணமான சபரி அன்னை வசித்தாள். இந்த மூதாட்டிக்கு ராமபிரானின் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்…
    ஆனால், பகவான் பக்தனைத் தேடி, தனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ராம அவதாரம்.
    அவ்வகையில், ராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு, விஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்து, இன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். அந்த ரிஷிகளுக்கும் மேலான பக்தியைக் கொண்டவள் சபரி அன்னை. இவள், இந்த மலையில் தங்கி ராமனின் தரிசனத்திற்காக காத்திருந்தாள். அவள் என்ன செய்தாள் தெரியுமா?
    ராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்பழங்களைப் பொறுக்கினாள். அதை கடித்துப் பார்த்து, இனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை காய்ந்தாலும் தின்னலாம். ராமன் வந்ததும் அந்தப் பழங்களை காணிக்கையாக்கினாள்.எச்சில் பழமெனக் கருதாத பகவானும் சபரியின் அன்பை அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார். அந்த பரமபக்தை யின் பெயரே சபரிமலைக்கு நிலைத்து விட்டது. இங்கு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும். இங்கிருந்து சன்னிதானம் வரை சமதளமான பாதையில் ஆசுவாசமாக நடந்து செல்லலாம்.

  • 2017-11-26-15-11-55

    நீலிமலை மலையில் ஏறுவதும் கரிமலையில் ஏறுவது போல் மிகக்கடினம். கால் முட்டி, தரையில் உரசுமளவுக்கு மிகவும் சிரமப்பட்டு இந்த மலையை ஏற வேண்டும். இங்கு மலையேற மிக கடினமாக இருந்தாலும், ஐயப்பனை நெருங்கி விட்டோம் என்ற எண்ணமிருந்தால் சோர்வு தெரியாது. பக்தர்கள் களைப்பை போக்க பக்தர்கள் இங்கு மிக சப்தமாக சரண கோஷமிடுவர். நீலிமலையில் ஏற கருங்கல் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. நீலிமலையில் வசித்த மாதங்க மகரிஷி, தன் மகள் நீலியுடன் சிவனை நோக்கி தவம் செய்த தாகவும், அவளது பெயரில் இம்மலை விளங்குவதாகவும் கூறப்படுகிறது. இம்மலைப்பாதையின் துவக்கப் பகுதியில், வலது பக்கமாக ஒரு பாதை பிரிகிறது. இதை “சுப்பிரமணியர் பாதை’ என்பர். இந்த வழியாகத்தான் ஐயப்பன் கோயிலுக்கு தேவையான சாமான்கள் கழுதை மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.
    நீலிமலை ஏற்றத்தில் அப்பாச்சி மேடு, இப்பாச்சி குழி என்ற சமதளப்பகுதி வருகிறது. அப்பாச்சிமேட்டில் பச்சரிசி மாவு உருண்டையை கன்னிசுவாமிகள் வீசி எறிவார்கள். வனதேவதையை திருப்திப்படுத்த இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.

  • 2017-11-26-14-43-47

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்த பின்பு அவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. முன்பெல்லாம் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு எண்ணிக்கை கணக்கு இருக்காது. அளவும் பெரிதாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் எண்ணிக்கையில் மாற்றத்தை கொண்டு வந்தது தேவஸ்தானம். இலவச தரிசனத்தில், மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கு ரூ.10-க்கு 2 லட்டுகளும், ரூ.25-க்கு 1 லட்டு என கூடுதலாக வழங்கப்படுகின்றன. இது தவிர்த்து ரூ.50, ரூ.300 ஆகிய கட்டணங்களில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 மற்றும் 3 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தற்போது லட்டுகளை தேவஸ்தானம் சலுகை விலையில் வழங்கி வருகிறது. ஆனால் ஒரு லட்டை தயார் செய்ய ரூ.37 செலவாகிறது. இதனால் கூடுதல் செலவாக ஆண்டுக்கு ரூ.200 கோடி அளவுக்கு சுமை ஏற்பட்டுள்ளது என்று தேவஸ்தானம் கூறியுள்ளது. லட்டு வழங்குவதை தொடர வேண்டுமானால் விலையை சற்று உயர்த்தினால் தான் முடியும் என்று கூறியுள்ளது. எனவே லட்டு விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • 2017-11-25-14-49-50

    வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான முன் பதிவு தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசி மற்றும் ஜனவரி 1ந் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. வைகுண்ட ஏகாதசி, துவாதசி தினங்களான டிசம்பர் 29, 30 ஆம் தேதிகள் மற்றும் ஜனவரி ஒன்றாம் தேதிகளுக்கான தரிசன டிக்கெட்டுகளை, திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், அதாவது www.ttdsevaonline.com என்ற இணையதள முகவரியில், பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். வைகுண்ட ஏகாதசி அன்று இலவச தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். துவாதசியன்று 300 ரூபாய்க்கான சிறப்பு நுழைவு தரிசனத்துக்கு ஐந்தாயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைன் முன்பதிவுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

  • 2017-11-25-14-33-21

    திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயமாக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. டிசம்பர் 10-ம் தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. திருப்பதியில் நாள் தோரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக காணப்படும். கூட்டம் அதிகம் இருக்கும் காலங்களில் ஏழுமலையானை தரிசிக்க 1 நாள் முழுவதும் காத்திருக்கும் நிலை ஏற்படும். எனவே பக்தர்களின் வசதிக்காக சாமி தரிசன நேரத்தை குறைக்க தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருக்கட்டமாக திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம் ஆக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. டிசம்பர் 10-ம் தேதி முதல் தரிசன டிக்கெட் பெற ஆதார் கட்டாயம் என்றும் இலவச தரிசனத்துக்கு வருவோர் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாகவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. சோதனை முறையிலான திட்டம் என்பதால் வைகுண்டம் வழியாக பக்கதர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பிப்ரவரி மாதத்தில் இருந்து ஆதார் மூலம் தரிசனம் முழு அளவில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 2017-11-25-13-53-44

    தீராத நோய் நீர்க்கும் கரிமலையைக் கடந்து பெரியானை வட்டம் வருகிறது. இது யானைகள் அதிகமாக வசித்த பகுதி என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. இங்கே பம்பா நதி சிறு ஓடைபோல பாய்கிறது. இங்கிருந்தபடியே மகர ஜோதியை தரிசிக்கலாம் என்பதும் விசேஷத்தகவல். இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் “சிறியானை வட்டம்’ என்ற பகுதி வருகிறது. இங்கு பம்பை நதி பரந்து ஓடுவதைக் காணலாம். இங்கிருந்து சிறிது தூரம் பயணம் செய்து பம்பா நதியை அடையலாம்.

    பம்பா நதி:
    எருமேலியிலிருந்து பெரும் பாதை வழியாக நடந்துவரும் பக்தர்களும் சாலக்காயம் வழியாக வரும் பக்தர்களும் பம்பா நதிக்கரையில் ஒன்று கூடுகின்றனர். கங்கையைப்போன்ற புண்ணிய நதி பம்பா. இந்த நதிக்கரையில் தான் ராமர் தனது தந்தை தசரதருக்கு “பிதுர் தர்ப்பணம்’ செய்ததாக கூறுவர்.
    இதனடிப்படையில் ஒரு சில பக்தர்கள் இந்த நதியின் முதல் பாலம் அருகே உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடி, பிதுர் தர்ப்பணம் செய்கின்றனர். மற்ற பக்தர்கள் எல்லாம் இங்கு நீராடி நீண்டதூரம் நடந்து வந்த களைப்பைப் போக்கிக் கொள்கின்றனர்.
    தர்ம சாஸ்தா, மணிகண்டனாக பூவுலகில் அவதாரம் செய்த இடம் பம்பையாற்றின் கரை. அதனால் பக்தர்கள் இங்கு ஓர் இரவு தங்கி, ஆற்றில் பம்பாவிளக்கு ஏற்றி சுவாமியை வழிபடுகின்றனர். பின்னர், இருமுடியின் பின் முடியிலுள்ள சமையல் சாமான்களைக் கொண்டு சமைக்கின்றனர். அந்த உணவை ஐயப்பனுக்கு நைவேத்யம் செய்து, அதை பக்தர்களுக்கு விருந்தாக (சத்ய) கொடுத்து உபசரிக்கின்றனர். பக்தனை உபசரிப்பது பகவானையே (ஐயப்பன்) உபசரிப்பது போல என கருதுகின்றனர். ஐயப்பனே பக்தர்களின் வடிவில் சாப்பிடுவதாக ஐதீகம். இந்த பூஜையை “பம்பா சக்தி’ என்றும், “சக்தி பூஜை’ என்றும் சொல்வர். இங்கே மூட்டப்படும் அடுப்பின் சாம்பலை, பம்பா பஸ்மம் என்று பக்தர்கள் வீட்டுக்கு எடுத்து வருகிறார்கள்.

    பம்பா கணபதி :
    பின்னர் பம்பையாற்றின் கரையிலுள்ள பம்பா கணபதி, ராமர், அனுமன், சக்தி கோயில்களில் வழிபட்டு, பந்தள மன்னர் பரம்பரையில் வந்தவர்களுக்கு காணிக்கை செலுத்தி, அவர்களிடம் விபூதி வாங்கி நெற்றியில் அணிந்து நீலிமலை ஏற துவங்கலாம். பெண்கள் இப்பகுதியைத் தாண்டி மலையில் ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

  • kattavakkam-sri-vishvaruba-lakshmi-naracimahar

    இங்குள்ள நரசிம்ஹ மூர்த்தியானவர் ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், ஆனந்த பீடம், யோக பீடம் ஆகிய 5 பீடங்களின் மேல் கம்பீரமாக வீற்று இருக்கும் நரசிம்மருக்கு மேல் இரண்டு கரங்களில் சக்ரமும், வில் அம்பும் தாங்கி மற்றும் அபய வரத முத்திரை காட்டி தன்னை நாடி வந்தவரை வாழ வைக்கும் பெருமாள் என்பதனை உணர்த்துகிறது.

    மஹாலக்ஷ்மி தேவியுடன் காட்சி தரும் இந்த நரசிம்ஹ மூர்த்தியானவர் ” த்ரி நேத்திரம்” அமைந்துள்ளது. ” அருள் விழியால் கருணை மழை பொழிய இரு கண்ணும் போதாமல் முக்கண்ணனாக சேவை சாதிக்கிறார்.”

     மடியில் அமர்ந்துள்ள தாயார் தாமரை மலர் தாங்கி அபய ஹஸ்தம் கொண்டு மிகவும் திவ்யமான ஹம்ஸம் கொண்டு காட்சி தருவதை பக்தர்கள் காண்கில் அருள் பொழியும் திவ்ய தம்பதிகள் இவர்கள் தான் என்பதனை உறுதி செய்யும் வண்ணம் காட்சி தருகின்றனர்.

    இங்கு அருள்புரியும் இந்த நரசிம்ஹ மூர்த்திக்கு வஜ்ரதம்ஷ்ட்ரங்கள் ( பற்கள்) 12 அமைந்து இருக்கின்றன. இது 27 நட்சத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளை குறிக்கிறது.

    திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய், நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான் ஆகிய நவக்கிரஹ அம்சத்துடன் இந்த ஸ்தலம் விளங்குவது கூடுதல் சிறப்பு.

     நரசிம்ஹர் அமைப்பு பெருமாளின் 6 அவதாரங்கள், தான் தாங்கி இருக்கும் ஆயுதங்கள் 4 அவதாரங்களை நினைவுபடுத்தும் வண்ணம் இருக்கிறது.

     இந்த புகழ் பெற்ற ஆலயம் சென்னையில் இருந்து சுமார் 70 km தொலைவில் அமைந்துள்ளது.

    ஓம் நமோ நாராயண.

  • yezhu-jenama-pavam-vilaga-oru-vilvam-pothum

    சிவனாருக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்
    வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன.குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களும் உள்ளன.
    பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்க முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்..
    தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.

    வில்வ வழிபாடும் பயன்களும் 
    சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும். வில்வத்தில் லஷ்மி வாசம் செய்கிறாள். வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷட, வில்வம். கந்தபல எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது. மண்ணலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவென ஈசனின் இச்சா, கிரியா, ஞான வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் அடைவார்கள்…!வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் விளக்கமாகக் கூறுகின்றன.
    வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன. ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத்தவமியற்றியதால்    திருவைகாவூர்  என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெற்றது.

    சிவன் திருவாதிரை நட்சத்திரம்
    அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் தணிக்க முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர். அத்துடக் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூசைகளுக்கு வில்வத்தை ஏற்றக் கொண்டான். ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்லது.

    வில்வமரத்தை வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்… மாதப்பிறப்பு சோமவாரம் அமாவாசை பௌர்ணமி சதுர்த்தி அஷ்டமி நவமி ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது. இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

    வீடுகளில் வில்வ மரம்!
    நாம் வீட்டில் வில்வமரம் நட்டு வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ..
    அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.  ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும். இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் எமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும். சிவனிற்கு பிரியமான வில்வர்ச்சினை மூலம் சிவனின் திருவருட் கடாச்சத்தைப் பெறமுடியும். வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவரிற்கு ஒருபோதும் நரகமில்லை.
    ஒரு வில்வதளம் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்பங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமன்.
    வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.

    வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?…!!!!
    சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும். மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.
    நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
    ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
    ஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய ஸ–ம்பஸ்ய கருணாநிதே:
    அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மே

    இதன் பொருள்!
    போகமோட்ச உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்.
    ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும். இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு அரணாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில்வைத்து புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோமாக…

  • theeradha-nooi-theerkum-karimalai

    பெரிய பாதையில் செல்லும் பக்தர்கள் கரியிலம்தோட்டை அடுத்து கரிமலை அடிவாரத்தை அடையலாம். இந்த மலையில் ஏறும்போது தங்கள் பிரம்மச்சரிய விரதத்தின் சக்தியை உணரலாம். இதை விட கடினமான மலை உலகில் இல்லையோ என்று எண்ணுமளவுக்கு பெரும் ஏற்றத்தில் பக்தர்கள் ஏறுகிறார்கள்.

    இம்மலையிலுள்ள மண் கருப்பாக இருக்கும். எனவே இம்மலைக்கு “கருமலை’ என்ற பெயர் இருந்து “கரிமலை’ என்று மாறிவிட்டது. கரி என்றால் தமிழில் யானை என்று அர்த்தம். காட்டுயானைகள் நிறைந்த கடினமான மலைப்பகுதி என்றும் கூறுவர். மலை உச்சியில் கரிமலைநாதர் என்ற மூர்த்தியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

    இங்கு சுவையான தண்ணீருடன் கூடிய சுனை உள்ளது. இதை ஐயப்பன் தனது அம்பினால் உண்டாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நீரை பக்தர்கள் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள். கரிமலையில் மிகவும் கவனமாக நடக்க வேண்டும். ஏனெனில், ஒரு ஒற்றையடிப் பாதையே நம் கண்முன் தென்படும். ஒரு பக்கம் அதலபாதாளம், மறுபக்கம் உரசும் பாறைகள் என இருப்பதால் மிக கவனமாக ஏற வேண்டும். ஏற்றம் இருக்கும் அளவுக்கு இறக்கமும் பக்தர்களைச் சிரமப்படுத்தும்.

    கால்கள் பின்னி தடுமாறும். ஆனாலும், ஐயப்பன் கருணையுடன் இந்த இடத்தைக் கடக்க அருள்செய்வார். மனதிற்குள் சரணம் சொல்லியபடியே பக்தர்கள் மலையேறுவார்கள். இம்மலையில் மூலிகைச் செடிகள் அதிகம் இருக்கிறது என்பதால், இதைக் கடந்தவுடனேயே தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்கிறார்கள்.