Category: சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்

  • விநாயகர் சதுர்த்தி விழா தொடக்கம்

    பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழாவை கொடியேற்றத்துடன் தொடங்கியது. செப்டம்பர் 5 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் 10 நாட்களுக்கு நடைபெறும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    விழாவையொட்டி, காலை 10.15 மணிக்கு மூஷிக வாகனம் பொறிக்கப்பட்டுள்ள வெண்கொடி கோயிலை வலம் வந்து கொடிமரத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சிறப்பு பூஜை நடைபெற்று கொடியேற்றப்பட்டது.

    விழாவில், தினமும் உற்சவ விநாயகர் பல்வேறு வாகனங்களில் திருவீதி வலம் வருவார். 2-ஆம் நாள் திருவிழா முதல் 8-ஆம் நாள் திருவிழா வரை தினமும் காலையில் வெள்ளிக் கேடகத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறவுள்ளது.

    செப்டம்பர் 1-ஆம் தேதி மாலை கஜமுகாசுர சம்ஹாரமும், இரவு திருவீதி உலாவும் நடைபெறும். செப்டம்பர் 2-ஆம் தேதி மயில் வாகனத்திலும், 3-ஆம் தேதி குதிரை வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெற உளன. 4-ஆம் தேதி காலை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை சந்தனக்காப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மாலை 4 மணியளவில் பக்தர்கள் திருத்தேர் வடம் பிடிக்கத் தேரோட்டம் நடைபெறும். இரவு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

    பத்தாம் திருநாளான 5-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று காலை 9 மணியளவில் கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், பகல் 12 மணியளவில் மூலவருக்கு ராட்ஷச கொழுக்கட்டை படைத்து சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 11 மணியளவில் ஐம்பெரும் மூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • காளஹஸ்தி கோயில் ராஜகோபுரம் பணிகள் விறு விறு….

    காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டு வரும் ராஜகோபுரக் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் 1516-ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், வடக்கு ராஜகோபுரத்தைக் கட்டினார்.

    அந்தக் கோபுரம் 2010-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது.

    அதற்குப் பின், மீண்டும் அதே இடத்தில் தற்போது ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, 140 அடி உயர ராஜகோபுர கட்டுமானப் பணிகள் 2011-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி தொடங்கியது.

    2 ஆண்டுகளுக்குள் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்படும் என்று அந்நிறுவனம் உறுதியிட்டுக் கூறியது. ஆனால், சில நிர்வாகக் குறைபாடு காரணமாக கோபுரம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    தற்போது ராஜகோபுரத்தின் கட்டுமானப் பணிகள் 100 அடியை எட்டியுள்ளது. 111-ஆம் அடியில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    எனவே, ராஜகோபுரப் பணிகளை கும்பாபிஷேகத்துக்கு முன் முடிக்க வேண்டும் என்று கட்டுமான நிறுவனத்திடம் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதனால், கட்டடப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

  • கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்திய சிந்து

    ரியோ ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பி.விசிந்து. இவர் ஐதராபாத் சிம்மவாஹினி மகாகாளி கோயிலுக்கு சென்று அவர் நேர்த்திக் கடன் செலுத்தினார்.
    பாவாடை தாவணி உடையணிந்து வந்த சிந்து, பயபக்தியுடன் வேண்டுதல் பொருள்களைத் தலையில் வைத்து சுமந்து சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடைய பெற்றோரும் உடன் வந்தார்கள். சிந்துவின் வருகையால் கோயில் வளாகத்தில் ரசிகர்கள் பெருமளவில் கூடினார்கள்.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் மீண்டும் வருவதாக வேண்டிக்கொண்டேன். அதனையொட்டி இப்போது கோயிலுக்கு வந்து நேர்த்திகடன் செலுத்தியதாகவும் சிந்து தெரிவித்தார். கடவுளின் அருள் வேண்டும் என்று வேண்டினேன். அதேபோல அனைவரின் நலனுக்காகவும் வேண்டினேன். என்றார்.

  • காளஹஸ்தி கோயில் ராஜகோபுரம் பணிகள் விறு விறு….

    காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டு வரும் ராஜகோபுரக் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் 1516-ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், வடக்கு ராஜகோபுரத்தைக் கட்டினார்.

    அந்தக் கோபுரம் 2010-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது.

    அதற்குப் பின், மீண்டும் அதே இடத்தில் தற்போது ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, 140 அடி உயர ராஜகோபுர கட்டுமானப் பணிகள் 2011-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி தொடங்கியது.

    2 ஆண்டுகளுக்குள் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்படும் என்று அந்நிறுவனம் உறுதியிட்டுக் கூறியது. ஆனால், சில நிர்வாகக் குறைபாடு காரணமாக கோபுரம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    தற்போது ராஜகோபுரத்தின் கட்டுமானப் பணிகள் 100 அடியை எட்டியுள்ளது. 111-ஆம் அடியில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    எனவே, ராஜகோபுரப் பணிகளை கும்பாபிஷேகத்துக்கு முன் முடிக்க வேண்டும் என்று கட்டுமான நிறுவனத்திடம் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதனால், கட்டடப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

     

  • கிருஷ்ண ஜெயந்திக்கு பிரத்யேகமான பலகாரங்கள்….

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தில், பல விதமான பலகாரங்களை நமது வீட்டில் செய்து வழிப்படுவது வழக்கம். அவ்வகையில் கிருஷ்ண ஜெயந்திக்கு பிரத்யேகமாக செய்யப்படும் சில பலகாரங்களை எளிமையாக செய்து சுவைத்து மகிழுங்கள். 

    ரவா லட்டு….

    கிருஷ்ணருக்கு பிடித்தது மட்டுமல்ல, நமது பட்ஜெட்டிற்கு ஏற்ற பலகாரங்களில் ரவா லட்டு முக்கியமானது. செலவும் குறைவாகவும், மிகவும் எளிய முறையிலும் வீட்டில் தயாரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்…

    ரவை – ஒரு கப்

    நெய் – 4 டீ ஸ்பூன்

    சர்க்கரை – அரை கப்

    தேங்காய் துருவல் – அரை கப்

    ஏலக்காய் பொடி செய்தது – கால் ஸ்பூன்

    நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி – 10

    சூடான பசும்பால் – அரை கப்

    செய்முறை…

    அகலமான வாணலியில் நெய்யை ஊற்றி அதில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவையை போட்டு நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் கொட்டவும். ரவையில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல், பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதில் பசும்பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். உருண்டை பிடிக்கும் அளவுக்கு பால் ஊற்றினால் போதும். பின்னர் நமக்கு தேவையான அளவில் உருண்டை பிடித்து வைக்கலாம். சாப்பிட சுவையாக இருக்கும். செய்வதற்கும் எளிதான இனிப்பு இது.

    அக்கார அடிசல்….

    நெய், வெல்லம் சேர்த்து செய்த அக்கார அடிசல் எனப்படும் இனிப்பு வகை பண்டிகை நாட்களில் பிரசித்தம். நெய் சொட்டச் சொட்ட செய்யப்படும் இந்த இனிப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

     

    தேவையான பொருட்கள்…

    பாசுமதி அரிசி – 1 கப்

    பாசிப்பருப்பு – ½ கப்

    பால் – 750 மிலி

    வெல்லம் – 2 கப் முந்திரி,

    திராட்சை – கால் கப்

    ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன்

    நெய் – 50 கிராம்

    பச்சைக் கற்பூரம் – சிறிதளவு 

    செய்முறை…

    வெல்லத்தை தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டவும். பின்னர் சுத்தமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். அரிசி, பருப்பை இரண்டு முறை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பாலை 1 கப் தண்ணீர் விட்டு காய்ச்சி பொங்கிவரும் போது அரிசியையும், பருப்பையும் போட்டு அடுப்பை சிம்மில் எரியவிடவும். நன்கு வெந்தபின் வெல்லப்பாகை ஊற்றி அதனுடன் கொஞ்சம் நெய்யை விட்டு அடி பிடிக்காமல் கிளறவும். லேசாக கெட்டியான பின் அதில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறவும். கடைசியில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் பொடி தூவி நன்கு கிளறி இறக்கவும். அக்கார அடிசல் சுவையும், வாசனையும் சூப்பராக இருக்கும். சூடாக சாப்பிடலாம்.

    வெல்லம் பால் கொழுக்கட்டை

    வெல்லம், பால் சேர்த்து செய்த கொழுக்கட்டை சுவையோடு சத்தானதாகவும் இருக்கும்.

    தேவையான பொருட்கள்…

    இட்லி அரிசி – 1 கப்

    எண்ணெய் – 3 டீ ஸ்பூன்

    காய்ச்சிய பால் – 1 கப்

    வெல்லம் – 1 கப்

    ஏலக்காய் பொடி – 1/2 டீ ஸ்பூன்

    சுக்குப் பொடி – 1/2 டீ ஸ்பூன்

    அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

    தேங்காய்த் துருவல் – ஒரு கப் வெல்லப்பாகு

    செய்முறை…

     

     வெல்லத்தை தட்டி பொடியாக்கவும். பொடியாக்கிய வெல்லத்தை ஒரு கப் எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். வெல்லம் தண்ணீரில் முழுமையாகக் கரைந்த பின் வடிகட்டியால் வெல்லக் கரைசலை வடிகட்டவும். பாலைக் காய்ச்சி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். கொழுக்கட்டை செய்முறை இட்லி அரிசி ஒரு கப் எடுத்து மூன்று மணி நேரத்திற்கு ஊற விடவும். ஊறிய அரிசியை நன்றாக இரண்டு, மூன்று முறை கழுவிக் கொள்ளவும். அரிசியை சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு நைஸான மாவாக அரைக்கவும். கொழுக்கட்டை செய்வதற்கான மாவு, இட்லிக்கான மாவைக் காட்டிலும் சற்று கெட்டியான மாவாக இருக்க வேண்டும். எனவே அதற்கு ஏற்றவாறு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்ந்துவிடாமல், குறைந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி, அரைத்த மாவை அதில் சேர்த்து மிதமான தணலில் வைத்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். எண்ணெய் மாவின் எல்லாப் பகுதிலும் சீராகப் பரவும் படி, கரண்டி கொண்டு நன்றாகக் கலக்கி விட்டு வதக்கவும். வதக்கிய மாவை ஆறவிட்டு ஒரே அளவிலான வடிவத்தில் உருட்டிக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதனுடன் ஏலக்காய், சுக்குப் பொடி சேர்க்கவும். அடுப்பின் தணலைக் குறைத்து, கொதிக்கும் தண்ணீரில் உருட்டி வைத்த மாவு உருண்டைகளைச் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக விடவும். கொழுக்கட்டைகள் நன்றாக வெந்து வரும் நிலையில் அதனுடன் காய்ச்சிய பாலையும், வெல்லக் கரைசலையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும். அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டுக் குழைத்து மாவுக் கரைசல் தயாரிக்கவும். இந்த மாவுக் கரைசலை கடைசியாக கொழுக்கட்டைப் பாலில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இது கொழுக்கட்டையின் பாலை திக்காக்க உதவுவதுடன், நல்ல சுவையையும் தரும். விருப்பமானால் சிறிது தேங்காய்த் துருவலை பால் கொழுக்கட்டையின் மீது தூவி பின் அடுப்பிலிருந்து இறக்கவும்.

    பால் கோவா ….

    பாலை வைத்து கொஞ்சம் வித்தியாசமாக செய்யப்படும் பால் கோவா

    தேவையான பொருட்கள்…

    மில்க் மெய்டு – 500 கி

    பால் – 150 மி.லி

    தயிர் – 125 கி

    நெய் – 100 கி

    செய்முறை…

     முதலில் மில்க் மெய்டையும், தயிரையும் ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தில் போட்டு கட்டி கட்டியாக இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். பின் அதோடு பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு அதனை ஒரு மரக்கரண்டியால் தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த கலவையானது முதலில் தண்ணீர் போன்று தான் இருக்கும். அதனைக் கிண்ட கிண்ட சிறிது நேரம் கழித்து கெட்டியாகி விடும். அப்போது நெய்யில் பாதியை அத்துடன் ஊற்றி கிளரவும். அதை கிளர கிளர சிறிது நேரம் கழித்து பால் கோவா பதத்திற்கு வரும் முன் மீதமுள்ள நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிண்டவும். இப்படி கிளரும் போது பால் கோவா ஆனது நெய்யிலிருந்து பிரியும் நிலைக்கு வந்ததும், அதனை இறக்கி விடவும்.

  • மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச ஒலிவடிவ வழிகாட்டி….

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குறித்து அறிய இலவச ஒலிவடிவ தகவல் வழிகாட்டி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    பெங்களூரு அசூரோ டெக்னாலஜீஸ் பொறியாளர் ஸ்ரீகாந்த் அய்யர் குழுவினர் உருவாக்கி இந்த இலவச தகவல் வழிகாட்டி APP ஐ உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோயில் குறித்து முழு தகவல்களை அறிய இயலும். இதன் ஒலி தகவல், எளிய பேச்சு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    கோயிலின் 23 முக்கிய இடங்கள் குறித்து, 45 நிமிடங்கள் கேட்கும் வகையில் இந்த ஒலி வடிவ அமைப்பு உள்ளது. பக்தர்கள் அந்தந்த இடங்களை பார்த்து ரசித்தபடி சுற்றுலா வழிகாட்ட்டி விளக்குவது போன்ற உணர்வுடன் கேட்டு மகிழலாம்.
    அலைபேசியில் கூகுள் பிளே ஸ்டோரில் ‘PINAKIN’ என்ற அப்ளிகேஷனை தேடி, அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின், அதை (PINAKIN) திறந்து ஓ.டி.பி., மூலம் உங்கள் அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும்.
    ‘PINAKIN’ எனும் இலவச அலைபேசி அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து, ஒரு முறை பதிவு செய்த பின், இணையதள வசதி இல்லாமலும் இந்த ஒலிவடிவத்தை கேட்கலாம்.

  • லட்சம் பேருக்கு சுதர்சனக் கிரியா பயிற்சி …..

    வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு ஆனந்த அனுபவப் பயிற்சியினை நடத்தினார். 

    முதல்முறையாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஆன் லைனில்  சுதர்சனக் கிரியா பயிற்சி நடத்தினார். இந்தியா முழுவதிலும் சுமார் 1800 மையங்களில் வாழும் கலையின் ஆனந்த அனுபவப் பயிற்சி நடத்தப்பட்டது.

    நகைச் சுவையுடன் இணைந்த நடத்தப்பட்ட இந்த பயிற்சி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பாராட்டு விமர்சனம் இரண்டையும் சமமாக ஏற்றுக் கொண்டு சாந்தமாக இருக்கும் திறனைக் கற்றறிந்தனர்.

    எளிதாகப் பயிற்சி செய்யக் கூடிய முறையில் கற்றுத்தரப் படும் இந்த நுட்பங்கள் ஒருவர் நல்ல உடல்நலன் மற்றும் ஆனந்தத்தைப் பெற்றுச் செல்வார் என்று வாழும் கலை அமைப்பு தெரிவித்துள்ளது.

     

  • ஊத்துக்காடு கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி உறியடி ….

    திருவாரூர் மாவட்டம், ஊத்துக்காட்டில் உள்ள ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன் திருக்கோயிலில், வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி உறியடி உத்ஸவம் நடைபெற உள்ளது.

    குழந்தைப்பேறு கிடைக்கவும், திருமணத் தடை நீங்கவும், நாகதோஷம் நீங்கவும், நீண்ட நாள் நோய்கள் குணமாகவும், கலைத்துறைகளில் முன்னேற்றம் காணவும் சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறகு இந்த ஊத்துக்காடு ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயில். தென்கோகுலம், தேனுஸ்வாஸபுரம், ஸ்ரீ விஷ்ணு தாண்டவத்ஸ்தலம் என்ற சிறப்புகளையும் இந்த கோயில் பெற்றுள்ளது.

    கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு இக் கோயிலில், ஆகஸ்ட் 24-ம் தேதி, ஏகதின லட்சார்ச்சனையும், 25-ம் தேதி வியாழக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி உறியடி உத்ஸவமும் நடைபெற உள்ளது. 26-ம் தேதி, ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனையும், மஹா தீபாராதனையும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்…. மாவட்டம் வாரியாக….

    274 பாடல் பெற்ற சிவாலங்களை இங்கு காணலாம்… எந்த மாவட்டத்தில் எந்த சிவன் கோயில் பாடல் பெற்றது என விவரமாக தரப்பட்டுள்ளது..

    சென்னை மாவட்டம்….
    வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், சென்னை
    பாடி, திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், சென்னை
    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், சென்னை
    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில், சென்னை
    கடலூர் மாவட்டம்:
    சிதம்பரம் சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், கடலூர்
    திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    சிவபுரி உச்சிநாதர் திருக்கோயில், கடலூர்
    திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில், கடலூர்
    ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    நாகப்பட்டினம் மாவட்டம்:
    ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    மகேந்திரப் பள்ளி திருமேனியழகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    சாயாவனம் சாயாவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    பூம்புகார் பல்லவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் திருக்கோயில், நாகப்பட்டினம்
    கீழையூர் கடைமுடிநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருப்புன்கூர் சிவலோகநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    நீடூர் சோமநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    மேலத்திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
    கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்குரக்கா குந்தளேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    செம்பொனார்கோவில் சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    புஞ்சை நற்றுணையப்பர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    குத்தாலம் உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    சிக்கல் நவநீதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    வலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவாய்மூர் வாய்மூர்நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    கோடியக்காடு கோடிக்குழகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    தஞ்சாவூர் மாவட்டம்:
    பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவாய்பாடி பாலுகந்தநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவிசநல்லூர் யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கொட்டையூர் கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    இன்னம்பூர் எழுத்தறிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவிஜயமங்கை விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவையாறு ஐயாறப்பன் திருக்கோயில், தஞ்சாவூர்
    தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்கானூர் செம்மேனிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கண்டியூர், பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்கருகாவூர் முல்லைவனநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    பாபநாசம் பாலைவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    ஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், தஞ்சாவூர்
    பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கீழபழையாறை வடதளி சோமேசர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவலஞ்சுழி திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கும்பகோணம் நாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கும்பகோணம் சோமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவிடைமருதூர் மகாலிங்கம் திருக்கோயில், தஞ்சாவூர்
    ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருநறையூர் சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    அழகாபுத்தூர் படிக்காசுநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    சிவபுரம் சிவகுருநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    பரிதியப்பர்கோவில் பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருச்சேறை சாரபரமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    அரியலூர் மாவட்டம்:
    திருமழபாடி வைத்தியநாதர் திருக்கோயில், அரியலூர்
    கீழப்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில், அரியலூர்
    திருச்சிராப்பள்ளி மாவட்டம்:
    அன்பில் சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருப்பாற்றுறை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    ஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருச்சி
    உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருச்சி
    உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருச்சி தாயுமானவர் திருக்கோயில், திருச்சி
    திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருநெடுங்குளம் நெடுங்களநாதர் திருக்கோயில், திருச்சி
    கரூர் மாவட்டம்:
    அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், கரூர்
    குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், கரூர்
    கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்
    வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், கரூர்
    திருவாரூர் மாவட்டம்:
    திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    அம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருமாகாளம் மகாகாளநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    சிதலப்பதி முக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    செருகுடி சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    கருவேலி சற்குணேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் திருக்கோயில், திருவாரூர்
    நன்னிலம் மதுவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருவாரூர்
    திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்கண்ணபுரம் ராமநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    கீழ்வேளூர் கேடிலியப்பர் திருக்கோயில், திருவாரூர்
    தேவூர் தேவபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்
    ஆருர் அரநெறி அசலேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர்
    விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயில், திருவாரூர்
    கரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில், திருவாரூர்
    மணக்கால்ஐயம்பேட்டை அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    குடவாசல் கோணேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    ஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    அவளிவணல்லூர் சாட்சிநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    பூவனூர் சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில், திருவாரூர்
    பாமணி நாகநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    இடும்பாவனம் சற்குணநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கற்பகநாதர்குளம் கற்பகநாதர் திருக்கோயில், திருவாரூர்
    தண்டலச்சேரி நீள்நெறிநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கோட்டூர் கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருவண்டுதுறை வண்டுறைநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருநெல்லிக்கா நெல்லிவனநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருநாட்டியத்தான்குடி ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில், திருவாரூர்
    கச்சனம் கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவாரூர்
    மதுரை மாவட்டம்:
    மதுரை சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை
    செல்லூர், மதுரை திருவாப்புடையார் திருக்கோயில், மதுரை
    திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், மதுரை
    திருவேடகம் ஏடகநாதர் திருக்கோயில், மதுரை
    சிவகங்கை மாவட்டம்:
    பிரான்மலை கொடுங்குன்றநாதர் திருக்கோயில், சிவகங்கை
    திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயில், சிவகங்கை
    திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை
    காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை
    புதுக்கோட்டை மாவட்டம்:
    திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை
    ராமநாதபுரம் மாவட்டம்:
    ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோயில், ராமநாதபுரம்
    திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், ராமநாதபுரம்
    விருதுநகர் மாவட்டம்:
    திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில், விருதுநகர்
    திருநெல்வேலி மாவட்டம்:
    குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில், திருநெல்வேலி
    திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி
    திருப்பூர் மாவட்டம்:
    அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில், திருப்பூர்
    திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில், திருப்பூர்
    ஈரோடு மாவட்டம்:
    பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு
    கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு
    நாமக்கல் மாவட்டம்:
    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்
    விழுப்புரம் மாவட்டம்:
    நெய்வணை சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    டி. இடையாறு மருந்தீசர் திருக்கோயில், விழுப்புரம்
    திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    கிராமம் சிவலோகநாதர் திருக்கோயில், விழுப்புரம்
    பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    ஒழிந்தியாம்பட்டு அரசலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    இரும்பை மகாகாளேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    கிளியனூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருவண்ணாமலை மாவட்டம்:
    திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை
    செய்யாறு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
    திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
    குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
    காஞ்சிபுரம் மாவட்டம்:
    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் சத்யநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருமாகறல் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருக்கச்சூர் கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    வேலூர் மாவட்டம்:
    திருவல்லம் வில்வநாதேஸ்வரர் திருக்கோயில், வேலூர்
    திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், வேலூர்
    தக்கோலம் ஜலநாதீஸ்வரர் திருக்கோயில், வேலூர்
    திருவள்ளூர் மாவட்டம்:
    கூவம் திரிபுராந்தகர் திருக்கோயில், திருவள்ளூர்
    திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
    திருப்பாசூர் வாசீஸ்வரர் திருக்கோயில்,
    பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
    திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
    திருவொற்றியூர் படம்பக்கநாதர் திருக்கோயில், திருவள்ளூர்
    மற்ற மாநிலங்கள் கோயில்கள்:
    திருவஞ்சிக்குளம் மகாதேவர் திருக்கோயில், திருச்சூர்
    திருக்கோகர்ணம் மகாபலேஸ்வரர் திருக்கோயில், உத்தர் கன்னடா
    ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில், கர்நூல்
    திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
    திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
    தருமபுரம் யாழ்மூரிநாதர் திருக்கோயில், புதுச்சேரி
    திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், காரைக்கால்
    காளஹஸ்தி காளத்தியப்பர் திருக்கோயில், சித்தூர்
    திருவண்டார்கோயில் பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி

  • தயாராகும் விநாயகர் சிலைகள்

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, குடியிருப்புப் பகுதிகள், வீதிகள், முக்கியச் சந்திப்புகளில் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    இதற்காக சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு வடிவங்கள், அளவுகளில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை போளூர், சேத்துப்பட்டு, கலசப்பாக்கம் வட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கி வந்து தங்கள் பகுதிகளில் வைத்து வர்ணப் பூச்சு முடித்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சிறியது முதல் பல அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    இதற்காக, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விநாயகர் சிலைகளை விற்பனைக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வியாபாரிகள் கொண்டு வந்து குவித்துள்ளனர். அந்த வகையில், வீடுகளில் வைத்து வழிபடக்கூடிய சிறிய அளவிலான விநாயகர் சிலைகளும் தயாரிக்கப்பட்டு வண்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.