விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப்ரல் 1-ஆம் தேதி கொடியேற்றதுத்துடன் தொடங்குகிறது. ஏப்ரல் 9-ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
ஸ்ரீவடபத்ரசாயி என்கிற திருநாமத்துடன் பெருமாள் எழுந்தருளியுள்ள திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். இத்தலத்தில் ஸ்ரீபெரியாழ்வாரின் திருமகளாய் ஸ்ரீஆண்டாள் அவதரித்தார். திருப்பாவை என்னும் பாமாலையும், பூமாலையும் சூடிக் கொடுத்தார். ஸ்ரீஆண்டாளின் பக்தியைக் கண்ட திருவரங்கத்து எம்பெருமான் இத்தலத்திற்கு எழுந்தருளி பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீஆண்டாளை திருமணம் செய்தருளினார்.
இதையொட்டி, நிகழாண்டில் ஸ்ரீஆண்டாளின் திருக்கல்யாண உற்சவம் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 7.35 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாள்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் 9-ஆம் திருநாளான ஏப்ரல் 9-ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. உற்சவ நாள்களில் சுவாமிகள் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்று பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளுவர்.
Author: cmsadmin
-
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம்
-
காஞ்சி காமாட்சிக்கு தங்க திரிசதி மாலை
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மண்டலாபிஷேக நிறைவையொட்டி, அம்பாளுக்கு தங்க திரிசதி மாலை அணிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இக் கோயிலில் நடைபெற்று வந்த மண்டலாபிஷேகம் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையொட்டி கடந்த 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம அகண்ட பாராயணம் நிகழ்ச்சி சுமங்கலிகள் மூலம் நடத்தப்பட்டது. தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு அணிவிப்பதற்காக 300 நாமாவளிகள் கொண்ட தங்க திரிசதி மாலை தயார் செய்யப்பட்டது.
இந்த மாலை காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதிகள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரால் காமாட்சி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது.
இந்த திரிசதி மாலையை ஏராளமான பக்தர்கள் பார்த்து வழிபட்டனர். -
திருப்பதி தரிசனத்தை எளிமையாக்கும் புதிய மொபைல் ஆப்
தரிசனத்திற்கு முன் பதிவும் செய்யவும் காணிக்களை செலுத்தவும் திருப்பதி கோவில் நிர்வாகம் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. தெலுங்கு வருட பிறப்பையொட்டி யுகாதி நெய்வேத்தியம் படைத்து, இந்த ஆண்டுக்கான பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. இதைதொடர்ந்து கோவிந்தா – திருமலா திருப்பதி தேவஸ்தானம் (Govinda – Tirumala Tirupati Devasthanam) என்ற பெயரில் மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைப் பயன்படுத்தி தரிசன டிக்கெட், அறைகள் ஆகிவற்றுக்கு முன் பதிவு செய்யலாம். மேலும் இ- உண்டி, இ- நன்கொடை செலுத்தும் வசதிகளும் உள்ளன.
-
திருப்பதிக்கு 2 டன் பூக்கள் அனுப்பி வைப்பு
ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாசல பெருமாள் கோவிலுக்கு, சேலம் ஸ்ரீபக்திசாரர் பக்தசபா சார்பில் யுகாதி, மகாசிவராத்திரி, பிரமோற்சவ விழா உள்ளிட்ட முக்கிய விழாக்களுக்கு மணமுள்ள மலர்களை தொடுத்து அனுப்பி வைப்பது வழக்கம்.
மார்ச் 29 அன்று தெலுங்கு வருடபிறப்பு என்னும் யுகாதி உற்சவம் திருப்பதி-திருமலையில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி சேலம் ஸ்ரீபக்திசாரர் பக்தசபா சார்பில் டி.ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் பூக்கள் தொடுத்து அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. பூக்களை திரளான பெண்கள் மாலையாக தொடுத்தனர். சுமார் 2 டன் எடையுள்ள பூக்கள் தொடுக்கப்பட்டு, திருப்பதி வெங்கடாசல பெருமாள் கோவிலுக்கு நேற்று மாலை லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. -
யுகாதி விரத வழிபாடு முறை
யுகாதி அன்று விரதமிருந்து வழிபாடு செய்வது எப்படி?
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு மறுதினம் சாந்திரமான வருடம் என்ற பெயரில் சந்திரன் பன்னிரெண்டு அம்சங்களோடு திகழும் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாள் வரும் பிரதமை முதல் அடுத்துவரும் அமாவாசை வரை கணக்கிடப்படும் மாதங்களுக்கு வடமொழியில் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மாதங்களின் பெயர்கள் பவுர்ணமி எந்த நட்சத்திரத்தின் நாளில் நிகழ்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரில் அழைக்கப்படும்.
பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.
காலையில் எழுந்து புனித நீராடி, கௌரி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி வழிபட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். புதிய பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து, அதைச் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு ருசியுள்ள பச்சடியைச் செய்ய வேண்டும். இதற்கு சத்ருஜி பச்சடி என்று பெயர். இதில் உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகள் இருக்க வேண்டும்.
விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். அனைவரும் அஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதம் எடுத்துக்கொண்டு, மங்கள ஆரத்தி செய்வது வழக்கம்.
யுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது. -
முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் நடந்த பங்குனி பொங்கல்விழாவில் நூற்றுக்கணக்கானோர் பால்குடம் எடுத்தும் தீச்சட்டி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மானாமதுரை சிவகங்கை மெயின்ரோட்டில் தயாபுரம் பஸ்ஸ்டாப்பு அருகில் உள்ளது முத்துமாரியம்மன் உள்ளது. ஆண்டுதோறும் இக் கோயிலில் பங்குனித் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனித் திருவிழா கடந்த 15 ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து தினமும் பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு கோயில் பூசாரி சுப்ரமணியன் தலைமையில் வைகை ஆற்றில் இருந்து அக்னிச்சட்டி, ஆயிரம்கண் பானை, பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தடைந்தனர். அங்கு கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீயில் இறங்கி நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தன.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ 4.57 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமை அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை 83 ஆயிரத்து 964 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து 32 ஆயிரத்து 340 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டவை இன்று எண்ணப்பட்டது. இதில் ரூபாய் நோட்டுகள் மட்டும் ரூ 4.57 கோடியும் ரூ 5, 10, 20, 50 உள்ளிட்ட சில்லரை நோட்டுகள் மற்றும் நாணயங்கள் எண்ணப்பட்டதில் ரூ 5 கோடிக்கு ஒரே நாளில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதே போல் கடந்த 2015 ஆண்டு ஒரே நாளில் ரூ 5.53 கோடி காணிக்கையாக பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருப்பதே அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கோதண்டராமர் கோயில் பிரமோற்சவம்
ஆரணி ஸ்ரீகோதண்டராமர் வீர ஆஞ்சநேயர் கோயிலில் பிரமோர்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆரணி டவுன் கொசப்பாளையம் தியாகி சுப்பிரமணிய சாஸ்திரியார் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் வீர ஆஞ்சநேயர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் கர்போஸ்வ 10ம் ஆண்டு பிரமோர்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு ராமர், சீதா, லட்சுமணர், வீர ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்து வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பட்டாச்சாரியார்கள் கொடியேற்றினர். அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்திகள் மேளதாளம் நாதஸ்வர இசையுடன் கோயில் உட்பிரகாரம், மாட வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் தினசரி இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், தேர் உலா, குதிரை வாகனம் மற்றும் முத்துப்பந்தல் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. -
மாசாணியம்மன் கோயிலில் அமாவாசை தரிசனம்
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அம்மாவாசை உள்ளிட்ட விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்துச் செல்கின்றனர். இதில் நேற்று அமாவாசையையொட்டி, மாசணியம்மன் கோயிலுக்கு கோவை மட்டுமின்றி, ஈரோடு, திருப்பூர், மதுரை, கேரள பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் உள்புறம் மற்றும் வெளிபுறத்திலும் வெகுநேரம் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர். அமாவாசையையொட்டி பக்தர்கள் வசதிக்காக பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அதுபோல் பொள்ளாச்சி நகர் பகுதியில் உள்ள மாரியம்மன்கோயில், காளியம்மன்கோயில், காமாட்சியம்மன் கோயில்களில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதொறும் யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய் கிழமைகளில் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தெலுங்கு வருடப்பிறப்பு மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவையுடன் வெங்கடேஸ்வர சுவாமியை துழில் எழுப்பபட்டு தோல்மலை, அர்ச்சனை சேவைகள் பக்தர்கள் அனுமதிக்காமல் அர்ச்சகர்கள் மட்டும் ஏகாந்தமாக செய்தனர். பின்னர் காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயிலில் உள்ள கருவறையில் உள்ள மூலவருக்கு பட்டு வஸ்திரத்தில் முடப்பட்டு ஆனந்த நிலையம், கொடிமரம், மகாதுவாரம், ரங்கநாதர் மண்டபம், சம்பங்கி மண்டபம் என அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் திருச்சூணம், பச்சைகற்புரம், கிச்சிலி கட்டை, சந்தனம், குங்குமம் ஆகிய மூலிகை பொருட்களை கொண்டு செய்யப்பட்டு கலவையை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது.