Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கான போற்றிகள்…..

    கந்தசஷ்டியை ஓட்டி விரதம் இருக்கும் அன்பர்கள் முருகப் பெருமானையும், அவரது வேலையும் வணங்குவது பெரும் பலனைத்தரும். குறிப்பாக, கந்தசஷ்டி விரத நாட்களில் வேல் அஷ்டோத்திர சத நாமாவாளி எனப்படும் 108 போற்றியைப் படித்தால் பயம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு அதற்குரிய பலன் கிடைக்கும்.

    ஓம் அருள்வேல் போற்றி
    ஓம் அபயவேல் போற்றி
    ஓம் அழகுவேல் போற்றி
    ஓம் அரியவேல் போற்றி
    ஓம் அணைக்கும் வேல் போற்றி
    ஓம் அன்புவேல் போற்றி
    ஓம் அற்புதவேல் போற்றி
    ஓம் அடக்கும்வேல் போற்றி
    ஓம் அந்தக எதிர்வேல் போற்றி
    ஓம் ஆளும்வேல் போற்றி
    ஓம் ஆட்கொள் வேல் போற்றி
    ஓம் இனிய வேல் போற்றி
    ஓம் இரங்கு வேல் போற்றி
    ஓம் இலை வேல் போற்றி
    ஓம் இறை வேல் போற்றி
    ஓம் ஈர்க்கும் வேல் போற்றி
    ஓம் ஈடிலா வேல் போற்றி
    ஓம் உக்கிரவேல் போற்றி
    ஓம் உய்க்கும் வேல் போற்றி
    ஓம் எழில்வேல் போற்றி
    ஓம் எளியவேல் போற்றி
    ஓம் எரிவேல் போற்றி
    ஓம் எதிர்வேல் போற்றி
    ஓம் ஒளிர்வேல் போற்றி
    ஓம் ஒப்பில் வேல் போற்றி
    ஓம் ஒடுக்கும் வேல் போற்றி
    ஓம் ஓங்கார வேல் போற்றி
    ஓம் கதிர்வேல் போற்றி
    ஓம் கனகவேல் போற்றி
    ஓம் கருணைவேல் போற்றி
    ஓம் கந்தவேல் போற்றி
    ஓம் கற்பக வேல் போற்றி
    ஓம் கம்பீர வேல் போற்றி
    ஓம் கூர்வேல் போற்றி
    ஓம் கூத்தன் வேல் போற்றி
    ஓம் கொடுவேல் போற்றி
    ஓம் கொற்ற வேல் போற்றி
    ஓம் சமர்வேல் போற்றி
    ஓம் சம்கார வேல் போற்றி
    ஓம் சக்திவேல் போற்றி
    ஓம் சதுர்வேல் போற்றி
    ஓம் சங்கரன் வேல் போற்றி
    ஓம் சண்முக வேல் போற்றி
    ஓம் சமரில் வேல் போற்றி
    ஓம் சர்வசக்திவேல் போற்றி
    ஓம் சினவேல் போற்றி
    ஓம் சீறும்வேல் போற்றி
    ஓம் சிவவேல் போற்றி
    ஓம் சிறை மீட்கும் வேல் போற்றி
    ஓம் சித்ரவேல் போற்றி
    ஓம் சிங்கார வேல் போற்றி
    ஓம் சுரர்வேல் போற்றி
    ஓம் சுடர்வேல் போற்றி
    ஓம் சுழல்வேல் போற்றி
    ஓம் சூரவேல்போற்றி
    ஓம் ஞானவேல் போற்றி
    ஓம் ஞானரக்ஷக வேல் போற்றி
    ஓம் தனிவேல் போற்றி
    ஓம் தாரைவேல் போற்றி
    ஓம் திருவேல் போற்றி
    ஓம் திகழ்வேல் போற்றி
    ஓம் தீரவேல் போற்றி
    ஓம் தீதழிவேல் போற்றி
    ஓம் துணைவேல் போற்றி
    ஓம் துளைக்கும்வேல் போற்றி
    ஓம் நல்வேல் போற்றி
    ஓம் நீள்வேல் போற்றி
    ஓம் நுண்வேல் போற்றி
    ஓம் நெடுவேல் போற்றி
    ஓம் பருவேல் போற்றி
    ஓம் பரன்வேல் போற்றி
    ஓம் படைவேல் போற்றி
    ஓம் பக்தர்வேல் போற்றி
    ஓம் புகழ்வேல் போற்றி
    ஓம் புகல்வேல் போற்றி
    ஓம் புஷ்பவேல் போற்றி
    ஓம் புனிதவேல் போற்றி
    ஓம் புண்யவேல் போற்றி
    ஓம் பூஜ்யவேல் போற்றி
    ஓம் பெருவேல் போற்றி
    ஓம் பிரம்மவேல் போற்றி
    ஓம் பொருவேல் போற்றி
    ஓம் பொறுக்கும் வேல் போற்றி
    ஓம் மந்திரவேல் போற்றி
    ஓம் மலநாசகவேல் போற்றி
    ஓம் முனைவேல் போற்றி
    ஓம் முரண்வேல் போற்றி
    ஓம் முருகன்வேல் போற்றி
    ஓம் முக்தி தருவேல் போற்றி
    ஓம் ரத்தின வேல் போற்றி
    ஓம் ராஜவேல் போற்றி
    ஓம் ருத்திரவேல் போற்றி
    ஓம் ருணவிமோசன வேல் போற்றி
    ஓம் வடிவேல் போற்றி
    ஓம் வஜ்ரவேல் போற்றி
    ஓம் வல்வேல் போற்றி
    ஓம் வளர்வேல் போற்றி
    ஓம் வழிவிடுவேல் போற்றி
    ஓம் வரமருள்வேல் போற்றி
    ஓம் விளையாடும் வேல் போற்றி
    ஓம் வினைபொடி வேல் போற்றி
    ஓம் வீரவேல்போற்றி
    ஓம் விசித்திர வேல் போற்றி
    ஓம் வெல்வேல் போற்றி
    ஓம் வெற்றிவேல் போற்றி
    ஓம் ஜயவேல்போற்றி
    ஓம் ஜகத் ஜோதி வேல் போற்றி!!!

  • தீபாவளிக்கு மட்டும் திறக்கப்படும் அதிய கோயில்

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரத்தில் உள்ள ஹாசனாம்பா கோயில் ஆண்டுக்கு ஒரு முறை தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த கோயிலின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்….

    ஹாசனாம்பா கோயிலில் பல வீநோத நம்பிக்கைகள் உள்ளது….

    மாமியார்-மருமகள் கல்….

    ஒரு குட்டி கதை…. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹாசனாம்பா கோயிலுக்கு நாள் தவறாமல் வந்து வழிபட்டு கொண்டிருந்திருக்கிறாள் ஒரு பெண். ஒருநாள் அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் ”வீட்டில் வேலை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்” என்று சொல்லி அப்பெண்ணை அடித்திருக்கிறாள். அப்போது அப்பெண் வலியால் சத்தமிடவே அம்மன் அவள் முன்பு பிரசன்னமாகி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்லப்படுகிறது. அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோயிலில் காணப்படுகிறது. இந்த கல் ஆண்டுதோறும் அரிசி அளவு அம்மன் விக்ரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இது நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

    திருடர்கள் கோயில்…

    ஹாசனாம்பா கோயிலில் ஒருமுறை அம்மன் ஆபரணங்களை திருடிச்செல்ல நான்கு திருடர்கள் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாக போகுமாறு சபித்ததாக சொல்லப்படுகிறது. அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோயிலாக ‘திருடர்கள் கோயில்’ என்ற பெயரில் ஹாசனாம்பா கோயில் வளாகத்தினுள்ளேயே அமைந்திருகிறது.

    அணையா தீபம் …

    ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்துகொண்டிருக்குமாம்.

    கோயிலுக்குள் குழந்தை மாட்டிக்கொண்டால்…
    கோயில் மூடப்படும் நாளில் தவறுதலாக குழந்தை ஏதும் உள்ளே மாட்டிக்கொண்டால் மீண்டும் கோயில் திறக்கப்படும் நாள் வரை அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தில்லாமல் நலமுடன் இருக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

    வாடா மலர்கள்….
    ஹாசனாம்பா கோயில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்குமென்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோயில் திறக்கப்படும் நாளில் கோயிலுக்கு வருகிறார்கள்.
    தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில் நடை அக்டோபர் 20 ஆம் தேதி காலை திறக்கப்பட்டது.
    அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி வரை 13 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும் என்று மாவட்ட கலெக்டர் சைத்ரா அறிவித்து இருந்தார்.

  • கோயில்களில் தேங்காய் உடைக்கும் வழக்கம் வந்தது ஏன்?

    கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம்.
    அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.
    தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.
    உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
    இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.
    ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.
    இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

  • ஸ்கந்தஷஷ்டி விரத மகிமை ….

    அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம்.

    முருகனுக்குரிய முக்கிய விரதங்களாக கருதப்படுவது, வெள்ளிக்கிழமை வார விரதம், கார்த்திகை நட்சத்திரம் விரதம் மற்றும் கந்த சஷ்டி விரதம்.
    அதில் வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

    சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது?

    சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும்.

    ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் ஒப்பரும் விரதம் என ஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    முருகன் ஆலயத்தில் பக்தர்கள் உண்ணா நோன்பிருந்து; பக்திசிரத்தையுடன் முருகனை நினைந்துருகி வழிபட்டு, தியானத்திலும், பஜனை செய்வதிலும், கந்தரனுபூதி, கந்தசஷ்டிகவசம், கந்தரலங்காரம் ஓதுவதிலும், கந்தபுராணம்-பயன் கேட்பதிலும் தம்மை ஈடுபடுத்தி முருகனருள் வேண்டி நிற்பர்.

    அத்துடன்; விரத முடிவு தினமான சூரன்போரில் முருகன் வீசும் வேல் குறிதவறாது சூரனின் சகோதரர்களான; யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கன் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும்; பல மாயைகள் செய்து போர்புரிந்து கடைசியாக, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரன்-பதுமனை சங்காரம் செய்யும் காட்சியை தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், கண்கொள்ளாக் காட்சிகளாகும்.

    கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அதாவது ஆணவம், கன்மம், மாயை என்ற அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

  • சரஸ்வதி பூஜைக்கு… சரஸ்வதி தேவி காயத்திரி மந்திரம்

    கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியின் அருள் வேண்டும். வித்தை உள்ள இடங்களிலும், கல்விச் சாலைகளிலும், இசை அரங்குகளிலும், தொழில் நிறுவனங்களிலும் சரஸ்வதிதேவி வாசம் செய்கிறாள். ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜையில், இந்த அன்னையை வேண்டி நாம் வழிபாடு செய்கிறோம்.
    சரஸ்வதிதேவியை வழிபடும் வேளைகளில் சரஸ்வதிக்கு உரிய காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் நன்மைகள் பல மடங்காக கிடைக்கும்.

    சரஸ்வதி காயத்திரி மந்திரம் :

    ‘ஓம் பிரம்ம சக்தியை வித்மஹே
    பீதவர்ணாயை தீமஹி தன்னோ
    பிராம்ஹீ ப்ரசோதயாத்’

    சரஸ்வதிதேவியை பூஜை செய்து வழிபடும்போது, அன்னையின் பல்வேறு மந்திரங்களின் கூட, மேற்கண்ட சரஸ்வதி காயத்திரி மந்திரத்தையும் 108 முறை சொல்லி வந்தால் சிறப்பான பலன்களை நான்முகன் தேவி நமக்கு தந்தருள்வாள். இந்த மந்திரத்தை உச்சரிப்பதால், கல்வியில் சிறந்து விளங்கலாம். வித்தைகள் வளரும். தொழில் சிறக்கும். லாபம் உண்டாகும். உயர் பதவிகள் தேடி வரும். வாக்கு வன்மை சிறக்கும். ஞானம் கிட்டும்.

  • சகல காரிய விருத்திக்கு விஜயதசமி….

    நவராத்திரியில் வரும் தசமி திதியும் விசேஷமானது. இது விஜயதசமி எனப்படுகிறது.
    சைக்கிள் முதல் பஸ், லாரி முதலிய அனைத்து வாகனங்களையும் சுத்தம் செய்து பூ, மாலை அணிவித்து, பூசணிக்காய், எலுமிச்சம்பழம் சாற்றி திருஷ்டி கழித்து பூஜை செய்வார்கள். இந்த நாளில் தொடங்கப்படுகிற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். விஜயதசமி நாளானது சகல காரிய விருத்தியையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கக்கூடிய நாள். இந்நாளில் ஞானம், வித்தை, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும் வந்து சேரும்.

    இந்நாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வழிபாடுகள் செய்வது உகந்ததாகும்.

  • தடைகள் நீங்கி நலங்கள் பெருக ‘ஆயுத பூஜை’

    நவக்கிரகங்கள் நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவநிதிகள் ஆகிய எல்லாமே ஒன்பது ஒன்பதாக உள்ளன.
    இந்த வரிசையில் உள்ள நவராத்திரியும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அதிலும் நவராத்திரியில் வரும் நவமி திதி மிகவும் விசேஷம். தடைகள் நீங்கி நலங்கள் பெருக இந்த நவமி திதியானது ‘ஆயுத பூஜை’ என்றும் ‘சரஸ்வதி பூஜை’ என்றும் கொண்டாடப்படுகிறது. நமது கல்விச் செல்வம் பெருக வேண்டியும் தொழில் வளம் அதிகரிக்க வேண்டியும் இந்த நாளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்களை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள்.