Author: லிங்கேஷ்

  • Saibaba koil Kumbabishega vedio

    ஆவடி அருகே ஆனந்த சாயிபாபா திருக்கோயிலின் 5 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    சென்னை ஆவடி அடுத்த மோரை பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ஷீரடி ஆனந்த சாயிபாபா திருக்கோயில். இங்கு திருமணம் ஆகாதோர், குழந்தை பாக்கியம் இல்லாதோர், கடன் பிரச்சனைகளில் உள்ள அனைவருக்கும் தீர்வும் கிடைக்கும் சிறப்பு அம்சங்கள் கொண்ட கோவிலாகும். இந்த கோவிலின் 5 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

    ஆலய நிறுவன தலைவர் ரமேஷ் மைனாவதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேந்திரன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து கலச நீர் அபிஷேகம் மற்றும் அஸ்வத் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

    மேலும் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகிகள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   அச்சம் 
    ரிஷபம் – சோர்வு 
    மிதுனம் – பயம் 
    கடனம் –  பக்தி 
    சிம்மம் – களிப்பு  
    கன்னி – சுகம் 
    துலாம் –  கவலை
    விருச்சிகம் – வெற்றி 
    தனுசு – நன்மை 
    மகரம் – சாதனை 
    கும்பம் – லாபம் 
    மீனம் – ஜெயம் 
    சந்திராஷ்டமம்    : மூலம், பூராடம்

  • Indraya Nalla Neram

    பிப்ரவரி 16
    விளம்பி வருடம் – மாசி 4
    16-பிப்-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    கா    7.22
    நட்சத்திரம்    :    திருவாதிரை    ம    3.41
    யோகம்    :    சித்த யோகம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Namakatti Thayarippadhu

    புரட்டாசி மாதம் என்றாலே வீடுகளில் சனிக்கிழமைகளில் பெருமாளை கும்பிடுவது தான் ஞாபகத்திற்கு வரும். பெருமாளுக்கு சிறப்பு நெற்றியில் பளிச்சென இடப்படும் நாமம். இந்த நாமக்கட்டிகள் தயாரிக்கப்படுவது எப்படி?
    நாமக்கட்டி தயாரிப்பில் புகழ் பெற்று விளங்குவது ஜடேரி கிராமம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ளது இந்த கிராமம்..

    நாமக்கட்டி தயாரிக்கத் தேவைப் படும் மண், தென்பூண்டிப்பட்டு என்ற கிராமத்தில் கிடைக்கிறது. அதை வெட்டி எடுத்து வந்து உடைத்து, செக்கு இழுப்பதைப் போன்று மாடு கட்டி இழுத்து பவுடராக மாற்றுகின்றனர். அதன் பிறகு, அதனை தண்ணீரில் கரைத்து, ஓரிரு நாட்களில் கழிவுகள், கீழே படிந்த உடன், மேலே இருக்கும் ‘பாலை’ மட்டும் பிரித்து தொட்டி யில் ஊற்றுகின்றனர்.

    அவ்வாறு செய்யும்போது, நாமக்கட்டி தயாரிப்புக்கு உகந்த மண் கிடைத்துவிடுகிறது. அதனை வெயிலில் பதப்படுத்தி காய வைத்து, நாமக்கட்டி தயாரிப்பதற்கான பக்குவத்துக்கு கொண்டு வருகின்றனர். அதன்பிறகு மண் உருண்டைகள் மிக லேசான ஈரப்பதத்தில் இருக்கும்போது சிறு, சிறு உருண்டைகளாக தட்டி நாமக்கட்டிகளாக உருட்டி வெயிலில் காய வைக்கின்றனர். பிறகு நாமக் கட்டிகள் நன்கு காய்ந்த பிறகு வைக்கோல் போட்டு மூட்டை மூட்டைகளாக கட்டி விற்பனைக்கு வைக்கின்றனர். 

    இங்கு தயாரிக்கப்படும் நாமக்கட்டி, திருப்பதி உட்பட நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாடு களுக்கும் வியாபாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.
     

  • Garuda Dharisanam

    கருடனை வெவ்வேறு கிழமைகளில் தரிசிக்கும் போது வெவ்வேறு பலனை அடையலாம்.
    கருடனைக் கண்ட உடனே அனைவரும் தரிசிப்போம். ஆனால் முறையாக தரிசிக்க வலது கை மோதிர விரலால் இடது கன்னம் மற்றும் வலது கன்னம் இரண்டையும் மாறி மாறி மூன்று முறை அதாவது மொத்தம் ஆறு முறை ‘நாராயணா’ என்ற நாமம் சொல்லி தரிசிக்க வேண்டும். 

    கருடனை வெவ்வேறு கிழமைகளில் தரிசிக்கும் போது வெவ்வேறு பலனை அடையலாம்.

    ஞாயிறு கிழமையில் கருடனைத் தரிசித்தால் நோய் அகலும்.

    திங்கள் கிழமை கருடன் தரிசினம் – குடும்ப நலம் ஏற்படும்.

    செவ்வாய் கிழமை கருடன் தரிசினம் – தைரியம் உண்டாகும்.

    புதன் கிழமை கருடன் தரிசினம் –  எதிரிகள் நம்மை விட்டு மறைவார்கள்.

    வியாழன் கிழமை கருடன் தரிசினம் – நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    வெள்ளி கிழமை கருடன் தரிசினம் – திருமகளின் அருள் கிடைக்கும்.

    சனி கிழமை கருடன் தரிசினம் – முக்தி கிடைக்கும்.

    ஒவ்வொரு நாளும் கருடனை முறையாக தரிசித்து கருட பகவானின் அருளை பெற்றுக்கொள்ள முடியும்.
     

  • Indraya Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   சிக்கல் 
    ரிஷபம் – பக்தி
    மிதுனம் – எதிர்ப்பு 
    கடனம் –  வெற்றி
    சிம்மம் – விருப்பம் 
    கன்னி – ஜெயம்
    துலாம் –  நட்பு
    விருச்சிகம் – தெளிவு
    தனுசு – மகிழ்ச்சி
    மகரம் – தாமதம் 
    கும்பம் – சுகம் 
    மீனம் – வரவு 
    சந்திராஷ்டமம்    : கேட்டை, மூலம்

  • Feb 15 – Suba muhurtha naal

    பிப்ரவரி 15 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    விளம்பி வருடம் – மாசி 3
    15-பிப்-2019 வெள்ளி  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    தசமி    கா    8.42
    நட்சத்திரம்    :    மிருகசீரிடம்    மா    4.49
    யோகம்    :    சித்த யோகம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Ragu kedhu peyarchi

    திருநெல்வேலி மாவட்டம் செங்காணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கோத பரமேஸ்வரர் – சிவகாமி அம்பாள் ஆலயத்தில்  ராகு-கேது பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் குன்றத்தூரை அடுத்த செங்காணி கிராமத்தில் அமைந்துள்ள நவகைலாய ஆலயங்களில் நான்காவதாகவும் ராகு ஸ்தலமாகவும் விளங்குகிறது ஸ்ரீ கோத பரமேஸ்வரர் – சிவகாமி அம்பாள் ஆலயம். ராகு ஸ்தலமாக விளங்கும் இந்த ஆலயத்தில் பதினெட்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது. 

    வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பிற்பகல் 2 மணிக்கு ராகு-கேது பெயர்ச்சி நடைபெற்றது. ராகு பகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கும் கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும் இடப்பெயர்ச்சி ஆனார்கள்.

    ராகு-கேது பெயர்ச்சியை ஒட்டி ராகுவாக உள்ள ஸ்ரீ கோத பரமேஸ்வரருக்கு பால் தயிர் சந்தனம் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு மங்கலப்பொருட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
     

  • Thirunageswaram Ragu Peyarchi

     திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில்   நடைபெற்ற  ராகு பெயர்ச்சி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 

     நவகிரகங்களில் 'ராகு' க்கான பரிகாரத் தலமாக விளங்குவது கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி ஆலயம் ஆகும் . இவ்வாலயத்தின் தென்மேற்கு மூலையில் ராகு பகவான் ,நாகவல்லி, நாககன்னி , என்ற தனது இரு மனைவியருடன் பூரண சரீரத்துடன் மங்கள ராகுவாக அருள்பாலித்து வருகிறார் .ராகு பகவான் இவ் ஆலய மூலவர் நாகநாதசுவாமி வழிபட்டு  சாப விமோசனம் பெற்றதாக  ஆலய தல புராணங்கள் கூறுகிறது .

    இத்தலத்து மூலவர் நாகநாத  சுவாமியை  சூரியன் ,சந்திரன் , பிரம்மா  ,கார்க்கோடகன் , ஆகியோர்  வழிபட்டதாகவும்   புராணங்கள் கூறுகிறது.இவ்வாலயத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் ஒன்றாக ராகுபெயர்ச்சி  விளங்குகிறது .

    ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராகு பெயர்ச்சி இன்று மதியம் 1 .25 மணிக்கு  ராகு பகவான்  ,கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ச்சி யானார்.  ,ராகு பெயர்ச்சியை முன்னிட்டு  ரிஷபம்  ,மிதுனம் ,கடகம் ,கன்னி, விருச்சிகம், தனுசு ,கும்பம் ,மீனம், ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது .

     ராகு பெயர்ச்சியை முன்னிட்டு ராகு பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் , உள்ளிட்ட பல்வேறு மங்கல பொருட்களால் சிறப்பு அபிசேகங்கள் நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு பகவானை தரிசனம் செய்தனர். 
     

  • Ragu Kedhu Mandhiram

    ராகு கேது பெயர்ச்சியினால் வரும் பாதிப்பு மற்றும் துன்பங்கள் நீங்க  ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய துவித நாக பந்தம் பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    துவித நாக பந்தத்தை ஒரு பேப்பரில் எழுதி ஆண்கள் பர்ஸில் அல்லது சட்டை பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொள்ளலாம். நேரம் கிடைக்கும் போது எடுத்து பாராயணம் செய்யலாம்.

    முதலில் சிரமமாக கடினமாக இருக்கும் பின்னர் எளிமையாக மனதில் பதிந்துவிடும்.

    பெண்கள் தங்கள் பர்ஸில் வைத்து கொள்ளலாம்.

    இதை ஸ்டிக்கராக வடித்து நம் கண்படும் இடங்களில் ஒட்டி வைத்து கொள்ள இன்னும் பாராயணம் செய்ய மிகவும் எளிதாக இருக்கும்.

    இதை கடினம் என்று நினைப்பவர்கள் ராகுக்கு பரிகாரமாக துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றுவர். ஆதலால் எலுமிச்சம் பழத்தை தாங்கள் செல்லும் இடங்கள் மற்றும் இருக்கும் இடங்களில் எடுத்து / வைத்து கொள்ளலாம்.

    கேது பரிகாரமாக தர்ப்பை புல்லை சட்டை பேண்ட் பாக்கெட், பர்ஸ், பை,  வண்டி, அலுவலக மேசை டிராயர் என அனைத்து இடங்களிலும் வைத்து கொள்ளலாம். தாங்கள் இருக்கும் மற்றும் செல்லும் இடங்களில் எடுத்து செல்லலாம் அல்லது வைத்து கொள்ளலாம்.

    பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவித நாக பந்தம் படிப்பது மிகுந்த பலனை கொடுக்க கூடியது ஆகும். முதன் முதலில் இதை படிக்க தொடங்கும்போது செவ்வாய்க்கிழமையன்று விரதம் இருந்து தொடங்க வேண்டும். துவித நாக பந்தம் படம் கடைகளில் கிடைக்கும். 

    இதை வாங்கி பூஜையறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்தவாறு காட்சியளிக்கும், இப்படம் கடும் நாக தோஷத்திற்க்கு ஏற்றது. ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். 

    முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.

    சேயா சேயாதே தேயா சேயாசே 
    மாயா மாயாவா வாயா மாயாமா 
    வாயா மாவாயா மாயா சேமாசே. 
    யோயா நேயாவோ யாயே தேயாளே 

    – இவற்றை தினமும் 108 முறை படித்து வரவேண்டும். இதன் மூலம் சர்ப்பதோஷம், காலசர்ப்பதோஷம், அடிக்கடி பாம்புகளின் தொல்லை, மாலை சுற்றி பிறந்த தோஷம், மகப்பேறு கால துன்பம் இராகு, கேது தோஷம் போன்றவை நீங்கப்பெறலாம்.

    மிகவும் எளிமையான எல்லோராலும் செய்ய கூடிய பரிகாரம்.