Category: தொடர்கள்

தொடர்கள்

  • மேஷம் – ஜூலை மாத ராசிபலன்

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், குரு – சுக ஸ்தானத்தில் புதன் – பஞ்சம ஸ்தானத்தில் செவ், கேது – லாப ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

    கிரகமாற்றம்:

    02.07.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  சனி வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    03.07.2025 அன்று  சுக ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    17.07.2025  அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    17.07.2025 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26.07.2025  அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    29.07.2025  அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய்   ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    ரத்தகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் தெளிவு பிறக்கும். அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்து கொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள். 

    குடும்பத்தில் பிள்ளைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்சினைகள் விலகும். வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பவும் உங்கள் கை வந்து சேரும். சில தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி வாகை சூடும். உங்களின் கவலைகள் படிப்படியாகக் குறையும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு வழக்கொன்றில் வழங்கப்படும் சாதகமான தீர்ப்பினால் வருமானம் பெருகும். 

    தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம். மற்றபடி கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும். 

    உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். 

    அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதே சமயம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிப் பரப்பும் அவதூறுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம். 

    கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ரசிகர்களின் ஆதரவோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும். 

    பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். எங்கும், எப்போதும் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. 

    மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்து மனதை ஒருநிலைப்படுத்துவீர்கள். 

    பரிகாரம்: தினமும் முருகன் ஆலயத்திற்குச் சென்று கந்த சஷ்டி கவசம் சொல்லி வர மனதில் அமைதி மேலோங்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 07, 08

    அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 22, 23, 24

  • மீனம் – ஜூன் மாத ராசிபலன்

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  சுக்கிரன் – தைரிய வீரிய  ஸ்தானத்தில்  சூர்யன், புதன் – சுக ஸ்தானத்தில்  குரு – பஞசம  ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில்  கேது – அயன சயன போக  ஸ்தானத்தில்  சனி, ராஹு என வலம் வருகிறார்கள்
    கிரகமாற்றங்கள்

    02-06-2025  அன்று புதன் பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    08-06-2025 அன்று செவ்வாய் பகவான்  பஞ்சம  ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-06-2025 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    22-06-2025  அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-06-2025 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    எந்த ஒரு பிரச்சனைகளையும் சமாதானமாக பேசி  முடிக்கும் சாமர்த்தியம் மிகுந்த மீனராசியினரே நீங்கள் அனுபவஅறிவு மிக்கவர். 

    இந்த மாதம் உங்களுக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகத்தை தருவதுடன் உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும் தரும். இதுவரை உங்கள் மனதை வாட்டி வந்த சிக்கல்கள் தீரும்.  நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள். அதே வேளையில் தெய்வ அனுகூலமும் உங்களுக்கு உண்டு. பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலங்களும் உண்டு. செய்யும் முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறாமல் போகலாம். எனினும் முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. 

    உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது. 

    தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். தோயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். 

    அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. 

    கலைத்துறையினர் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். 

    அரசியல்வாதிகளுக்கு மாதமுற்பகுதி பாடுபட வேண்டியிருந்தாலும், பிற்பாதி மிகவும் நன்றாக இருக்கும். 

    மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும்.உடல்நலனைப் பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து வந்து மறையும்.

    பூரட்டாதி 4ம் பாதம்:

    இந்த மாதம் விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும். வாகன மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். 

    உத்திரட்டாதி:

    இந்த மாதம் பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த  போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க  பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும்.  சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும்.

    ரேவதி:

    இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம்  போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும்.

    பரிகாரம்: நவகிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வியாழன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள் : 7, 8, 9 

    அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20

  • கும்பம்  -ஜூன் மாத ராசிபலன்

    கிரகநிலை:

    ராசியில்  சனி, ராஹு  – தைரிய வீரிய  ஸ்தானத்தில்  சுக்கிரன் – சுக ஸ்தானத்தில்  சூர்யன், புதன் – பஞசம  ஸ்தானத்தில்  குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய் – களத்திர  ஸ்தானத்தில்  கேது என வலம் வருகிறார்கள்
    கிரகமாற்றங்கள்

    02-06-2025  அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    08-06-2025 அன்று செவ்வாய் பகவான்  ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-06-2025 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    22-06-2025 அன்று புதன் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-06-2025 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    ஒரு பார்வையிலேயே மற்றவரை எடைபோடும் திறமை உள்ள கும்பராசியினரே, நீங்கள் எடுத்த காரியத்தில் எந்த தடை வந்தாலும் பின்வாங்க மாட்டீர்கள். 

    இந்த மாதம் உங்களுக்கு முன்னேற்றங்களை தரும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். 

    குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தமப்திகளிடையே அன்பு மேலோங்கும். மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்து வாங்கலாம்.

    தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள்.  வாகன பிராப்தி உண்டு. வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை. உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம். பதவி உயர்வு, சம்பள் உயர்வு போன்றவை இருக்கும். 
    கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். 

    அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரை சிறப்படையும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத வேதனை மறையும். பிள்ளைகளின் உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும்.

    அவிட்டம் 3, 4 பாதம்:

    இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.

    சதயம்:

    இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில்  அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக  பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம். கவனம் தேவை.

    பூரட்டாதி 1, 2, 3  பாதம்:

    இந்த மாதம் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. உங்கள் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. 

    பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள் : 5, 6 

    அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18

  • மகரம் – ஜூன் மாத ராசிபலன்

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  சனி, ராஹு  – சுக ஸ்தானத்தில்  சுக்கிரன் – பஞசம  ஸ்தானத்தில்  சூர்யன், புதன் – ரண ருண ரோக ஸ்தானத்தில்  குரு – களத்திர  ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய் – அஷ்டம  ஸ்தானத்தில்  கேது என வலம் வருகிறார்கள்
    கிரகமாற்றங்கள்

    02-06-2025 அன்று புதன் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    08-06-2025 அன்று செவ்வாய் பகவான்  களத்திர  ஸ்தானத்தில் இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-06-2025 அன்று சூரிய பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    22-06-2025  அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-06-2025 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    தோற்றத்தில் நலிந்தவர் போல் காணப்பட்டாலும் உள்ளூர உடல்வலிமையும் உள்ளத்தில் உறுதியும் பெற்ற மகர ராசியினரே  ராசிநாதனின் சஞ்சாரத்தால் பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை. 

    குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவி வழியில் சிற்சில கருத்துவேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும். ஆனால் உறவினர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடு வரலாம். அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருங்கள். மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை காணலாம். அக்கம்பக்கத்தாரிடம் இருந்து வந்த கசப்புணர்ச்சி நீங்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். சந்தாண பாக்கியம் கிடைப்பதற்கு யோகமான காலகட்டம் இது. புதிய வீடு மனை வங்க தடைகள் ஏற்படலாம். 

    உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைபளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள். அலைச்சல்கள் வரலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நீங்கள் திறமையாகச் செய்வீர்கள். 

    வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும். அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. மூதலீடுகளை திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்குள் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும். 

    கலைத்துறையினருக்கு மிகப் பொன்னான காலமிது. சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். எதிர்பார்த்த புகழ் ,பாராட்டு கிடைக்கும். 

    மாணவமணிகள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெருவெற்றி பெறலாம். அனைத்திலும் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். 

    உத்திராடம் 2, 3, 4 பாதம்:

    இந்த மாதம் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை. எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. கவுரவம் உயரும்.

    திருவோணம்:

    இந்த மாதம் எடுத்துக் கொண்ட காரியங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள். பணவரத்து இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். 

    அவிட்டம் 1,2 பாதம்:

    இந்த மாதம் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும் பயணங்கள்  ஏற்படலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் கவனம் தேவை.

    பரிகாரம்:
    சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள் : 2, 3, 4, 30 

    அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15, 16

  • தனுசு – ஜூன் மாத ராசிபலன்

    கிரகநிலை:

    தைரிய வீரிய  ஸ்தானத்தில்  சனி, ராஹு – பஞசம  ஸ்தானத்தில்  சுக்கிரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில்  சூர்யன், புதன் – களத்திர  ஸ்தானத்தில்  குரு – அஷ்டம  ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில்  கேது என வலம் வருகிறார்கள்
    கிரகமாற்றங்கள்

    02-06-2025  அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    08-06-2025 அன்று செவ்வாய் பகவான்  அஷ்டம  ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-06-2025 அன்று சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    22-06-2025 அன்று புதன் பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-06-2025 அன்று சுக்ர பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    தன்னடக்கம் மிகுந்த தனுசு ராசியினரே நீங்கள் எதையும் மறைத்து பேசமாட்டீர்கள்.  எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும்.  உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். 
    வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும். ஆனாலும் தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம். நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். அவர்களால் உதவிகள் பெறலாம். சுபநிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம். வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம். குழந்தையில்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கலாம். விருந்து விழா என உல்லாசமாக பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். 

    உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியைக் காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் தவறை உணர்ந்து உங்களிடம் வந்து சரணடைவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவீர்கள். சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்ததை விட அதிகமாக கிடைக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் வந்து சேரும். 
    தொழில் புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். அலைச்சலும் வேலைப் பளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும். அதே வேளையில் நீங்கள் சென்ற இடமெல்லாம் அனுகூலம் ஏற்படும். சேமிப்புகள் அதிகரிக்கும். நல்ல வருமானத்தைக் காண்பர். படிப்படியாக லாபம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். புதிய தொழில் தொடங்குவற்குண்டான வேலைகளுக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும். 

    கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்கனவே இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நெடுநாளாக வராமல் இருந்த பணம் வரும். 
    பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. உங்கள் சொல்லுக்கு பிறர் கட்டுப்படும் நிலையும் உருவாகும். 
    மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். கடந்த சில மாதங்களாக இருந்து வந்த மந்தநிலை அடியோடு மாறும். 

    மூலம்:

    இந்த மாதம் மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். சந்திரன் சஞ்சாரம் உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும்.

    பூராடம்:

    இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.

    உத்திராடம் 1ம் பாதம்:

    இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை  தருவதாக இருக்கும். குடும்பத்தில்  சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக  பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். 

    பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். 

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள் : 1, 27, 28, 29 

    அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13

  • விருச்சிகம் – ஜூன் மாத ராசிபலன்

    கிரகநிலை:

    சுக ஸ்தானத்தில்  சனி, ராஹு – ரண ருண ரோக ஸ்தானத்தில்  சுக்கிரன் – களத்திர  ஸ்தானத்தில்  சூர்யன், புதன் – அஷ்டம  ஸ்தானத்தில்  குரு – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – தொழில்  ஸ்தானத்தில்  கேது என வலம் வருகிறார்கள்
    கிரகமாற்றங்கள்

    02-06-2025 அன்று புதன் பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    08-06-2025 அன்று செவ்வாய் பகவான்  பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-06-2025 அன்று சூரிய பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    22-06-2025 அன்று புதன் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-06-2025 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    ஆன்மிக சிந்தனை மிக்கவர்களான விருச்சிக ராசியினரே நீங்கள் துணிச்சலாக எதையும் செய்வீர்கள். 

    காரிய அனுகூலமும் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக நடந்து கொள்வர்.  தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். 
    குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் என்று சேருவார்கள். கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல்நலனைப் பொறுத்த வரை சிறப்பாக இருக்கும். சளி மற்றும் மார்புத்தொல்லை வரலாம். கவனம் தேவை.  
    உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும். உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். 

    தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். எதிரிகளால் இருந்து வந்த தொந்தரவு நீங்கும். அதே நேரம் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலகட்டமிது. பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழில் அதிக வருவாய் கிடைக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே அரசிடம் இருந்துதான் கோரிக்கைகள் நிறைவேறும். 

    கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். பாராட்டுகளும் கிடைக்கும். 
    அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. மாணவகண்மணிகளுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும்.  பெண்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். 

    விசாகம் 4ம் பாதம்:

    இந்த மாதம் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும்.

    அனுஷம்:

    இந்த மாதம் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும். கடன் பிரச்சனை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.

    கேட்டை:

    இந்த மாதம் வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

    பரிகாரம்: திருமுருகாற்றுபடையை பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள் : 25, 26 

    அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11

  • துலாம் – ஜூன் மாத ராசிபலன்

    கிரகநிலை:

    பஞ்சம  ஸ்தானத்தில்  சனி, ராஹு – களத்திர  ஸ்தானத்தில்  சுக்கிரன் – அஷ்டம  ஸ்தானத்தில்  சூர்யன், புதன் – பாக்கிய ஸ்தானத்தில்  குரு – தொழில்  ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய் – லாப  ஸ்தானத்தில்  கேது  என வலம் வருகிறார்கள்
    கிரகமாற்றங்கள்

    02-06-2025 அன்று புதன் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    08-06-2025 அன்று செவ்வாய் பகவான்  தொழில்  ஸ்தானத்தில் இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-06-2025 அன்று சூரிய பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    22-06-2025 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-06-2025 அன்று சுக்ர பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    நிர்வாக திறமையும் தெளிவான சிந்தனையும் கொண்ட துலாராசியினரே நீங்கள் எதையும் எதிர்த்து நின்று சமாளிப்பீர்கள். 

    மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்கள். இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்த வரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன்விவாதங்களைத் தவிர்க்கவும். 

    குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்னியோன்னியமாக இருப்பர். 
    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். மேலதிகாரிகளின் அனுசரனை இருந்துவரும். 

    வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை அறிவுப்பூர்வமாக சமாளிப்பீர்கள். புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும். கூட்டளிகளிடையே ஒற்றுமை பலம் ஏற்படும். 

    கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால் பிரச்சனைகள் வரலாம். 

    அரசியல்வாதிகள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். மாணவமணிகள் சிரத்தை எடுத்து படிப்பர். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும். 

    பெண்களுக்கு எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும். 

    சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தலை தூக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும்  சமாளிப்பது  நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

    சுவாதி:

    இந்த மாதம் எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. எதிர்பாராத  சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். சந்திரன் சஞ்சாரம் உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை  தரும். 

    விசாகம் 1, 2, 3ம்  பாதம்:

    இந்த மாதம் அவ்வப்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும்.

    பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க  கடன் பிரச்சனை தீரும். மன நிம்மதி கிடைக்கும். 

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள் : 23, 24 

    அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8, 9

  • கன்னி – ஜூன் மாத ராசிபலன்

    கிரகநிலை:

    ரண ருண ரோக ஸ்தானத்தில்  சனி, ராஹு  – அஷ்டம  ஸ்தானத்தில்  சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன், புதன் – தொழில்  ஸ்தானத்தில்  குரு – லாப  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – அயன சயன போக  ஸ்தானத்தில்  கேது என வலம் வருகிறார்கள்
    கிரகமாற்றங்கள்

    02-06-2025 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    08-06-2025 அன்று செவ்வாய் பகவான்  லாப  ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-06-2025 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    22-06-2025 அன்று புதன் பகவான் தொழில்  ஸ்தானத்தில்  இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-06-2025 அன்று சுக்ர பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    எப்பொழுதும் சுறுசுறுப்புடன் காணப்படும் கன்னிராசியினரே நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்த பின்னரே செய்வீர்கள். 

    குறிப்பாக நல்ல பணப்புழக்கத்தையும், பொருளாதார ஏற்றமும் இருக்கும்.  பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்சனையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் வாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் சிற்சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். அதே போல் உறவினர் வகையிலும் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நனமை ஏற்படும். 
    உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். ஆனாலும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம். 

    தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும்.  தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது.  புதிய முதலீடுகளின் போது ஆலோசனைகள் அவசியமாகிறது. பணவிஷயத்தில் தொடர்ந்து அக்கறை தேவை. 

    கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். 

    அரசியல்வாதிகள், பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். மாத பிற்பாதி மிகவும் சிறப்பாக இருக்கிறது.  மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும்.
    பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம் மயக்கம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். 

    உத்திரம் 2, 3, 4 பாதம்:

    இந்த மாதம் வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது. பணம் சார்ந்த கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.

    அஸ்தம்:

    இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.

    சித்திரை 1, 2, பாதம்:

    இந்த மாதம் மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும்  என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

    பரிகாரம்:  கிருஷ்ண பரமாத்மாவை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள் : 21, 22 

    அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6

  • சிம்மம் – ஜூன் மாத ராசிபலன்

    கிரகநிலை:

    ராசியில்  கேது – களத்திர  ஸ்தானத்தில்  சனி, ராஹு – பாக்கிய ஸ்தானத்தில்  சுக்கிரன் – தொழில்  ஸ்தானத்தில்  சூர்யன், புதன் – லாப  ஸ்தானத்தில்  குரு – அயன சயன போக  ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய்  என வலம் வருகிறார்கள்
    கிரகமாற்றங்கள்

    02-06-2025 அன்று புதன் பகவான் தொழில்  ஸ்தானத்தில்  இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    08-06-2025 அன்று செவ்வாய் பகவான்  அயன சயன போக  ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    14-06-2025 அன்று சூரிய பகவான் தொழில்  ஸ்தானத்தில்  இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    22-06-2025 அன்று புதன் பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-06-2025 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    எவ்வளவு சிக்கலான விஷயத்திலும் குழப்பம் இல்லாமல் சட்டென்று ஒரு முடிவு எடுக்கும் சிம்மராசியினரே இந்த மாதம் உங்களுக்கு காரிய அனுகூலம் தரும் மாதமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  எந்தத் துறையிலும் முத்திரையைப் பதிப்பீர்கள்.  அதே வேளையில் தொழில் நிமித்தமாக  இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலையை உருவாகும். உங்களின் தரத்தை விட தீயோரோடு உள்ள சகவாசத்தை குறைக்க வேண்டும். எனினும் தெய்வ அனுகூலத்தால் விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும். உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும். பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம். பூமி வகையில் இருந்து வந்த தடைகள் அகலும். உங்கள் முயற்சிகளில் வெற்றியையும், பொருளாதார வளத்தையும் தனவாக்கு இடத்தில் இருக்கும் ராகு அள்ளித் தருவார். 

    குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். மிகவும் உதவிகரமாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும். மாத பிற்பாதியில் புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால் அதற்காக சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம். 

    உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர். வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். 

    வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். இருப்பதை சிறப்பாக நடத்துவதற்கு முயற்சி செய்யவும். அறிவைப் பயன்படுத்தி ஏற்றம் காணலாம். 

    பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். கணவர் மற்றும் அண்டை அயலாரின் அன்பும் பாசமும் கிடைக்கும். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். பித்தம், மயக்கம் தொடர்பான உபாதைகள் வரலாம்

    கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். புகழ் பாராட்டு கிடைக்கும். 

    மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். பலருக்கு வெற்றி நிச்சயம். பொதுநல் சேவகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். 

    அரசியல்வாதிகளுக்கு மாத பின்பகுதி நன்றாக இருக்கும். எதிர்பார்த்த பதவியை அடையலாம். 

    மகம்:

    இந்த மாதம் வீண் மனக்கவலையை  உண்டாக்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

    பூரம்:

    இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு  செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

    உத்திரம் 1ம் பாதம்:

    இந்த மாதம் குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.

    பரிகாரம்:  தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்க பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள் : 19, 20 

    அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 4, 30

  • கடகம் – ஜூன் மாத ராசிபலன்

    கிரகநிலை:

    ராசியில்  சந்திரன், செவ்வாய் – தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  கேது – அஷ்டம  ஸ்தானத்தில்  சனி, ராஹு – தொழில்  ஸ்தானத்தில்  சுக்கிரன் – லாப  ஸ்தானத்தில்  சூர்யன், புதன் – அயன சயன போக  ஸ்தானத்தில்  குரு என வலம் வருகிறார்கள்
    கிரகமாற்றங்கள்

    02-06-2025 அன்று புதன் பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    08-06-2025 அன்று செவ்வாய் பகவான்  ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-06-2025 அன்று சூரிய பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    22-06-2025 அன்று புதன் பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    29-06-2025 அன்று சுக்ர பகவான் தொழில்  ஸ்தானத்தில்  இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    வாழ்க்கையில் எதையும் நன்கு அனுபவித்து ரசிக்கும் கடகராசியினரே நீங்கள் நிலையற்ற தன்மை கொண்டவர். இந்த மாதம் உங்களுக்கு எல்லா கஷ்டங்களும் நீங்கி நிம்மதி  உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும்.  

    உங்களின் பொருளாதார வலிமை கூடும்.அதே வேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை. இழப்பு ஏற்படலாம்.  வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைவளம் முன்னேறும். அதே வேளையில் தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். சுகஸ்தானத்தில் இருக்கும் சனியால் வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள். 

    குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உறவினர் வகையிலும் கூட மனஸ்தாபம் உருவாகலாம். அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். 

    உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன்பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். 

    வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும். இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். 

    பெண்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் வகையில் நன்மைகள் ஏற்படும். 

    கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். 

    அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. 

    புனர்பூசம் 4ம் பாதம்:

    இந்த மாதம் உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. 

    பூசம்:

    இந்த மாதம் அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.  நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

    ஆயில்யம்:

    இந்த மாதம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். சாதகமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். 

    பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும். 

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – புதன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள் : 17, 18 

    அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28, 29