அக்டோபர் 15 கிரிவலம் செல்ல உகந்த நேரம்

Written by

in

பெளர்ணமி நாள்களில் திருவண்ணாமலையில் உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவுள்ள கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசித்தால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
புரட்டாசி மாத பெளர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அக்டோபர் 15 கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது என்பதை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் பெளர்ணமி நாள்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வர். அதன்படி, புரட்டாசி மாத பெளர்ணமியையொட்டி அக்டோபர் 15 ஆம் தேதி (சனிக்கிழமை) பகல் 12.36 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10.27 மணி வரை கிரிவலம் வரலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.