திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்துக்கான அட்டவணை வெளியிட்டப்பட்டுள்ளது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது.
டிசம்பர் 4-ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணையையும், சுவரொட்டியையும் தேவஸ்தான அதிகாரிகள் திருமலையில் வெளியிட்டனர்.
பிரம்மோற்சவ அட்டவணை:
நவம்பர் 26 –
காலை – கொடியேற்றம், இரவு – சின்னசேஷ வாகனம்,
நவம்பர் 27-
காலை பெரியசேஷ வாகனம், இரவு – அன்னப் பறவை வாகனம்
நவம்பர் 28 –
காலை முத்துப் பந்தல் வாகனம், இரவு – சிம்ம வாகனம்
நவம்பர் 29 –
காலை – கல்ப விருட்ச வாகனம், இரவு – அனுமந்த வாகனம்
நவம்பர் 30 –
காலை – பல்லக்கு உற்சவம், மாலை – வசந்தோற்சவம், இரவு – யானை வாகனம்,
டிசம்பர் 1-
காலை – சர்வபூபால வாகனம், மாலை – தங்க ரதம், இரவு – கருட வாகனம்,
டிசம்பர் 2 –
காலை – சூரிய பிரபை வாகனம், இரவு – சந்திர பிரபை வாகனம்
டிசம்பர் 3 –
காலை – ரத உற்சவம், இரவு – குதிரை வாகனம்,
டிசம்பர் 4 –
காலை – பஞ்சமி தீர்த்தம், மாலை – கொடியிறக்கம், இரவு – தங்கப் பல்லக்கு வாகன சேவை ஆகியவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.