Author: cmsadmin

  • சிம்மம் : ஜனவரி மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!

    சிம்மம்  

     

    கிரகநிலை:

     

    ராசியில்  கேது –  பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், செவ்வாய் –  களத்திர  ஸ்தானத்தில் சனி, ராஹூ –  தொழில்  ஸ்தானத்தில் சந்திரன் –  லாப  ஸ்தானத்தில்  குரு  () என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரக மாற்றங்கள்:

     

    11-01-2026  அன்று புதன்  பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026 அன்று சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-01-2026  அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-01-2026  அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

     

    முடிவெடுப்பதில் வல்லவர்களான சிம்ம ராசி அன்பர்களேஇந்த மாதம் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது. காரியங்களில் தடைதாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் உடனடியாக பலன் காண்பது அரிது. எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும்.

     

    வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் தேவை. சகோதரர்கள் வழியில் ஏதேனும் பிரச்சனை வரலாம்.

     

    தொழில் வியாபாரம் குறிப்பாக விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் குறைவான லாபம் வரக் காண்பார்கள். தொழில் வியாபரம் தொடர்பான அலைச்சல் இருக்கும்.

     

    உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது  முன்னேற்றத்துக்கு உதவும்.

     

    குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபம்  தூண்டக்கூடிய வகையில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதும் நன்மை தரும்.                                                                                                                                          

     

    பெண்கள் எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். பயணம் செய்யும் போது கவனம் தேவை.

     

    கலைத்துறையினருக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும்.

     

    அரசியல்துறையினருக்கு புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரவு அதிகப்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும்.

     

    மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.

     

    பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்குவதன் மூலம் எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கும்.

     

    சந்திராஷ்டம தினங்கள்: 23, 24, 25

     

    அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17, 18

     

     

     

  • கடகம்: ஜனவரி மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!

    கடகம்

     

    கிரகநிலை:

     

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் கேது –  ரண ருண ரோக  ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், செவ்வாய் –  அஷ்டம  ஸ்தானத்தில் சனி, ராஹூ –  லாப  ஸ்தானத்தில் சந்திரன் –  அயன சயன போக  ஸ்தானத்தில்  குரு () என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரக மாற்றங்கள்:

     

    11-01-2026 அன்று புதன்  பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026 அன்று சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-01-2026  அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-01-2026  அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    லன்:

     

    அனைவரிடமும் அனுசரித்து செல்லும் குணமுடைய கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கை  கண்டு பொறாமை உண்டாகலாம் கவனம் தேவைஎதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.

     

    தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள்.

     

    உத்தியோகஸ்தர்கள் வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். பணவரத்து திருப்தி தரும்.

     

    குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

     

    பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்குவன்மையால் நன்மை உண்டாகும்.

     

    கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வெளிநாட்டு பயனங்கள் ஏற்படும்.

     

    அரசியல் துறையினருக்கு உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒப்பந்தங்கள் நல்ல முறையில் வரத்து இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும்.

     

    மாணவர்கள் படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

     

    பரிகாரம்: சிவன் கோயிலுக்கு  சென்று சிவன், அம்பாளை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மன குழப்பத்தை நீக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க உதவும்.

     

    சந்திராஷ்டம தினங்கள்: 21, 22

     

    அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15

     

  • மிதுனம் : ஜனவரி மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!

     

    மிதுனம்

    கிரகநிலை:

    ராசியில்  குரு ()  –  தைரிய வீரிய  ஸ்தானத்தில் கேது –  களத்திர  ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், செவ்வாய் –  பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராஹூ –  அயன சயன போக  ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரக மாற்றங்கள்:

     

    11-01-2026 அன்று புதன்  பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026 அன்று சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-01-2026  அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-01-2026  அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

     

    எந்த பிரச்சனைகள் வந்தாலும், எதிர்த்து நின்று சமாளிக்க கூடிய ஆற்றல் பெற்ற மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம்  நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும்.

     

    தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

     

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர் பார்த்த பணவரத்து கிடைக்க பெறுவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.

     

    குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்யம் அடையும் சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

     

    பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலைதூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல நேரலாம்.

     

    கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.

     

    அரசியல் துறையினருக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு  காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள்  கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

    மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.

     

    பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

     

    சந்திராஷ்டம தினங்கள்: 19, 20

    அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12, 13

     

  • ​​​​​​​​​​​​மேஷம்: ஜனவரி மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!

    மேஷம்:

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சந்திரன் –  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  குரு ()  –  பஞ்சம ஸ்தானத்தில் கேது –  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், செவ்வாய் –  லாப  ஸ்தானத்தில் சனி, ராஹூ –  என கிரக நிலைகள் உள்ளன.

    கிரக மாற்றங்கள்:

    11-01-2026  அன்று புதன்  பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-01-2026  அன்று சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-01-2026  அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-01-2026  அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண்குழப்பம் ஏற்படும். எனவே எதைப்பற்றியும்  அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பண வரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக  பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவசொல் வாங்க நேரிடும்..

    தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம்.

    குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாக பேசுவது நல்லது.

    பெண்கள் எதைபற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும்.

    கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில்  செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவைமுன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

    அரசியல் துறையினர் வளர்ச்சி பெற மிகவும்  கவனமாக  இருப்பது நல்லது. செலவை  குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனமகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.

    மாணவர்கள் கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை  நன்கு படிப்பது நல்லது.

    பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறும் விரதம் இருந்து முருகனை கந்தசஷ்டி படித்து வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலை தவிர்க்கும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 14, 15

    அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8

     

  • மகரவிளக்கு சீசன் இன்று ஆரம்பம்! சபரிமலையில் மீண்டும் ஒலிக்கும் சரண கோஷம்!

    ஐயப்பனின் பொன்னம்பலம் மீண்டும் திறக்கிறது! இன்று மாலை மகரவிளக்கு பூஜைகள் தொடக்கம்! 
    சுவாமியே சரணம் ஐயப்பா!

    சபரிமலை திருத்தலத்தில், கோடிக்கணக்கான பக்தர்களின் இதயத் துடிப்பாய் விளங்கும் மணிகண்டனின் சந்நிதானம், இன்று மாலை மகரவிளக்கு பெருவிழாவிற்காக மீண்டும் திறக்கப்படுகிறது.

    மண்டல பூஜையின் மகத்தான நிறைவு 
    நடப்பு ஆண்டின் மண்டல கால பூஜைகளுக்காகக் கடந்த மாதம் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, 17-ஆம் தேதி முதல் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இருமுடி ஏந்தி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள், "சாமியே சரணம்" என்ற கோஷத்துடன் ஐயப்பனைத் தரிசித்தனர். இந்த சீசனின் முதல் சிகர நிகழ்வான மண்டல பூஜை கடந்த சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

    இன்று மாலை மீண்டும் திறக்கும் நடை! 
    தற்போது, மண்டல காலத்தைத் தொடர்ந்து வரும் மிக முக்கியமான மகரவிளக்கு பூஜைகளுக்காக, இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை மீண்டும் திறக்கப்படுகிறது.

    சிறப்பு நிகழ்வு: சபரிமலை தந்திரியின் முன்னிலையில், மேல்சாந்தி அவர்கள் திருநடையைத் திறந்து வைப்பார்.

    வழிபாடு: நடை திறக்கப்பட்டதும் தீபாராதனை நடைபெறும். ஐயப்பனின் திவ்ய ரூபத்தைக் காணத் தற்போதே பம்பை மற்றும் சந்நிதானத்தில் பக்தர்கள் கூட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

    ஜனவரி 14: அந்த அற்புதத் தருணம்! 
    மகரவிளக்கு காலத்தின் உச்சகட்ட நிகழ்வான, உலகமே ஆவலுடன் காத்திருக்கும் மகரஜோதி தரிசனம் வரும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி (மகர சங்கராந்தி அன்று) நடைபெற உள்ளது. பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவாய்க் காட்சி தரும் ஐயப்பனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் தற்போதே விரதமிருந்து மலைக்கு வரத் தயாராகி வருகின்றனர்.

    ஆன்மீக அன்பர்களே! இந்த மகரவிளக்கு காலத்தில் அந்த ஐயப்பனின் அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திப்போம்.

  • வைகுண்ட ஏகாதசி: திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு!

    ஓம் நமோ வேங்கடேசாய: திருப்பதியில் திறக்கப்பட்டது வைகுண்ட வாசல்! தங்க ரதத்தில் ஏழுமலையான் உலா! 

    திருமலை திருப்பதி திருத்தலத்தில், வைகுண்ட ஏகாதசி எனும் மகா புண்ணிய தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1:30 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது. மார்கழி மாதக் குளிரையும் பொருட்படுத்தாமல், கோவிந்தா முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டுள்ளனர்.

    முக்கிய பிரமுகர்கள் தரிசனம் 
    தனுர் மாத சுபமுகூர்த்தத்தில் நடை திறக்கப்பட்டதும், முதலில் முக்கியப் பிரமுகர்கள் வைகுண்ட வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசித்து அருள்பெற்றனர். காலை 6 மணி முதல் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தங்க ரதத்தில் ஜொலித்த மலையப்ப சுவாமி 
    இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி பொன்னிறமாக ஜொலிக்கும் தங்க ரதத்தில் எழுந்தருளினார். நான்கு மாட வீதிகளிலும் சுவாமி உலா வந்தபோது, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆராதனை காட்டி பரவசத்துடன் வழிபட்டனர்.

    பக்தர்களுக்கு தேவஸ்தானத்தின் கனிவான வேண்டுகோள் 
    டிக்கெட் உள்ளவர்களுக்கு மட்டும்: இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு ஏற்கனவே தரிசன டிக்கெட் வைத்துள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    இலவச தரிசனம்: நேரடி இலவச தரிசனம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ஜனவரி 2 முதல்: நேரடி இலவச தரிசனம் (வைகுண்ட துவார தரிசனம்) மீண்டும் ஜனவரி 2-ம் தேதி முதல் தொடங்கும்.

    பக்தர்களுக்கான வசதிகள் (அன்னதானம் & லட்டு)  லட்டு
    தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய சவுத்ரி அவர்கள் கூறுகையில், வரும் 8-ம் தேதி வரை தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு 16 வகையான உணவுகள், டீ, காபி மற்றும் குழந்தைகளுக்குப் பால் வழங்கப்படுகிறது.

    சுவாமி பிரசாதமாக 4.50 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் உள்ளன.

    பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்தால் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் எளிதாக தரிசனம் பெறலாம்.

    இந்த வைகுண்ட ஏகாதசி நன்னாளில், அந்த வேங்கடவன் அனைவருக்கும் எல்லா நலன்களையும் வழங்க பிரார்த்திப்போம்! 

  • திருவண்ணாமலை மார்கழி பவுர்ணமி கிரிவலம் 2026 முழு விபரங்கள்!

    திருவண்ணாமலை மார்கழி பவுர்ணமி: கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!

     "நினைத்தாலே முக்தி தரும்" திருத்தலமான திருவண்ணாமலையில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம். அந்த வகையில், வரும் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

     

    கிரிவல நேரம் மற்றும் விபரங்கள்:

    பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், மலையையே சிவனாகக் கருதி பக்தர்கள் 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் வருவார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி திதி தொடக்கம் மற்றும் முடிவு நேரங்கள் பின்வருமாறு:

    • பவுர்ணமி தொடக்கம்: வருகிற ஜனவரி 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6.45 மணிக்கு பவுர்ணமி திதி தொடங்குகிறது.
    • பவுர்ணமி நிறைவு: மறுநாள் ஜனவரி 3-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4.43 மணிக்கு பவுர்ணமி திதி நிறைவடைகிறது.

    கோவில் நிர்வாகத்தின் அறிவிப்புப்படி, இந்த இடைப்பட்ட கால நேரமே கிரிவலம் செல்வதற்கு மிகவும் உகந்த நேரமாகும்.

     

    மாவட்ட நிர்வாகத்தின் முன்னேற்பாடுகள்:

    மார்கழி மாதக் குளிர் மற்றும் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன:

     

    • அடிப்படை வசதிகள்: கிரிவலப் பாதை நெடுகிலும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிவறை வசதிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
    • போக்குவரத்து: பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
    • பாதுகாப்பு: கிரிவலப் பாதையில் சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    மலையே சிவனாகக் காட்சியளிக்கும் இந்த புண்ணிய பூமியில், மார்கழி மாத அதிகாலைக் குளிரில் கிரிவலம் வருவது பக்தர்களுக்கு அளவற்ற மன அமைதியையும், ஆன்மீக பலத்தையும் தரும் என நம்பப்படுகிறது.

     

  • சொந்த வீடு கனவு நனவாக… வாஸ்து தோஷத்தை வேரோடு அறுக்கும் 2000 ஆண்டு பழமையான திருத்தலம்! (அகத்தியர் போற்றிய அதிசயம்)

    சொந்த வீடு கனவை நனவாக்கும் மண்ணச்சநல்லூர் பூமிநாதர் திருக்கோவில்

    சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் கனவு. ஆனால், இடம் வாங்குவதில் சிக்கல், வாஸ்து தோஷம் அல்லது பணத்தட்டுப்பாடு போன்ற காரணங்களால் பலரது கனவு தள்ளிப்போகலாம். இத்தகு தடைகளை நீக்கி, விரைவில் கிரகப்பிரவேசம் செய்ய வழிவகுக்கும் ஒரு உன்னத தலம் தான் மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோவில்.

     

     கோவிலின் சிறப்பம்சங்கள்:

    • பழமை: சுமார் 2000 ஆண்டுகள் பழமையான தலம்.
    • அகத்தியர் வாக்கு: பூமியில் உள்ள 16 வகையான நிலப் பிரச்சினைகளைத் தீர்க்கும் தலம் என்று அகத்தியர் தனது ஓலைச்சுவடியில் குறிப்பிட்டுள்ளார்.
    • தனித்துவமான நவக்கிரகங்கள்: இங்குள்ள அனைத்து கிரகங்களும் சூரியனை நோக்கியே அமைந்துள்ளன. மேலும், ராகு மற்றும் கேது பகவான்கள் சர்ப்ப வடிவில் இல்லாமல் முழு உருவத்துடன் (மனித வடிவில்) காட்சி தருவது வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும்.
    • சுயம்பு லிங்கம்: இத்தல இறைவன் பூமிநாதர் சுயம்புவாக, சற்றுச் சாய்ந்த கோலத்தில் பட்டை லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
    • ஸ்ரீ மகாமேரு: அம்பாள் தர்மசம்வர்த்தினி சன்னதிக்கு முன்பாக ஸ்ரீ மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

     

    தல வரலாறு மற்றும் வாஸ்து புருஷன் தோற்றம்:

    • சிவபெருமான் அந்தகாசுரனை வதம் செய்தபோது, ஈசனின் நெற்றி வியர்வையில் இருந்து ஒரு பூதம் உருவானது. அது உலகை அழிக்க முற்பட்டபோது, தேவர்கள் அதனை நிலத்தில் குப்புறக் கவிழ்த்து அழுத்திப் பிடித்தனர்.
    • அந்தப் பூதம் பசியால் உணவிற்காக வேண்ட, ஈசன் அதற்கு 'வாஸ்து புருஷன்' என்று பெயரிட்டார்.
    • பூமியில் மக்கள் வீடு கட்டும்போது செய்யும் பூஜைகள் மற்றும் நைவேத்தியங்கள் வாஸ்து புருஷனைச் சென்றடையும் என்றும், குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே அவர் விழிப்பார் என்றும் வரம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நடந்த இடமே பூமிநாதர் கோவில்.

     

    வழிபாட்டு முறைகளும் பலன்களும்:

    • பூமாதேவி வழிபாடு: பூமாதேவி இத்தல இறைவனை வணங்கியே பூமியைத் தாங்கும் சக்தியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
    • வாஸ்து பூஜை: வாஸ்து புருஷன் விழிக்கும் நாட்களில் (வாஸ்து நாட்களில்) இங்கு வந்து விசேஷ பூஜை செய்பவர்களுக்கு, வீடு கட்டுவதில் உள்ள அனைத்துத் தடைகளும் நீங்கும்.
    • செவ்வாய்க்கிழமை வழிபாடு: வாஸ்து நாட்களில் வர முடியாதவர்கள், செவ்வாய்க்கிழமைகளில் வந்து பூமிநாதரை வழிபட்டால் நிலம் தொடர்பான சிக்கல்கள் தீரும்.
    • பட்டை லிங்க ரகசியம்: பூமாதேவி ஒவ்வொரு யுகத்திலும் சந்தனம், மஞ்சள், வெண்ணெய் போன்ற காப்புகளைச் சாத்தி வழிபட்டதால், லிங்கத்தில் பட்டைகள் உருவானதாக வரலாறு கூறுகிறது.

     

    முக்கியத் திருவிழாக்கள்:

    இக்கோவிலில் சிவராத்திரி, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை மற்றும் மார்கழி திருவாதிரை ஆகிய விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

     

    முடிவுரை: வாஸ்து தோஷத்தால் வீடு பாதியில் நின்றாலோ அல்லது இடம் வாங்கியும் வீடு கட்ட முடியாமல் இருந்தாலோ, ஒருமுறை மண்ணச்சநல்லூர் சென்று பூமிநாதரையும் தர்மசம்வர்த்தினி அம்பாளையும் தரிசித்து வாருங்கள். உங்கள் இல்லக் கனவு நனவாகும்!

  • குழந்தை பாக்கியம் அருளும் 5 புனித கோவில்கள்

    தொட்டில் சத்தம் கேட்கவில்லையே என்ற ஏக்கம் இனி வேண்டாம்! காலம் கடந்து போகலாம், ஆனால் இறைவனின் கருணைக்குக் காலமில்லை. மருத்துவம் திகைக்கும் போது, மந்திரங்கள் பலன் தரும். பல்லாயிரக்கணக்கான தம்பதியருக்கு "பிள்ளைச் செல்வம்" எனும் மகா வரத்தை அள்ளித்தந்த 5 புனிதத் தலங்களின் ரகசியங்கள் இதோ:

    1. அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்மன் – திருக்கருகாவூர்

    "கருவைத் தந்து, காக்கும் கருணைத் தாய்" தஞ்சை மண்ணில் முல்லைவனநாதர் உடனுறை கர்ப்பரட்சாம்பிகை அம்மன், வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் தாயாகத் திகழ்கிறாள்.

    தெய்வீக ரகசியம்: இங்கு அம்பிகையின் பாதத்தில் வைத்து பூஜித்து வழங்கப்படும் மந்திர நெய் பிரசாதம் மகத்துவமானது. நம்பிக்கையோடு 40 நாட்கள் இதனை அருந்தி வர, கருத்தரிப்பதில் உள்ள தடைகள் நீங்கி, அம்பிகையே கருவில் குழந்தையாக இருந்து காப்பார் என்பது ஐதீகம்.

    2.  குக்கே சுப்ரமணியர் திருக்கோவில் – கர்நாடகா

    "நாக தோஷம் போக்கும் ஞானத்தலம்" பித்ரு தோஷம் அல்லது நாக தோஷத்தினால் புத்திர பாக்கியம் தள்ளிப் போவோருக்கு இது ஒரு புகலிடம்.

    தெய்வீக ரகசியம்: குமாரதாரா நதியில் நீராடி, தூய மனதோடு சர்ப சம்ஸ்கார பூஜை செய்வதன் மூலம் சந்ததி தழைக்கத் தடையாக இருக்கும் கர்ம வினைகள் யாவும் கதிரவனைக் கண்ட பனி போல விலகும். முருகப்பெருமானின் பேரருள் மழலையாக மலரும்.

    3. மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் – மதுரை

    "தாயாக வந்து தாரணி காத்தவள்" குழந்தை வேண்டி யாகம் வளர்த்த பாண்டிய மன்னனுக்கு மகளாகவே வந்து அவதரித்தவள் அன்னை மீனாட்சி.

    தெய்வீக ரகசியம்: அங்கயற்கண்ணி அன்னை வீற்றிருக்கும் இந்த மண்ணில் கால் பதிப்பதே பெரும் புண்ணியம். "எனக்கு ஒரு குழந்தையைத் தா" என்று அன்னையின் சந்நிதியில் கண்ணீர் மல்க வேண்டும் பக்தர்களுக்கு, அவள் தனது கருணைக் கண்களால் பார்த்து மழலை வரத்தை அருள்கிறாள்.

    4. சந்தான வேணுகோபால சுவாமி கோவில் – கர்நாடகா

    "கண்ணனே பிள்ளையாக வந்துதிக்கும் தலம்" சோழர் காலத்துப் பழமை வாய்ந்த இக்கோவில், கிருஷ்ண பரமாத்மாவின் மழலைத் திருவுருவத்திற்குப் பெயர் பெற்றது.

    தெய்வீக ரகசியம்: இங்குள்ள லட்டு கிருஷ்ணனை மடியில் வைத்து வேண்டிக் கொள்ளும் போது, நம் உள்ளத்தில் பக்திப் பரவசம் பொங்கும். இங்கு செய்யப்படும் சந்தான கோபால யாகம், உங்கள் இல்லத்தில் அந்தப் பரந்தாமனையே ஒரு பிள்ளையாக அவதரிக்கச் செய்யும் என்பது நம்பிக்கை.

    5.மன்னர்சாலா நாகராஜர் கோவில் – கேரளா

    "நாக தேவதைகளின் நல்லாசி" கேரள மாநிலத்தி
    ன் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த அமைதியான சூழலில் வீற்றுள்ள இந்த ஆலயம், ஒரு தவச் சாலையைப் போன்றது.

    தெய்வீக ரகசியம்: இங்குள்ள பெண் பூசாரி (அம்மா) முன்னிலையில் செய்யப்படும் 'உருளி கமழ்த்துதல்' சடங்கு மிகவும் சக்தி வாய்ந்தது. வேண்டிக்கொண்ட பின் வழங்கப்படும் அந்தத் தெய்வீக மஞ்சள் பிரசாதம், தீராத பிணிகளை நீக்கி இல்லத்தில் தொட்டில் சத்தம் கேட்கச் செய்யும்.

  • திருமணத் தடை நீக்கும் தமிழகத்தின் 6 முக்கியக் கோவில்கள்: பரிகார முறைகளும் பலன்களும்!

    திருமணத் தடைகள் நீங்கி விரைவில் சுபயோகம் கூடி வர தரிசிக்க வேண்டிய திருத்தலங்கள்!
    திருமணம் தள்ளிப் போவது அல்லது ஜாதக ரீதியான தடைகளால் மனவருத்தத்தில் இருப்பவர்கள், தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த மற்றும் சக்திமிக்கக் கோவில்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் விரைவில் வரன் அமையும் என்பது ஐதீகம். அந்த வகையில் திருமண வரமருளும் முக்கியக் கோவில்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் இங்கே:

    1. திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயம் (கும்பகோணம்)
    திருமணத் தடை நீக்கும் தலங்களில் முதன்மையானது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருமணஞ்சேரி.

    வழிபாடு: இங்கு மாலைகள், மஞ்சள், தேங்காய், குங்குமம், சீரகம், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சமர்ப்பித்து 'கல்யாண அர்ச்சனை' செய்ய வேண்டும்.

    விசேஷ நடைமுறை: அர்ச்சனை செய்த எலுமிச்சை பழத்தை வீட்டிற்கு எடுத்து வந்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாறாக்கி அருந்த வேண்டும்.

    பலன்: எவ்வளவு மோசமான தடைகள் இருந்தாலும், இந்த வழிபாட்டிற்குப் பின் விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

    2. நித்ய கல்யாணப் பெருமாள் கோவில் (திருவிடந்தை, சென்னை)
    சென்னை – மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள இத்தல பெருமாள், 360 கன்னிகைகளை மணம் புரிந்தவராகக் கருதப்படுகிறார்.

    வழிபாடு: ஒரு ஜோடி மாலைகளை வாங்கி அர்ச்சனை செய்து, அதில் ஒரு மாலையை அணிந்து கொண்டு கோவிலை 9 முறை சுற்றி வர வேண்டும்.

    தொடர் வழிபாடு: அர்ச்சனை செய்த மாலையை வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். திருமணம் முடிந்த பிறகு தம்பதியாக வந்து, பழைய மாலையை அங்குள்ள தல விருட்சத்தில் போட்டுவிட்டு மீண்டும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    3. திருவிண்ணைநகர் ஒப்பிலியப்பன் கோவில் (கும்பகோணம்)
    108 திவ்ய தேசங்களில் 13-வது ஆலயமாகத் திகழும் இக்கோவிலில், விசேஷமான திருமணக் கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.

    சிறப்பு: இங்கு பெருமாள் கோகிலாம்பிகையைத் திருமணம் செய்துகொண்ட திருமணக் கோலத்திலேயே அருள் பாலிக்கிறார்.

    வழிபாடு: இங்கு முறைப்படி செய்யப்படும் வேத சடங்குகள் திருமணத் தடைகளை வேரோடு நீக்கும் வல்லமை கொண்டவை.

    4. தென் திருப்பதி (சிவன் கோவில்)
    திருப்பதி பாலாஜியின் மூத்த சகோதரராகக் கருதப்படும் விஷ்ணு பகவான் இங்கு குடி கொண்டுள்ளார்.

    வழிபாடு: பாவ விமோசனம் பெற திருவோண நட்சத்திரத்தன்று சந்தனம் மற்றும் குங்குமத்தைச் சமர்ப்பிக்கலாம்.

    பலன்: மணி, ஆரத்தி கரண்டி போன்ற பூஜைப் பொருட்களைத் தானமாக வழங்குவது முன்வினைப் பாவங்களை நீக்கி, தம்பதிகளிடையே ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் உருவாக்கும்.

    5. மாங்கல்யேஸ்வரர் கோவில் (இடையத்துமங்கலம், லால்குடி)
    மாங்கல்ய மகரிஷியால் வழிபடப்பட்ட இக்கோவில், திருமண வரமளிப்பதில் மிகவும் புகழ்பெற்றது.

    சிறப்பு: வசிஷ்டர், அகஸ்தியர் போன்ற முனிவர்களின் திருமணங்களே இந்த இறைவனின் அருளால் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

    நட்சத்திர வழிபாடு: உத்திர நட்சத்திரத்தன்று பிறந்தவர்கள் மற்றும் திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வழிபடுவது மிகவும் விசேஷம். பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் கல்யாணோத்ஸவம் மிகச் சிறப்பு வாய்ந்தது.

    6. ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில் (சீனிவாச மங்காபுரம்)
    திருப்பதிக்கு அருகில் உள்ள இத்தலத்தில் சீனிவாசன் – பத்மாவதி தாயார் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

    வழிபாடு: இங்கு நடைபெறும் 'கல்யாண உற்சவத்தில்' கலந்து கொண்டு இறைவனை வேண்டினால் திருமணத் தோஷங்கள் நீங்கும்.

    கங்கணப் பிரசாதம்: வழிபாட்டின் முடிவில் அர்ச்சகர் வழங்கும் மஞ்சள் கங்கணத்தை வலது கையில் கட்டிக் கொண்டால், விரைவிலேயே கெட்டி மேளச் சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை.

    குறிப்பு: உங்கள் ஜாதக ரீதியான தோஷங்களுக்கு ஏற்ற கோவிலைத் தேர்ந்தெடுத்து, முழு நம்பிக்கையுடன் வழிபட்டால் விரைவில் நல்ல செய்தி தேடி வரும்.