Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • எதிரிகள் விலக அதிக சக்தி வாய்ந்த ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம்….

    அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக் கூடிய வல்லமை படைத்தவர் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது முகங்களான கருடமுகம் பிணி நீக்கும். வராக முகம் செல்வம் அளிக்கும். அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லா நலமும் தரும். நரசிம்மமுகம் தீமையைப் போக்கும். ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் தரும்.

    பக்தர்கள் வேண்டியதை வேண்டியபடி அருள்கிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது தாடை நீண்டு இருக்கும். முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹ முகம், அனுமன் முகம், ஹயக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடி வில் ஒருங்கிணைந்து உள்ளார்.

    கிழக்கு முகம் – ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம்……

    கீழ்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

    "ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா"

    தெற்கு முகம்

    நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள், பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம்.

    கீழ்கண்ட  ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்.

    "ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய
    தக்ஷண முகேகரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா"

    மேற்கு முகம் – கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும்.

    கீழ் கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்.

    "ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம
    முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா"

    வடக்கு முகம்

    வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் ஆகியவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும்.

    கீழ்கண்ட  ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்.

    "ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதி வராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா".

    மேல் முகம்

     ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.

    இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர். கீழ்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

    "ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா".

    அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கு சொல்வன்மை, ஆரோக்கியம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும்.

     

  • மே 04 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – முயற்சி
    ரிஷபம்         – சினம்
    மிதுனம்     – வரவு   
    கடகம்         –  அனுகூலம்  
    சிம்மம்         –   விவேகம்
    கன்னி         –    புகழ்
    துலாம்         –     இன்பம்  
    விருச்சிகம்     –  சாந்தம்
    தனுசு         –     ஆதரவு
    மகரம்         –    உயர்வு  
    கும்பம்         –      அமைதி
    மீனம்         –      நன்மை
    சந்திராஷ்டமம்    –        புனர்பூசம், பூசம்

  • மே 04 – அக்னி நட்சத்திரம் ஆரம்பம்…

    மே 04 – அக்னி நட்சத்திரம் ஆரம்பம்…
    குரோதி வருடம் – சித்திரை – 21
    மே 4, 2024
    சனி
    அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
    நல்ல நேரம் : 7.30 – 8.304
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : ஏகாதசி
    திதி நேரம் :  ஏகாதசி மா 6.10
    நட்சத்திரம் :  பூரட்டாதி இ 7.49
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • பத்திரகாளி அம்மன் கோயில் பொங்கல் கொடை விழா…

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் உற்சாக உற்சவ கொடை  விழா' கொடியேற்றத்துடன் கடந்த 24 ம் தேதி காப்பு  11 நாள் திருவிழா கட்டுதல் கொடியேற்றத்துடன்  தொடங்கியது.

    திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும்  பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு  அபிஷேக அலங்காரம் தீப ஆராதனை நடைபெற்றது.

     திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியில் பத்திரகாளி அம்மன் கோயில் முன்பாக பெண்கள் சிறுமிகள் கும்மி பாட்டு கும்மியாட்டம் நடனமாடி அம்மனைப் போற்றி துதி பாடி மகிழ்ந்தனர் அதனைத் தொடர்ந்து வானவேடிக்கு மேல தாளங்களுடன் 1008 முளைப்பாரிகளை தலையில் சுமந்து சென்று, சாயல்குடி பேருந்து நிலையம் தூத்துக்குடி –  ராமநாதபுரம், மற்றும் கமுதி, அருப்புக்கோட்டை ஆகிய முக்கிய சாலைகளின் வழியாக  ஊர்வலமாக சென்று கங்கை நீரில் முளைப்பாரிகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள்  கங்கை நீரில் கரைத்து சென்றனர்.

     

  • மே 03 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – லாபம்
    ரிஷபம்         – ஆசை  
    மிதுனம்     – நன்மை  
    கடகம்         –  நட்பு
    சிம்மம்         –   ஆக்கம்  
    கன்னி         –    இன்பம்
    துலாம்         –     சுகம்
    விருச்சிகம்     –  தடங்கல்   
    தனுசு         –     அமைதி   
    மகரம்         –    போட்டி
    கும்பம்         –      முயற்சி  
    மீனம்         –      பொறுமை
    சந்திராஷ்டமம்    –        திருவாதிரை, புனர்பூசம்

  • மே 3 – சுபமுகூர்த்த நாள்…

    மே 3 – சுபமுகூர்த்த நாள்…
    குரோதி வருடம் – சித்திரை – 20
    மே 3, 2024
    வெள்ளி
    சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.30 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : தசமி
    திதி நேரம் :  தசமி இ 8.36
    நட்சத்திரம் :  சதயம் இ 9.26
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : திருவாதிரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • மே 01 – மே தினம்…

    மே 1 – மே தினம்…
    குரோதி வருடம் – சித்திரை – 18
    மே 1, 2024
    புதன்
    நல்ல நேரம் : 9.30 – 11.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : அஷ்டமி
    திதி நேரம் :  சப்தமி அ.கா 3.10
    நட்சத்திரம் :  உத்திராடம் அ.கா 1.42
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : ரோகிணி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • மே 01 – ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – மகிழ்ச்சி
    ரிஷபம்         – விருத்தி
    மிதுனம்     – செலவு
    கடகம்         –  ஏமாற்றம்  
    சிம்மம்         –   வரவு
    கன்னி         –    சிக்கல்
    துலாம்         –     வெற்றி
    விருச்சிகம்     –  தேர்ச்சி  
    தனுசு         –     நன்மை  
    மகரம்         –    கவலை
    கும்பம்         –      எதிர்ப்பு
    மீனம்         –      ஆர்வம்
    சந்திராஷ்டமம்    –        ரோகிணி, மிருகசீருஷம்

  • மீனம் ராசிக்கு மே மாதம் ராசிபலன்….

    மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

    கிரகநிலை:

    ராசியில் புதன், ராஹூ, செவ்வாய் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், குரு, சுக்ரன்   – களத்திர ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    01-05-2024 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    07-05-2024 அன்று புதன் பகவான்  ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    13-05-2024 அன்று சூர்ய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    20-05-2024 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    24-05-2024 அன்று புதன் பகவான்  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    31-05-2024 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    தனது செயல்களை பிறர் அறியாத வண்ணம் சூட்சுமமாய் செயல்படுத்தும் மீன ராசி அன்பர்களே,

    இந்த மாதம் அனுகூலமான பேச்சுகளால் பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். சமூகத்திலும், அரசு சார்ந்த வகைகளிலும் தேவையான நற்பெயர் உண்டாகும். வீட்டில் ஓரிடத்தில் வைத்த பொருட்களை அங்கும் இங்கும் தேடுவதும், வாகனங்களை பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தினால் காணாமல் போகும் வாய்ப்புகளும் உள்ளது.

    குடும்பத்தில் மூத்த சகோதர வகையினர் தந்தைக்கு நிகரான கனிவுடன் உங்கள் நல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவார். தந்தையின் உடல்நலத்தில் தனித்த கவனமும், அவருடன் மற்றவர்கள் பேசும் வார்த்தைகளில் வாக்குவாதம் இல்லாத நிலையில் இருத்தல் வேண்டும். இதனால் தந்தையின் ஆயுளுக்கு பங்கம் இல்லா நிலை உண்டு.

    உத்தியோகஸ்தர்கள் அறிமுக மில்லாத நபர்களுக்கு தகுதிக்கு மீறிய உதவிகளை செய்யாமல் இருப்பது உத்தம பலனை உருவாக்கித் தரும். உடன் பணிபுரிவோரின் நற்செயல்கள் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் பணிபுரியும் அலுவலகத்தின் ஒத்துழைப்பால் இனிதே நடக்கும்.

    தொழிலதிபர்கள் நன்மைகளை ஏராளமாக அனுபவிக்கக் கூடிய நல்ல நேரம். உங்களுடைய தீராத பணிச்சுமையிலும் உங்களது குழந்தைகளின் நலனுக்காக பெண் தெய்வ வழிபாடுகளை பின்பற்றி வருபவர்கள் தாங்கள் வழிபடும் தெய்வ அருளைப் பெற்று தங்கள் புத்திர வகையில் நல்ல முன்னேற்றமான பலன்களை பெறுவார்கள்.

    பெண்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சக ஊழியர்களின் தகுந்த உதவிகளால் நிர்ணயிக்கப்பட்ட பணி இலக்குகளை சுலபமாக செய்து உயர் அதிகாரிகளிடம் தகுந்த நற்பெயர் பெறுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், தெய்வ அருளால் குடும்பத்தில் சுமூகமான வாழ்க்கை முறைகளைப் பெற்று மனமகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

    கலைஞர்கள் ஆரோக்கிய குறைபாடுகளால் உங்கள் வேலையை தக்க நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். தக்க நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். தொழில் விவகாரத்தில் பொறுமையுடன் செயல்பட்டால் அனைத்தையும் இனிதே முடிக்க முடியும்.

    அரசியல்வாதிகள் ஆதாயம் கிடைக்க நல்லோர் உடன் இருத்தல் வேண்டும். நம்மவர் என்று எண்ணி எதிலும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். அரசு விவகாரங்களில் பொறுமையாக கையாள வேண்டிய விசயங்கள் அனைத்தையும் அப்படியே சற்று தள்ளிப்போடுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருங்கள்.  

    மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு தேவையான அத்தனை உதவிகளையும் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். படிப்பில் புதிய உத்வேகத்துடன் செயல்பட திறமையான நண்பர் ஒருவர் கிடைப்பார். போக்குவரத்து மற்றும் உயரமான இடங்களில் தகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது.

    பூரட்டாதி 4ம் பாதம்:

    இந்த மாதம் அலைச்சல் அதிகமாக இருப்பதுடன் உடல் சோர்வும் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும், கவலை வேண்டாம். மகன் அல்லது மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள்.

    உத்திரட்டாதி:

    இந்த மாதம் அடிக்கடி உங்களை நீங்களே பெருமையாக பேசிக் கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் ஒன்று ஏற்படலாம், அது உங்களுக்கு வெற்றிக்காகவே இருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.

    ரேவதி:

    இந்த மாதம் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். சிலருக்கு அலர்ஜி சம்மந்தமான உபாதைகள் வந்து மறையும். வருமானத்திற்கு குறை ஏற்படாது.

    பரிகாரம்: ராமபிரானை வழிபாடு செய்வதாலும் அவரது நற்செயல்களை பின்பற்றி நடப்பதாலும், ராம நாமத்தை உச்சரிப்பதாலும் இன்னல்கள் இல்லாத இனிய வாழ்வை பெறலாம்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் – சனி
    சந்திராஷ்டம தினங்கள்: 21, 22
    அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • கும்ப ராசிக்கு மே மாதம் எப்படி இருக்கும்?

    கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

    கிரகநிலை:

    ராசியில் சனி – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், ராஹூ, செவ்வாய் – தைரிய வீரிய ஸ்தானத்தில்  சூர்யன், குரு, சுக்ரன்   – அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    01-05-2024 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    07-05-2024 அன்று புதன் பகவான்  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    13-05-2024 அன்று சூர்ய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    20-05-2024 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    24-05-2024 அன்று புதன் பகவான்  தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    31-05-2024 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    தகுதிக்கேற்ப வாழ்ககை நடத்தி கிடைத்ததை பெரிதென எண்ணி வாழ்ந்திடும் கும்ப ராசி அன்பர்களே,

    இந்த மாதம் உங்கள் மனதிலும், செயலிலும் உற்சாகம் நிறைந்திருக்கும். மனதில் தைரியமும், உற்சாகமும் உண்டாகும். வீடு, வாகன வகைகளில் முன்னேற்றமான நற்பலன்கள் உண்டாகும். ஆசாபாச செயல்கள் மற்றும் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடாமல் இருப்பதாலும், லாகிரி வஸ்துகளை ஒதுக்கி வைப்பதாலும் மட்டுமே ஆரோக்கிய உடல்நலத்தை பெற முடியும்.

    குடும்பத்தில் தந்தை மற்றும் சகோதரர் வகையில் கடந்த காலங்களில் உங்களுக்குள் இருந்த மனவேற்றுமைகளை விலகுவதற்கான மகிழ்வான சந்தர்ப்பங்கள் ஏற்படும். பூர்வ புண்ணிய சொத்துகளில் வம்பு வழக்கு ஏதுமிருந்தால் அனுகூலமான தீர்வு உண்டாகும். விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் நலம் கிடைக்கும். அடுத்தவர்களின் நட்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.  

    உத்தியோகஸ்தர்கள் நல்ல முறையில் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். திருப்தியான மனப் போக்கு உண்டாகும். அடுத்தவர்களின் கருத்துக்கு இடம் கொடாமல் நீங்களே முடிவெடுத்துக்  கொண்டால் பிரச்சனைகளுக்கு இடமே இல்லை. மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். பதவி உயர்வை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான தகவல் கிடைக்கும்.

    தொழிலதிபர்கள் தொழிலில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். ஆதாயத்தின் ஒருபகுதியை அறப்பணிகளுக்கு செலவிடும் நிலைமைகள் உண்டாகி உங்கள் மனதை நல்வழிப்படுத்தும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு தொழிலில் புதிய ஆதாயத்தை ஏற்படுத்தும். தொழிலில் உங்களை புறக்கணித்தவர்கள் அண்டி வருவார்கள். நன்மதிப்பும், மரியாதையும் உண்டாகும்.

    பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், அதிக பட்ச வேலைகளை தானே விரும்பி ஏற்றுக் கொண்டு செயல்படுவர். குடும்பத்தவரின் தகுந்த ஒத்துழைப்பு ஊக்கம் பெறச் செய்யும். ஆபரணங்களை தகுந்த முறையில் பாதுகாப்புடன் அணிந்து செல்வது சிரமங்கள் வராது தவிர்க்கும். அதே நேரம், ஆடை, ஆபரணங்கள் ஏராளமாக சேரும்.

    கலைஞர்கள் அனுகூலமான தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நன்மதிப்பும், மரியாதையும் கிட்டும். பல மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறலாம். உங்களுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பலவழிகளிலிருந்தும் பண வரவுகள் வரலாம். முக்கியமான நிகழ்வுகள் மன மகிழ்ச்சியை அளிக்கும்.

    அரசியல்வாதிகள் மூத்த தலைவர் ஒருவரால் நீங்கள் புகழப்படுவீர்கள். உடனிருப்போரின் தகுந்த ஒத்துழைப்பை பெற முயற்சிப்பீர்கள். தகுந்த கவனத்துடன் செயல் படுங்கள் ஆதாயம் கிட்டும்.

    மாணவர்கள் தங்கள் படிப்பில் தேவையான கவனம் செலுத்துவதால் அனைவரிடமும் நற்பெயர் பெறமுடியும். தந்தை மற்றும் சகோதர, சகோதர வகையில் அன்பான சூழ்நிலை உருவாகும். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிறர் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பாகி விடுவீர்கள். எச்சரிக்கை தேவை.

    அவிட்டம் 3, 4 பாதம்:

    இந்த மாதம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். நீங்கள் எதிர் பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக ஒவ்வொன்றாக நடந்தேறும் என்பதில் ஐயம் வேண்டாம்.

    சதயம்:

    இந்த மாதம் அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தூக்கமின்மை ஏற்படும் மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

    பூரட்டாதி 1, 2, 3  பாதம்:

    இந்த மாதம் நல்ல விசயங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும். சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் திறமையை நீங்கள் பாராட்டி அவர்களுக்கு சன்மானமும் உங்கள் கையால் வழங்குவீர்கள்.

    பரிகாரம்: ஐயப்பன், அய்யனார், சாஸ்தா ஆகிய தெய்வங்களை தகுந்த முறையில் வழிபாடு செய்வதினால் நற்பலன் உண்டாகும். கிருத்திகை தோறும் முருகனை வழிபாடு செய்யுங்கள்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – சனி
    சந்திராஷ்டம தினங்கள்: 18, 19, 20
    அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA