திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தொடங்கிய வைகாசி விசாகத் திருவிழா
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தொடங்கிய வைகாசி விசாகத் திருவிழா
காரைக்கால் அடுத்த வடமறைக்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீவீரமாகாளிம்மன் ஆலயத்தில் வைகாசி மகோத்சவ பால்குட அபிஷேக நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
இன்றைய ராசிபலன்
மேஷம் – அமைதி
ரிஷபம் – நஷ்டம்
மிதுனம் – பாசம்
கடகம் – நற்செயல்
சிம்மம் – பாராட்டு
கன்னி – சிந்தனை
துலாம் – சலனம்
விருச்சிகம் – ஆர்வம்
தனுசு – சுகம்
மகரம் – நலம்
கும்பம் – பிரயாசை
மீனம் – கீர்த்தி
சந்திராஷ்டமம் – கேட்டை , மூலம்
மே 15 – இன்றைய நாள் எப்படி?
குரோதி வருடம் – வைகாசி – 02
மே 15, 2024
புதன்
நல்ல நேரம் : 9.30 – 11.30
எமகண்டம் : 7.30 – 9.00
குளிகை : 10.30 – 12.00
ராகு : 12.00 – 1.30
திதி : சூன்ய
திதி நேரம் : சப்தமி கா 7.40
நட்சத்திரம் : ஆயில்யம் மா 6.12
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : கேட்டை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
குடியாத்தம் நகரில் கோலாகலமாக நடைபெற்ற கெங்கை அம்மன் சிரசு திருவிழா. குடியாத்தம் நகரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.
இந்த ஆண்டு சிரசு ஊர்வலம் அதிகாலையில் முன்கூட்டியே நடைபெற்றதால் பக்தர்கள் ஏமாற்றம். வழக்கமாக காலை 6:00 மணிக்கு தரணம் வேட்டை முத்தாலம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு 10 மணியளவில் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலுக்கு சிரசு வந்தடையும். ஆனால் இந்த முறை அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு எட்டு முப்பது மணிக்கு எல்லாம் கோவிலுக்குள் சென்றதால் வெளி மாநிலம் மற்றும் வெளியூரில் இருந்து சரசு விழாவை காண வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆண்டு தோறும் வைகாசி 1- ம் தேதி நடைபெறும் புகழ்பெற்ற வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சியாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. நகர் முழுவதும் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் முக்கிய அம்சமான தரணம்பேட்டை பகுதியில் உள்ள முத்தியாலம்மன் ஆலயத்தில் இருந்து அமம்ன் சிரசு நகரின் வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் ஆலத்தில் உள்ள அம்மன் உடலில் பொறுதப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அம்மன் கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமம்ன் சிரசு ஊர்வலத்தில் போது பக்தர்கள் சாலை நெடுங்கிலும் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். சிரசு திருவிழாவை காண தமிழகம், ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் குடியாத்தம் நகரமே விழாக்கோலமாக மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு கோ பூஜை வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். இந்நிலையில் வைகாசி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை வழிபாடு நடந்தது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், பலிபீடம், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து கோ சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை பசு மாட்டிற்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டி கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுமாட்டிற்கு வாழைபழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வணங்கி வழிபட்டனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவ விழா
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீசெண்பக தியாகராஜர் உன்மத்த நடனமாடி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள செல்லும் காட்சி.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். #shakthionlinetv #bakthivideos #dailydevotional #thirunallar
திருவாரூர் | திருக்காரவாசல் தியாகராஜசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா
தியாகராஜ சுவாமி எழுந்தருளியுள்ள சப்த விடங்க தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு கண்ணயிரநாத சுவாமி,ஆதிவிடங்க தியாகராஜசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அருள்மிகு வினாயகர்,சுப்ரமணியர்,சந்திரசேகர்ர் ,சண்டிகேஸ்வர்ர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு கொடிமரம் அருகே எழுந்தருள செய்யப்பட்டது. தொடர்ந்து ரிஷப படம் வரையப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு தீபாரதனை நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு சுவாமியை வழிப்பட்டனர். #shakthionlinetv #bakthivideos #dailydevotional #mayiladuthurai
இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – பக்தி
மிதுனம் – ஓய்வு
கடகம் – பரிசு
சிம்மம் – வெற்றி
கன்னி – சிரமம்
துலாம் – இன்பம்
விருச்சிகம் – நிறைவு
தனுசு – ஆர்வம்
மகரம் – பேராசை
கும்பம் – நஷ்டம்
மீனம் – மகிழ்ச்சி
சந்திராஷ்டமம் – அனுஷம், கேட்டை