Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • தஞ்சாவூர் பெரியகோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா, கனிவகை அலங்காரம்…

    உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா, கனிவகை அலங்காரம்,பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர் பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது, இக்கோவிலில் தனி சன்னதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்,

    இந்நிலையில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி பெருவிழா தஞ்சை பெரியகோயிலில் கடந்த ஜூலை 5 ந்தேதி  தொடங்கியது,10நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் நடைபெறும், அதைப்போல் 9ம் நாளாக இன்று  ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு  கனிவகை அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது,  இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டனர்.

     

  • ஜூலை 14 – ராமநாதபுரம் கோதண்டராமர் தேர்…

    ஜூலை 14 – ராமநாதபுரம் கோதண்டராமர் தேர்…
    குரோதி வருடம் – ஆனி 30
    ஜூலை 14 – 2024
    ஞாயிறு    
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : அஷ்டமி
    திதி நேரம் :  அஷ்டமி மா 4.02
    நட்சத்திரம் :  சித்திரை இ 9.16
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : பூரட்டாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • ஜூலை 13 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நலம்
    ரிஷபம்         – லாபம்
    மிதுனம்     – பொறுமை   
    கடகம்         –  போட்டி
    சிம்மம்         –   நட்பு
    கன்னி         –    ஆதரவு
    துலாம்         –     சாந்தம்  
    விருச்சிகம்     –  கவனம்
    தனுசு         –     உதவி
    மகரம்         –    தேர்ச்சி
    கும்பம்         –      புகழ்
    மீனம்         –      நற்செயல்  
    சந்திராஷ்டமம்    –         திருவோணம், அவிட்டம்

  • ஜூலை 13 – இன்றைய நல்ல நேரம் …

    ஜூலை 13 – இன்றைய நல்ல நேரம்  …
    குரோதி வருடம் – ஆனி 29
    ஜூலை 13 – 2024
    சனி    
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 1.30 – 3.00
    குளிகை : கா 6.00 – 7.30
    ராகு : கா 9.00 – 10.30
    திதி : அதிதி
    திதி நேரம் :  சப்தமி ம 2.13
    நட்சத்திரம் :  அஸ்தம் மா 6.53
    யோகம் : மரண
    சந்திராஷ்டமம் : சதயம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா…

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நடராஜர், சிவகாமசுந்தரி நடனமாடியப்படியே கோயில் கருவறைக்கு சென்றனர்.

    பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் மார்கழி மாதம் ஆருத்ர தரிசன விழாவும் நடைபெறுவது வழக்கம் இந்த இரண்டு திருவிழாக்களிலும் கோவில் கருவறையில் உள்ள மூலவர் நடராஜர் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது சிறப்பு வாய்ந்ததாகும். இத்தகைய சிறப்பு மிக்க ஆனி திருமஞ்சன தரிசன விழா கடந்த மூன்றாம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா தினந்தோறும் நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒன்பதாம் நாள்  நிகழ்வாக கருதப்படும் தேரோட்டம் நேற்று நடைபெற்ற முடிவடைந்தது. நேற்று தேர் நிலையை வந்தடைந்தவுடன் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட சுவாமிகள் கீழே இறக்கப்பட்டு கோவில் உள்ளே உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில்  சித்சபையில் வைக்கப்பட்டனர்.

    இனறு காலையில் இருந்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு தொடர்ந்து ஆபரண மற்றும் ரகசிய பூஜைகள் செய்யப்பட்டு ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து நடராஜர் சிவகாமசுந்தரி நடனம் ஆடிய படியே கோயில் கருவறைக்கு செல்கின்றனர். இந்த காட்சியை காண்பதற்கு பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை புரிந்தனர். தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலில் திருட்டுப் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு காவல்துறையினர் கண்காணித்தனர்.

  • ஜூலை 12 – சஷ்டி நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  உயர்வு
    ரிஷபம்         – நட்பு
    மிதுனம்     – வெற்றி  
    கடகம்         –  பயம்
    சிம்மம்         –   பகை
    கன்னி         –    அமைதி
    துலாம்         –     தெளிவு
    விருச்சிகம்     –  ஆதரவு
    தனுசு         –     உறுதி
    மகரம்         –    பெருமை
    கும்பம்         –      பொறுமை
    மீனம்         –      ஓய்வு
    சந்திராஷ்டமம்    –         உத்திராடம், திருவோணம்

  • ஜூலை 12 – ஆனி உத்திர தரிசனம் …

    ஜூலை 12 – ஆனி உத்திர தரிசனம் …
    குரோதி வருடம் – ஆனி 28
    ஜூலை 12 – 2024
    வெள்ளி
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : சப்தமி
    திதி நேரம் :  சஷ்டி ம 12.15
    நட்சத்திரம் :  உத்திரம் மா 4.20
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் : அவிட்டம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • ஜூலை 11 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  ஆக்கம்
    ரிஷபம்         – அச்சம்
    மிதுனம்     – ஓய்வு
    கடகம்         –  புகழ்
    சிம்மம்         –   பிரீதி
    கன்னி         –    ஊக்கம்  
    துலாம்         –     தனம்
    விருச்சிகம்     –  நலம்
    தனுசு         –     வெற்றி
    மகரம்         –    போட்டி
    கும்பம்         –      தெளிவு
    மீனம்         –      லாபம்
    சந்திராஷ்டமம்    –         பூராடம், உத்திராடம்

  • ஜூலை 11 – ஆனி உத்திர அபிஷேகம் …

    ஜூலை 11 – ஆனி உத்திர அபிஷேகம் …
    குரோதி வருடம் – ஆனி 27
    ஜூலை 11 – 2024
    வியாழன்
    சிதம்பரத்தில் தேர்
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00
    எமகண்டம் : கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : சஷ்டி
    திதி நேரம் :  பஞ்சமி கா 10.19
    நட்சத்திரம் :  பூரம் ம 1.46
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : திருவோணம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • திருத்தணி காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்…

    திருத்தணி அருகே அம்மையார் குப்பத்தில் புராதன காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம். 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. பெரும் திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர் …

    திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே‌.பேட்டை அருகே அம்மையார்குப்பத்தில் புராதன காமாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று. 12 ஆண்டுககள் கடந்து விட்ட நிலையில் கோயில் அறங்காவல் குழு சார்பில் திருப்பணிகள் மேற்கொண்டு கோயில் கோபுரம்,மூலவர் சன்னதி உட்பட சன்னதிகள் புனரமைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டது.

    இதனை தொடர்ந்து திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு கோயில் மற்றும் கிராம வீதிகள் வண்ண விளக்குகள் மற்றும் மலர்கள்,வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு நித்திய ஹோம பூஜைகள் நடைபெறும் ‌.

    விழாவில் மூன்றாம் நாளான இன்று காலை மஹா பூர்ணாஹுதி, ஹோம பூஜைகள், தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, கோபுர கலசம் மற்றும் மூலவர் சன்னதி கோபுர உச்சியில் புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.அப்போது கோயில் முன்பு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது தீர்த்த நீர் தெளிக்கப்பட்டது.