Author: cmsadmin

  • ஆடி முதல் நாள் முன்னிட்டு ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு சந்தன வெள்ளிக்காப்பு அலங்காரம்

    ஆடி முதல் நாள் முன்னிட்டு ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு சந்தன வெள்ளிக்காப்பு அலங்காரம் நீண்ட வரிசையில் நின்று  பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்களும் மற்றும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி ஆடி முதல் நாளை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று.பின்னர் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் சாமிக்கு சந்தன வெள்ளி காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    ஆடி முதல் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

  • ஜூலை 16 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பக்தி
    ரிஷபம்         – பாசம்  
    மிதுனம்     – பயம்  
    கடகம்         –  பகை
    சிம்மம்         –   விவேகம்
    கன்னி         –    பாராட்டு
    துலாம்         –     பிரீதி
    விருச்சிகம்     –  உயர்வு
    தனுசு         –     வரவு  
    மகரம்         –    தடங்கல்
    கும்பம்         –      வெற்றி
    மீனம்         –      இன்சொல்  
    சந்திராஷ்டமம்    –         பூரட்டாதி, உத்திரட்டாதி

  • ஜூலை 16 – தட்சிணாயன புண்ணியகாலம்…

    குரோதி வருடம் – ஆனி 32
    ஜூலை 16 – 2024
    செவ்வாய்    
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : தசமி
    திதி நேரம் :  தசமி மா 6.38
    நட்சத்திரம் :  விசாகம் முழுவதும் 0.00
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் : ரேவதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • ஆசாட நவராத்திரி… வராகி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம்…

    ஆசாட நவராத்திரி விழாவின் பதினோராவது  நாளான இன்று வராகி அம்மனுக்கு புஷ்ப  அலங்காரம். திரளான பக்தர்கள் நீண்ட வரிசைகள் என்று சுவாமி தரிசனம்.

    உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் 11 நாட்கள் ஆசாட நவராத்திரி விழா விமர்சையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு ஆசாட நவராத்திரி விழா கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது.  அதனை தொடர்ந்து பதினோராவது நாளான இன்று புஷ்ப அலங்காரம்  செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வாராகி அம்மனை தரிசனம் செய்தனர்.

  • ஜூலை 14 – ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நன்மை
    ரிஷபம்         – செலவு
    மிதுனம்     – லாபம்
    கடகம்         –  போட்டி
    சிம்மம்         –   விவேகம்
    கன்னி         –    தடங்கல்
    துலாம்         –     அமைதி
    விருச்சிகம்     –  பொறுமை
    தனுசு         –     அன்பு
    மகரம்         –    மகிழ்ச்சி  
    கும்பம்         –      வெற்றி
    மீனம்         –      இன்பம்
    சந்திராஷ்டமம்    –         அவிட்டம், சதயம்

  • தஞ்சாவூர் பெரியகோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா, கனிவகை அலங்காரம்…

    உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா, கனிவகை அலங்காரம்,பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர் பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது, இக்கோவிலில் தனி சன்னதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்,

    இந்நிலையில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி பெருவிழா தஞ்சை பெரியகோயிலில் கடந்த ஜூலை 5 ந்தேதி  தொடங்கியது,10நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் நடைபெறும், அதைப்போல் 9ம் நாளாக இன்று  ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு  கனிவகை அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது,  இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டனர்.

     

  • ஜூலை 14 – ராமநாதபுரம் கோதண்டராமர் தேர்…

    ஜூலை 14 – ராமநாதபுரம் கோதண்டராமர் தேர்…
    குரோதி வருடம் – ஆனி 30
    ஜூலை 14 – 2024
    ஞாயிறு    
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : அஷ்டமி
    திதி நேரம் :  அஷ்டமி மா 4.02
    நட்சத்திரம் :  சித்திரை இ 9.16
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : பூரட்டாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • ஜூலை 13 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நலம்
    ரிஷபம்         – லாபம்
    மிதுனம்     – பொறுமை   
    கடகம்         –  போட்டி
    சிம்மம்         –   நட்பு
    கன்னி         –    ஆதரவு
    துலாம்         –     சாந்தம்  
    விருச்சிகம்     –  கவனம்
    தனுசு         –     உதவி
    மகரம்         –    தேர்ச்சி
    கும்பம்         –      புகழ்
    மீனம்         –      நற்செயல்  
    சந்திராஷ்டமம்    –         திருவோணம், அவிட்டம்

  • ஜூலை 13 – இன்றைய நல்ல நேரம் …

    ஜூலை 13 – இன்றைய நல்ல நேரம்  …
    குரோதி வருடம் – ஆனி 29
    ஜூலை 13 – 2024
    சனி    
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 1.30 – 3.00
    குளிகை : கா 6.00 – 7.30
    ராகு : கா 9.00 – 10.30
    திதி : அதிதி
    திதி நேரம் :  சப்தமி ம 2.13
    நட்சத்திரம் :  அஸ்தம் மா 6.53
    யோகம் : மரண
    சந்திராஷ்டமம் : சதயம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா…

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நடராஜர், சிவகாமசுந்தரி நடனமாடியப்படியே கோயில் கருவறைக்கு சென்றனர்.

    பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் மார்கழி மாதம் ஆருத்ர தரிசன விழாவும் நடைபெறுவது வழக்கம் இந்த இரண்டு திருவிழாக்களிலும் கோவில் கருவறையில் உள்ள மூலவர் நடராஜர் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது சிறப்பு வாய்ந்ததாகும். இத்தகைய சிறப்பு மிக்க ஆனி திருமஞ்சன தரிசன விழா கடந்த மூன்றாம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா தினந்தோறும் நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒன்பதாம் நாள்  நிகழ்வாக கருதப்படும் தேரோட்டம் நேற்று நடைபெற்ற முடிவடைந்தது. நேற்று தேர் நிலையை வந்தடைந்தவுடன் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட சுவாமிகள் கீழே இறக்கப்பட்டு கோவில் உள்ளே உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில்  சித்சபையில் வைக்கப்பட்டனர்.

    இனறு காலையில் இருந்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு தொடர்ந்து ஆபரண மற்றும் ரகசிய பூஜைகள் செய்யப்பட்டு ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து நடராஜர் சிவகாமசுந்தரி நடனம் ஆடிய படியே கோயில் கருவறைக்கு செல்கின்றனர். இந்த காட்சியை காண்பதற்கு பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை புரிந்தனர். தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலில் திருட்டுப் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு காவல்துறையினர் கண்காணித்தனர்.