இன்றைய ராசிபலன்
மேஷம் – நிம்மதி
ரிஷபம் – எதிர்ப்பு
மிதுனம் – வரவு
கடகம் – ஏமாற்றம்
சிம்மம் – புகழ்
கன்னி – ஊக்கம்
துலாம் – உதவி
விருச்சிகம் – மறதி
தனுசு – பெருமை
மகரம் – ஆக்கம்
கும்பம் – அசதி
மீனம் – போட்டி
சந்திராஷ்டமம் – கேட்டை
Author: cmsadmin
-
செப்டம்பர் 27 – இன்றைய ராசிபலன்…
-
நாம மலை சிரிக்கும் பெருமாள்… வியர்க்கும் திருமுகம்!
சேலம்-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் அமைந்திருக்கிறது நாம மலை. இந்த மலையின் மீது ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அழகுறக் கோயில்கொண்டு அருள்பாலிக்கிறார், ஸ்ரீநிவாசப் பெருமாள்.
ராமாயண காலத்தில் இலங்கையில் இருந்து வான் மார்க்கமாக ராமர், சீதை மற்றும் விபிஷணன் ஆகியோர் அயோத்தி செல்லும் போது, அவர்கள் சென்ற ரதத்தின் நிழல் விழுந்த இடங்களில் ஒன்றுதான், ஸ்ரீநிவாசப் பெருமாள் குடிகொண்டுள்ள இடம் என்கிறார்கள். இதன் மகிமையை உணர்ந்த கிருஷ்ண தேவராயர், 16-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தக் கோயிலை நிர்மாணித்தாராம்.
மூலிகைக் கற்களைக் கொண்டு, திருப்பதியில் பெருமாள் காட்சி தரும் அதே திருக் கோலத்திலேயே இங்கும் ஸ்ரீதேவி-பூதேவி சமேத ராக ஸ்ரீநிவாசப் பெருமாள் அருளாட்சி செய்வது, கண்கொள்ளா காட்சி! மேலும் திருப்பதி மலைவாழும் ஏழுமலையான், தமது சயன நேரத்தில் இங்கு வந்து உறங்கி ஓய்வெடுத்துச் செல்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பூஜையின்போது மூலவர் பெருமாளின் திருமுகத்தில் வியர்ப்பதைக் காணலாம் என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொள்ளும் பக்தர்கள், ‘‘தரிசிக்கும் தருணத்தில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிரிப்பு, கோபம் என மாறுபட்ட முகபாவங்களைக் காட்டும் ஸ்வாமி இவர். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்… நமது வேண்டுதல் நியாயமானதா இல்லையா என்பதை!’’ என்று பரவசம் பொங்கச் சொல்கிறார்கள்.
நாம மலையில் மிகப்பெரிய அளவில் பாறைகளால் ஆன குளம் போன்ற ‘பாலி’ ஒன்று காணப்படுகிறது. இந்த பாலியின் தீர்த்த நீர் அதிகளவு அடர்த்திகொண்டதாம். இதில், ராமனும் சீதையும் நீராடியதாக நம்பிக்கை. அதேபோல் அடிவாரத்தில் கிணறு ஒன்று உள்ளது. பெருமாளைத் தரிசிக்கும்போது, இந்தக் கிணற்று நீரை தீர்த்தமாகத் தருகிறார்கள். மூலிகைத் தன்மை கொண்ட இந்த தீர்த்தத்தை நோய் தீர்க்கும் அமிர்தமாகக் கருதுகின்றனர்.
ஒருமுறை இந்தக் கோயிலின் அர்ச்சகர் ஒருவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘‘ராமானுஜர் இல்லாததே இத்தலத்தின் ஒரே குறை’’ என்றாராம். அந்தக் குறையைக் களையும் விதம், ஸ்ரீராமானுஜர் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர், பக்தர்கள். வடக்கு நோக்கி அருளும் இந்த ராமானுஜரின் திருமுன் பாலைச் சமர்ப்பித்து சில நிமிட வேண்டு தலுக்குப் பிறகு, பாத்திரத்தை திறந்தால் பால் திரிந்து தயிராகியிருக்குமாம். இப்படி பால் திரிந்துபோனால், பக்தர்களுக்கு ராமானுஜரின் திருவருள் பரிபூரணமாகக் கிடைத்துவிட்டது என்பது நம்பிக்கை.
இத்திருத்தலத்துக்கு வரும் பக்தர்கள் மூலவரை வணங்கிய பின், தங்கள் வேண்டுதல் நிறைவேறுமா என்பதை அறிய, திருவுளச் சீட்டு போட்டு இறைவனிடம் உத்தரவு கேட்கின்றனர். துளசி, மஞ்சள், குங்குமம் ஆகிய மூன்றையும் தனித்தனி சீட்டுகளில் பொதிந்து சந்நிதியில் வைத்து, குழந்தைகள் மூலம் சீட்டுகளை எடுத்து பார்க்கின்றனர். அதில் துளசிச் சீட்டு வந்தால் நினைத்தது உடனே நிறைவேறும்; மஞ்சள் வந்தால் காரியத்தில் சற்று நிதானம் வேண்டும் என்று அர்த்தமாம்.
வாழ்நாளில் ஒரு முறையாவது திருப்பதி சென்று ஸ்ரீநிவாசப் பெருமாளை வணங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் பொருளாதாரம், வயது முதிர்வு போன்ற காரணங்களால் திருப்பதி சென்று பெருமாளை வணங்காமல் தவித்து மருகும் அன்பர்களும் உண்டு. அப்படியான பக்தர்களுக்கு, திருப்பதிக்குச் சென்று வந்த புண்ணிய பலனை தந்தருளும் நாமமலை ஸ்ரீநிவாசப் பெருமாளை நீங்களும் ஒருமுறைத் தரிசித்து வாருங்களேன்; உங்கள் வருங்காலம் சிறக்கும், வாழ்க்கைச் செழிக்கும்!
-
செப்டம்பர் 26 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – செலவு
மிதுனம் – லாபம்
கடகம் – போட்டி
சிம்மம் – விவேகம்
கன்னி – தடங்கல்
துலாம் – அமைதி
விருச்சிகம் – பொறுமை
தனுசு – அன்பு
மகரம் – மகிழ்ச்சி
கும்பம் – வெற்றி
மீனம் – இன்பம்
சந்திராஷ்டமம் – அனுஷம் -
செப்டம்பர் 26 – இன்றைய நாள் எப்படி?
செப்டம்பர் 26 – இன்றைய நாள் எப்படி?
குரோதி வருடம் – புரட்டாசி 10
செப்டம்பர் 26 – 2024
வியாழன்
நல்ல நேரம் : கா 10.30 – 12.00
எமகண்டம் : கா 6.00 – 7.30
குளிகை : கா 9.00 – 10.30
ராகு : ம 1.30 – 3.00
திதி : நவமி
திதி நேரம் : நவமி மா 5.30
நட்சத்திரம் : திருவாதிரை அ.கா 4.11
யோகம் : அமிர்த
சந்திராஷ்டமம் : கேட்டை
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
செப்டம்பர் 25 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – நலம்
ரிஷபம் – லாபம்
மிதுனம் – பொறுமை
கடகம் – போட்டி
சிம்மம் – நட்பு
கன்னி – ஆதரவு
துலாம் – சலனம்
விருச்சிகம் – கவனம்
தனுசு – உதவி
மகரம் – தேர்ச்சி
கும்பம் – புகழ்
மீனம் – நற்செயல்
சந்திராஷ்டமம் – விசாகம் -
செப்டம்பர் 25 – இன்றைய நல்லநேரம்
செப்டம்பர் 25 – இன்றைய நல்லநேரம்
குரோதி வருடம் – புரட்டாசி 9
செப்டம்பர் 25 – 2024
புதன்
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : கா 7.30 – 9.00
குளிகை : கா 10.30 – 12.00
ராகு : ம 12.00 – 1.30
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி மா 5.55
நட்சத்திரம் : மிருகசீரிடம் அ.கா 4.12
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : அனுஷம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
செப்டம்பர் 24 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – உயர்வு
ரிஷபம் – சினம்
மிதுனம் – அன்பு
கடகம் – போட்டி
சிம்மம் – ஜெயம்
கன்னி – நன்மை
துலாம் – பகை
விருச்சிகம் – இன்பம்
தனுசு – தீரம்
மகரம் – பெருமை
கும்பம் – மகிழ்ச்சி
மீனம் – எதிர்ப்பு
சந்திராஷ்டமம் – சுவாதி -
செப்டம்பர் 24 – இன்றைய நாள் எப்படி?
செப்டம்பர் 24 – இன்றைய நாள் எப்படி?
குரோதி வருடம் – புரட்டாசி 8
செப்டம்பர் 24 – 2024
செவ்வாய்
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : கா 9.00 – 10.30
குளிகை : ம 12.00 – 1.30
ராகு : ம 3.00 – 4.30
திதி : சப்தமி
திதி நேரம் : சப்தமி மா 6.49
நட்சத்திரம் : ரோகிணி அ.கா 4.40
யோகம் : சித்த-மரண
சந்திராஷ்டமம் : விசாகம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
புரட்டாசி மாதத்தில் செல்ல வேண்டிய பெருமாள் தலங்கள்!
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் இன்னும் கூடுதல் பயண்கிட்டும் என்பது நம்பிக்கை. தமிழகத்தில் புரட்டாசி மாதம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தளங்களை பார்க்கலாம்.
அரங்கநாத சுவாமி கோவில்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகும். காவிரி ஆற்றினால் சூழப்பட்ட, இத்தலம் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலைச் சுற்றிலும் மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது.சாரங்கபாணி திருக்கோவில்
சாரங்கபாணி சுவாமி கோவிலானது கும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற விஷ்ணு தலமாகும். 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக இக்கோவில் புகழ்பெற்றுள்ளது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும்.
மூலவர் திருக்கோலம்
இத்தல மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் என்னும் திருநாமத்துடன் போற்றப்படுகிறார். உற்சவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் என்ற வில், உடைவாள் ஆகிய ஐந்து திவ்ய ஆயுதங்களுடன் அருளுகிறார்.கள்ளழகர் திருக்கோவில்
108 வைணவத் தலங்களில் மிகவும் புகழ்பெற்றது மதுரை கள்ளழகர் திருக் கோவில். பெரும்பாலும் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இத்தலம் 94 ஏக்கர் பரப்பளவில் 4 புறமும் கோட்டை சுவர்களால் ஆன பழமை வாய்ந்த கோவிலாகும். மதுரையில் உள்ள இக்கோவிலில் நடைபெறும் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் நட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்ற வழிபடுவர். -
செப்டம்பர் 23 – இன்றைய நல்லநேரம்…
செப்டம்பர் 23 – இன்றைய நல்லநேரம்…
குரோதி வருடம் – புரட்டாசி 7
செப்டம்பர் 23 – 2024
திங்கள்
நல்ல நேரம் : கா 6.00 – 7.30
எமகண்டம் : கா 10.30 – 12.00
குளிகை : ம 1.30 – 3.00
ராகு : கா 7.30 – 9.00
திதி : சஷ்டி
திதி நேரம் : சஷ்டி இ 8.09
நட்சத்திரம் : கார்த்திகை அ.கா 4.48
யோகம் : அமிர்த
சந்திராஷ்டமம் : சுவாதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்