Category: தியானம்

தியானம்

  • அக்டோபர் 13 இன்றைய நல்ல நேரம்

    அக்டோபர் 13 இன்றைய நல்ல நேரம்
    பிலவ வருடம் – புரட்டாசி 27
    13-அக்-2021 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    ந.இ    12.11
    நட்சத்திரம்    :    பூராடம்    ம    2.57
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி,மிருகசீரிடம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • மனதைக் கட்டுப்படுத்தாமல் தியானம் செய்தல்

    முதுகு முள்ளந்தண்டு வளையாது நிமிர்ந்திருந்து கொண்டு மனதைக் கட்டுப்படுத்தாமல் எண்ணங்களை மனதின் வழியே சுதந்திரமாக விடுங்கள். என்ன என்ன எண்ணங்கள் மனதில் உண்டாகின்றதோ அவற்றை முக்கியப்படுத்தாது அப்படியே விடுங்கள். 

    மனதில் நல்ல எண்ணங்கள் மட்டுமன்றி தீய எண்ணங்களும் ஏற்படலாம். தீய எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டுமென்று அவசியமில்லை. அதனை அதன்படியே விட்டுவிட வேண்டும். இவ்வளவு கெட்ட எண்ணங்கள் இருந்ததா என்று எண்ணும் போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதேபோன்றே நல்ல எண்ணங்களும் உருவாகும். 

    இவ்வாறு தினமும் பல்லாயிரக் கணக்கான எண்ணங்கள் தோன்றி இறுதியில் எண்ணுவதற்கு எண்ணங்கள் இல்லாத நிலையில் தாமாகவே எண்ணங்கள் குறைந்து கொண்டே வந்து இறுதியில் மனம் அமைதியடையும்.

    தியானம் செய்ய ஆரம்பித்த பின்னர் அவசியமற்றவர்களின் தொடர்புகளை விட்டுவிடுவதோடு மனதைக் குழப்பும் காரியங்களிலும் ஈடுபடாதிருப்பது நலம் பயக்கும்.

  • தியானம் செய்வது எப்படி?

    தியானத்தின் நோக்கம் தியானிக்கப்படும் பொருளின் தன்மையை அறிந்து கொள்ளுல் ஆகும். அதற்கு மனம் ஒரு கருவியாக பயன்படுகிறது. தியானத்தில் 2 நிலைகள் உள்ளன.

    நம் மனதில் ஏதாவது ஒரு உருவத்தை குறித்தோ அல்லது ஒரு கருத்தை குறித்தோ தொடர்ந்து சிந்தனை செய்வது. மனதில் இருந்து எல்லாவிதமான எண்ணங்களையும் அகற்றிவிடுதல். முதல் நிலையில் ஏதாவது ஒரு பொருளின் மீது அல்லது குரு புகட்டிய ஒரு மந்திரத்தை உச்சரிக்க தொடங்குகிறோம். அப்போது நமக்கு ஒரு புதுமையான அனுபவம் உண்டாகும். 

    இதுவரை நம் மனதில் புதைந்து உறங்கி கிடந்த நூற்றுக்கணக்கான நினைவுகள் நம் கண்முன்னே தோன்றும். நமக்கு இது சிக்கலாக கூட இருக்கும். அதற்கும் வழி இருக்கிறது. நாம் உச்சரிக்கும் மந்திரத்தை அதன் பொருள் உணர்ந்து அப்பொருளின் பாவத்துடன் நம்மை அதில் பிணைத்து கொண்டால், நாம் தியான நிலையை அடையமுடியும். மற்ற நினைவுகள் மறந்து போகும்.

    இரண்டாம் நிலையில், எவ்வித இடர்பாடுகளும் இல்லாமல், அமைதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொள்ளவேண்டும்.  கால் முதல் தலை வரை எல்லா உறுப்புகளும் ஓய்வில் இருக்க வேண்டும். காதுகள் திறந்திருந்தால், வெளிச்சத்தங்கள் இடையூறு செய்யும். 

    மனதிலிருந்தும் பல எண்ணங்கள் எழும். நாம் அதை பொருட்படுத்த தேவையில்லை. வேடிக்கை பார்ப்பவரை போல நாம் ஒதுங்கி நிற்க வேண்டும். அப்போது நம் காதுகள் திறந்திருந்தாலும் எவ்வித இடர்பாடுகளும் இருக்காது. தியானம் செய்தவன் மூலம் நம்மை நாம் உணர முடியும்.
     

  • திருப்பதி கோவிலில் கூடுதல் கண்காணிப்பு !

    பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் மாடவேதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் துவங்கியுள்ளன.
    ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலை சுற்றி 280 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீவிரவாத அச்சறுத்தல் உள்ள நிலையில் கோயிலுக்கும் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யும் விதமாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    இதனையடுத்து, 4 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில், அதிநவீன கேமிராக்கள் பொருத்த முடிவு செய்து ஆய்வு அறிக்கை வழங்கப்பட்டது. இதன்படி முதல் கட்டமாக உயர்பாதுகாப்பு இடமாக கருதப்படும் கோயில் மற்றும் நான்கு மாடவீதிகளில் 280 கேமிராக்கள் பொருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இதேபோல் மற்ற இடங்களில் மீதமுள்ள கேமிராக்கள் பொருத்தப்படவுள்ளது.

  • அரவான் கதை

    வீரம், விவேகம், அழகு உள்ளிட்ட 32 லட்சணங்களைக் கொண்ட ஒருவரை களபலிக் கொடுத்தால் மகாபாரத போரில் வெற்றி கிடைக்கும் என்பதற்காக 32 லட்சணங்களையும் கொண்ட அரவான் என்ற இளவரசனை பலி கொடுக்க பஞ்ச பாண்டவர்கள் முடிவு செய்கிறார்கள்.
    இந்நிலையில், தான் இறப்பதற்கு முன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அரவான் ஆசைப்படுகிறார். சாகப்போகும் ஒருவருக்கு யார் பெண் கொடுப்பார்கள் என பஞ்ச பாண்டவர்கள் கவலையடையும் போது கிருஷ்ண பகவான் அழகிய பெண் உருவம் கொண்டு அரவானை திருமணம் செய்து கொள்கிறார்.
    பின்னர், அரவான் களபலி கொடுக்கப்படுகிறார். இதனையடுத்து பெண் உருவத்தில் இருந்த கிருஷ்ணர் கணவனை இழந்த பெண்ணுக்கு செய்யும் சடங்குகளான கை வளையல்களை உடைத்து, நெற்றி பொட்டை அழித்து, தாலி அறுத்து, வெள்ளை சேலை உடுத்தி விதவை கோலத்தை ஏற்றுக் கொண்டார்.
    இந்த புராண வரலாற்றை நினைவுக்கூறும் வகையில் உலகத்திலேயே திருநங்கைகளுக்கு என்றே தனியாக அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டம் மடப்பட்டு அருகே உள்ள குவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுத்தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள், விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.

  • கடமையும் ! கடவுளும் ! ஶ்ரீ ஆதிசங்கரா் விளக்கம்

    ஒரு சிலா் பக்தி ,கோயில் , பூஜை என்று இருந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று சொல்கிறா்கள்.ஆனால் இன்னும் சிலா்,”சாமியாவது,பூதமாவது,நடக்குறதுதான் நடக்கும் என்கிறா்கள்”.எது சா?
    ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரா்,ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்தபோது,அவரைக் கண்ட ஏழை விவசாயி ஒருவன்.இதே கேள்வியைக் கேட்டான்.
    ஆதிசங்கரா் அவனிடம்,”மகனே,இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய்.நான் உன்க்கு பதில் அளிக்கிறேன்!” என்றா்.
    அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான்.சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தா்.அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தா். அதற்கு அவன்,”எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனும்?” என்றான்.
    ” ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க?”


    ” மரப் பாலத்தை கடக்கிறபோது,திடீா்னு வழுக்கி விழுந்தால்,பிடிச்சுக்கத்தான் சுவாமி!”
    “உன் கேள்விக்கும் அதுதான்பா விடை! அவனவன் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால்தான்,பத்திரமான இடத்தை அடையமுடியும்.ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால்,அந்த குச்சியை பிடிச்சுக்கிற மாதிரி,ஆண்டவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும்!” என்றா் ஆதிசங்கரா்.
    ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! இப்படி இருப்பவா்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை.
    நாம் வழிபடவும்,வேண்டிய வரங்களை எல்லாம் தரவும் மட்டுமில்லை கடவுள்;நாம் துக்கப்படும்போது சொல்லி ஆறுதல் தேடவும் அவா் வேண்டும்.எனவே தான் “கல்லோடு ஆயினும் சொல்லி அழு”என முன்னோ்கள் சொல்லியிருக்கிறா்கள்.

  • கண்மலரால் கிடைத்த சக்கராயுதம்

    ஜலந்திராசுரன் மரணம் அடைந்த பிறகு அவனுடைய பிள்ளைகள் தேவர்களுக்குத் தொல்லைகள் தர ஆரம்பித்தனர். எனவே தங்களைப் பாதுகாக்கச் சொல்லி தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டனர்.
    தேவர்களே சிறிது காலம் பொறுத்திருங்கள், நான் சிவபெருமானைக் குறித்து தவம் செய்து ஜலந்திரனைக் கொன்ற சக்கராயுதத்தைப் பெறவேண்டும் என்றார் திருமால். இவ்வாறே திருமால் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அதனை தினமும் ஆயிரத்தெட்டு தாமரை மலர்களைக் கொண்டு பூஜித்து வந்தார். இவ்வாறு செய்து வரும் நாளில் ஒரு நாள் ஒரு மலரை மட்டும் ஈசன் மறைத்து விட்டார். உடனே ஹரி தன் கண்மலரை எடுத்து ஈசனின் திருநாமத்தைக் கூறி அர்ச்சனையை செய்து முடித்தார். அவருடைய பக்திக்கு மெச்சி எதிரே தோன்றி தரிசனம் அளித்த ஈசன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
    தேவர்களை மறுபடியும் அசுரர்கள் துன்புறுத்தி வருகிறார்கள். ஆகவே ஜலந்திரனை அழித்த சக்கராயுதத்தை எனக்கு தரவேண்டும். அதன் மூலமாக அசுரர்களை அழிக்கும் வலிமையை எனக்குத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஈசனும் அவ்விதமே திருமாலுக்கு சக்கராயுதத்தை அளித்ததோடு, தனக்காக ஹரி அர்ப்பணித்த கண்மலரையும் திரும்ப அளித்தார்.
    இந்த நிகழ்ச்சியின் மூலமாக பூஜைக்கு மலர்கள் எத்தனை அவசியம் என்பதையும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலமாக நாம் நம் அன்பையும், பக்தியையும் சரியான முறையில் வெளிப்படுத்த முடியும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். மலர்களுக்கு பதிலாக தன்னுடைய கண் மலரை சமர்ப்பித்ததன் மூலமாக திருமாலுக்கு ஈசனின் தரிசனம் கிடைத்ததோடு, சக்கராயுதமும் கிடைத்தது. எனவே மலர்களைக் கொண்டு நாம் நினைத்த காரியங்களை சாதிக்க முடியும் என்பதை இதன் மூலமாக அறிய முடிகிறது.

  • 114 ஆண்டுகளுக்கு பிறகு மகாபுஷ்கர விழா….

    குருபெயர்ச்சியை முன்னிட்டு, 144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கர விழா, விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அக்டோபர் மாதம் 11-ந் தேதி தொடங்கி 12 நாட்கள் மகாபுஷ்கர விழா நடக்கிறது. இந்த விழாவையொட்டி பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல் வரை தாமிரபரணிக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொண்டு தாமிரபரணி நதியில் முக்கிய பிரமுகர்கள் புனித நீராடுகிறார்கள். மேலும், துறவியர்கள் மாநாடு, ஊர்வலம், சதுர்வேத பாராயணம், திருவாசகம் முற்றோதுதல், சைவ மாநாடு, நாலாயிர திவ்ய பிரபந்த பாராயண வைணவ மாநாடு, லலிதா சகஸ்ரம பாராயணம், விஷ்ணு சகஸ்ரம பாராயணம் நடக்கிறது. 12 நாட்களும் ஆற்றில் உள்ள அனைத்து படித்துறைகளிலும் மகா ஆர்த்தி நடைபெறுகிறது.

  • மலர்களை துண்டு துண்டாக்கி பூஜைக்கு பயண்படுத்தலாமா

    அசுத்தமான கைகளினால் தொட்டு பறிக்கப்பட்டது, கொண்டுவரப்பட்டது, தானாக விழுந்தது, காய்ந்தது, மற்றவர்களினால் முகர்ந்து பார்க்கப்பட்டது, அசுத்தமான இடங்களில் மலர்ந்தது, அசுத்தமான கூடையில் வைத்து கொண்டுவரப்பட்டது போன்ற புஷ்பங்களை பகவானுக்கு அர்ப்பணிக்கக்கூடாது. பறித்த பிறகு மலர்ந்த பூக்கள், வாடிப்போன பூக்கள் பழைய பூக்கள், ஆமணக்கு இலையில் கட்டிவைத்த பூக்கள், உடல் உறுப்புகளில் பட்ட பூக்கள், கட்டிய ஆடையிலும், கையிலும் வைத்த பூக்கள், பூச்சிகள் கடித்த பூக்கள், சிலந்தி இழை சுற்றிய பூக்கள், பறவைகள் எச்சமிட்ட பூக்கள், முடிக்கற்றை பட்ட பூக்கள், இரவு நேரத்தில் பறித்த பூக்கள், தண்ணீரில் முழுகிய பூக்கள், ஆகியவை பூஜைக்கு ஆகாத பூக்கள். தற்போது பலர் கைகளில் மலர்களை எடுத்து அவற்றை துண்டு துண்டாக்கி கைகளினால் கிள்ளி பூஜை செய்கின்றனர். இது மிகவும் தவறானது. பூக்களை முழுதாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, கிள்ளி பொடிப்பொடியாக்கி வழிபாடு செய்தல் கூடாது. வில்வ இலை, துளசி இலை ஆகியவற்றை தளமாகச் சாத்த வேண்டும்.

  • அபிஷேகத்தின் பலன்கள்….

    இறைவனுக்கு என்னென்ன பொருட்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
    நல்லெண்ணெய் அபிஷேகம்: மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும்.
    தண்ணீர் அபிஷேகம்: மனசாந்தி ஏற்படும்.
    பஞ்சாமிர்த அபிஷேகம்: அனைத்து செல்வங்களும், தீர்காயுளும் கிடைக்கும்.
    பால் அபிஷேகம்: குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆயுள் விருத்தியும் கிடைக்கும். தோஷங்கள் நீங்கும்.
    மஞ்சள் பொடி அபிஷேகம்: அனைவரும் நமக்கு உதவ முன்வருவார்கள். ராஜவசியம் உண்டாகும்.
    தயிர் அபிஷேகம்: குழந்தை பாக்கியம் உண்டாகும்.
    இளநீர் அபிஷேகம்: கஷ்டங்கள் நீங்கும். மன அமைதி, புத்தி தெளிவு பெறும்.
    கரும்புச்சாறு அபிஷேகம்: வியாதிகள் நீங்கும், கல்வியிலும், சாஸ்திரங்களிலும் ஆர்வமும், திறமையும் உண்டாகும்.
    அரிசி மாவுப்பொடி அபிஷேகம்: லஷ்மி வாசம் உண்டாகும். தாராளமாக பணம் புரளும். கடன் தீரும்.
    சந்தன அபிஷேகம்: உடல் குளிர்ச்சி பெறும். மனதிற்கு அமைதி கிடைக்கும். செல்வங்கள் பெருகும்.
    சொர்ண அபிஷேகம்: நல்ல எதிர்காலத்தை கொடுக்கும். நினைத்த நல்ல காரியங்கள் அனைத்தும் இனிதாக நடக்கும்.
    இறைவனுக்கு வஸ்திரம் அணிவித்தால்: கெளரவம் காக்கப்படும்.
    எலுமிச்சை பழம் அணிவித்தால்: ஜாதகத்தில் இருக்கும் தோஷத்தை போக்கும். துர்க்கையின் அருளாசி கிடைக்கும். எம பயம் நீங்கும்.
    மலர்களால் அர்ச்சனை செய்தால்: இல்லத்தில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வசந்தமான வாழ்க்கை அமையும்.