திருப்பதியில் 8 லட்சம் பேர் சாமி தரிசனம் …..

Written by

in

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்த பிரம்மோற்சவ விழாவில், மொத்தம் 7 லட்சத்து 99 ஆயிரத்து 430 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 3ஆம் தேதியில் இருந்து 11ஆம் தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்தது. அதில், முதல் 8 நாள் நடந்த நிகழ்ச்சியில் 7 லட்சத்து 99 ஆயிரத்து 430 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தரிசன வரிசையில் பக்தர்களை காத்திருக்க வைக்காமல் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதாலும், வி.ஐ.பி.புரோட்டோகால் தரிசனத்தில் பக்தர்களின் தரிசன அனுமதி எண்ணிக்கை குறைக்கப்பட்டதாலும் அதிக அளவில் சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.