Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • murugan-thirumeni-viyarkum-adisayam

    நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தில் நவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முருகன் சிங்காரவேலவர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    சூரனை சம்ஹாரம் செய்வதற்காக இத்தலத்தில் உள்ள பார்வதி தேவி, சிங்காரவேலவருக்கு வேல் வழங்கியதால் இங்கு எழுந்தருளியுள்ள அம்மனுக்கு வேல்நெடுங்கண்ணி அம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. 64 சக்திபீடங்களில் இந்த கோவிலும் ஒன்றாகும்.

    போருக்கு புறப்பட்டு முன்பு இங்குள்ள அம்மன் வேல்நெடுங்கண்ணியிடம் முருகன் வேல் வாங்கும் போது அவரது நெற்றியில் வியர்வை துளிகள் அரும்பி இருக்கும். கந்தசஷ்டி விழாவில் முருகன், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியின் போது இன்றும் அந்த அதிசயத்தை நாம் காணலாம்.

    இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்காரவேலர், தேரில் இருந்து கோவிலுக்கு எழுந்தருளி வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் சக்திவேலே பெற்று சூரபத்மனை வதம் செய்தார்.

  • 28

    திருப்பதி ஏழுமலையானுக்கு வரும் அக்டோபர் 28 ஆம் தேதி புஷ்ப யாகம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையில் ஏழுமலையானுக்கு ஒவ்வோரு ஆண்டும் வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த பின் வரும் திருவோண நட்சத்திரத்தன்று, தேவஸ்தானம் வருடாந்திர புஷ்ப யாகத்தை நடத்தும். அதன்படி, இந்த ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 28 ஆம் தேதி காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியை சம்பங்கி பிரகாரத்தில் எழுந்தருளச் செய்து அர்ச்சகர்கள் ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்த உள்ளனர்.
    தருமஞ்சனம் முடிந்தவுடன், பலவித மலர்களால் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடைபெற உள்ளது. இதற்காக 7 டன் மலர்கள் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட உள்ளன. இதன் காரணமாக அன்றைய தினம் சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

  • 2017-10-25-14-14-26

    பக்தர்களுக்கு பாதுகாப்பு நிறைந்த பகுதியாக மாற்ற திருமலை முழுவதும் 1,400 சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதியில் பாதுகாப்பு கருதி 1,400 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையை பாதுகாப்பு நிறைந்த பகுதியாக மாற்ற தேசிய சிறுதொழில்கள் கார்ப்பரேஷனுடன் இணைந்து சிசிடிவி கேமரா, டிவி டிஸ்ப்ளே உள்ளிட்டவை வாங்கப்பட்டு பொருத்தப்படவுள்ளது. இதுகுறித்து திருப்பதி ஏழுமலையான் கோவில் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், முதற்கட்டமாக 250 சிசிடிவி கேமராக்கள் கோவிலுக்குள் மட்டும் 30 நாட்களுக்குள் பொருத்தப்பவுள்ளதாக தெரிவித்தார். பாதுகாப்பு பணிகள் குறித்து திருமலையில் என்.எஸ்.ஐ.சி நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டதாக சீனிவாச ராஜூ கூறினார். படிப்படியாக திருமலை முழுவதும் மீதமுள்ள இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  • 2017-10-25-13-37-59

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விமர்சையாக நடந்தது. பக்தி கோஷங்கள் விண்ணதிர முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. பக்தி கோஷங்கள் விண்ணதிர முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஆணவம் கொண்ட சூரபதுமனை, முருகப்பெருமான் சம்ஹாரம் செய்வதே கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஆகும். அசுரர்களால் சிறைவாசம் அனுபவித்த தேவர்களை விடுவிக்கவும், கொடுமைகள் செய்த அசுரத் தலைவனான சூரபதுமனை வதம் செய்யவும் சிவபெருமானின் மைந்தனாக, முருகப்பெருமான் அவதரித்தார். தன்னை எதிர்த்த சூரனை அழித்ததோடு, அவனை ஆட்கொண்டு தன்னோடு இருக்குமாறு அருளிய கந்தனின் கருணை நிகழ்வுதான் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் கோவிலானது, கந்தனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகவும், திருச்சீரலைவாய் என்ற திருநாமத்துடனும் விளங்குகிறது. சுவாமி, வள்ளி, தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். தீபாராதனைக்கு பின் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் இருந்து சூரபதுமன் தனது படை வீரர்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மாலையில் கோவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். சுவாமி எப்போது போருக்கு வருவார்? என்று எதிர்பார்த்து காத்திருந்தான். சுவாமி ஜெயந்திநாதர், வண்ண மலர்களாலான மாலைகளை அணிந்து, சிறப்பு அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபதுமனை வதம் செய்ய கடற்கரைக்கு புறப்பட்டார். சுவாமி வருகையை எதிர்பார்த்து கடற்கரையில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், முருகப்பெருமானை கண்டதும் பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பினர். சூரபதுமனின் தம்பியும், யானைமுகம் கொண்டவனுமாகிய தாரகாசூரன், முதலில் தனது பரிவாரங்களுடன், முருக பெருமானை நோக்கி போர் புரிய சுற்றி வந்தான். தாரகாசூரனை, முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். பின்னர் மற்றொரு தம்பியான சிங்கமுகம் கொண்ட, சிங்கமுகாசூரன் முருக பெருமானை வலம் இடமாக சுற்றி வந்து, நேருக்கு நேர் போரிட தயாரானான். அவனையும் முருகன் வேலால் வதம் செய்தார். சகோதரர்கள் வீழ்ந்ததை தொடர்ந்து, சூரபதுமன் போர் புரிய வந்தான். முருக கடவுள் வேல் எடுத்து சூரபதுமனையும் சம்ஹாரம் செய்தார். அப்போது வானத்தில் கருடன்கள் சுற்றி வட்டமிட்டன.
    இந்த காட்சியை கண்டு, கடற்கரையில் கூடி இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா‘ என்ற பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

  • thiruchenduril-soorasamharam

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விமர்சையாக நடந்தது. பக்தி கோஷங்கள் விண்ணதிர முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. பக்தி கோஷங்கள் விண்ணதிர முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஆணவம் கொண்ட சூரபதுமனை, முருகப்பெருமான் சம்ஹாரம் செய்வதே கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஆகும்.

    அசுரர்களால் சிறைவாசம் அனுபவித்த தேவர்களை விடுவிக்கவும், கொடுமைகள் செய்த அசுரத் தலைவனான சூரபதுமனை வதம் செய்யவும் சிவபெருமானின் மைந்தனாக, முருகப்பெருமான் அவதரித்தார். தன்னை எதிர்த்த சூரனை அழித்ததோடு, அவனை ஆட்கொண்டு தன்னோடு இருக்குமாறு அருளிய கந்தனின் கருணை நிகழ்வுதான் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் கோவிலானது, கந்தனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகவும், திருச்சீரலைவாய் என்ற திருநாமத்துடனும் விளங்குகிறது.

    சுவாமி, வள்ளி, தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.

    தீபாராதனைக்கு பின் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் இருந்து சூரபதுமன் தனது படை வீரர்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மாலையில் கோவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். சுவாமி எப்போது போருக்கு வருவார்? என்று எதிர்பார்த்து காத்திருந்தான். சுவாமி ஜெயந்திநாதர், வண்ண மலர்களாலான மாலைகளை அணிந்து, சிறப்பு அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபதுமனை வதம் செய்ய கடற்கரைக்கு புறப்பட்டார். சுவாமி வருகையை எதிர்பார்த்து கடற்கரையில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், முருகப்பெருமானை கண்டதும் பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பினர்.

    சூரபதுமனின் தம்பியும், யானைமுகம் கொண்டவனுமாகிய தாரகாசூரன், முதலில் தனது பரிவாரங்களுடன், முருக பெருமானை நோக்கி போர் புரிய சுற்றி வந்தான். தாரகாசூரனை, முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். பின்னர் மற்றொரு தம்பியான சிங்கமுகம் கொண்ட, சிங்கமுகாசூரன் முருக பெருமானை வலம் இடமாக சுற்றி வந்து, நேருக்கு நேர் போரிட தயாரானான். அவனையும் முருகன் வேலால் வதம் செய்தார். சகோதரர்கள் வீழ்ந்ததை தொடர்ந்து, சூரபதுமன் போர் புரிய வந்தான். முருக கடவுள் வேல் எடுத்து சூரபதுமனையும் சம்ஹாரம் செய்தார். அப்போது வானத்தில் கருடன்கள் சுற்றி வட்டமிட்டன.

    இந்த காட்சியை கண்டு, கடற்கரையில் கூடி இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா‘ என்ற பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

  • thichanduril-endru-surasamharam-pakthargal-kuvinthanar

     

    திருச்செந்தூர்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (புதன்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    கந்தசஷ்டி திருவிழா

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 20–ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடந்த பின்னர் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர்– வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபம் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    மாலையில் சுவாமி ஜெயந்திநாதர்– வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி– தெய்வானை அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று சூரசம்ஹாரம்

    6–ம் திருநாளான இன்று (புதன்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணி அளவில் யாகசாலையில் தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சந்தோ‌ஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி– அம்பாள் கிரிப்பிரகார உலா வந்து கோவில் சேர்கிறார்கள். இரவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் (கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடைபெற்று, சஷ்டி பூஜை தகடுகள் கட்டுதல் நடைபெறும்.

    ஏற்பாடுகள்

    கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். மேலும் சூரசம்ஹாரத்தை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். சில பக்தர்கள் பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்தும் கோவிலுக்கு வந்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 65 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பறக்கும் கேமரா மூலமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடலில் குளிக்கும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாதவாறு, தடுப்பு மிதவைகள் மிதக்க விடப்பட்டு உள்ளன. மேலும் கடலோர பாதுகாப்பு படையினர், நீச்சல் வீரர்கள் கடலில் ரோந்து படகில் தயார் நிலையில் உள்ளனர்.

     

  • thichanduril-endru-surasamharam-pakthargal-kuvinthanar

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று  சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    கந்தசஷ்டி திருவிழா

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடந்த பின்னர் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர்– வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபம் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    மாலையில் சுவாமி ஜெயந்திநாதர்– வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி– தெய்வானை அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று சூரசம்ஹாரம்

    6–ம் திருநாளான இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணி அளவில் யாகசாலையில் தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சந்தோ‌ஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி– அம்பாள் கிரிப்பிரகார உலா வந்து கோவில் சேர்கிறார்கள். இரவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் (கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடைபெற்று, சஷ்டி பூஜை தகடுகள் கட்டுதல் நடைபெறும்.

    ஏற்பாடுகள்

    கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். மேலும் சூரசம்ஹாரத்தை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். சில பக்தர்கள் பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்தும் கோவிலுக்கு வந்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 65 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பறக்கும் கேமரா மூலமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடலில் குளிக்கும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாதவாறு, தடுப்பு மிதவைகள் மிதக்க விடப்பட்டு உள்ளன. மேலும் கடலோர பாதுகாப்பு படையினர், நீச்சல் வீரர்கள் கடலில் ரோந்து படகில் தயார் நிலையில் உள்ளனர்.

     

  • surapathmanai-vatham-seitha-thiruchanthur-muruga

     

    தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் “படைவீடு’ எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும்.

    முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

      

    திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார். ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.

    ஜெயந்திநாதர் சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். “சாயா’ என்றால் “நிழல்’ எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார்.

     

     

    சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.

     

    கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்க ளது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும் இவ்வாறு முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும்விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வார்கள்.

     

    முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர்.  அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

    ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.

  • thiruchenduril-endru-surasamharam

     

     

    திருச்செந்தூரில் அமைந்துள்ள, சுப்ரமணிய சுவாமி கோவில், அறுபடை வீடுகளில், இரண்டாம் படை என போற்றப்படும், மிகச் சிறப்புமிக்க கோவிலாகும். சூரசம்ஹாரம் சிவனின் தோன்றல் பாலமுருகனுக்கும், சிவனின், தீவிர பக்தன் சூரபதுமனுக்கும், திருச்செந்துார் கடற்கரையில் நிகழ்ந்ததால், அங்கு, இப்போதும் இந்நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில், ஆண்டுதோறும், வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மிகச் சரியாக, திருச்செந்துாரில் இருந்து, 6 மைல் துாரத்தில், கடற்கரையோரமாக உள்ள, மாம்பாடு என்ற தலத்தில் தான், போர் நடந்தது. தற்போது, அந்த ஸ்தலம், மணப்பாடு என, அழைக்கப்படுகிறது.

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா… என்கிற கோஷம், விண்ணை முட்டும் அளவிற்கு, பக்தர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகனை மயில் வாகனத்தில் ஏற்றி, சேவல் கொடியை அளிக்கின்றனர். போரில் வெற்றி அடைந்ததும், முருகன், தன் அய்யன் சிவனுக்கு பூஜை செய்ய விரும்பினான். அதற்காக, கடற்கரையில் கட்டப்பட்ட கோவில் தான், திருச்செந்துார் கோவில். இங்கு, மூலஸ்தானத்தின் பின்பகுதியில், முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தை காணலாம். வெற்றி மாநகர் என, பொருள் படும்படி, ஆரம்பத்தில் வடமொழியில் ஜெயந்திபுரம், பின், சயந்தி, செந்தில் என அழைக்கப்பட்டு, இறுதியில், திருச்செந்துார் என்ற தமிழ்ப்பெயரில் நிலைத்து இருக்கிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை நேரில் கண்டாலும், அதன் சிறப்பை படித்தாலும், பெரியவர்கள், ஆன்மிகவாதிகள் சொல்ல காது குளிரக் கேட்டாலும், பகைவனின் பயமின்றி தைரியமாக வாழலாம். அஞ்சும் முகம் தோன்றும் போது, இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள் என்பது நம்பிக்கை. இந்நிகழ்ச்சியின் போது வழங்கப்படும் பிரசாதம், திருநீறு மந்திரமாகும் என்பது, திருமூலர் வாக்கு.

    ஆறுமுகக் கடவுள் நம் முருகன்!

    ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம் மற்றும் புகழ் என்கிற ஆறு குணங்களை குறிக்கிற, இந்த ஆறுமுகக் கடவுளை தோற்றுவிக்க எழுந்தது, அதோமுகம். அதோமுகம் என்பது, சிவனின் ஆறாவது முகம் என, தன் திருமந்திரத்தில் குறிக்கிறார், திருமூலர். சிவன், ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களை, திருவானைக்காவல் திருத்தலத்தில் காட்டி அருள்கிறார். ஞானிகளுக்கு மட்டும் புலப்படும் ஆறாம் முகமான அதோமுகம், சூட்சுமமாக கண்களுக்கு புலப்படாமல், மறைந்து அகமுகமாகவே இருக்கும். ஆனால், சூரபதுமனை வெல்வதற்காக, திருமுருகனைத் தோற்றுவிக்கத் தீப்பொறியைத் தெறிக்க எழுந்த போது, காட்சியானது அதோமுகம். இம்முகம், பூலோக இறுதியில், ஊழியின் முடிவில், மீண்டும் தோன்றும் என்கிறது திருமந்திரம். உக்கிரத்தை வெளிப்படுத்தும் அதோமுகம், சனகாதி முனிவர்களுக்குக் காட்சி அளிக்கும் போது மட்டும், சாந்த சொரூபமாக இருக்கும்.

     

    கந்த சஷ்டி திருநாள் :

    கந்த சஷ்டி என்றால், திருச்செந்துார். வேல் என்றால், அது ஆணவத்தை அழித்து, நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். இதன் பொருள் விளங்கும்படி தான், பக்தர்கள், வேல் வேல் வெற்றிவேல்… என, முழங்குகின்றனர். ஐப்பசி மாதத்தில் வருகிற தேய்பிறை சஷ்டியே,கந்தர் சஷ்டி நாள். இந்நன்னாளில், என்ன வரம் கேட்டாலும், அந்த வரம் தந்திடுவான் முருகன் என்பது நம்பிக்கை. மற்ற நாட்களில், விரதம் இருக்க இயலாதவர்கள் கூட, ஆறாவது திதி நாளாம், சஷ்டியில் விரதம் இருப்பதன் மூலம், மகாலட்சுமியின் அருளையும் பெறலாம் என்பதும் ஐதீகம்.

    அசுரர்களை அழிக்க நினைத்த முருகன், முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என, எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்து, ஆறாம் நாள், எஞ்சியிருந்த அரக்கன் சூரபதுமனை அழித்தார். இப்படி, நம் முருகப்பெருமான், அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே, நாம், கந்த சஷ்டி விழாவாக கொண்டாடி மகிழ்கிறோம். இன்று, முருகனுக்கு பால், பழம், தினைமாவும், தேனும் கலந்து நிவேதிப்பது விசேஷமானது. சஷ்டி விரதமிருந்தால், கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதைத் தான், சட்டியிலிருந்தால் தான் அகப்பையில் வரும் என, பழமொழியாக சொல்கிறோம். ஐஸ்வர்யத்தைத் தரும் ஆறாம் எண்ணிக்கையில், இந்த விரதம் வருவது மிகச்சிறப்பு. ஆறாம் எண்ணுக்குரிய கிரகம் சுக்கிரன். வீடு, திருமணம், வாகனம் என, திருமகளின் அம்சமாக, அனைத்து சவுகரியங்களையும் தரக்கூடியது சுக்கிரனே. எனவே, கந்த சஷ்டி திருநாளில், சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி, நற்கதி பெறுவோம். 16 செல்வங்களையும் பெற்று, இன்பமான வளமான வாழ்வை பெறுவோம்.

    கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, சூரபதுமன் வதம் தவிர்த்து, மேலும் இரு காரணங்கள் உண்டு. உலக நன்மைக்காக, முருகன் அவதரித்த நாள் என்பதற்காகவும், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை வேண்டி, யாகம் செய்ய முருகன் தோன்றி, அருள்புரிந்த நாள் என்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது. கணவனும், மனைவியும் இணைந்து இந்த விரதத்தை மேற்கொண்டால், நல்ல பிள்ளைகள் பிறப்பர் என்பது நம்பிக்கை!

     கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை:

    அதிகாலை, 4:30 மணியிலிருந்து, 6:00 மணிக்குள் குளித்து முடித்து, பால் பழம் மட்டும் சாப்பிட வேண்டும். ஓம் சரவணபவ, ஓம் சரவண பவாய நம, ஓம் முருகா… ஆகிய மந்திரங்களில், ஒன்றை தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா… வேலவனுக்கு அரோகரா… என கோஷமிட்டு, கோவிலில் விளக்கேற்றி, வழிபாடு செய்ய வேண்டும். திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம் மற்றும் சண்முக கவசம் போன்ற பாடல்களில் ஒன்றை, காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்வது நல்லது.

     

     

     விழா முடிவு? :

    சூரசம்ஹாரத்தோடு, இன்றைய விழா முடிவடைந்து விடுவதில்லை. தேவர்களுக்கு, முருகன் செய்த மாபெரும் உதவிக்கு கைமாறாக, தன் மகள் தெய்வானையை, முருகனுக்கு மணம் முடித்து வைத்தான் இந்திரன். எனவே, மறுநாள், முருகன் – தெய்வானை திருமண வைபவத்தோடு தான், விழா நிறைவு பெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலில் மட்டும், சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. காரணம், அங்கு போருக்குப் பின், அமைதி நிலவுவதாக ஐதீகம். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை, தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்த முருகன், ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின் போது, சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா என, மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். சூரசம்ஹார விழாவின், ஏழாம் நாளன்று, மாலையில், முருகன் சிவப்பு ஆடை அணிந்து, சிவ பெருமானாகவும், எட்டாம் நாள் அதிகாலையில், வெண்ணிற ஆடையில், பிரம்மாவின் அம்சமாகவும், மதிய வேளையில், பச்சை ஆடை சாத்தி, பெருமாள் அம்சமாகவும் காட்சி அளிக்கிறார். உண்மையை பேசி, பிறருக்கு நல்லதை செய்வதால் மட்டுமல்லாமல், தெய்வங்களின் மீதான நம்பிக்கையும் சேர்ந்தால் தான், வாழ்வின் எல்லா நன்மைகளையும், இன்பங்களையும் பெற முடியும்.

     திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் :

    திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி திருவிழாவில், முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. முருகக் கடவுளின் அறுபடை வீடுகளுள், இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில், கந்த சஷ்டி திருவிழா, 20ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும், திருச்செந்துார் வந்திருந்த பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், இன்று நடக்கிறது. மதியம், 2:00 மணிக்கு சஷ்டி மண்டபத்தில், ஜெயந்தி நாதருக்கு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு, சூரசம்ஹாரத்திற்காக, கடற்கரைக்கு சுவாமி எழுந்தருளுகிறார். அங்கு, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.  இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சுரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில்  திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • muruganin-sursamharam

     

    சூர பதுமன் + சூர சம்ஹாரம் = அழகன் முருகன்

    தனித்தமிழ் கடவுள் என்ற சிறப்பு பெற்றவன் முருகன்; சூரபதுமன், ‘நான்’ என்கிற அகங்காரமும், ‘என்’ என்கிற மமகாரமும் அமையப் பெற்ற, ஓர் அரக்கன். நம் அழகன், சூரபதுமன் என்கிற அரக்கனின் ஆணவத்தை அடக்கி, அவனை ஆட்கொள்ளவும், தேவர்களின் துயர் போக்கவும், இறைவனால் நிகழ்த்தப் பெற்ற ஒரு திருவிளையாடல் தான், சூரசம்ஹாரம்.

    மிகப்பெரிய யாகங்கள், தவங்கள் செய்து, சிவபெருமானின் நன்மதிப்பைப் பெற்ற சூரபதுமன் என்ற அரக்கன், ‘என்னைக் கொல்ல இந்த ஏழுலத்திலும், யாருக்கும் வல்லமை இருக்கக் கூடாது; மேலும், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான், எனக்கு அழிவு வர வேண்டும்…’ என, புத்திசாலியாகவும் வரம் வாங்கிக் கொண்டான். 

    முனிவர்களுக்கும், மனிதர்களுக்கும், பொறுக்க முடியாத தொந்தரவுகளைச் செய்யத் துவங்கினான் சூரபதுமன். ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலையில், சிவன், தன் அதோமுகத்தின் மூலம், ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்து, ஆறு தெய்வக் குழந்தைகளை உருவாக்கினார்; அக்குழந்தைகளை, ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். சிறிது காலத்திற்குப் பின், சிவபெருமான், அக்குழந்தைகளை ஒன்றிணைத்து, ஆறுமுகன் கடவுளை தோற்றுவித்தார். அன்று தான், தீமைகளை வெல்லும் புனிதம் படைக்கப்பட்டதாய் கூறப்பட்டது.
    அழகனின் தோற்றம், ஈசனின் பங்கோடு முடியவில்லை. தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி, வேல் ஒன்றை அளித்தாள் சக்தி தேவி. நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் என்ற தலத்தில் தான், தன் தாயிடம் வேலைப் பெற்றார் முருகப் பெருமான். ‘சிக்கலில் வேல் வாங்கி, செந்துாரில் சூரசம்ஹாரம்’ என்பர். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு, முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயமும், ஆண்டுதோரும் நடக்கிறது. 

     

    அய்யனின் படைப்பும், அம்மையின் ஆயுதமும் இருக்கும் ஆசியால், முருகன், அரக்கன் சூரபதுமனுடன் போரிட்டான்; தான், தனி ஆள் இல்லை என, தன் தளபதி நவவீரர்களின் தலைவன் வீரபாகுவுடன் கைகோர்த்து, அரக்கனை எதிர்த்தான். 
    சூரபதுமன் அவ்வளவு எளியவானா என்ன, உடனே ஒரு வேல் எறிந்ததும் அழிந்து போக! அவனும் பல உருவமாக மாறி, முருகனுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான்.  நம் பால முருகன் சிறுவனாயிற்றே… பயந்து போகட்டும் என, மாமரமாய் உருமாறி, அதை முருகனின் வேல் இரண்டாக பிளக்க, அதில் ஒன்று சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் உருமாற்றினான் சூரபதுமன். முருகனே, தன் வேலாயுதத்தால், சூரபதுமன் உடலை இரண்டாக பிளந்து, சேவலாகவும், மயிலாகவும் மாற்றிக் கொண்டான் .

    என்பதும், மற்றுமொரு வரலாறு! போரின் இறுதி கட்டம் வந்தது. நம் அழகன் முருகன், சூரபதுமன் உருமாறிய சேவலை கொடியாகவும், மயிலை தன் வாகனமாகவும் மாற்றி, வெற்றி முழக்கமிட்டான். இந்த நிகழ்ச்சியின் நினைவுகூறல் தான், இன்று பல திருத்தலங்களில் நடைபெறும், சூரசம்ஹாரம் வழிபாடு!

    திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி திருவிழாவில், முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. சூரசம்ஹாரத்தோடு, இன்றைய விழா முடிவடைந்து விடுவதில்லை. தேவர்களுக்கு, முருகன் செய்த மாபெரும் உதவிக்கு கைமாறாக, தன் மகள் தெய்வானையை, முருகனுக்கு மணம் முடித்து வைத்தான் இந்திரன். எனவே, மறுநாள், முருகன் – தெய்வானை திருமண வைபவத்தோடு தான், விழா நிறைவு பெறுகிறது.