திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தங்க தேரோட்டம்….

Written by

in

கார்த்திகை பிரமோற்சவத்தை அடுத்து திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தங்கத்தேரோட்டமும், தயார் கருட வாகன வீதிஉலாவும் நடைபெற்றது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
விழாவின் 5-வது நாளான நேற்று இரவு 8 மணியில் இருந்து 11 மணிவரை யானை வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து 6வது நாளில், காலை சர்வபூபால வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் பத்மாவதி தாயார் மாட வீதிகளில் பவனி வந்தார்.
மாலை 4 மணி அளவில் தங்கத்தேரோட்டம் நடைபெற்றது, இதனையடுத்து இரவு 8 மணியளவில் கருட வாகனத்தில் தாயார் வீதிஉலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.