Author: cmsadmin

  • மே 23 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – சாந்தம்
    ரிஷபம்         – ஜெயம்
    மிதுனம்     – விருத்தி
    கடகம்         –  லாபம்
    சிம்மம்         –   உயர்வு
    கன்னி         –    முயற்சி  
    துலாம்         –     யோகம்
    விருச்சிகம்     –  பரிவு
    தனுசு         –     பிரீதி
    மகரம்         –    நன்மை
    கும்பம்         –      நட்பு  
    மீனம்         –      வெற்றி
    சந்திராஷ்டமம்    –        ரேவதி

  • மே 23 – புத்த பூர்ணிமா…

    மே 23 – புத்த பூர்ணிமா…
    குரோதி வருடம் – வைகாசி – 10
    மே 23, 2024
    வியாழன்
    புத்த பூர்ணிமா
    பவுர்ணமி
    நல்ல நேரம் : 10.30 – 11.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    குளிகை : 9.00 – 10.30
    ராகு : 1.30 – 3.00
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் :  பவுர்ணமி இ 7.48
    நட்சத்திரம் :  விசாகம் கா 9.43
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : ரேவதி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • வைகாசி விசாகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தேரோட்டம்…

    பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் வைகாசி விசாகம் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 16ம் தேதி பழனி பெரியநாயகிஅம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெற்றுவருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளிதெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி  நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து வைகாசி விசாக தேரோட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருதேரில் எழுந்தருளிய வள்ளி,தெய்வானையுடன் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டம் நிகழ்ச்சியில் எராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோசம் எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    முன்தாக வள்ளி,தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.இந்நிகழ்வில்  இணை ஆணையர் மாரிமுத்து அறங்காவலர் குழுவினர் ,உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • உடையபிராட்டி அம்மன் கோவிலில் மாம்பழ தேரோட்டம்…

    பொன்னமராவதி உடையபிராட்டி அம்மன் கோவிலில் 25அடி உயர மாம்பழ தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.மாம்பழங்களை வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உடையபிராட்டி அம்மன் கோவிலில் மாம்பழ தேரோட்டம்  விமர்சையாக நடைபெற்றது.இந்த தேரோட்டத்தில் 25 அடி உயர தேரானது மா, பலா,வாழை, நுங்கு, எழுமிச்சை பழம், பேரீச்சம்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களால் தேரானது அலங்கரிப்பட்டு  அம்மன் தேரில் வீற்றிருக்க் புறப்பட்ட தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்றது.தேர் வரும் வழியெங்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக தேரின் மீது மாம்பழங்களை சூறைவீசினர்.

    சூறை வீசப்பட்ட  மாம்பழங்களை  பக்தியுடன் பிடித்து தங்களது இல்லங்களுக்கு எடுத்துச்சென்றனர்.வழி நெடுகிலும் பக்தர்கள் உடையபிராட்டி அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர்.இவ்வாறாக முக்கிய ‌வீதிகள்‌ வழியாக மாம்பழ சூறையுடன் சென்ற தேரானது தேர்முட்டி வீதியில் நிலைக்கு வந்தடைந்தது.

    இந்த தேரோட்டத்தில் சுற்று வட்டாரபகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து  இழுத்து சென்றனர். பொன்னமராவதி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

  • உளுந்தூர்பேட்டை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

    உளுந்தூர்பேட்டை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

  • திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் ஆலய பிரம்மோற்சவ விழா தெப்போற்சவம்

    திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் ஆலய பிரம்மோற்சவ விழா தெப்போற்சவம்

  • வைகாசி விசாக விரத முறை…

    வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

    முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ', ‘ஓம் முருகா' என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.

    இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.

  • பாவங்களை போக்கும் நரசிம்மர்!

    பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டு விரதம் மேற்கொண்டால் பாவம் ஒழிந்து புண்ணியம் கிடைக்கும்.

    விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் ஊரில் உள்ள கோவில் தான் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில். இந்த கோவிலில் மூலவராக லட்சுமி நரசிம்மரும், அம்மனாக கனகவல்லியும் உள்ளனர். இந்தியாவிலேயே இந்த கோவிலில் தான் நரசிம்மர் சுவாமியை லட்சுமியும், லட்சுமியை நரசிம்மரும் ஆலிங்கனமும் செய்தபடி காட்சியளிக்கின்றனர்.

    திருமணத்தடை காரியத்தடை உள்ளவர்கள் இங்கு பரிக்கல் கோவிலுக்கு வந்து தரிசித்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதே போல், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், வேலை இருந்தும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டால் பதவி உயர்வு உடனடியாக கிடைக்கும்.

    விரதம் இருந்து பரிக்கல் கோவிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி வைத்தும், பக்த ஆஞ்சநேயருக்கு முன்பு நெல் கொட்டி அதில் எழுதி வைத்து வழிபட்டால், பக்தர்களின் நியாயமான குறைகள் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும், பக்தர்கள் தங்கள் வாழ்வில், பிறவியில் வந்த பாவங்கள் அழிந்து புண்ணியம் கிடைக்க வழிவகுக்கும்.

  • குலம் காக்கும் வைகாசி விசாகம்….

    சித்ரா பௌர்ணமிக்கு அடுத்து வரும் பௌர்ணமி விசாக நட்சத்திரத்தில் வருவதால்தான் அந்த மாதத்திற்கு வைகாசி என்ற பெயர் வந்தது. விசாகம், ஞான நட்சத்திரம் என்பர். முருகப் பெருமானுக்குரிய விழாக்களாக தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொன்னாலும் இவையாவும் சிவனோடும் சம்பந்தப்பட்டவை.

    முருகனது தனிப்பட்ட விழாக்களில் விசாகமும் ஐப்பசி சஷ்டியுமே மிக முக்கியமானவை. சூரபத்மன் போன்ற அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். உடனே அவர்களை காத்தருள சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். இந்தத் தீப்பொறிகள் வாயு, அக்னி முதலிய தேவர்கள் மூலம் கங்கையில் கொண்டு விடப்பட்டன.

    கங்கையோ அவற்றை சரவணப் பொய்கையில் சேர்த்தது. அங்கு வந்து சேர்ந்ததும் அவை வைகாசி விசாகத்தன்று ஆறு குழந்தைகளாக மாறின. விஷ்ணு பகவான் கார்த்திகைப் பெண்கள் மூலமாக அக்குழந்தைகளுக்கு பாலூட்டி விட்டார். இவ்வாறு ஆறுமுகம் கொண்ட முருகன் தோன்றி தேவர்களைக் காத்தருளினார்.

    எனவே, இந்நாளில் முருகனை வழிபடுவதால் நம் பகைகள் யாவும் தொலைந்து விடும் என்பர். இந்நாளில் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளிலும் மற்ற முருகன் தலங்களிலும் விசேஷமான பூஜைகளும் கோலாகலமான விழாவும் நடைபெறுகின்றன. இந்நாளில் தானமும், தர்மமும் செய்தால் நல்லது. தயிர்சோறு, மோர், பானகம் போன்ற குளிர்பான தானம், குலம் காக்கும் என்று சொல்வார்கள்.

  • மே 22 – வைகாசிவிசாக நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – தாமதம்
    ரிஷபம்         – சுபம்
    மிதுனம்     – குழப்பம்  
    கடகம்         –  ஓய்வு  
    சிம்மம்         –   பக்தி  
    கன்னி         –    பேராசை
    துலாம்         –     நிம்மதி
    விருச்சிகம்     –  வெற்றி
    தனுசு         –     நலம்
    மகரம்         –    ஆர்வம்
    கும்பம்         –      நன்மை
    மீனம்         –      பொறுமை
    சந்திராஷ்டமம்    –        உத்திரட்டாதி