இன்றைய ராசிபலன்
மேஷம் – உயர்வு
ரிஷபம் – போட்டி
மிதுனம் – அமைதி
கடகம் – உதவி
சிம்மம் – ஜெயம்
கன்னி – சினம்
துலாம் – ஆர்வம்
விருச்சிகம் – புகழ்
தனுசு – பக்தி
மகரம் – கவனம்
கும்பம் – இன்பம்
மீனம் – தனம்
சந்திராஷ்டமம் – பூரட்டாதி, உத்திரட்டாதி
Blog
-
மார்ச் 28 – சதுர்த்தி நாள் ராசிபலன்….
-
மார்ச் 27 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – பயம்
ரிஷபம் – வெற்றி
மிதுனம் – கவலை
கடகம் – லாபம்
சிம்மம் – செலவு
கன்னி – ஈகை
துலாம் – ஆதரவு
விருச்சிகம் – பயம்
தனுசு – தோல்வி
மகரம் – நலம்
கும்பம் – சுகம்
மீனம் – புகழ்
சந்திராஷ்டமம் – சதயம், பூரட்டாதி -
மார்ச் 27 – சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
மார்ச் 27 – சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
சோபகிருது வருடம் – பங்குனி 14
மார் 27, 2024 புதன்
சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : 9.30 – 11.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : துவிதியை
திதி நேரம் : துவிதியை மா 4.38
நட்சத்திரம் : சித்திரை ம 3.47
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : சதயம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
மார்ச் 26 – இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – பகை
மிதுனம் – செலவு
கடகம் – மறதி
சிம்மம் – லாபம்
கன்னி – புகழ்
துலாம் – சினம்
விருச்சிகம் – வரவு
தனுசு – போட்டி
மகரம் – கவனம்
கும்பம் – ஆர்வம்
மீனம் – வெற்றி
சந்திராஷ்டமம் – அவிட்டம், சதயம் -
மார்ச் 26 – இன்றைய நல்லநேரம்
1
சோபகிருது வருடம் – பங்குனி 13
மார் 26, 2024 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 2.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : அதிதி
திதி நேரம் : பிரதமை ம 3.06
நட்சத்திரம் : அஸ்தம் ம 1.42
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : அவிட்டம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
தென்கரை மகாராஜேஸ்வரர் திருக்கோவிலின் பங்குனி உத்திர தேர் திருவிழா…
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் திருக்கோவிலின் பங்குனி உத்திர தேர் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது . சாஸ்தா கோவிலுக்கு என்று பெரிய தேர் இழுப்பது தமிழகத்திலே வள்ளியூர் அருகே உள்ள சித்தூரில் மட்டும் தான்.
கேரளாவை பூர்விகமாகக் கொண்டு தென்மகாராஜா இங்கு அருள் பாலித்து கொண்டு இருப்பதால் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் இத்தேரோட்டத்தில் கலந்து கொள்வது வழக்கம். மகர சங்காரந்தி என்றாலே சபரிமலை நினைவுக்கு வருவது போல் பங்குனி உத்திரம் என்றாலே சித்தூர் என்று தான் தென் மாவட்டங்களில் பலருக்கு நினைவுக்கு வரும். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சித்தூரில் உள்ள தென்கரை மகாராஜேஸ்வரர் கோவில் .
சித்தூரில் கோயில் கொண்டுள்ள தென்கரை மகாராஜேஸ்வரர் தனக்கென ஒரு ராஜ்யத்தை உருவாக்க மலையாள நாட்டில் இருந்து புறப்பட்டு சென்று பல அற்புதங்கள் புரிந்து இறுதியில் நெல்லை மாவட்டம் நம்பியாற்றின் தென்பகுதியில் தனது ராஜ்யத்தை நிறுவினார். இவர் அரசரின் மகனாவார். தென்கரை மகாராஜேஸ்வரர் இறந்த பிறகும் அவர் ஆட்சி செய்த மக்களுக்கு பல நோய்களை தீர்க்கும் அற்புதங்கள் புரிந்து வருவதாக இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
கேராளவிலும் , தமிழ் நாட்டிலும் வாழும் அநேக குடும்பங்களுக்கு சாஸ்தா கோவிலாக சித்தூர் மகாராஜா கோவில் உள்ளது. இக்கோவிலின் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி வீதி உலா, அபிஷேகம், விசேஷ பூஜைகள், நடைபெற்றது. பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரை வள்ளியூர் டி.எஸ்.பி யோகேஷ் குமார் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.
சாஸ்தா கோவிலுக்கு என்று பெரிய தேரை இழுப்பது சித்தூரில் மட்டும் தான் என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. மேலும் இந்த திருவிழாவில் மட்டுமல்லாதது கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
-
கிருஷ்ணன் கோவில் பங்குனி பிரம்மோற்சவம். திருத்தேர் வீதியுலா…
அய்யம்பேட்டையில் 200 ஆண்டு பழமை வாய்ந்த கிருஷ்ணன் கோவில் பங்குனி பிரம்மோற்சவம். திருத்தேர் வீதியுலா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில் 200 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி ஆலயத்தில் பங்குனி பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
கடந்த மார்ச் 16-ஆம் தேதி தொடங்கிய விழா இன்று காலையில் ரதாரோஹணம், அதனைத் தொடர்ந்து திருத்தேரில் சுவாமி எழுந்தருளி வேதமந்திரங்கள் முழங்க காட்சியளித்தார். பின்னர் தேர் முற்றத்திலிருந்து நான்கு முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா நடைபெற்றது. இதில் அய்யம்பேட்டை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
-
பங்குனி உத்திரம் சிறப்புகள்….
பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.
பங்குனி உத்திர விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.
சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் பங்குனி உத்திர திருநாள்.
அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் பங்குனி உத்திர நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.
முருக பெருமான் தெய்வானையை பங்குனி உத்திர நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்.
ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான்.
மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.
பங்குனி உத்திர நாள் அன்று காஞ்சியில் காமாட்சி – ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்.
அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் பங்குனி உத்திர நாள் தான்.
பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான்.
பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.
திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளயார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம், கேரளத்தின் திருமணஞ்சேரி, ஆரியங்காவு மற்றும் மண முடிச்சநல்லூர், திருப்பாச்சேத்தி, திருவெணங்காடு, திருவேள்விக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடை மருதூர், கும்பகோணம், திருநல்லூர், திருமழப்பாடி, திருப்பாலைத் துறை, பந்த நல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற்காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், பூவாளூர், சக்தி கோவில் திருமணமங்கலம், விசாலேஸ்வரன் கோவில் தாடிக்கொம்பு, திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று திருமணம் விரைவில் முடிய வேண்டும் என வேண்டி கொண்டு வரலாம். வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.
பங்குனி உத்திரம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ந்தேதி வருகிறது. இந்த நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை, கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக்கல்யாணம் நடக்க உள்ளன.
அழகன் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். செல்வம் படைத்த ஆன்மீக மெய்யன்பர்கள் இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருமணம் செய்விக்கலாம்.
திருவையாறு அருகிலுள்ள திங்களூர் சிவாலயத்தில், பங்குனி உத்திரத் திருநாளில் மட்டும், லிங்கத் திருமேனியை சந்திரன் தனது கிரணங்களால் தழுவி வழிபடுவதைக் காணலாம்.
-
மார்ச் 25 – இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – தெளிவு
ரிஷபம் – நலம்
மிதுனம் – களிப்பு
கடகம் – நிறைவு
சிம்மம் – சினம்
கன்னி – வரவு
துலாம் – அசதி
விருச்சிகம் – லாபம்
தனுசு – பரிசு
மகரம் – பக்தி
கும்பம் – பாசம்
மீனம் – மறதி
சந்திராஷ்டமம் – திருவோணம், அவிட்டம் -
மார்ச் 25 – பங்குனி உத்திரம்
மார்ச் 25 – பங்குனி உத்திரம்
சோபகிருது வருடம் – பங்குனி 12
மார் 25, 2024 திங்கள்
பங்குனி உத்திரம்
நல்ல நேரம் : 6.30 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 4.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : பிரதமை
திதி நேரம் : பவுர்ணமி ம 1.16
நட்சத்திரம் : உத்திரம் கா 11.19
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : திருவோணம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்